ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2014

தியானத்தின் வலுவால் தீமைகளைச் சலித்து நம் உடலுக்குள் சேராதவண்ணம் வடிகட்ட முடியும்

நாம் தப்பு செய்யாமல் வேதனைப்படுகின்றவர்கள், வெறுப்படைகின்றவர்களைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகளை நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நம் அணுக்களில் சேருகின்றது.

பிறகு தலை வலிக்கின்றது. கை வலிக்கின்றது, கால் வலிக்கின்றது, கண் வலிக்கின்றது என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றோம்.

எதனால் இந்த வலி வருகின்றது?

பிறர் செய்யும் தவறுகளை நம் ரத்தத்தில் சேர்க்கும் பொழுது
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கிடைப்பதில்லை.

நமது வாழ்க்கையில் பிறருடைய சிரமமான நிலைகளில் நாம் சிக்கிக் கொண்டால் அதை நாம் நுகர்ந்துதான் ஆக வேண்டும். அந்த உணர்வை நாம் மாற்ற வேண்டும். என்ன இருந்தாலும் அதை நாம் நுகராதபடி மாற்ற வேண்டும்.

உதாரணமாக ஒரு சாக்கடை இருக்கின்றது, அதற்கு அருகில் நமது தியானவழி அன்பர்கள் சென்றால் அந்த சாக்கடை நாற்றம் வராது.

மற்றவர்கள் பார்த்தால், சாக்கடை அருகில் நிற்கின்றான் பார், புத்தி இருக்கின்றதா? என்று சொல்லுவார்கள். அந்தச் சாக்கடை நாற்றம் நமக்குத் தெரியாது.

காரணம், நமது உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை இழுக்காது.

தென்காசியில் நம் தியானவழி அன்பர் வீட்டில் கழிவறை சுத்தம் செய்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களால் நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. ஆனால் நம் அன்பர்கள் ஆனந்தமாக இருக்கின்றார்கள்.

அங்கு இருந்தவர்கள் எல்லோரும், என்ன இவர்கள் நாற்றத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாற்றமாக இல்லையா என்று அவர்கள் கேட்டார்கள்.

நல்ல மணமாக இருக்கின்றது என்று நம் அன்பர்கள் சொன்னார்கள். நாங்கள் எடுக்கும் தியானம் நாற்றத்தை பக்கத்தில் விடுவதில்லை. நல்ல உணர்வாக எங்களுக்கு வருகின்றது என்று சொன்னார்கள்.

இதெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட தியானத்தின் வலுவால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இதை வடிகட்டி விடுகின்றது.

அது என்ன என்று உற்றுப்பார்த்தோம் என்றால் நிச்சயம் அறிய முடியும். ஆனால் சாதாரணமாக இருக்கும்பொழுது அது நம்மைத் தாக்காது. தியானவழி அன்பர்கள் நல்ல முழு அருள் சக்தியை எடுத்தார்களென்றால் இது தெரியவே தெரியாது.

ஆனால் விபரீதமான நிலைகள் ஏற்படுகின்றது என்றால்
அந்த உணர்வுகள் நமக்குள் ரிமோட் செய்யும்.
அதை என்னவென்று தெரிய வைக்கும்.

அப்பொழுது சுதாரித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இந்த உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய நிலை வர வேண்டும்.