ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2020

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்


உதாரணமாக ஒரு தட்டாண் பூச்சி ஒரு செடியில் உள்ள மலரில் அதனுடைய முட்டையை இட்டு விட்டால் அந்த மலரில் வரும் சத்தினைக் கவர்ந்து அது ஒரு பூச்சியாக வளர்ந்து பட்டாம் பூச்சியாக வளர்கின்றது.

அந்தப் பூ என்னென்ன கலரில் இருந்ததோ பட்டாம் பூச்சி அந்த பூவில் இருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர்ந்து (XEROX) அதனுடைய இறக்கைகள் பூவின் ரூபமாக இருப்பதையும் காணலாம்.

ஏனென்றால் இதை உங்களுக்கு நான் (ஞானகுரு) லேசாக சொல்கின்றேன். அந்தப் பட்டாம் பூச்சிகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்று குருநாதர் காடும் மேடும் அலையச் செய்து அது உருப்பெறும் விதங்களை அறியும்படி செய்தார்.

இப்பொழுது நான் அறிந்த நிலைகளை நீங்களும் அறிய வேண்டும் என்றால் உங்கள் தொழிலை விட்டுவிட்டு அறியச் சென்றால் சோறு யார் போடுவது…?

எனக்குச் சோறு இல்லை என்றாலும் காட்டிற்குள் இரண்டு பச்சிலையைக் கையில் கொடுத்து அதை மென்று தின்ற பிற்பாடு வெறும் தண்ணீரைக் குடித்தோமென்றால் பசி தெரியாது.

அந்தப் பசி தெரியாத நிலைகள் கொண்டு பசி என்ற உணர்வு வரப்படும்போது இன்ன பச்சிலையை நீ உணவாக உட்கொள் என்று குருநாதர் காட்டியிருந்தார்.

1.அந்த ஒரு பச்சிலையை அதிலே ஒரு துண்டு தான்…!
2.அதை ஒரு நிமிடத்தில் உட்கொண்டுவிட்டு
3.மீண்டும் அவர் எதைச் சொன்னாரோ அது குறி தவறாது அந்த நினைவாற்றலைச் செலுத்தும்படி சொல்வார்.

அப்படிச் செலுத்தினால் தான் எனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படி உருமாறுகின்றது…? அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படி அதனுடைய உணர்வலைகள் அது இயங்குகின்றது என்ற நிலையை உணர முடியும். இப்படித்தான் குருநாதர் தெளிவாகக் காணும்படி செய்தார்.

இதை எல்லாம் நீங்கள் இங்கே அமர்ந்து கேட்கின்றீர்கள். நான் அங்கே இயற்கையின் நிலைகள் எப்படி உருப்பெறுகின்றது…? என்று
1.குரு அருள் அவருடைய வலுத் துணை கொண்டு
2.அதனை அறியும் வாய்ப்புகளை எனக்குக் கொடுத்தார்.

அவர் எனக்குக் காட்டிய அதே வழிப்படி உங்களுக்குள் இதை உபதேசிக்கும் போது இதன் உணர்வை நினைவாற்றலாக நீங்கள் வரும்போது
1.இயற்கையின் நிலைகளை நீங்களும் உணர முடியும்
2.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்… அதை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்தப் பட்டாம்பூச்சிகள் அதனுடைய இறக்கைகளில் இந்த பூவிலிருந்து அது இழுக்கும் துகள்களில் பல வர்ணங்களில் வேஷமாகப் போடும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள்…! எத்தனையோ வண்ணத்தில் பட்டாம் பூச்சிகளை. அதிலே எத்தனையோ வகையான பூச்சிகள் உண்டு இதெல்லாம் முதலில் புழு இனங்களாக வந்து பின் பூச்சி இனங்களாக மாறி பின்பு பறவை இனங்களாக மாறுகின்றது அது கவர்ந்த உணர்வுக்கொப்ப என்ற இந்த நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதே சமயத்தில்… ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளும்  கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உணர்வுகளும் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் ஒன்றாக இயங்கி… உணர்வின் சத்தைக் கவர்ந்து… தான் கவர்ந்த உணர்வுகளை அந்தந்த குணங்களுக்கொப்ப அணுவின் தன்மை உருவாக்கி… அதனின் மணம் அது உடலாக்கி… அந்த உடலின் ரூபங்கள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இதை நாம் அறிவதற்காக…
1.இந்த உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்
2.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் ஈர்ப்பை (காந்தம்) லட்சுமி என்றும்
3.அந்த ஈர்ப்பால் அதனுடன் இணைந்து உருப்பெறும் சக்தியை பிரம்மம் என்றும்
4.நமது உயிரின் இயக்கங்களை குரு தெளிவாக்குகின்றார்.

இந்த உயிர் எதனைக் கலவையாக உருவாக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அதனதன் உணவாக எடுத்து அந்த உணர்வின் தன்மை விளையும்.

அந்த உணர்வின் தன்மை உணவு எதுவோ அக்குணத்தின் தன்மை எண்ணங்கள் கொண்டு இயங்கும் என்ற நிலையை தெளிவாகக்கிக் கொடுக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த அந்த நிலைதான் முதலிலே ஒரு புழுவாக உருவாக்குகின்றது. அங்கே உயிர் ஈசனாகவும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும் இங்கே உருப்பெறுகின்றது

இதை எல்லாம் உயிரினங்களில் ரூப மாற்றம் எப்படி…? என்பதை ஆதியிலிருந்து குருநாதர் வரிசைப்படுத்திக் காட்டினார்.