ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2022

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் - ஈஸ்வரபட்டர்

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி...? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்...! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்...! வேறு யாரும் கேட்கவில்லை...!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்... என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு...! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்...!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்...
3.என்னுடன் இணைந்து வா...! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது...? தாவர இனம் பேசுமா...! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது...! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்... நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர... நாம் அல்ல...!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ... அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்... அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை... பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்...?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி... அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று... ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்...!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

தியானத்தின் மூலம் நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும்

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது...!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்...!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது... அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது...? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா...? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது...?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட... பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது...?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

September 14, 2022

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).

காற்று (பிராணன்) நம்மை இயக்கும் விதம்

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி ஆங்காங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது...!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது... செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

September 13, 2022

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.

செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.

வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.

செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.

ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.

தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.

“உணர்வுடன் கூடிய சுவாசமே…” சரியான தியானமாகும்

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்…
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் - காத்திடும் விஷ்ணு…!” என்பது.

1.மூலத்தைக் கணபதி என்றும்…
2.குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
3.நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
4.இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
5.கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
6.நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
7.சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமைரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
8.மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்ல…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

September 12, 2022

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் தவறுகளையும் நாம் நுகர்ந்தறிந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தூய்மையாக்கிக் கொண்டே வந்தால் மன பலம் பெற்று... விவேகத்துடன் நடந்து கொள்ளும் தன்மையும்... நம் வாழ்க்கையை அமைதி கொண்ட வாழ்க்கையாகவும் அமையச் செய்யும்.

பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து “என்றுமே ஏகாந்த நிலையாக” மகிழ்ச்சியுடன் வாழும் அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஏகக்காலத்தில் இதைப் பயன்படுத்திப் பழகுங்கள்.
1.குடும்பத்தில் கோபமோ குரோதமோ வராதபடி
2.அருள் உணர்வுகளைப் பெற்றுச் சிந்தித்து செயல்படும் திறனாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் எடுக்கப்படும் போது நமக்குள் வரும் வெறுப்பையும் வேதனையும் சமப்படுத்திச் சிந்திக்கும் தன்மை கிடைக்கின்றது. அப்போது நமது உணர்ச்சிகள் “விவேகத்துடன்” நடந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

இதை எல்லாம் மனதில் வைத்து யாம் கொடுத்த உபதேசங்களை நூல் வடிவில் வந்ததை அனைவரும் திரும்பத் திரும்பப் படித்து அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதுவே “மிகப்பெரிய தியானம்” ஆகின்றது.

வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றிடும் சக்தி பெற்று மற்றவரை நல்வழிப்படுத்தும் அருள் ஞானிகளாகவும் நாம் மாற முடியும்.

ஆனால்...
1.பிறரிடம் நாம் சொல்லிச் செயல்படுத்தும் நிலை ஆகாது... முடியாது..
2.பிறருக்கு நல்ல புத்திகளைச் சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியாது
3.ஏனென்றால் அது இயங்காது.

இவ்வளவு தூரம் இங்கே உபதேசிக்கிறோம் என்றாலும்
1.இந்த உணர்வுகளைப் பதிவாக்கித் தனக்குள் வளர்த்து
2.உங்கள் உடலிலே விளைந்தால் தான் அந்த ஞானமே வரும்.

சொல்லும் பொழுது... கேட்கும் போது... நன்றாகத்தான் இருக்கும். ஆக உங்கள் உடலுக்குள் விளையச் செய்து அந்த உயர்ந்த கருத்துக்களை என்றுமே நீங்கள் வளர்த்தல் வேண்டும்.

அது வரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் அதிகமாகச் சேர்த்து வளர்த்தல் வேண்டும். அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளையும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் பற்றதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

எந்த நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் பற்றுடனே நாம் வாழ்ந்திட வேண்டும்.

1.ஒரு காரியத்தைச் செய்யச் சென்றாலும்
2.வெளியில் சென்றாலும்
3.உறங்கச் சென்றாலும்
4.உணவு உட்கொண்டாலும்
5.ஒருவரிடம் பேசுவதாக இருந்தாலும் கூட
6.அதற்கு முன் ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு... அந்த வலுவைக் கூட்டிக் கொண்டு
7.நாம் சொல்லக்கூடியது அவருக்கு நல்லதாக வேண்டும் நல்லதாக அமைய வேண்டும்
8.என் சொல்லை அவர் மதித்து நடத்த வேண்டும்
9.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று
10.எதற்குமே இப்படி ஒரு தொடர்பு வைத்துக் கொண்டால்
11.அருள் உணர்வுகள் உங்களுக்கு அந்த ஞானத்துடன் விவேகத்துடன் வரத் தொடங்கும்.
12.எதிர்ப்புகளைத் தணிக்கும்... எதிரிகள் உணர்வு வராதபடி தடுக்கும்
13.கோபத்தை வளர விடாதபடி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்காது தடுக்கும்.

இதை எல்லாம் மனதில் வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சீராகத் தியானத்தில் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

“மூச்சையும் காற்றையும்” பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக...!” என்ற சொல் சூட்சமத்தில் மனிதச் சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை... எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்... அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்...” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி...” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக...” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக...”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக...” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்...” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி... ஆகாயம் என்ற கண்டப் பகுதி... காற்று என்ற இருதயப் பகுதி... நீர் என்ற வயிற்றுப் பகுதி... அக்கினி என்ற குறிப் பகுதி... மண் என்ற மூலப் பகுதி... இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது...
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை... அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை...!

காற்று நூல்...! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி...” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களும் ஞானிகளும்.

September 11, 2022

மனிதன் ஒருவன் தான் என்றுமே அழியாத நிலை பெற முடியும்

மூதாதையரின் உணர்வுகளை அதிகமாகப் பதிவாக்கி வைத்திருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் அதிகமானால்... உடலை விட்டு அவர்கள் சென்ற பின் இந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

எந்தெந்த நோய்களை அவர் பெற்றார்களோ அந்த நோய்களும் நமக்குள் உருவாக்கப்பட்டு நமக்குள் வேதனை வெறுப்பு என்ற நிலையே வரும்.

இப்படி... இதற்கு முன் நாம் செய்யத் தவறிய உணர்வுகள் மூதாதையரின் உயிரான்மா அந்த உயிரணுக்கள் அனைத்தும் நம் உடலில் உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் வலுவாக எடுத்துக் கொண்ட பின்
2.அவருடைய (முன்னோர்) உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு
3.அந்தச் சூட்சம சரீரங்களைச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையச் செய்ய முடியும்.

இந்த உடலில் எத்தனை கடுமையாக நோயினால் வேதனைப்பட்டனரோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் செலுத்தும் பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்தில் ஊடுருவி அங்கே நிலை கொள்ளும்.

பின் இந்த உடல் பெற்ற நஞ்சுகள் அனைத்தையும் அங்கே கரைத்து விட்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மூதாதையரின் உயிரான்மாக்கள் வாழத் தொடங்கும்.

இப்படி அவர்கள் வளர்ந்தால் அடுத்து அவர்களுக்குப் பிறவி இல்லை. மனிதன் ஒருவன் தான் இதை செய்ய முடியும்.

நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெற்ற நிலைகள் கரைந்து விட்டால் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.துருவ நட்சத்திரம் விஷத்தை முறிக்கும் உணர்வை ஒளியாகக் கொடுக்கும்
2.அந்த உணர்வலைகளை உணவாக எடுத்து வாழும் சக்தி பெறுகின்றார்கள்

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் எக்காலத்திலும் அழியாது.
1.அகண்ட அண்டத்தில் உள்ள எத்தனையோ சூரியக் குடும்பங்களும் அழியலாம்
2.ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அழிவதே இல்லை.

நமது பிரபஞ்சத்தில் இருப்பது போல ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் மனிதர்கள் வாழ்ந்து முழுமை அடைந்த பின் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அமைந்துள்ளார்கள்.
1.சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும்
2.அந்த ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் என்றுமே அழியாது.
3.உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின்
4.மனிதன் ஒருவன் தான் இந்த அழியாத நிலை பெற முடியும்.

தீமைகளை நீக்கிப் பேரின்பம் என்ற நிலைகளில் என்றைக்குமே பேரானந்த நிலையில் வாழ முடியும். ஆகவே உணர்வை ஒளியாக மாற்றுவது தான் மனிதனின் கடைசி நிலை.

அதைத்தான் இராமேஸ்வரம் என்றும்... பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வு கோடிக்கரை என்றும்... மனிதனுக்குப் பின் தீமைகளை நீக்கியது தனுஷ்கோடி என்றும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி அவ்வப்பொழுது அதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெறச் செய்து இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி நிலை.

இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் காவியத் தொகுப்புகளாக அமைத்து அந்த உண்மைகளை நாம் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

ஈஸ்வரபட்டனின் வாழ்த்து

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்...?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து... தெளிந்ததை... ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்...!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக... அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்...!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது... கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து... சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக...”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது...!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்... ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்... வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே...!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்...!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்...!”

இந்தக் கலியில்
1.சித்தர்களும்... மகரிஷிகளும்... சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வருவது
2.உண்மையான ஞான வித்துக்களைத் தான்...!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது...?

September 10, 2022

உடலுடன் அல்ல... “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

மனித உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கிறது என்றால் மருத்துவ ரீதியிலே இரத்தத்திலே ஆசிட் ஊற்றிய பின் உடலுக்குள் எந்த அளவு நோய் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது.

அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தநாளங்களில் கலக்கச் செய்தால்
1.நம் உடலில் கோபத்தின் உணர்வுகள் அது எந்த அளவு இருக்கின்றது...? அதை எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெளிவாக்குகின்றது.
2.வெறுப்பு என்ற உணர்வு வரும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அந்தக் கலக்க உணர்வை மாற்றிவிட்டு
3.அதை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று நமக்குத் தெரிய வருகின்றது... தீமையிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்கின்றது.
4.அதை நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற உண்மையின் உணர்வை நாம் அறிய முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அருள் உணர்வுகளைப் பெருக்கிச் சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற முடியும். இந்த வாழ்க்கையில் ஏகாந்த நிலை பெற முடியும்.

ஆகவே எத்தகைய தீமைகள் நம் மீது வந்து மோதினாலும் அதை அகற்றப் பழகுதல் வேண்டும். அருள் உணர்வுகளைப் பெருக்க வேண்டும்... துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக நாம் அமைய வேண்டும்

ஏனென்றால் ஆசையின் நிமித்தம் கொண்டு நமக்குள் பெருக்கிய உணர்வுகள் ஏராளம் ஏராளம் உண்டு. அந்த உணர்வை அடக்க ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் இராமாயணத்தில் கோடிக்கரை என்று காட்டுகின்றார்கள்.

அதாவது... பல உடல்களைக் கொன்று தின்று அதன் உணர்வின் தன்மை கொண்டு எத்தனையோ உடல்களை மாற்றிக் கடைசி நிலையான கோடிக்கரை என்ற இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை அடக்க வேண்டும்.

நம் உடலில் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு. ஒவ்வொன்றும் அது அது தன் உணவுக்காக உந்தும்.

அப்படி உந்தும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவைகளைச் சமப்படுத்தி ஒளியாக மாற்றி அது அனைத்தையும் உயிருடன் ஒன்றாக்கப்படும் பொழுது தனுசுக்கோடி.

இதைத் தெளிவாக்குவதற்காக இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி அதைப் பூஜிக்கத் தொடங்குகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் பொழுது...
1.உணர்வின் தன்மையை நமக்குள் இணைந்து வாழும் தன்மையாக
2.உடலுடன் அல்ல... “உயிரோடு ஒன்றி வாழும் உணர்வின் தன்மையை நாம் சேர்ப்பித்தால்...”
3.அடுத்து நமக்குப் பிறவி இல்லை.

இந்த உடலில் குறுகிய காலம் தான் நாம் வாழ்கின்றோம் என்றாலும் அந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் எதைச் சேர்க்க வேண்டும்...? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.சந்தர்ப்பத்தால் வரும் தீமையான உணர்வுகள் நம்மை அடிமை ஆக்காதபடி
2.அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை நாம் அடிமையாக்கி
3.தீமை நம்மைக் கவர்ந்திடாது விண் செல்லும் நிலை தான் தனுசுக்கோடி.

காரணப்பெயர் வைத்து இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள் எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடையும் வழிகளை.

சுவாசமும்… நாடியும்…

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்... முக்குணங்கள் என்றும்... உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்...” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக...!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் “விநாயகா…” என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்...?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்...!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது...!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்...!

September 9, 2022

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்...?

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு... “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்...” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்... தியானம் செய்தேன்...
2.“எனக்கு அது கிடைக்கவில்லை... இது கிடைக்கவில்லை...” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய... துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா...!

ஆகவே நமது எல்லை எது...? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்...? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்...! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது...?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா...” எனக்கு ஏன் நோய் வருகின்றது...” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது...!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது...?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது...? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா...? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய...! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்... ஆ... என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை...
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல...!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது... அதன் உணர்வே உடலாக மாறுகின்றது...
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்...?

தீமை என்ற நிலையோ... அதீத ஆசை என்ற நிலையோ... இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்...? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றா உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன...? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ... உணர்வுகள் மாறுகின்றதோ... செயல்கள் மாறுகின்றதோ... அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்...? என்ற நல்ல சிந்தனை வரும்.

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…!

1.மெய் உலகில் வாழ்கின்றோமா...?
2.பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா...? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும். நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது...? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா... பொய் உலகத்திற்குப் போகின்றாய்...? “மெய் உலகிற்குப் போடா...” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
1.உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணரச் செய்கின்றான்... உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.
2.ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ... எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று
3.சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை...? போ...! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி “ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.

எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்... “தற்கொலை செய்து கொள்ளலாம்...” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுதுதான் குருநாதர் சிரிக்கின்றார்.

இந்த உலகை... என்ன என்று அறிந்தாய். உன் உயிரை... யார் என்றும் அறிந்தாய்… இந்த உடலின் நிலையையும்... அறிந்தாய். “மீண்டும் ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் இந்த வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் கேட்டவன் உணர்வுக்குள் தான் செல்லும்.

அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய். இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?

பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ச்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்...” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது... “அதிலே சிறிது குறை வந்துவிட்டால்...” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்.. இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால் “ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு “என்ன வாழ்க்கை” என்று தற்கொலை செய்யப் போவோம்... “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்...” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றிவிடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றதுதான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்... மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும்போது “நீ எப்படி இருக்க வேண்டும்” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

ஆகவே… கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.

September 8, 2022

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் “மின் கதிர்களுக்குண்டான ஆற்றல்”

உதாரணமாக இடி மின்னல் தாக்குகிறது என்றால் மரங்களில் பட்டால் கருகிவிடும்.
1.மாட்டுச் சாணங்கள் குவியலிலே இந்த மின்னல்கள் பாய்ந்தால் இந்த உணர்வின் தன்மை அதிலே பல விதமான நிலைகள் வரும்.
2.காட்டில் வாழும் மிருகங்கள் அதன் உணர்வின் தன்மை பெற்றால் வீரியத்தன்மை அடக்கி ஒளிப்பிளம்பாகக் கிடப்பதைக் காணலாம்.
3.இது அதிசயப் பொருளாகவும் இருக்கும்.

ஒரு மிருகத்தின் உணர்வுகளிலே இது படப்படும் பொழுது அது அவ்வாறு மாற்றுகின்றது. மிருகத்தின் உணர்வை அடக்கும் உணர்வுகள் இங்கே வரப்படும் போது மின் கதிர்களையும் அடக்கும் உணர்வுகளாகப் பரவி அதைச் சுவாசிக்கும் தன்மையும் வருகின்றது.

அது போல் தாய் கருவிலே விஷத்தின் தன்மை இருந்ததால் அதை அடக்கி அந்த உணர்வின் (மின்னல்கள்) உணர்ச்சியை மாற்றும் தன்மை வருகிறது. 10 மாதங்கள் தாய் கருவிலே அகஸ்தியன் “இந்தச் சக்தியை...” பெற்றுத் தான் பிறக்கின்றான்.

அவன் பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்துக் கிடக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து
1.சூரியனால் விரிவடையும் நிலையும்
2.பல மின்னல்கள் தாக்குவதை உற்றுப் பார்ப்பதும்
3.அதன் உணர்வுகள் இவனுக்குள் அடங்கும் நிலையும் வருகிறது.

“நட்சத்திரங்களின் இயக்கத்தால் உயிர் எப்படி ஒளியானதோ” அதைப்போல (அந்த ஒளியான உணர்வின் தன்மை) உயிரைப் போலவே உணர்வின் வலுவைச் சேர்க்கின்றான்.

பல பேர் பல உயிர் என்ற நிலை இருந்தாலும்
1.“ஒரே எண்ணங்கள் கொண்டு” நாம் செயல்படுவோம் என்றால்
2.அதனுடைய வலிமையின் தன்மையே வேறு.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நிலை பெற்றது தான்.
1.உயிரின் தன்மை கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம் என்றால் அது மிகவும் வலுக் கூடியதாகின்றது.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துவதற்குத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக உங்களை இணைக்கின்றோம் (ஞானகுரு).

உதாரணமாக... ஒரு செடிக்கு உரம் இடும் பொழுது உரத்தின் தன்மை கொண்டு அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எந்தெந்த நிலை இருந்ததோ “காற்றிலிருந்து தான் அதனின் உணர்வின் சத்தை... அந்தச் செடி எடுத்து வளர்த்துக் கொள்கிறது...”

செடிக்கு உரமிடுவது போல் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் ஒரு தடவை ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்தச் சக்தியைக் காற்றிலிருந்து நீங்கள் எளிதில் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வுகளை அவனிட்ட மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு இந்த பரமாத்மாவில் தான் காற்றிலே கலந்துள்ளது...!

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து... 27 நட்சத்திரங்களின் மின் கதிரின் இயக்கங்களை இருவருமே சேர்த்து... உயிரைப் போன்று உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்...! துருவ நட்சத்திரம் அப்படி உருவானது தான்.

அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன உணர்ச்சிகளை இப்பொழுது ஊட்டப்படும் பொழுது அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகர முடியும்.

அதைச் சுவாசிக்கச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்களை உங்கள் இரத்த நாளங்களில் பெறச் செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று பேரருள் பேரொளியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும்.

மூவுலகம்

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி... பூமிக்குள்ளும் சரி... ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி... படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி...!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாகக் குணங்களும்... மணங்களும்... நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி...!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே...!

மூவுலகம் என்பது எவை...?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி குணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள... பாதாளம்...! என்ற எண்ணமா...?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி... நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள... மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது… ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

September 7, 2022

இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

1.அகஸ்தியன் பெற்ற பேரருளும்... இருளை அகற்றிடும் அருள் ஞானமும்...
2.அகஸ்தியன் துருவனான பின் துருவத்தின் வழி வானுலக ஆற்றலை அவன் நுகர்ந்த சக்திகளையும்
3.2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சங்களில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை அகஸ்தியன் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தப் பேரருளையும்
4.நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களிந் மூலம் வலுப்படுத்துவோம்.

அதன் மூலம் அகஸ்தியன் எப்படி இந்த உலகைக் காத்தானோ... தன் தாய் தந்தையைக் காத்தானோ... அதே போல விஞ்ஞான உலகில் இன்று வரும் பேரழிவிலிருந்து எல்லோரையும் காக்கலாம்... உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரம் பெறலாம்.

விஷத்தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட்டமைப்பாக இருந்து வலுவான நிலைகள் கொண்டு “நீங்கள் இடும் மூச்சலைகளால்” ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்தும் போது... வீட்டுக்குள்ளோ தெருவிற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ தீமைகள் வராதபடி... ஊரையும் வீட்டையும் உங்களையும் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

இன்று வரக்கூடிய கால மாற்றங்கள் அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளிலிருந்து மீட்க அருள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

ஞானிகள் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் சக்திகளை நாம் அனைவரும் எடுத்து அந்த உணர்வை வளர்த்து
1.நம்மைக் காத்து உலகைக் காத்திடும் சக்தியாக நாம் உருவாக்குவோம்.
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்.
3.இருளை அகற்றிடும் உணர்வுகளை இந்த உலகில் பரப்புவோம்.
4.விஞ்ஞான உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அகற்றுவோம்
5.அருள் உணர்வுகளை நம் பூமியிலே பரப்புவோம்.

ஆகவே “மெய் ஞானத்தை உருவாக்க முடியும்...” என்று உறுதி கொண்டு நமது குருநாதர் காட்டிய வழிகளில் நாம் வாழ்வோம் என்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

நாம் இடும் மூச்சலைகளால் இந்த உலகை அருள் ஞான உலகமாக மாற்றுவோம். மதம் இனம் மொழி என்ற பேதங்களினால் தீவிரவாத உணர்வுகள் கொண்டு மனிதனையே கொன்று அழித்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்வோம்.

அவர்களால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகளை எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இருந்து அகற்றச் செய்வோம். துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க அது ஓடி ஒடுங்கியே விடும்.

இந்த உணர்வின் தன்மை கூட்டக் கூட்ட... காலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அந்த இருளை எல்லாம் மாற்றிவிடும். இந்தப் பூமியும் புனிதமாகும்... பூமிக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

குரு காட்டிய அருள் வழியில் இனி வரும் ஆண்டுகளை மகிழ்ச்சிக்குரியதாக்கி
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைந்து வாழச் செய்யும் ஆண்டாகவும்
2.பிறவில்லா நிலைபெறும் ஆண்டாகவும்
3.இருளை அகற்றிடும் ஆண்டாகவும்
4.நஞ்சினை வென்றிடும் ஆண்டாகவும் நாம் உருவாக்குவோம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் நாம் எடுக்கும் முயற்சிகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை மாற்றி... அருள் உணர்வுகளைப் பெருக்கி... இந்த உலகில் அசுர உணர்வுகளை அகற்றிடும் சக்தியாக நாம் பெறுவோம்.

மெய் ஞானத்தை வளர்த்து அருள் ஞானத்தை வளர்க்கும் மெய் உலகை “நாம் உருவாக்குவோம்...!”

“ஒளி நிலை பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு” என்பதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன...?
1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்.... உடலோ அசைவம்...!
4.பூமி அசைவம்... பூமி பெறும் ஒளியோ சைவம்...!

இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும். அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.

ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.

மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.

இந்தக் கலியான உலகில் யாம் சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம். அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.

சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.

அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்...!

September 6, 2022

பிறவிக் கடலை நீந்திக் கரை சேர்ந்த குரு அருளைப் பெறுங்கள்... நீங்களும் கரை சேருங்கள்

நம் உடல் பல கோடி உணர்வுகள் சேர்த்துக் கோடிக்கரையாக வந்தது. மனித உடலின் தன்மை உருவானது - இது சிவ தனுசு.

ஆனால் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்தத் தீமைகள் உட்புகாது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சேர்த்துச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்.
1.இப்படித் தணித்துக் கொண்டு வந்தோம் என்றால் அது வலுப்பெறுகின்றது...
2.விஷ்ணு தனுசுவாக மாறுகின்றது.

ஒவ்வொன்றிலும் அழுக்கை நீக்கும் நிலைகளாக... நம் வாழ்க்கையில் எத்தனை விதமான உணர்வை எடுத்துக் கொண்டுள்ளமோ அது அனைத்திலும் அருள் உணர்வுகள் சேர்க்கப்பட்டுத் தீமைகளை அகற்றிடும் தன்மையாக வரும் போது தனுசுக்கோடி..!

ஆகவே உயிர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் கோடி உணர்வு உணர்வுகளையும் உயிருடன் ஒன்றிடும் போது ஒன்று...! அது தான் தனுசுக்கோடி என்று கூறுகின்றனர்.

அதாவது... நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள்... சங்கடங்கள்... சலிப்புகள்... வெறுப்புகள்... பாசத்தால் கவர்ந்த பல விஷத் தன்மையான உணர்வுகள்... இவைகளை நமக்குள் விடாதபடி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தணித்திடும் உணர்வின் தன்மையாக வரும் பொழுது “கோடி ஆகின்றது...”
2.பகைமை இல்லாத நிலையில் “ஒன்றாகின்றது...”

அதனால்தான் இராமேஸ்வரத்தில் இராமன் தனது நிலைகள் கொண்டு மணலைக் (தன் மனதை) குவித்துப் பூஜித்தான் தனுசுக்கோடி... இராமலிங்கம்...! என்று காட்டியுள்ளார்கள்.

ஆகையினால் இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன் நாம் எதை எல்லாம் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்...?

ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை ஒளியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வரப்படும் போது அதன் வழி அங்கே அழைத்துச் செல்கிறது. அடுத்து நாம் “பிறவி இல்லை” என்ற நிலையை அடைகின்றோம்.

எந்த நிலை ஆனாலும் இதன் உணர்வின் வழிப்படி நாம் செயல்படுவதே மனிதனின் கடைசி நிலை. அதை அடையச் செய்வதற்காகத் தான் அருள் வாக்காக இப்பொழுது கொடுத்துப் பதிவாக்கினோம். துருவ நட்சத்திரத்துடன் இணையும்படி செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்த அரும்பெரும் சக்தியைக் கொடுத்தாரோ அதே போன்று உங்களை அந்த்த் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக ஆக்குகின்றோம். பிறவி இல்லா நிலை அடைய உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பதிக்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி உபதேசித்தாரோ உங்களுக்குள் அந்த உணர்வின் ஞானத்தைப் பதித்து இந்த காற்றுக்குள் பரவி வரும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரச் சொல்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய் ஞானத்தின் உணர்வைப் பெற... அருள் உணர்வுகளைப் பெற... உங்களுக்குப் பிரார்த்திக்கிறேன்.

1.எனது புருவ மத்தியை எண்ணி ஈஸ்வரா... என்று எண்ணி இருங்கள்
2.உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்
3.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் உயிரை நினைத்து கண்களில் (கண்களைத் திறந்து) என் புருவ மத்தியை எண்ணுங்கள்
4.குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்நேரம் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அணைப்பிலே சென்றேன்
5.அதன் உணர்வை எனக்குள் கவர்கின்றேன்
6.எனது புருவ மத்தியில் நீங்கள் எண்ணும் பொழுது “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்கின்றோம்...”

கடலிலே நீந்தும் பொழுது நீந்திக் கரை சேர்ந்த ஒருவரைப் பின்பற்றிச் சென்றால் அதன் வழி நாமும் கரை சேரலாம். இதைப் போன்று
1.பிறவிக் கடலில் நீந்திச் சென்று ஒளியான நமது குருவின் உணர்வு கொண்டு
2.அவர் காட்டிய அருள் வழியில் நீங்கள் என்னை உற்றுப் பார்க்கும் பொழுது அதை நீங்கள் காணலாம்.

அகஸ்தியன் துருவனாகி... துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வெளி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

குருநாதர் காட்டி அருள் வழியில்...
1.என்னுடைய நினைவுகள் கண்ணின் நினைவு உயிரின் நினைவும் நட்சத்திரத்தின் பால் செல்கின்றது
2.நீங்களும் இப்பொழுது என் உயிரைப் புருவ மத்தியில் எண்ணிப் பாருங்கள்
3.பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

இப்பொழுது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியைப் பெரும் தகுதி பெறுகின்றீர்கள்...
1.அருள் உணர்வுகளைக் கூட்டியது
2.அருள் உணர்ச்சிகளை ஈர்த்தது...!

ஆகவே அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நேரத்தில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைக் கவர்ந்து உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உயிர் குருவைச் “சைவ சித்தமாக்க வேண்டும்”

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை...!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே - தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்... ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி... தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்...!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை... அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக... அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

September 5, 2022

கணவன் மனைவிக்குள் “பற்று...” எப்படி இருக்க வேண்டும்...?

குடும்பத்தில் சஞ்சலம் என்று உணர்வு வந்து விட்டால் கணவன் மீது பற்றாக இருக்கும் மனைவி கணவர் வெளியே செல்லப்படும் பொழுது அவருடைய தொழில் எப்படி இருக்கின்றதோ...? அங்கே என்ன நடக்கின்றதோ ஏது நடக்கின்றதோ...? என்று மனைவி அடிக்கடி எண்ணினால் இதே உணர்ச்சிகள் கணவருக்குத் தூண்டப்பட்டு அங்கே சிந்தனையற்ற செயல்களாகி... பகைமை ஆகி... தொழில் செய்யும் இடங்களில் தீமைகள் வருகின்றது.

கணவன் மனைவிக்குள் இது போன்று வருகின்றது. இதைத் தடுக்க மனைவி எப்படி எண்ண வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தன் உடலில் மனைவி அதை வலுவாக்கிக் கொண்டு அந்த அருள் சக்தியைக் கணவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.
1.அவருக்கு அந்த ஊக்கமான நிலை கிடைக்க வேண்டும்
2.அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்
3.அவர் பார்ப்பவருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்

கணவர் மீது பற்று இருப்பினும் அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலும் எண்ணும் பொழுது அவருக்கு வரக்கூடிய தீமையில் இருந்து மீட்க முடியும். கணவனுக்குத் தீமை வராது மனைவி காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே... துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளை காலை துருவ தியானத்தில் இரண்டு பேருமே எடுத்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளை இணைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நுகர்ந்து பேரின்பம் பெறும் உணர்வாகப் பெற்று இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நோயாளியை உற்றுப் பார்த்து நோயை அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் இயக்காதபடி அதை அடக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயாளியை நாம் பார்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எண்ணி எடுத்தால் அது விஷ்ணு தனுசு.

நோயாளி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டால் இந்த உணர்வுகள் அங்கே உருவாகின்றது. அவர் உடல் நலம் பெறும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

இத்தகைய வல்லமை பெற்ற சக்தியாக வர வேண்டும் என்றால் காலையில் கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
1.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்
4.நுகரும் அந்த உணர்வுகள் எல்லாம் உயிரின் இயக்கத்தில் ஒன்றி அது பிரணவமாகின்றது (ஜீவன் பெறுகிறது)
5.உயிரான ஈசனிடம் பட்ட பின் ஓ...! என்று உணர்ச்சிகளாக மாறி இரத்தநாளங்களில் கலக்கின்றது
6.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உடலிலுள்ள அணுக்களிலே படரப்படும் பொழுது தீய அணுக்கள் ஒடுங்குகின்றது.

ஆனால் அதே சமயத்தில் தீய அணுக்களை நுகர்ந்தால் அதன் உணர்ச்சி கொண்டு இயக்கப்பட்டு நல்ல அணுக்கள் செயலற்றதாகிந்றது... நாம் சோர்வடைகின்றோம்... சஞ்சலப்படுகின்றோம்...! இந்த உணர்வு அதிகரித்தால் உடலில் மாற்றமே (வலியோ நோயோ) வருகின்றது.

ஆகவே கணவன் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாகி விட்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கல்யாணம் ஆகிவிட்டால் மனைவியைக் கண்டபடித் திட்டுவதும்... உதைப்பதும்... போன்ற நிலையில் சிலர் இருப்பார்கள்.

அதே சமயத்தில் பெண்களும் கணவர் செயல் பிடிக்கவில்லை என்றால் அவரைச் சாபமிடும் நிலைகளுக்கே வருகின்றார்கள்.

இது போன்ற நிலைகளில் இருவரும் செயல்பட்டால் மனிதனாக இருக்கக்கூடிய நிலையினைப் பிரிக்கப்பட்டு
1.எதனின் விஷத்தின் தன்மை இருவருக்குள்ளும் கலந்ததோ அதற்குத்தக்க அடுத்து தீமையான உடல்களுக்குத் தான் செல்ல நேரும்.
2.அடுத்து மனித உருப் பெரும் தகுதியை இழந்து விடுகின்றோம்
3.நரக லோகத்தைச் சந்திக்கும் நிலையே வருகின்றது.

இது போன்ற நிலையிலிருந்து விடுபட குடும்பத்தில் கணவன் மனைவி ஒவ்வொருவரும் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் பற்று கொண்ட நிலையில் வேதனையைச் சேர்த்து விட்டால் அந்த வேதனை உருவாக்கப்படும் பொழுது இங்கே இருவருக்குள்ளும் நோயாக மாறுகின்றது அதாவது
1.”வெளியிலே எனக்கு இடைஞ்சல்...” என்று கணவன் மனைவியிடம் சொல்லப்படும் பொழுது
2..அதை ஏற்று மீண்டும் திருப்பி கொடுக்கும் நிலையாக ஆண் பெண் என்ற நிலையில் “நோயே...” இங்கே ஜீவன் பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் பெற வேண்டும்... என்று மனைவியும் மனைவி பெற வேண்டும் என்று கணவனும் இணைத்து விட்டால்... அது மிகவும் உயர்ந்த சக்தியாக இங்கே ஜீவன் பெறுகின்றது.

அதைத் தான் கணவனும் மனைவியும் உருப் பெறச் செய்ய வேண்டும்.

பரணி நட்சத்திரத்தின் சக்தி

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு...!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது...?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்...” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்...” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி... உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது... “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்...?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது...?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்தச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலைச் சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே...! இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும்.

பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

September 3, 2022

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

தெருவிலே சாக்கடை இருக்கின்றது... வீட்டிலோ... தொழிலிலோ... “மிகுந்த கஷ்டம்...” என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை எடுத்துச் சாப்பிடும் (நம்மை அறியாமலே).

ஆனால் யாம் சொன்ன முறைப்படி தியானம் அதிகமாக இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்குச் சாக்கடை நாற்றமே பெரும்பகுதி தெரியாது.

1.சாக்கடை அருகிலே இருந்தாலும் கூட... அந்த உணர்வுகளை நுகரவிடாது
2.எடுத்துக் கொண்ட தியானம் அதைத் தடுக்கும்... உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் யாம் பதிவு செய்த ஞான வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

பயிர்களை விவசாயம் செய்யும் போது பார்க்கலாம். புகையிலைக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்... நெல்லுக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்... சோளத்திற்கு என்று ஒரு உரம் போடுகின்றார்கள்.

அதே மாதிரி யாம் கொடுக்கும் ஞான வித்திற்கு “அருள் ஞான உணர்வின் உரத்தை” நீங்கள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஞான வித்தாக” ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களிலே அது படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை உயர்த்தும்.

1.நான் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்... என் வீட்டுக்காரர் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்
2.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்... கடன்காரன் பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்கிறான் என்று இப்படி விட்டு விட்டால் இது சவாரி செய்து விடும்
3.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்... எனக்கு நோய் வந்து விட்டது என்று எண்ணினால்
4.அருள் சக்திகளைப் பெறுவதை விட்டுவிட்டு இதை எடுத்துக் கொள்கின்றீர்கள்
5.கெட்டதற்குத் தான் நீங்கள் சக்தி கொடுக்கின்றீர்கள்... அதையே வளர்க்கிறீர்கள்.

இந்த மாதிரி எண்ணங்கள் எதனால் வருகின்றது...?

உடலில் உள்ள அணுக்களுக்கு அதற்குப் பசி எடுக்கும் பொழுது அது உணர்ச்சியைத் தூண்டி நல்லதை எடுக்க விடாது இப்படித் தடுக்கும்.

அந்த மாதிரித் தடுக்கும் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...? உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சி மூலம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து நல்ல உரமாகக் கொடுத்தால்
2.ஞானத்தை நாம் பெருக்க முடியும்
3.தீமையான உணர்வுகள் உள்ளுக்கே புகாதபடி தடுக்கவும் முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா. இப்படி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஒருவன் போகின்றான்... யாரையோ கோபமாகப் பேசுகின்றான். அதைப் பார்த்தவுடன் நம் நினைவுகள் எப்படி வருகிறது...?

பார்... இந்த மாதிரி நடுரோட்டில் பேசுகின்றானே...! இந்த உணர்வு வந்த பின் உயிரிலே பட்ட பின் நமக்குள்ளும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நாமாக அப்படிச் செய்கின்றோமா...? இல்லை...! அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. ஆகவே இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா...! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இந்த வலுவான நிலைகள் இங்கே ஆனபின்
1.அவன் உணர்வைத் தள்ளி விட்டு விடும்
2.காரணம் இங்கே அடைத்து விடுகின்றோம்
3.துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டுகின்றோம்
4.ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்

துணியில் அழுக்குப்பட்ட பின் சோப்பைப் போடுகின்றோம். நுரை என்ன செய்கின்றது...? அந்த நூலுக்குள் மறைந்துள்ள அழுக்கை அப்புறப்படுத்துகின்றது.

சோப்பு போடாதபடி... என்ன தான் துணியைத் துவைத்தாலும் கூட அழுக்குப் போகாது. இருட்டடித்த மாதிரி தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது.

உப்பைப் போட்டுத் துணிகளை வேக வைத்த பின் அழுக்கை எல்லாம் வெளியேற்றி விடுகின்றது. அது போன்று தான் நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழகுங்கள்.

ஆத்ம நிலையைத் தன் வழிக்கு “ஏற்க வந்தவர்களுக்கு…” அறிந்திடத் தான் இந்தப் பாட நிலை

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்... மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ... பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன...!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை... பூகம்பம் வரும் நிலை... பெரும் மழை வரக்கூடிய நிலை...! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே அந்தச் சக்தி உள்ளது என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

ஆனால்… இந்த மனிதன் உண்டு... உடுத்தி... உறங்குவது தான் வாழ்க்கை...! என்ற சுகத்தை எண்ணுகின்றான். இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு...?

1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்...!

September 2, 2022

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

இன்று கோடிச் செல்வங்களை நாம் வைத்திருந்தாலும் அழகான உடலாக வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் பண்பால் பரிவால் கேட்டறிந்த உணர்வுகள் உடலுக்குள் கடும் நோயாக மாறும் பொழுது “நம் அழகான உடல் நிற்கின்றதா...?”

ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து பிறரை மகிழச் செய்யும் நிலை நமக்கு இருந்தாலும்
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகிறது...?
2.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அழகான ஆடையை மேலே போட்டால் என்ன சொல்வீர்கள்...?

நல்ல ஆடைகளைப் பார்த்தால் வெறுப்பு தான் வரும்.

மீறி யாராவது கொடுத்தால் என்னைக் கேலி செய்கின்றீர்களா...? நான் நோயாக இருக்கும் போது இப்படிச் செய்கின்றீர்களே...! என்று வெறுக்கும் தன்மை தான் வரும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஒரு நல்ல ஆடையைக் காண்பித்து இது எப்படி இருக்கிறது பாருங்கள்...! என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்...?

காட்டுவர்கள் மீது ஏரிந்து விழுவோம்... எந்த நேரத்தில் எதைச் செய்கிறார்கள் பார்...! என்று. ஆகவே அதை அப்போது ஒதுக்குகின்றோம் அல்லவா...!

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய ஆடம்பர நிலை பெற்றிருந்தாலும்
1.அருள் ஒளி என்ற நிலையை நாம் பெருக்கி
2.அருளைப் பெறும் ஆசையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இருளை நீக்கும் அந்த வலிமை பெற்று நமது வாழ்க்கையில் பேரருளைப் பெறும் அருள் சக்தியாக நாம் வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் முழுமை பெறுதல் வேண்டும்.

உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றேன்...? துருவ நட்சத்திரத்திற்கே இப்போது அழைத்துச் செல்கின்றேன்...!

நம் பிரபஞ்சத்தின் இயக்கம் 2000 சூரியக் குடும்பத்தில் இணைந்து வாழும் தன்மை பெற்றது.
1.அதைக் கண்டுணர்ந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்கு உணர்த்தப்படும் போது
2.உங்கள் நினைவாற்றல் அந்த 2000 சூரியக் குடும்பங்கள் வாழும் எல்லைகளுக்கே செல்லுகின்றது
3.அதன் உணர்வின் தன்மையைப் பெருக்கி பிறவில்லா நிலையை அடையும் நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஆகவே உங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அறியாது வந்த இருளை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கணவன் மனைவி எங்கள் இரு உயிரும் ஒன்றாக வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல நாங்கள் ஒன்றி வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து சாவித்திரி போன்று தீமைகள் புகாது இரு உயிரும் ஒன்றிட வேண்டும் என்று கணவன மனைவி இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஆகவே உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
2.பேரின்பப் பெரு வாழ்வு வாழக்கூடிய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

தியானிக்கும் முறைகளை வழி காட்டினோம்... துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் பதிவு செய்தோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்துடன் இணைத்து “ஆழ்ந்த நித்திரைக்கு முன் நீங்கள் கொண்டு வந்தால்” என்றும் ஏகாந்த உணர்ச்சி கொண்டு உங்கள் உடலுக்குள் உண்மையின் உணர்வை அது உணர்த்தும்... பேரருளைப் பெருக்கும்... பேரொளியாக மாறுவீர்கள்.

“சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்”

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக... பிரம்மத்தின் பிம்பமாக... சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு...மித்ரு... என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திடா வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல...!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்...!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது...?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்...!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேரச் செயல்பாடாக...”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாகச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்... எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக... தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ... சம்சாரி என்றோ...” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.

September 1, 2022

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.

அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.

இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.

1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்… அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்… மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு… அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும் அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.

அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.

இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்… பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.

நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் “நியூட்ரான்” என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.

குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.

1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால்... அது திருவினையாக்கும்

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா...! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்...?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல...! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா… பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே...
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்...!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்...மீண்டும்...” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்... தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு... தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா...!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி...!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து... அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா...!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்...!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக... கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா...! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா...!