ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2014

விஷம் வலுவானது - விஷத்தைக் கழிக்கக்கூடிய உடல்தான் மனித சரீரம்

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் மிக முக்கியமானது. புழுவிலிருந்து தான் சுவாசிக்கும் ஒவ்வொரு தீமையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கின்றது.

அப்படி சேர்க்கும்பொழுது தீமையை நீக்கும் வலிமையான அணுக்கள் விளைகின்றது. அப்படி விளைந்த பின்தான் பன்றியாக உருவாகின்றது. அதற்குத் தகுந்த உறுப்புகள், அதற்குண்டான நிலைகளை உருவாக்குகின்றது உயிர்.

பன்றியான பின் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை இழந்துவிடுகின்றது. சாக்கடைக்குள் மறைந்துள்ள நல்ல மணத்தைத்தான் நுகருகின்றது.

நுகர்ந்தபின் அதன் வாழ்நாளில் நாற்றத்தை இழக்கக்கூடிய சக்தி அதன் உடலில் விளைகின்றது. அந்த உடலை இழந்து உயிர் வெளியில் வந்தவுடன் மனிதனாகப் பிறக்கச்செய்கின்றது.

பன்றியின் சிறுநீரகமும் நம்முடைய சிறுநீரகமும் ஒன்றாக இருக்கின்றது. பன்றியின் இதயமும் நம் இதயமும் ஒன்றாக இருக்கின்றது. சில உறுப்புகள்தான் மாற்றமாக இருக்கின்றது.

பன்றியின் உணர்வுகளுக்கு மனிதனையொத்த நிலைகள் உள்ளது. அதனின் உறுப்புகளுக்கு சில மாற்றங்கள் கொடுத்தார்கள் என்றால் அதை மனிதனுக்குப் பயன்படுத்தலாம்.

இன்று விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு தான் வருகின்றார்கள். பன்றி நல்லணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து பன்றியின் உடலை விட்டு உயிர் வெளியில் வந்தபின், அந்த உணர்வு கொண்டு மனித ஈர்ப்பிற்குக் கொண்டு வருகின்றது.

முதல் காலத்தில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் அந்த உணர்வுகள் அதற்குகந்த உறுப்புகளாக மாறுகின்றது. அப்படி மனிதனாகும் பொழுது முதல் மனிதனாக மாறுகின்றது.

குரங்கின் மலம்கூட நாறாது. அதுவும் விஷத்தின் தன்மை கொணடது. அதற்கு வலுவின் தன்மை அதிகம். அதற்கு வலு இல்லைன்றால் மேலிருந்து குதித்தால் கை, கால் எலும்பு முறிந்துவிடும்.

அதன் நரம்பு மண்டலங்களில் விஷத்தன்மை இருப்பதால் தாங்கக்கூடிய சக்தி இருக்கின்றது. அதனுடைய உடலில் விஷத்தன்மை இருப்பதால் பாறைகளில் அவைகள் பட்டவுடன் இழுத்துப் பிடித்துக் கொள்கின்றது.

இதே மாதிரித்தான் விஷத்தன்மை கொண்ட கேளை ஆடுகள் வழுவழுப்பான பாறைகளில் மலைகளில் நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
நாம் காலை வைத்தால் வழுக்கும்.
ஆனால் அவைகள் அப்படியே நிற்கும்.
ஏனென்றால், அதில் உள்ள காந்தப்புலன் அப்படி இருக்கின்றது.

இதே மாதிரி விஷத்தின் தன்மை கொண்ட பல்லி சுவரில் ஒட்டிக்கொண்டு வேகமாக ஓடுகின்றது. பல்லியிலுள்ள விஷத்தின் தன்மையும் சுவரில் உள்ள உணர்வும் இரண்டும் வலுவாக இழுத்துப் பிடித்துக் கொள்கின்றது.
விஷத்தின் ஆற்றல் பாய்ச்சப்படும் பொழுது ஒட்டிக் கொள்கின்றது.
அந்த உணர்வின் தன்மை வலு கொடுக்கின்றது.

விஷம் குறைந்த பூச்சிகள் சுவரில் ஏற முடியாது. விஷத்திற்கு அவ்வளவு வலு உண்டு.

ஆனால், நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், விஷத்தைக் கழித்துக் கழித்து இன்று விஷத்தைக் கழித்திடும் உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.