உதாரணமாக, ஒருவர் புற்று
நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதை ஒரு கர்ப்பமுற்ற தாய் பார்த்து, “அட பாவமே.., இப்படி இருக்கிறாரே..,” என்று நினைத்தால் போதும்.
இந்த உணர்வு தாயின்
இரத்தத்தில் கலக்கின்றது.
கருவிலிருக்கும் குழந்தைக்கு
அந்த விஷத்தன்மை நிச்சயம் வரும்.
பின், அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து,
சில்லு சில்லு என்று அழும். நாளடைவில் அந்த வயது வரும் பொழுது
அதற்கு கேன்சர் வரும்.
அதே மாதிரி ஆஸ்துமா நோய்
உள்ளவர்களை கர்ப்பிணிகள் இரக்கப்பட்டுப் பார்த்தால், கருவில் உள்ள குழந்தைக்கு ஆஸ்துமா
நோய் வரும்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர்
இருக்கின்றார்கள் என்றால் கர்ப்பத்தில் இருக்கும் பொழுது
தாய் நுகர்ந்த உணர்வுக்குத் தக்கவாறுதான்
அந்தக் குழந்தைக்கு நோய்கள் வரும்.
வித்தியாசமான குழந்தைகளாகப்
பிறக்கும். ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா நோய் வரும். ஒரு குழந்தைக்கு திடீர்
திடீரென்று கோபம் வரும்.
கர்ப்ப காலங்களில் வீட்டில்
சண்டை போடுபவர்களைப் பார்த்தாலோ அல்லது எதிர் வீட்டில் சண்டையோ அல்லது சண்டையைப்
பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாலோ இந்த உணர்வுகளை தாய் நுகரும்.
நுகர்ந்த உணர்வுகள் ரத்தத்தில்
கலக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கும் பரவிவிடும்.
பிறந்ததிலிருந்து அந்தக்
குழந்தைக்குக் கோபம் அதிகமாக வரும்.
அம்மாவை அடிப்பான்
அப்பாவை அடிப்பான்.
யாரைப் பார்த்தாலும் அடிக்கும்
நிலையில்தான் இருப்பான்.
அவன் தப்பு செய்யவில்லை.
தாய் நுகர்ந்த உணர்வு கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வபுண்ணியமாக
மாறுகின்றது.
இதையெல்லாம் நாம்
தெரிந்துகொள்ள வேண்டும்.