நாம் பிறவியில்லா நிலை அடையும் இந்த மனித உடலில்
இருக்கின்றோம். அதுதான் கோடிக்கரை.
தனுசுகோடி என்றால்
எல்லா உணர்வையும் ஒன்றாகச் சேர்த்து
உயிர் எப்படி இருக்கின்றதோ
அதுபோன்று ஒளியாக மாற்றிவிடுவது.
கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுகோடி என்ற உணர்வை அந்த துருவ நட்சத்திரத்துடன் இணைத்துப்
பழகவேண்டும்.
இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் கூட்டி, சிவலிங்கத்தைப் பூஜிக்கத் தொடங்கிவிட்டான் என்று சாஸ்திரங்களில் சொல்வார்கள்.
அப்படியென்றால் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும்
என்று பொருள். நமக்குள் பல தீமைகள் இருந்தாலும்,
எல்லோரும் இந்த அருளுணர்வுகள் பெறவேண்டும்
என்று இணைத்துக் கொண்டே
இருக்கவேண்டும்.
அப்படிப் பழகும்பொழுது தனுசுகோடி. எல்லாவற்றையும் ஒளியாக மாற்றி
நாம் போகவேண்டும்,
நமது வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், நஷ்டங்கள். ஏற்பட்டலும்,
வேதனை உணர்வுகளைப் பார்த்து அறிய நேர்ந்தாலும் நம் உடலில் சேராதபடி துடைத்துப் பழகவேண்டும்.
அதைத் துடைத்துப் பழகுவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை
நாம் எடுத்து உள்ளுக்குள் சேர்த்து தீமையை வலுவிழக்கச் செய்து, நம் அணுக்களில் சிறிது
சிறிதாகக் கலக்க வேண்டும்.
நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
அணுக்களில் சிறிது சிறிதாகச் சேர்ந்துவிடுகின்றது.
அப்படிக் கலக்கும் பொழுது
தீமையை மாற்றிக் கொண்டே
இருக்கும்.
அதைச் செய்வதற்குத்தான் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்துடன்
சேர்த்து அந்த ஆயுள் மெம்பராகச் சேர்த்திருக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்திற்குப்
போகின்ற வழியையும் உங்களுக்குச் சொல்கின்றோம்.
எனக்கு குருநாதர் அந்த வழியைச் சொல்லிக் கொடுத்தார்.
போன்று, உங்களையும் பக்குவப்படுத்தி
இந்த நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.
உங்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்து ஆயுள் மெம்பராக இணைத்துவிட்டு விடுகின்றோம். இனி ஒரு பிறவிக்கு வராதபடி, உங்களை
துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றோம்.