ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2012

மனித நேயம் என்பது எது...?

நாம் அனைவரும், அந்த மகரிஷிகளின் அருள்வட்டத்தில் கலந்து, நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி, நம்முடைய மூச்சும், பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும், நன்மை பயக்கும் சொல்லாகவும், செயலாகவும், நமக்குள் வளரவேண்டும்.

நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும்,
உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும், 
சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்,
அது வளர்ந்திட வேண்டும். 

அந்த மெய்ஞானியின் உணர்வுகள், அவர்கள் எல்லோரும் எவ்வாறு அனைத்தும் உணர்ந்து, உறவாடினார்களோ, அதைப்போன்று நம் உணர்வுகள் அனைத்தும், வெளியிடும் அனைத்து உணர்வுகளும், நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளும்,
நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும்,
சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டு, சேர்த்து,
தீமையற்ற நிலையாக வளரும் நாம்,
தனித்த சரீரங்களாக இருந்தாலும்,
சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும்  உணர்வாக,
நாம் இடும் மூச்சலைகள், இங்கே படர்ந்து
அதன் வழிகளில், நம் பூமியான பரமாத்மாவும்,
அது பரிசுத்தப்படும் நிலைகள் ஏற்படும்.
ந்தப் பரமாத்மாவில் இருந்து, நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான மக்களும், அந்த "மெய்வழி பெறும் நிலைகள்" ஏற்படும்.

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து, உணவாக உட்கொண்டு, உடலாக ஆனோமோ, இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து, நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ, நாம் அதை உணவாக்கியபின்,  
நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து, 
நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள, 
நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி, 
நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது
மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.

ஆக இதைப்போன்ற நிலைகளிலிருந்து, நீங்களிடும் மூச்சலைகள்,
இன்று தாவர இனச்சத்தும் சத்தான நிலைகளில் வளர்ந்து,
அந்த உணர்வின் தன்மையை,
உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும்,
மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியாக,
உங்களுடைய மூச்சுகள் அமையவேண்டும் என்றும்,
கேட்டுணர்ந்த உணர்வுகள் இது படர்ந்து,  
மெய் உலகைப் படைக்கும் உணர்வாக
உங்களுக்குள் விளைந்து,
நீங்கள் இடும் மூச்சலைகள்
உலகில் உள்ள தீமையான நிலைகளை நீக்கி,
மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலர வேண்டும்  என்று,
எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில்,
அந்த மெய்ஞானியின் அருள் வட்டத்திற்குள்,
உங்கள் எண்ணங்கள் சென்று,
அதன் வழிகளிலே தீமையை நீக்கி,
நல் உணர்வான, நல்வினைகளைச் சேர்த்து,
நல்வினைக்கு உடல் அமைத்து,
அது, வினைக்கு நாயகனாக, மெய்ப்பொருள் கண்டுணர்ந்த,
அந்த மெய்ஞானியின் அருள்வட்டத்தில், நாம் அனைவரும் என்றும் நிலையான பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைந்து, வளர்ந்து, அதைப் போன்று, என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

இன்றைய நிலையில், நம் பூமியில் வாழும் உயிரினங்கள், மிருகங்களிலிருந்து, மனிதன் வளர மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ, நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம், மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு, மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய உணர்விலிருந்து, நாம் மீள வேண்டும்.

நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினால்தான், நம் குருநாதர் காண்பித்தருளிய உணர்வுகளை, உங்களுக்குள்ளும் விளையச் செய்து, அதை நீங்கள் எண்ணும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று, உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி, நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்க, நாம் அதனின் சத்தை, ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம். 

போகமாமகரிஷி கண்ட விஷத்தின் ஆற்றல்


1. விஷத்தின் ஆற்றல்
காளிங்கன் என்பது, எப்பொருளின் தன்மையும் ஒரு விஷத்தின் அமைப்பிற்குள் சென்றுவிட்டால், அது விஷத்திற்குள் அடங்கி இயக்கும் என்று பொருள்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மை கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையையும் பரிட்சித்துக் கொண்டு வருகின்றார். அப்படிப் பரிட்சித்துக் கொண்டு வரும் பொழுது, இளம் பருவத்தில் வந்த போகனுக்கு விஷத்தின் ஆற்றலை உணர்த்துகின்றார்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு வைத்தியர். ஆராய்ச்சி செய்து, தனக்குள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது, அங்கு வந்து சேருகின்றார், இந்த போகர். அந்த உண்மையின் தன்மையை அவர் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான், போகன் விண்ணுலகத்தின் தன்மையைப் பின் தொடர்கின்றார்.

காளிங்கநாதர் விஷத்தின் நிலையைக் காட்டி, நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார். விஷத்தின் தன்மைகளைப்பற்றி பாட போதனைகளைக் கொடுக்கின்றார். இவரிடம் கற்றுக் கொண்டபின் தான், போகர் தாவர இனத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய, விஷத்தின் தன்மையை அறிகின்றார்.

போகர் நுகரும் தன்மையை அறிகின்றார். போகர் நுகரும் தன்மை கொண்டு, பல நிலைகளை அறிகின்றார். காளிங்கநாதர் வைத்தியத் தொழிலில் இருக்கப்படும் பொழுது, அந்தச் சிறுவனை அழைத்துச் சில நிலைகளைக் கற்றுக் கொடுக்கின்றார்.

அந்த காளிங்கநாதர் காட்டிய குரு வழியில், இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, தனக்குள் போகர் இத்தன்மையைக் கொண்டு வரும் பொழுது,
இந்த விஷத்தின் தன்மை
எல்லாவற்றிற்கும் எவ்வாறு பாதுகாப்பாகின்றது என்பதையும்,
விஷம் ஒன்றை எப்படி மாற்றுகின்றது? என்பதையும்,
தன் உடலுக்குள் பல விஷத்தின் ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்த்து அறிகின்றார்.
2. விஷத்தின் ஆற்றலை, ஜீரணிக்கக் கூடிய சக்தி
தாவர இனச் சத்தினை நமக்குள் எடுத்தாலும், காயகல்ப சித்தி இந்த உடலுக்கு உதவாது, என்பதை அறிந்தார் போகமாமகரிஷி. தாவர இனச் சத்தின் நிலைகள் கொண்டு, உடல் பிணிகளை நீக்கினாலும், அதற்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல், உடலின் திசுக்களில் எதிர் நிலையை உருவாக்கிவிடும் என்பதை போகர் அறிந்து உணர்ந்தார்.

நம் உடலுக்குள் இருக்கும் எண்ணத்திற்குள், எத்தனையோ கோடி உணர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு உணர்வின் தன்மை கொண்டு, உடலில் பிணியாக வந்தாலும், அதற்கு வேறொரு சத்தின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுது, இது நிவர்த்தியாகும்.

ஆனால், இதற்கு எதிரான வேறொரு அணுக்களை இது புசிக்கும் பொழுது, எதிர்நிலைகள் கொண்டு அணுவின் தன்மை வளர்ந்து விடுகின்றது. ஆனால் கடினமான நிலைகள் கொண்டு, விஷத்தின் தன்மைக்கு, விஷத்தின் ஆற்றல் கொண்ட தாவர இன சத்தை ஊட்டினாலும், இந்த உணர்வின் நிலைகள் கொண்டு, மாய்த்துவிடலாம்.

ஆனால், அதைவிட எளிமையான நிலையில் இருப்பது,
இந்த விஷத்தை அழிக்கும் இந்த உணர்வின் ஆற்றல்
நம் உடலுக்குள் நின்று இந்த ஆவியின் தன்மையில்
தான் ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தடுமாறி,
அதனுடைய நிலைகள் நிலைகுலையச் செய்யும் ஆற்றல்
பெற்று விடுகின்றது.

ஆனால், அவ்வாறு அதற்கு மேல் சேர்ந்தாலும், அதனுடைய நிலைகள் தவறிழைக்கப்படும் பொழுது, அந்த அணுவின் தன்மை மாறுகின்றது. இந்த உடலில் இருக்கக்கூடிய உபத்திரவத்தை நீக்கினாலும், நல்ல உணர்வின் தன்மைகள், சாந்த உணர்வை ஊட்டும் உணர்வின் தன்மையை, விஷத்தின் ஆற்றல் இதைத் தாக்கப்படும் பொழுது, அதனுடைய நிலைகளை நிலைகுலையச் செய்கின்றது.

அதே சமயம், நமக்குள் சாந்தத்தை ஊட்டி, அதைக் கொண்டு சிந்திக்கச் செய்யும் உணர்விற்குள் விஷத்தின் தன்மை ஆனவுடன், துரித எண்ணங்கள் கொண்டு, சிந்தனையுடைய நிலைகள் இதைச் செய்யும். அதே சமயம்
துரித வேகத்திற்கு ஈடு செய்யும் முறையில்
எதிர் நிலையில் இருக்கும் செயலாற்றல் குறைவாக இருந்தால்
உடனே, அதிக வேகமும் ஆத்திரமும், உண்டாகும்.

இதைப் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உணர்வின் நிலைகளை, போகமாமகரிஷி தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்து, தனக்குள் இருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலை, ஜீரணிக்கக் கூடிய சக்தியை உருவாக்கினார்.
3. சாந்தத்தை உருவாக்கும், காந்தம்
நட்சத்திரங்கள் தனக்குள் ஆற்றலைச் சிறுகச் சிறுகச் சேமித்து,
அந்த சேமிப்பின் தன்மை கொண்டு,
உலோகத் தன்மையை உருகச் செய்து,
விஷத்தின் ஆற்றலை அடங்கச் செய்து,
தன் ஆவியின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது,
அது விஷத்தின் தன்மையைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்துகிறது.

அதைப் போன்று, மனித உடலுக்குள் எடுத்துக் கொண்டாலும், இந்த விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் கூடி, இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருத்து விட்டால், அதை அடக்கும் தன்மையான வெப்ப நிலைகள் தேவை.

அந்த நிலைகளுக்குத் தேவையான நிலைகள் கொண்டு, சூரியனுக்குள் உதிக்கும் ஒவ்வொரு பாதரசத்திலும், அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் நிலைகளிலும், விஷங்கள் உண்டு. அதற்குண்டான காந்தமும் உண்டு.

இதைப் போன்று, நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையில்,
விருப்பு, வெறுப்பு, என்ற உணர்வுகள்
நம்மை அறியாமல் உட்செல்லும். இந்த உணர்வுகளிலிருந்து,
அதற்குச் சமமான வெப்பத்தைக் கூட்டவில்லை என்றால்,
அதனுடைய ஆற்றல்மிக்க நிலைகள்,
நம் உடலிலிருந்து செயல்படுத்திவிடும்.

தாவர இனச் சத்தினுடைய நிலைகளை நாம் கொடுத்து, நம் உடலிலுள்ள பிணிகளை நீக்கினாலும், அந்தத் தாவர இன சத்தின் நிலைகள், மற்ற நிலைகளில் பாதிப்பதைத் தடுக்க முடியாது.

இதை, போகமா மகரிஷி தனக்குள் கற்றுணர்ந்து, எத்தகைய நிலைகள் வந்தாலும், சாந்தத்தை உருவாக்கும், காந்தத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க நிலைகள் அது எடுத்துக்கொண்ட வெப்ப காந்தத்தின் நிலைகள் பிறிதொன்று, தன்னை அணுகாத நிலைகளில் தற்காத்துக் கொண்டு, நமக்குள் அந்த ஆற்றல் மிக்க நிலைகளாகச் செயல்படுகின்றது, என்ற பேருண்மையை போக மாமகரிஷி கண்டுணர்ந்தார்.
(4) விஷத்தை குருவாக ஏற்றுக்கொண்டார்.
காளிங்கராயன் என்பது, விஷத்தின் தன்மை கொண்ட பாம்பு. அந்தப் பாம்பு, தன் சுவாசத்தின் தன்மையால் விண்ணுலகிலிருந்து, விஷத்தினை எவ்வாறு எடுக்கின்றது? அந்த விஷத்தின் தன்மை கொண்டு, ரத்தினக் கல்லாக எப்படி மாற்றுகின்றது? என்பதை போகர் தன் யுக்தியின் நிலைகள் கொண்டு, தனக்குள், சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இந்த சுவாசத்தைத்தான், குருவாக ஏற்றுக்கொண்டார்.

மாணிக்கக் கற்கள் ஒளி வீசும் பொழுது, எதனெதன் அடிப்படையில் அது சுவாசித்தது? சுவாசித்த தன்மைகள், எப்படி அதற்குள் விஷமாக வருகின்றது? என்ற இந்தப் பேருண்மையை அறிந்தவர்தான் போகர். ஒவ்வொரு அணுவின் தன்மையின் சக்தியை, அறிந்துணர்ந்தவர் போகர்.

பாம்பு, மேல் நோக்கியே சுவாசிக்கும்.
அப்படிச் சுவாசிக்கும் பொழுது,
நட்சத்திரங்களில் இருந்து வரும்
கதிரியக்கத்தைச் சுவாசிக்கும் ஆற்றல் பெறுகின்றது.
அத்தகைய கதிரியக்கங்களில் வெளிப்பட்ட விஷத்தன்மையைச் சேர்த்துத் தனக்குப் பாதுகாப்பாக அமைத்துக்கொண்டது. சேமித்த விஷம், வைரக்கல்லாக விளைகின்றது.

இதை போன்ற ஆற்றல் உள்ள நிலைகளில், அது ஜீவன் பெற்றதைக் கொண்டு, நமது பூமியில், நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகள், விண்ணிலே படர்ந்திருப்பது எப்பொருள்களில் ஊடுருவிச் செயல்படுத்துகின்றது, என்பதைக் கண்டுணர்ந்தார் போகர். அப்படிக் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டுதான், அந்த ஒவ்வொரு சக்தியையும், தனக்குள் சக்தியாக மாற்றினார்.

சேர்த்த சக்தியின் நிலைகள் கொண்டு, கோள்களின் நிலைகளையும், நட்சத்திரங்களின் நிலைகளையும், தனக்குள் கண்டுணர்ந்தார். வானில் வெளிப்படும் சக்திகள் பூமிக்குள் ஈர்க்கப்பட்டு, புழுவில் இருந்து மனிதனாக எவ்வாறு தோன்றியது? மனிதனான பின், அதில் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றது? என்ற நிலைகளைத்தான் போகர் வெளிப்படுத்தினார்.

அதைக் கண்டுணர்வதற்காக, காடுமேடு மலைகளில் அலைந்து திரிந்தார். ஒரு இலையை எடுத்துக் கொண்டால், அதன் சக்தியை நுகர்வது. அதுதான் போகிப்பது என்பது. தனக்குள் சுவாசித்த, உணர்வின் நுண் அணுக்களின் நிலைகளை அறிந்துணர்ந்து, அது எவ்வாறு இருக்கின்றது? என்பதை அறிந்தார்.

இதைப் போன்று, பூமிக்குள் இருக்கும்
ஒவ்வொரு தாவர இனத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்து,
அதை ஜெபித்தார். அதனால்தான், புவனேஸ்வரியை ஜெபித்தார் என்று சொல்வது.