ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2020

துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அடிக்கடி வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிப்போம்.

நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்த துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று ஏங்கி நாம் பெறும் போது
1.நாம் சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
2.அதைத் திரும்ப திரும்ப நாம் எண்ணும்போது அது அணுவாக அணுக்கரு முட்டையாக வளரத் தொடங்குகின்றது.

நம் இரத்த நாளங்களில் கலந்து அது குறித்த காலம் வரும் போது அந்த முட்டை அணுவாக உருப்பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வை எடுத்து நமக்குள் தியானித்தோமோ
2.அவை அந்த அணுத் தன்மை அடைந்த பின்… எதை எண்ணி ஏங்கியதால் கருவானதோ
3.அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

அப்போது… நம் சிறு மூளை பாகத்தில் உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.கண் காது மூக்கு வாய் உடல் என்ற ஐம்புலனிலும் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தி
2.எந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து அந்த அலைகள் நம் பூமியில் பரவியதோ
3.அதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.

அப்பொழுது நாம் அந்த உணர்வுகளை எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு எளிதாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்…. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் போது
1.அதை நம் உடலுக்குள் ஒளி பெறும் சரீரமாக
2.அந்த ஒளியான அணுக்கள் நம் உடலில் வளரும்.