ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2025

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை


சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம் தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே றிந்து விடுகின்றதா…? இல்லை.
 
அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.
 
ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.
 
1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.
 
ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.
 
பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் அடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு கிரகம்…! அப்படித்தான் வேண்டும் என்று சொல்லும்.
 
தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.
 
அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.
 
நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.
 
ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.
 
தையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
 
மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”
 
இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.
 
நம் பாட்டன் பாட்டி அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
 
உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.
 
இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்

“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்


ஆதியிலேஒவ்வொரு அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது. இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக் கூட்டத்திற்குள் மோதுகின்றது.
 
மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி எடை கூடுகின்றதுநகர்ந்து ஓடத் தொடங்குகிறது.
 
ஓடும் நிலையில் உராய்கின்றது வெப்பமாகின்றது ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள் இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.
 
அதாவதுஇயற்கை அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின் ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது பரமாகிறது.
 
பரம் என்றால் எல்லை ஒரு பொருளாகின்றதுரூபம்…! அதற்குத் தான் பரம்பொருள் என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு உண்மைகளை உணர்ந்து உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
 
என்றோ நடந்தது…!
 
ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்) அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.
 
ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன் பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள் தூண்டுகின்றதுஇது விளைகிறது.
 
இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.
 
உயிர் ஒளியானது உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன் அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான் விண்ணுலகை அடைந்தான் வானுலகையும் அளந்தான்... அண்டத்தையும் அறிந்தான்…!
 
அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால் அவனுக்குப் பின் வந்தவரால் அகஸ்தியன்என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.
 
1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து அதையெல்லாம் அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்,

May 16, 2025

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”

எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”


ஒருவர் திட்டி விட்டார் என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?
 
திட்டினான் திட்டினான் திட்டினான்என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.
 
இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.
 
ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக் கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின் இயக்கத்தையும் அறிகின்றான்.
 
எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.
 
கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.
 
இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில் யாரோ செய்வார் சாமியார் செய்வார் எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள் செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.
 
நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும் நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத் தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.
 
சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.
 
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அடுத்து நாமும் குறையான செயல்களைச் செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.
 
அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது தலை வலிக்கிறது…” என்று வரும்.
 
இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான் சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.
 
இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின் கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.
 
ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள் செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின் சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.
 
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை...!
 
வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும் நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!
 
ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.
 
நான் (ஞானகுரு) இப்போது பேசுகிறேன் என்றால்
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள் விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளதுஅதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!
 
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.

May 15, 2025

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்


எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.
 
உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.
 
ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.
 
1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.
 
இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.
 
1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.
 
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.
 
ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.
 
தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.
 
கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம் அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.
 
பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

May 14, 2025

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”

நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.
 
கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.
 
அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.
 
இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாதுஅனுதினமும் செய்ய வேண்டும்.
 
வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
 
சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்...!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்... அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி... எனக்கு வேண்டாம்... நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...
5.நன்றாக இருப்பீர்கள்...! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.
 
நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம்என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்...! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.
 
அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.
 
இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.
 
ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்...!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.
 
பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.
 
ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதா வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.
 
ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது
 
அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.
 
என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.
 
கல்யாணராமா...! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.
 
ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது...”