வேதனைப்படுபவர்களின் உணர்வை நுகர்ந்தால் இந்த உடலென்ற
இந்திரலோகத்திற்குள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.
கார உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தக் கொதிப்பின் தன்மை வந்துவிடுகின்றது. வேதனை
என்ற உணர்வை நுகர்ந்தால் வாத
நோய் வந்துவிடுகின்றது.
இது மாதிரி ரத்தங்களில் உருவாகும் பொழுது அணுக்களை அது
மாற்றுகின்றது. நரகலோகத்திற்கு நாம் போகின்றோம்.
சந்தோசமாக இருக்கும்பொழுது அணுக்களின் தன்மை உடலென்ற
இந்திரலோகத்திற்குள் மாறுகின்றது.
இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்குத்தான் கதைகளாக வடித்து சிவன்
என்ன செய்கிறான்? விஷ்ணு என்ன செய்கிறான்? என்று ஒவ்வொரு உணர்வுகளும் உறுப்புகளும்
ஒவ்வொரு நிலைகளில் எப்படி இயங்குகின்றது? என்று காரணப் பெயர் வைத்துத் தெளிவாக
விளக்குகின்றார்கள்.
இந்த மாதிரி அந்த உணர்வுகள் நமது உடலுகுள் ஆனவுடன் சிறிது
சிறிதாக நமது உடல்களில் உடல் உறுப்புகளின் அணுக்களின் தன்மை மாறுகின்றது.
பலவிதமான நோய்கள் தோன்றி பலவிதமன விஷத்தன்மை கொண்ட
அணுக்களாக மாறும். இதை அதிகமாக நுகர்ந்து ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகத்தில் விஷம் அதிமாகப் பெருகிவிட்டால் அது இயங்காது.
சிறுநீரகம் இயங்கவில்லை என்றால் ரத்தத்தை வடிகட்டும் தன்மை
இழந்துவிடும். ரத்தம் வடிகட்டப்படவில்லை என்றால்
எல்லா இடத்திலும் கெட்ட அணுக்களின் பெருக்கம் அதிகமாகச் சேர்ந்துவிடும்.
இதனால் நம் உடல் பலவீனமாகி உணர்வுகளிலும் மாற்றமாகி இந்த
உடலைவிட்டுப் பிரிய நேரும்.
சிறுநீரகம்
சுத்திகரிக்கும் தன்மை இழக்கப்படும்போது உயிரின்
தன்மை விஷத்தின் தன்மையைத் தான் ஏற்றுக் கொண்டு வலுகொண்டு மாற்றும் தன்மை வருகின்றது.
ஆடு மாடுகள் எல்லாம் விஷத்தினை உடலாக்கி
நல்லவைகளைக் கழிவாக்கிவிடுகின்றது.
மாட்டு கோமியம் நாறுவதில்லை. மனிதனின் சிறுநீரகம் விஷத்தைப்
பிரித்துவிடுவதால் மனிதனின் சிறுநீர் நாறுகின்றது.
ஆகவே, சிறுநீரகம் அத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் உறுப்புகளாக
நம்மை ஆடாகவோ மாடாகவோ மாற்றிவிடும்.
ஒவ்வொரு உறுப்புகளும் புழுவிலிருந்து மனிதனாக மாறி வரும்
வரையிலும் மாறி மாறி தெளிவாக மனிதனாக
வந்திருக்கின்றோம்.
அதற்குப்பின் நுகரும் உணர்வுகளில் உள்ள
நஞ்சினை நாம் பிரிக்க வேண்டும்.
நஞ்சினைப் பிரிக்க
வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?
அவ்வாறு நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக்கியவர்
அகஸ்தியர். அகஸ்தியர் துருவனாகி, கணவன் மனைவி இருவரும் ஒன்றென இணைந்து துருவ
மகரிஷியாக ஆனார்கள்.
அவ்வாறு இணைந்து கொண்டபின், ஒளியின் உணர்வாகப் பெற்றனர்.
இன்று துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாக இருக்கின்றனர். அதைத்தான் நமது குருநாதர்
நுகரச் செய்தார்.
அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைத்தான்
யாம் உங்களையும் நுகரும்படி
செய்கின்றோம்.
அதை நுகர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.
குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி செடி கொடி
மரங்கள் நல்ல சக்திகளக மாற்றிக் கொள்கின்றதோ அதைப் போல நமக்குள் பல முநதைய தீமைகள்
இருப்பினும் இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
விஷத்தன்மைகளைப் பிரித்துவிடும்.
ஒளியின் சுடராக மாற்றிட முடியும். இனி வரும் எத்தகைய தீமைகளையும்
ஒளியின் நிலையாக மாற்றும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.
எமது அருளாசிகள்