
பூணூல்
ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில்
உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான்
செயல்படுவோம்.
அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து
உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து
உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை
உணர்த்தினான்.
1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின்
சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும்
அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.
நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.
நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”
சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக
நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப்
பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.
1.வசிஷ்டாத்வைதம் என்ற
நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின்
சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால்
சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.
காரணம் அகஸ்தியன்
விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும்
அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.
வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை
மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம்
என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும்
நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.
அகநிலைகளைக் கூட்டும்
நிலைகள் இல்லை.
1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின்
சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை
நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற
நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ
மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.
அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.