ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2016

காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்

நான் (ஞானகுரு) இந்த இருபது வருடம் காடு மேடெல்லாம் அலைந்து சில மந்திரவாதிகள் என்ற கோட்டைக்குள் நுழைந்தும் அங்கு என்னென்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

காசி கங்கைக் கரையிலே எடுத்துக்கொண்டால் எத்தனையோ நிலைகள். என்னையே கொன்று சாப்பிடக் கூட விரும்பினார்கள்.

குருநாதர் காசி கங்கைக் கரைக்குப் போகச் சொன்னார். அதாவது கங்கை அகண்டது. அதன் மேலே ஒரு மணல் திட்டு இருக்கின்றது. அங்கே போய் அமர்ந்து என்னைத் தியானம் எடுக்கச் சொன்னார் குருநாதர்.

அதே சமயத்தில் அங்கே போனவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

அங்கே சென்றீர்கள் என்றால் அகோரிகள் உங்களைக் கொன்று சாப்பிட்டுவிடுவார்கள். நீ தெய்வத்தைப் பெறப் போகிறாய். ஆனால், அங்கேயே உன்னைக் கொன்று சாப்பிடுவார்கள். வேகவைத்துச் சாப்பிடாமல் பச்சையாகவே உன்னைச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள்.

சரி, என்னை குருநாதர் அங்கே போகச் சொன்னார். நான் எப்படியோ போகிறேன், என்னமாவது ஆகட்டும். ஆனால் குரு வாக்கை நாம் மீறமுடியாது. அவர் சொன்ன உணர்வை நான் அறியவில்லை என்றால் அவர் சொன்ன நிலைகளிலிருந்து நான் பின்வாங்குவதாக அர்த்தம் என்று சொன்னேன்.

 ராம்ஜி என்று ஒருவன் இருந்தான். அவனிடம் நான் கொஞ்சம் காசைக் கொடுத்து ஒரு டெலெஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக் கொள். எவனாவது என்னைத் தின்றுவிட்டான் என்றால் மங்களூர் நாராயணசாமிக்கு நீ போன் பண்ணிவிடு என்று காசு, விலாசம் எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டேன்.

அவன் சரி என்று சொல்லிவிட்டான்.

ஏனென்றால் மங்களூர் நாராயணசாமி அவர்தான் காசு நிறையக் கொடுப்பார். நான் காசு இல்லை என்று சொன்னால் நான் இருக்குமிடத்திலிருந்து தந்தி அடித்தால் உடனே காசு வந்துவிடும்.

அதனால் எங்கு போனாலும் சாப்பாடுக்குத் தொந்தரவு இல்லாமல் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது காசி கங்கைக் கரைக்குப் போனேன்.

அங்கே போய்ப் பார்த்தால் கம்பியில் ஜல் ஜல் என்று வளையம் மாதிரிப் போட்டு "ஆஹா.., ஓஹோ.., ஓஹோ..," என்று  பாடிகொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி ஆடுகின்றார்கள்.

ஆனால் நான் தியானத்தில் இருக்கின்றேன். ஆஹா ஓஹோ என்று ஆடிக் கொண்டு அப்படியே வருகிறார்கள். கத்தியை எடுத்துக் குத்துகின்ற மாதிரி வருகிறார்கள்.

குருநாதர் இதைப் பாருடா..., என்றார். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது?

காளியின் ரூபமாக அவர்களுக்குக் காட்சி கிடைக்கின்றது. காளியைக் கண்டவுடனே “மாதாஜி.., மாப்கரோஜி, மாதாஜி.., மாப்கரோஜி..,” என்று காதைப் பிடித்து இழுக்கின்றார்கள்.

ஏனென்றால், அந்த அகோரமான நிலையில் “கல்கத்தா காளி” என்று சொல்வார்கள். பல மண்டை ஓடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காட்சியாகக் கொடுத்தவுடனே எல்லாரும் ஓடுகிறார்கள்.

அங்கே டெலெஸ்கோப்பில் இதைப் பார்க்கின்றார்கள். இரவு 12 மணிக்கு இது நடக்கின்றது. வெளிச்சமும் கொண்டு வருகின்றார்கள்.

ஏனென்றால், குருநாதர் இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளைச் சொல்லப்படும் பொழுது மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்? என்று அங்கே அனுபவபூர்வமாக எனக்குக் காட்டினார்.

இன்றைக்கும் நாம் பார்க்கலாம் மாந்திரீகம் என்ற நிலையில் மந்திரவாதிகள் மனிதனை உயிருடன் கூடக் கொன்று சாப்பிடுகிறார்கள்.

அதே மாதிரி சுடுகாட்டில் வேகவைக்கும்போது நல்ல பிணங்களாக இருந்தால் அங்கே சொல்லிவிட்டு அகோரிகள் உடனே எடுத்துகொண்டு போகின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சவாரி செய்து அதனுடைய உணர்வைச் செயல்படுத்துகின்றார்கள்.

அதே சமயத்தில் அழகான பெண்கள் திடீரென்று மரணமடைந்தால் அந்த பெண்களை உடனே கொடு என்று இந்த அகோரிகள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள். அதைக் கொண்டு போனவுடனே என்ன செய்கின்றார்கள்?

இயற்கையில் ஆண் பெண் சேர்கின்ற மாதிரிச் சேர்ந்து கொள்கின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சூடத்தை எரிய வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றார்கள்.

நான் சொன்னதை முதலில் யாரும் நம்பவேயில்லை. அப்புறம் யாம் சொன்னது வெகு காலம் கழித்துப் பேப்பரில் வந்தது.

“சாமி.., நீங்கள் டூப் விடுகின்றீர்கள்” என்று நினைத்தேன் நிஜமாவே நடக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் KPK அவர்கள்.

ஆனால், நான் நேரடியாகப் பார்த்தது. வெகு காலத்திற்குப் பிறகு இதை புத்தகமாக வெளிவருகின்றது. ஒரு கவர்னருடைய மகன் கூட இந்த மாதிரிச் செய்கின்றான் என்று சொல்லி அதில் எழுதியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் நான் சொல்லும்போது KPK நம்பவேயில்லை.

அப்புறம் இதையெல்லாம் பார்த்தவுடனே “சாமி..,” எல்லா உண்மைகளையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் என்று அப்புறம்தான் அவர் நம்புகின்றார்.

அந்த அகோரிகள் கடவுளுக்காக வேண்டி நான் இருக்கின்றேன். அதற்காக நான் இப்படிச் சாப்பிடுகின்றேன். உலக மக்கள் சேமமாக இருக்கச் சாப்பிடுகின்றேன் என்பார்கள்.

இந்த மாதிரிப் பெரும் தவறுகளை இன்று பக்தி என்ற மார்க்கங்களில் கடவுள் இன்று தனக்கு இங்கு தனியாகக் கொடுக்கின்றார் என்ற நிலைகளில் அவனவன் எடுத்துக் கொண்ட விஷ உணர்வுகள் அவர்களை இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதிலே மடிந்து பூதங்களாகவும் கணங்களாகவும் மாறி அதே மந்திரத்தைச் செய்தால் பிறருக்கு ஏவல் செய்து அவன் குடும்பத்தை அழிக்க இது பயன்படுகின்றது.

ஆகவே, அவன் எதன் உணர்வை எடுத்தானோ அதன் வழியேதான் இயக்கப்படக்கூடிய நிலைகள் வருகின்றது. இன்றைய உலகில் நடக்கும் இதைப் போன்ற கொடுமையான தீமைகளிலிருந்து இனி நீங்கள் மீள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்தல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி ஒரு பாதுகாப்புக் கவசமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வழி வாழுங்கள். எமது அருளாசிகள்.

June 10, 2016

மெய்ஞானத்தின் தத்துவத்தை நீ பெறுவதற்கே மூலம் உன் தாய் தான் என்றார் குருநாதர்

நம் அன்னை தந்தைதான் நம்மை முதலிலே மனிதனாக உருவாக்கி நமக்கு அறிவையும் தெளிவையும் ஊட்டினார்கள். நமக்குக் குருவாக இருந்து இயக்கிக் கொண்டு இருப்பதும் நம் அன்னை தந்தையே.

அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையில் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கியது. மனித நிலைகள் தனக்குள் தன் இனம் தழைக்க வேண்டுமென்று ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி அதன் வழிகளில் நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது தாயின் உயிர்.

நமது தாய் தந்தை உயிர் கடவுளாக இருப்பதால் அதனின் உணர்வால் அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு தன் இனம் தன் மக்கள் என்று அதனின் உயிரே அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்தருளி நல்வழி காட்டி நல் உணர்வுகளைப் புகட்டியது தாய் தந்தை உயிர் கடவுள்.

நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும், மகிழ்ந்திடவும், மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும் நமது தாய் தந்தையின் உயிரே கடவுளாக நின்று தெய்வமாக நின்று நல் வழி புகட்டிய குரு முதல் குருவும் தாயே. நம்மைக் காத்த முதல் தெய்வமும் தாயே.

இதை நமது சாஸ்திரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதை நாம் தெரிந்து தெளிந்து இந்த நிலையை நாம் அறிந்து கொள்வதே நலம்.

எனது (ஞானகுரு) அன்னை தந்தை என்னை மனிதனாக உருவாக்கினார்கள். அதன் வழியில் பேரண்டத்தின் உணர்வின் தன்மையை அறியும் தன்மையாக நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரண்டத்தின் உணர்வின் உண்மையை உணர்த்தவும் செய்தார்.

என் அன்னை தந்தையின் பூர்வத்தில் அவர்கள் எண்ணிய ஏங்கிய ஏக்கத்தின் உணர்வில்தான் கருவிலேயே இந்த உணர்வின் தன்மையை என் அன்னை தந்தையர் என்னிலே பதியச் செய்துள்ளது.

அந்தப் பூர்வத்தில் அமையவில்லை என்றால் பேரண்டத்தின் உண்மையை உணரும் தன்மையை நான் இப்பொழுது பேச முடியாது.

என் அன்னை தந்தை சிரமத்தின் எல்லை கடந்த நிலையில் இருக்கும் பொழுது என் தாய் ஞானிகளையும் மகரிஷிகளையும்  எண்ணி ஏங்கியது.

அறியாத இருள் நீங்கிட வேண்டும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்றும், பொருள் கண்டுணர வேண்டும் என்ற உணர்வினை உந்தியது. உணர்வின் ஏக்கத்தை என் தாய் பெற்றது என்று குருநாதர் உணர்த்தினார்.

காரணம் எனது தந்தையின் தாய் என் தாய் மேல் பற்றற்று இருந்தது. அதை தினமும் நிந்தித்துக் கொண்டேயிருந்தது.

மேலும் என் தந்தை மாற்றுத் தாரம் செய்து கொள்ள வேண்டும் என்று சொந்தத்தில் அது இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில் என் தந்தையின் தாய் என் தாய்க்குக் கடும் கொடுமைகளை உருவாக்கியது.

அந்த நிலையில்தான் என் தாய் தன் மூதாதையர்களை எண்ணியது. எங்கள் மூதாதையர்கள் பலர் ஞானத்தின் தத்துவத்தில் அவர்கள் வளர்ந்து வந்தவர்கள்.

என் தாய் அவர்களை எண்ணி அதன் வழிகளில் பேரின்பத்தைக் காட்டும் பெருநிலை கொண்ட மகரிஷிகளை எண்ணி அந்த அருளைத் தான் பெறவேண்டும் தன் குடும்பம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கியது.

என் தாய் இவ்வாறு எண்ணி ஏங்கியதைப் பிற்காலத்தில் குரு எனக்கு உபதேசித்தார், உணர்த்தினார். நீ இந்தத் தத்துவம் பெறுவதற்கே மூலம் உன் தாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால், அக்காலங்களில் மாமியாருக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும். இல்லையென்றால் அதற்குப் பல தீமைகளும் விளைந்து கொண்டேயிருக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் உன் தாய் அது எண்ணத்தின் ஏக்கத்தால் அது பெற்ற அந்த உணர்வின் தன்மை தாய் கருவில் நீ இருக்கும் பொழுது தாய்க்குள் பதிவான அந்தப் பதிவின் உணர்வே உன்னில் இயங்கத் தொடங்கிவிட்டது.

அதுவே உன்னை நான் நாடி வந்ததற்கும் மூலமும் அது தான் என்று நமது குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

உனது தாயின் உயிர் கடவுள். உன்னைக் காத்தருளிய தாயின் அந்த உணர்வே தெய்வம். நீ இன்று மனிதனாக இருப்பதற்கு நல் வழி காட்டிய அதுவே குரு என்று குருநாதர் அதை உணர்த்தினார்.

இதைப் போன்ற பல பல உண்மையின் நிலைகளை குரு உணர்த்தி அன்னை யார் என்பதைத் தெளிவாக்கினார். மனிதனாக இருப்போர் நாம் அனைவருமே இந்தச் சாஸ்திரத்தின் உண்மை நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்.

June 9, 2016

பேரண்டத்தின் உட்பொருளையும், அகப்பொருளையும் மூலப்பொருள் என்ற நிலையில் பிரித்து நமக்குள் அறிவாக இயக்குவது “நம் உயிரே”

நமது சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளை நாம் அறிந்து கொண்டோம் என்றால் சாஸ்திரம் மெய்யாகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் அடையச் செய்கின்றது.

ஆனால், இன்று நாம் அனைவருமே சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப் பொருளை அறியக்கூடிய தன்மையே காலத்தால் மறையும் நிலைக்கு வந்துவிட்டது.

அத்தகைய நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் எது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

நமது உயிரே நமக்குள் மெய் ஆகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்படுத்தினாலும் நமக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதனுடைய உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைப்பது நம் உயிரே.

அதைத்தான் மெய்ப் பொருள் என்று சொல்வது.

பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும் நமக்குள் மெய்யை உணர்த்துவதும், மெய்யின் தன்மையை அறியச் செய்வதும், மெய்யின் நிலைகள் நம்மை இயக்கச் செய்வதும் நமது உயிரே.

மெய்ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அறியச் செய்வதும், அந்த மெய் வழியில் நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.

ஏனென்றால், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை உயிரின் துணை கொண்டுதான் நாம் பெற முடியும்.

உலகின் நிலைகளையும் பேரண்டத்தின் நிலைகளையும் மெய்ஞானிகள் உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து உயிருடன் ஒன்றிய மெய்யாக மெய்யின் நிலையாக நிலை கொண்டு இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆகவே, நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருள் எது என்ற நிலைகளை நாம் பார்ப்போம்.

“ஓ...ம் ஈஸ்வரா.. குருதேவா...,” என்றால் நமது உயிர் நமது உடலுக்குள் நின்று “ஓ” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அந்த குணங்கள் அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக்கி அந்த ஜீவ அணுக்களை நமது உயிர் இயக்கிக் கொண்டேயுள்ளது.

அதுதான் ஓம் நமச் சிவாய, ஓம் நமச் சிவாய. நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக நமக்குள் உறையச் செய்து கொண்டேயிருக்கின்றது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டயுள்ளது.

நாம் எத்தகையை குணங்களை எண்ணுகின்றோமோ நம் உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கங்களையும் மெய்ப்பொருளாக நம்மை அறியச் செய்கின்றது.

நாம் கோப்ப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குள் உள்ள இந்த உணர்வின் செயலை அதனின் உணர்வின் தன்மையை நமது உயிர் உணர்த்துகின்றது.

எத்தகையை நிலைகள் பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும் நமது உயிர் அதனின் உட்பொருளையும், அகப்பொருளையும், மூலப்பொருள் என்ற நிலைகளில் பிரித்து நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கிக் கொண்டுள்ளது.

அவைகளையெல்லாம் நம்மை அறியச் செய்கின்றது. உணரச் செய்கின்றது. இயக்கச் செய்கின்றது. நுகர்ந்தது அனைத்தையும் நமது உயிர் உடலாக்கிக் கொண்டேயுள்ளது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

உடல் மண்ணுக்குத் தான் போகின்றது, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நாம் விண்ணுக்குச் செல்தல் வேண்டும்

உடலுடன் இருக்கும் பொழுது பத்துத் தலை இராவணன். சீதாவைச் சிறைப்பிடித்தான். வெறுப்பு, வேதனை, கோபம், ஆத்திரம் வரும்போது உங்களிடம் என்ன நடக்கின்றது?

நல்லது செய்ய முடியவில்லை என்றால் - கலக்கமாக இருக்கின்றது. எங்கே பார்த்தாலும் சிரமமாக இருக்கின்றது, தொழில் செய்ய முடியவில்லை, ஒரே வேதனையாக இருக்கின்றது என்ற சொற்கள் தான் வருகின்றது.

நல்ல சொல்லைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆக, நல்ல குணத்தை நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றீர்கள். அப்பொழுது சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துத் தீமைகளிலிருந்து விடுபட்டு விஷ்ணுவோடு (உயிருடன்) ஐக்கியமாக வேண்டும்.

ஏனென்றால், கடைசியில் சீதா எங்கே போகின்றது? “பட்டது போதும்..,” என்ற நிலையில் மண்ணுக்குள் போகின்றது.

மகாலட்சுமி விஷ்ணுவிடம் வந்து “உலகைப் பார்க்க வேண்டும்” என்று ஆசைப்பட்டார்.

அப்பொழுது விஷ்ணு சொல்கிறார். “நீ ஆசைப்பட்டாய்..,  அதில் எத்தனை தொல்லைகள் இருக்கிறது என்று பார்..,” இராமாயாணத்தில் கடைசியில் இப்படி முடிப்பார்கள். இந்த வாழ்க்கையில் “நீ எத்தனை தொல்லைகள் படுகிறாய்..., என்று பார்..,” என்கிறார்கள்.

இந்த மண்ணிலே பிறந்த சீதா என்ற நிலைகள் பூமா தேவிக்குத் தாங்க முடியவில்லை. இந்தச் சந்தோஷமான நிலைகளிலிருந்து “இப்படி ஆகின்றதே...,” என்று சொல்லி இந்த உடலான சத்து பூமியைப் பிளந்து பூமிக்குள் போகின்றது.

இந்த உடலுக்கு என்னென்ன ஆசைப்பட்டீர்களோ எதிலிருந்து தோன்றியதோ மீண்டும் இந்தச் சத்து மண்ணுக்குள் தான் போகின்றது.

தெளிவாகக் காட்டுகின்றார்கள் இராமாயாணத்தில்.

மண்ணுக்குள் போனவுடன் என்ன ஆகின்றது? இந்த உணர்வுகள் சேர்த்து விஷ்ணுவிடம் ஐக்கியமாகின்றது, சொர்க்கமடைகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் அறிந்து கொண்ட பின் அந்த விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றது. அந்தத் தவத்தில் பலன் என்ன செய்கின்றது? உயிருடன் சேர்த்து ஐக்கியமாகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய சத்து நாம் இதை மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டேயிருந்தால் உயிருடன் சேர்த்து ஒளியின் தன்மை பெறுகின்றோம். சொர்க்கம் என்ற நிலை அடைகிறது.

இந்த உடல் ஆசை கொண்டால் என்ன நடக்கும்? மீண்டும் மீண்டும் ஆசைப்பட்டு இப்பொழுது எத்தனை அலங்காரம் செய்தாலும் சரி எவ்வளவு சுகத்தைச் சாப்பாடு கொடுத்து வளர்த்தாலும் சரி விஷத்தின் தன்மை அடைந்த பின் கடைசி எல்லை எங்கே கொண்டு செல்கிறது?

நல்ல உடலாக வைத்திருக்கின்றோம். கொழுப்புச் சத்து அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்தால் எல்லாம் தீர்ந்தது. அப்புறம் தேடி வைத்த செல்வம் கூட வருகின்றதா?

மண்ணுக்குத் தான் போகின்றோம்.

ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மேல் யாராவது ரொம்பப் பிரியமாக இருந்தால் என்ன ஆகின்றது?

அவரை நினைத்து இந்த மாதிரிப் போய்விட்டாரே, எனக்குப் பலவிதமான உதவிகள் எல்லாம் செய்தாரே என்று எண்ணினால் அவர் எங்கும் போகவில்லை.

அவர் உணர்வு இங்கே இருக்கின்றது. இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது. சிறிது நாள் கழித்துப் பார்த்தால் இவருக்கும் ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

இதுதான் நடக்கும். சொர்க்கம் அடைவதில்லை.

ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெரிந்து கொள்ளுங்கள். பூரண நிலாவாகச் சுத்தப்படுத்தும் முறையைச் சொல்லிக் கொடுத்துவிட்டோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சுடர் ஆக முடியும்.

இந்தச் சூரியன் ஒரு காலம் அழியலாம். விஷத்தன்மைகள் நம் பிரபஞ்சத்தில் அதிகமாகப் பரவிவிட்டது, பிரபஞ்சமே நாளடைவில் மடியப் போகின்றது. ஆக, சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக மனிதனின் நிலை மாறப் போகின்றது.

மனிதனுக்குண்டான யுக்தியில் இப்பொழுது என்ன செய்கின்றான்?

விஞ்ஞானத்தில் விஷத்தின் தன்மை ஆற்றலைப் பெருக்கும் தன்மையைப் பெற்றான். விஷத்தின் வழியிலே தான் இன்று உலத்தில் எல்லாமே இயங்குகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நினைவிருக்கும் பொழுதே நாம் இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலையை உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அடைதல் வேண்டும்.

இன்னொரு உடல் பெறக் கூடாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்தல் வேண்டும்.

முதல் மனிதன் அகஸ்தியன் அந்த ஒளி ஆனான். அந்த ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து அவன் வழியில் நாமும் எளிதில் ஒளியாக முடியும். இதில் ஒன்றும் கடினமில்லை.

June 7, 2016

TENSION (மன அழுத்தம்) ஆகி கோபப்படுபவர்கள் உடலுக்குள் நடக்கும் செயல்கள்

என்னைத் திட்டினார் என்றால் அந்த உணர்வு நமக்குள் ஆனால் அதே உணர்வான பின் கோபம் வருகின்றது. அவரை எண்ணும்பொழுதெல்லாம் நமக்குக் கோபம் வருகின்றது.

இந்த உணர்வு அதிகமாகிவிட்டால் இரத்தக் கொதிப்பு வந்துவிடுகின்றது. ஒருவருக்கு நாம் கடன் கொடுக்கிறோம் அவர் திரும்பக் கொடுக்கவில்லை. இரண்டு தரம் ஏமாற்றினால் போதும்.

"என்னையா.., நான் தான் தருகின்றேன் என்று சொல்கிறேன்.., அதற்குள் கேட்கிறீர்கள்..," என்று சொன்னவுடன் உடனே கோபம் வருகின்றது.

பார்..., நான் இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டு இருந்தேன் கடனை வாங்கிவிட்டு இப்படிச் சொல்கிறானே..., என்று கோபம் வரும்.

கோபம் எங்கிருந்து வருகின்றது? சந்தர்ப்பத்தால் தான் உருவாகின்றது. உணர்வின் தன்மை பெருக்குகின்றது. கந்த புராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

நாம் பல கோடி உடல்களைப் பெற்று வந்தபின் கார்த்திகேயா. எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றோம். சேனாதிபதி, இந்த ஆறாவது அறிவு தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ளும் திறன் பெற்றது.

சிவனுக்கே ஓதினான் "ஓம்" என்ற பிரணவத்தை. நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எண்ணமோ அதன்வழி தான் சிவமாகின்றது. சிவனின் பிள்ளைதான் இயக்கம் வினை.

ஆகவே, தீமையை நீக்கி வினைக்கு நாயகனான நிலைகள் பெற்று கார்த்திகேயா எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் சக்திகள் பெற்றது.

தெரிந்து கொள்ளும் சக்தி வருகின்றது, சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை. நாம் கொடுத்தவன் கொடுக்கவில்லை என்று  வேதனைப்படுகின்றோம். அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் ஓம் நமச்சிவாய.

அந்த வேதனை என்ற உணர்வு வரும் பொழுது சிந்தனையற்ற நிலையில் கோபப்படுகின்றோம். அது இரத்தக் கொதிப்பாகின்றது. அடுத்து அவனை நினைக்கும் பொழுது "இரு நான் பார்க்கிறேன்..., அவனை உதைக்க வேண்டும்..," என்று தான் கோபம் வருகின்றது.

அவனை உதைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இந்த உணர்வு நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை எல்லாம் “பட பட என்று” பதட்டமடையச் செய்கின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்குப் பாருங்கள். பட பட என்று வருவார்கள். சும்மா இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பணம் கொடுக்கவில்லை என்றவுடன் வேதனை வரும்.

அப்பொழுது அந்தப் பட படப்பு வரும். “ஜில்” என்று உடலில் நடுக்கம் வரும். முதலில் செய்துவிடுகிறோம். உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் ஆகும் பொழுது எதுவும் இயக்கம் இல்லை என்கிற பொழுது ஜில் என்று ஆகின்றது.

எப்படியோ மயக்கம் வருகின்றது.., தலை சுற்றுகின்றது..,. இது எதனால் வருகின்றது? உடலுக்குள் நடக்கும் இந்தப் போர் முறைகள். முதலில் தெரிந்து கொள்கின்றோம். அணுக்கள் நமக்குள் இப்படி ஆனவுடன் போர் செய்தே தான் தீரும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். இராமாயணப் போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாபாரதப் போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

June 6, 2016

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கிடைக்க வேண்டுமென்று எண்ணினால் “இந்தச் சக்தியைக் காட்டிலும் வேறு எந்தச் சக்தியும் இல்லை”

இராமேஸ்வரம் என்றால் தன்னை அறியச் செய்யக்கூடிய நிலைகள் பெற்றது. அதுதான் தனுசு கோடி.

நாம் எத்தனையோ உடல்கள் பெற்று இன்று மனிதனாக வந்துள்ளோம். கோடிக்கரை என்ற எல்லையில் இன்று இருக்கின்றோம்.

அதே சமயத்தில் தனுசு கோடி இதையெல்லாம் வென்றவன் துருவ நட்சத்திரம் அந்தக் கடல் பகுதிக்குப் போனவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் பார்க்கலாம்.

அதன் உணர்வைக் கவர்ந்து அந்த எல்லையை வைத்து எடுத்துத் தீமைகளை வெல்லக்கூடிய சக்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் ஞானிகள் சாஸ்திரங்களை வடித்தார்கள்.

ஆனால், இன்று செய்யக்கூடிய நிலைகள் காசைக் கொடுத்துவிட்டு மோட்சத்திற்கு அனுப்பக்கூடிய இடம் சொர்க்கம் என்று சொல்லிக் கொண்டு செய்தால் எங்கே போகின்றது?

இதுவெல்லாம் அறியாமை. அவர்களுக்கும் இது தெரியாது.

ஏனென்றால் காலத்தால் அன்றைய அரசர் வழி தலைகீழாக மாற்றிய உணர்வு கொண்டுதான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே,  பௌர்ணமி போன்று முழுமை பெறக்கூடிய நாம் இதிலிருந்து பிரிந்து ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றியமைக்கும் திறன் உள்ளவராக வர வேண்டும். பதிவின் எண்ணம் உங்களுக்கு வரும்.

ஒரு எஞ்சினியர் படித்துக் கொண்டு வருகின்றார். ஒரு இயந்திரத்தில் இந்தெந்தக் காலங்களில் பழுது வருகிறதென்றால் அது ஏன்? என்று சிந்தித்துத் திருத்துகின்றார்.

அதே மாதிரி உங்களிடம் இப்பொழுது எஞ்சினியரை அனுப்புகின்றோம். இங்கே உங்களுக்குள் பதிவான பிற்பாடு என்ன செய்கின்றோம்?

வாழ்க்கையில் எதில் தவறு வருகின்றது? என்று உடனே இது மாற்றியமைத்து இப்படித்தான் என்று உங்களுக்குள் இந்த உணர்வு நினைவு வரும். தப்பைத் திருத்த உங்களுக்குள் எண்ணியதுதான் உயிர் இயக்குகின்றது.

எல்லாம் காற்றில் உள்ளது.

அதை மாற்றிக் கொள்ள இந்த உணர்வைச் செய்தால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

ஆகவே, நாம் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் நமக்குள் வரும் துயரங்களை மாற்றி அதில் இருள் என்ற நிலையை நீக்கி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும்.

அதுதான் தனுசு கோடி. நாம் ஒளியாக முடியும்.

இல்லை என்றால் சாமி செய்யும் சாமியார் செய்வான் என்றால் போக வேண்டியதுதான்.

அவர்களுக்குக் காசைக் கொடுத்துவிட்டு இதையும் செய்தேன் அதையும் செய்தேன் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் சிவ தனுசுக்கு வந்துவிட வேண்டியதுதான்.

சொல்வது உங்களுக்கு நன்கு அர்த்தமாகின்றதா?

எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இராமேஸ்வரம் என்ற இந்த ஈஸ்வரலோகத்தை நாம் எப்படி உருவாக்க வேண்டும்?

இந்த உடலுக்குப் பின் என்ன என்பதைத்தான் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்று அதன் உணர்வு கொண்டு தீமைகளை நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி நீங்கள் பெறமுடியும்.

ஆகவே, கணவனும் மனைவியும் அவசியம் எந்த ஊரில் இருந்தாலும் சரி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், உடல்; முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இரண்டு பேரும் இதை எண்ணினாலே போதும் வேண்டும்.

இந்தச் சக்தியைக் காட்டிலும் வேறு எந்தச் சக்தியும் இல்லை.

அதே சமயத்தில் கணவரோ, மனைவியோ இல்லை. உடலை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டால் எப்படி எண்ண வேண்டும்?

அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு. உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உணர்வின் தன்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு பரவிய உணர்வுகள் அடிக்கடி அங்கே அனுப்பிவிட்டால் அங்கே கரைக்கப்படுகின்றது. நமக்குள் அந்த அருள் உணர்வுகள் சேர்க்கப்படுகின்றது.

ஆக, புவியின் ஈர்ப்போ சிவ தனுசிற்கோ வருவதில்லை. விஷ்ணு தனுசாக மாற்றிவிடுகின்றது.

June 5, 2016

ஒவ்வொருவருக்குள்ளும் தினமும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது... ஏன்...?

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். இது ஆனவுடன் என்ன ஆகின்றது?

“இப்படி எனக்குப் பண்ணுகிறானே..,” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு. இந்தச் க்ஷேத்திரத்தில் என்ன செய்கின்றது? அவன் செய்த தவறின் உணர்வு இங்கே நடக்கின்றது.

அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது? வழி..., காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..,?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது.

அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால், நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது?

அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கிவிடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது?

நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது?

ஆக, ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..,” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன், அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது?

அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படி பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.

அதுதான் எண்ணங்கள் - இராமாயாணம் நடக்கவும் செய்கின்றது. கண்ணன் குருக்ஷேத்திரப் போரை வழி நடத்திக் கொண்டு தான் இருக்கின்றான். இப்படி நமக்குள் மகாபாரதப் போர் உள்ளுக்குள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.., அப்படி இருக்கின்றது..,, என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்..., என் பையன் இப்படிச் செய்கின்றான்..,” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

யார் நடத்துவது?

கண்ணால் பையன் செய்வதை நினைத்தவுடன் உடனே போர் நடக்கின்றது. கண்ணால் பார்க்கும் பொழுது என் வீட்டுக்காரர் இப்படிச் சொல்கிறார் என்று வருகின்றது. கண்ணால் பார்த்து ஒன்றைச் செய்யும் பொழுது இப்படியெல்லாம் நடக்கின்றது.

இந்தக் கண்ணன், அவர்கள் தவறு செய்கின்றார்கள் என்ற உணர்வைப் பார்த்தவுடன் அதே உணர்வு இங்கே ஆகின்றது.

அப்பொழுது எது நடக்கின்றது?

இதுவெல்லாம் நமக்குள் பூரண பௌர்ணமியாகக் கூடிய ஒளியின் உடல் பெறக் கூடிய காலத்தில் இதெல்லாம் மறைத்துக் கொள்கின்றதே...!

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்? அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா?

June 4, 2016

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் கண்டறிந்த அகஸ்தியன் எங்கே இருக்கின்றான்? அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உடலுக்குள் போனவுடன் எங்கெங்கெல்லாம் போகின்றது?

அன்னக் குழாய்க்குப் போகின்றது. அதிலிருந்து பிரித்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறியவுடன் ஒவ்வொரு உறுப்பாகப் போகின்றது. கல்லீரல், மண்ணீரலுக்கெல்லாம் போகின்றது.

எல்லாம் சுத்தப்படுத்தி சிறுநீரகத்திற்கு வருகின்றது. அங்கே சுத்தமாகின்றது. அடுத்து இருதயத்திற்குச் செல்கிறது.

அங்கிருந்து உயிரின் பாகத்திற்குக் கொண்டு போனவுடன் இங்கிருந்து மாற்றி அது ஒவ்வொருவிதமாகப் பிரித்து வடிகட்டி இந்திரீகமாக மாற்றுகின்றது. எலும்புச் சத்தாக மாற்றுகின்றது. எல்லாம் ஒன்றாகச் சேர்க்கின்றது.

பித்தச் சுரப்பி இதிலிருந்து வரக்கூடிய பித்தத்தை எடுக்கின்றது. அந்த அணுக்களை மாற்றுகின்றது. பித்தப்பை இல்லையென்றால் என்ன செய்யும்? சரியாக ஜீரணம் ஆகாது. வடிகட்டும் தன்மையானால் நமக்குள் விஷத்தின் தன்மை கலக்கின்றது.

சிலர் பித்தப்பையை எடுத்துவிட்டுக் கூட வாழ்கின்றார்கள். பித்தப் பையில் கல் வந்தது. எடுத்தால் நல்லது என்று வாழ்கின்றார்கள். இந்த மாதிரி வாழ்ந்தாலும் கூட வரக்கூடிய உணர்வுகள் மாறுகின்றது.

சில பேர் உடலில் உள்ள சில உறுப்புகளை எடுத்துவிட்டு மாற்று உறுப்புகளைப் பொருத்தி வாழ்கின்றார்கள். சிறிது நாள் வாழலாம். ஆக, இந்த அசுத்தங்கள் நமக்குள் வருகின்றது.

சிறுநீரகத்தை எடுத்து மாற்றுக் கிட்னியைப் பொருத்துகின்றார்கள். அடுத்து செயற்கையில் கூட கிட்னியைப் பொருத்தலாம் என்று சொல்கின்றார்கள். இருதயத்தையும் மாற்றலாம், செயற்கையில் பொருத்தலாம் என்று விஞ்ஞான அறிவால் கொண்டு வருகின்றார்கள்.

இதை வைத்து எவ்வளவு நாள் வாழ முடியும்? சிறிது நாள் தான் வாழ முடியும். அதிலே சேர்த்த அசுத்தங்கள் முழுமையான பின் உயிர் அதற்குத்தக்க வெளியில் போகும்.

அப்படிச் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மனிதனாகப் பிறப்போமா? இல்லை. அசுர உணர்வு கொண்ட மனிதனற்ற நிலையாகத்தான் பிறக்க முடியும்.  சம்பாரித்த பணத்தைக் கொஞ்ச நாள் வாழ்வதற்காக வேண்டி சம்பாரித்த பணத்தைச் செலவழித்து வேதனையைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

யாராவது உயிருடன் இருக்கின்றார்களா? இவ்வளவு பெரிய ஞானி அகஸ்தியன் எல்லாவற்றையும் கண்டறிந்து வெளிப்படுத்தியவன் உடலுடன் இருக்கின்றானா?

அவன் எங்கே இருக்கின்றான்? ஒளியாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள் அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

மனிதனாகத் தோன்றியவர்கள் ஒளியின் சரீரமான நிலையில் இதைப் போன்ற துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.

மனிதனாகப் பிறந்த நாம் அடைய வேண்டிய எல்லை அதுதான். நாம் அந்த நிலையை அடைய நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.