ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2014

நெருப்பினால் உணவை வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவன் அகஸ்தியன்

அகஸ்தியன் வளர்ந்து வந்தபின் விஷத்தின் இயக்கத்தால்தான் செடி கொடிகள் இயங்குகின்றது என்பதை உணர்கின்றான்.

அதே சமயத்தில், அகஸ்தியன் வான்வீதியில் மின்னலைக் கண்ணுற்றுப் பார்க்கின்றான். மின்னலில் இருந்து வரும் விஷத்தன்மை இவனுக்குள் அடங்குகின்றது, ஒடுங்குகின்றது.

விஷத்தின் இயக்கத்தால் மோதும் நிலையை
இவன் உடலில் விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெருகிவரும்போது
உண்மையின் உணர்வை இவனால் அறிய முடிகின்றது.   

விஷத்தை முறிக்கும் ஆற்றல் அவனிடம் இருந்ததினால் மின்னலின் உணர்வுகளை அறிகின்றான். அது எப்படி உருமாறுகின்றது என்ற உண்மையை அறிகின்றான்.

வானுலக ஆற்றலை, தான் கண்டுணர்ந்த உணர்வுகளை தன் மக்களுக்குச் சொல்கின்றான்.

அவர்களையும் விஷத்தன்மைகளிலிருந்து மாற்றுகின்றான். இதையெல்லாம் சொல்லி வரப்படும் பொழுது அவனே காணுகின்றான்.

முதன் முதலில் செடிகளை இணைத்து மனிதனுக்குகந்த ஆகாரத்தை உருவாக்கியவன் அகஸ்தியன் தான்.

அந்தக் காலத்தில் முதன்முதலில் ஒன்றோடு ஒன்றை உராயச் செய்து நெருப்பை உண்டாக்கினார்கள். அந்த நெருப்பைக் கண்டவுடன் அஞ்சி ஓடினார்கள்.

நெருப்பில் வைத்து, இரண்டு பொருளை இணைத்து வேகவைக்கும் நிலையை முதலிலே கண்டுபிடித்தவன் அகஸ்தியன் தான். அகஸ்தியன் காலத்தில்தான் ஒன்றைச் சுட்டுச் சாப்பிடும் நிலை வந்தது.

ஆக, அவன் வளர்ச்சியில் வரவர இவன் துருவத்தைப் பார்க்கின்றான். வான்வீதியில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றான். விஷத்தை அடக்கும் சக்தி தாய் கருவிலே விளைந்ததினால், வான்வீதியை அவன் பார்க்கும் பொழுது வரும் விஷம் அவனைத் தாக்குவதில்லை.

அவனுடைய உணர்வுகளால் விஷத்தைத் தணிக்கின்றான். விஷம் இயக்கும் பொழுது அதன் உண்மைப் பொருளை அறிகின்றான்.

ஒரு பச்சிலையை வேகவைக்கும் பொழுது அதன் விஷம் அகன்று ருசி மாறுகின்றது.

இதே மாதிரி இவன் உணர்வுகளில் விஷத்தை முறிக்கக்கூடிய சக்தி இருப்பதனால்,
உணர்வுகளை இயக்கும் விஷம்
இவன் உணர்வு மோதியவுடன்
அந்த விஷம் பிரிகின்றது.
இவனுக்குள் வந்தவுடன் அது அடங்குகின்றது.

விஷத்தை எப்படி மாற்றுவது என்ற சிந்தனை வருகின்றது. இப்படி வந்த நிலைகளில் அவன் வான்வீதியில் எல்லாவற்றையும் அறிகின்றான். அறிந்த உணர்வு கொண்டு தன் உடலில் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கின்றான்.

மாற்றிக் கொண்டத்தைத்தான் தான் கண்ட உண்மைகளை எல்லாம் திருமணம் ஆனபின் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.

அவன் எதை எதையெல்லாம் பார்த்தானோ அவைகள் அவனின் மனைவிக்கும் தெரிய ஆரம்பிக்கின்றது. தன் கணவனால் இவைகளைப் பார்க்க முடிந்தது என்று தன் கணவனை உயர்ந்த நிலைகளில் எண்ணுகின்றது.

இதுதான் வசிஸ்டரும் அருந்ததியும் போன்று என்பது. ஆக துருவ மகரிஷியாகி சிருஷ்டிக்கும் தன்மை பெற்று தங்களுக்குள் உணர்வுகளை பேரொளியாக மாற்றுகின்றார்கள்.

இருவர் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள்
ஈருயிரும் ஒன்றாகி
உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி உயிருடன் ஒன்றி
இன்றும் விண்ணிலே துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.