ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2026

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்


அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் ராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.
 
1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.
 
அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.
 
பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… ருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.
 
அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.
 
பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.
 
உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.
 
ராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.
 
தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதிறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!
 
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.
 
1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!
 
யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞாப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.
 
பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.
 
எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

March 1, 2026

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்


நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால் அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான நிலையையும்
3.துருவ நட்சத்திரமான நிலையையும் இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.
 
அதனின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.
           
இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… த்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.
 
1.முதலில் கரு முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி டைகின்றது.
 
உதாரணமாக கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.
 
குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
 
 இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.
 
அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது…” போன்றதாகி விடுகின்றது.
 
கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து அடைகாக்கின்றது.
 
தைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச் சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.
 
கோழி தான் இரை தேடும் பொழுது தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.
 
தைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள் பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.
 
நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.
 
நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.
 
ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.
 
நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது. இப்படிப் பதிவாகிபதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.
 
அப்படி நுகரும் சக்தி பெற்றபின் அந்த உணர்வுகளை நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.
 
அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.
 
1.வேதனைப்படுவோர் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.
 
பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும் மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.
 
காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.
 
அவ்வாறு அடைகாத்து அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள் அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
 
மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத் திரும்ப நுகரும் உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.
 
ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.
 
இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).
 
அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  
1.அதற்குத்தான் இதை உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு எமது அருளாசிகள்.

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்


பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றதுஅல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.
 
ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி ருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.
 
இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும் சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.
 
1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.
 
இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.
 
அதற்கு என்ன செய்வது?
 
மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்துஅவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.
 
1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.
 
காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்  அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.
 
மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 
 
எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.
 
இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…  
 
அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.
 
ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…
 
இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.
 
இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி ழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.
 
1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர். 
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப்  போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின்  சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.
     
ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.
 
ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.
 
நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.
 
காரணம்அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.    
 
அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.
 
‘’ம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் ங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும்  ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,
 
இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!


தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!
 
உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.
 
அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால் தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.
 
சொத்தைச் சம்பாதித்து வைத்தேன் என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.
 
இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம் அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.
 
இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.
 
விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
 
பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.
 
எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.
 
நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.
 
ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.