
வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு
ஒரு
விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை
உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில்
உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள்
கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது
கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால்
தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி
அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச்
சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.
இதைப்
போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச
நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக
இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.
நாம்
கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச்
செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள்
கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத்
தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.
பொருளைச்
சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத
நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.
ஏனென்றால்
கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின்
தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது
மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.
இவ்வாறு
நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக
எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில்
கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.
கண்களில்
உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும்
தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.
இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.
ஆகவே
இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.
இதைப்
போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும்
கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.
பலவிதமான
உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும்
உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி
விடுகின்றது
ஒவ்வொரு
உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ
கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த
உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது
1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற
வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது
தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து
முடிவில் தான் தெரிய வரும்.
உதாரணமாக
கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும்
போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய
மணம் அப்பொழுது தான் வீசும்.
1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச்
சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக
உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி
என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.
சிறுகச்
சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை
அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய
விடுகின்றது.
நவீன
விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக
உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை
சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.
இன்று
இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர்
என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை
விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.
காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான்
இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக்
கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.