இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு T.V. ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த
அலைவரிசையில் ஒளிபரப்பு செய்கின்றார்களோ அதே அலைவரிசையை வைத்து நம் வீட்டில் பார்க்கின்றோம்.
அதே மாதிரி நீங்கள் கோபமாக இருக்கக்கூடிய நிலையை எடுத்துக்
கொண்டால்,
நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும்,
நாம் சோர்வுடன் இருக்கும்பொழுது
இந்தக் கார உணர்ச்சிகள் முன் வந்தவுடன்
நமக்கு
இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்கள் என்ற எண்ணம் வரும்.
நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கோ இருப்பான். அதை
எண்ணும்பொழுது நமது பல் கடுகடுப்பாகிவிடும். இது மாதிரி நேரங்களில் நாம்
தியானத்தில் அமர்ந்தால் அந்த எண்ணம் தான் வரும். தியானம் வராது.
நான்
தியானமிருந்தேன்
எனக்கு வரவே மாட்டேன் என்கிறது என்பீர்கள்.
காரணம் அந்த
உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது.
அந்த நேரங்களில் நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கிருந்தாலும்,
அவன் உணர்வு வந்தவுடன் அவன் உருவம் நமக்கு நிழற்படமாகத் தெரியும்.
T.V ஐ எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்தப்
படம் தெரியும். அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் எண்ணமாக வரும். இதே மாதிரி
அருள்சக்தி உங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
நீங்கள் நினைத்தவுடன் அதை எடுத்து
இந்த உணர்வுகளை மாற்றமுடியும்.
அந்த மாதிரி
மாற்றுவதற்குண்டான சக்தி நீங்கள் பெறுவதற்குத்தான்
துருவ நட்சத்திரத்தை
உங்களுக்குள் பதிவு செய்வது.
நம் குருநாதர் துருவ நட்சத்திரத்தை எடுத்தார். அவரை எண்ணி
எடுக்கும்பொழுது அந்த அருளை நான் பெற முடிகின்றது. அதே சமயத்தில் அவர் குருவழியில்
ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதன் உணர்வை எடுத்து ஆயுள் மெம்பராகச்
சேருகின்றீர்கள்.
தீமைகளை நீக்கக்கூடிய ஆயுள் மெம்பராகச்
சேருகின்றீர்களேயொழிய தீமைகளை
வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக அல்ல.