கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப்
பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக்
கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு
நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப்
பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று
எண்ணுகின்றேன்.
ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்)
என்று நான் உணர்த்தும் நிலை.
ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு
கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம்
மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும்
அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.
அந்நிலைதான் ஜெப நிலையும்.
ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.
இன்று நம்மில் கலந்துள்ள
பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப
நிலைக்கும் வேறுபாடில்லை.
வாழ்க்கை நிலையில் வரும்
நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும்
வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.
இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும்
பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன்
அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா என்று.
சாதாரண மனிதர்களின் நிலைக்கும்
சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது...?
நாம் சாதாரண மனிதர்களாகிய
நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக்
கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.
1.எண்ணத்தின் சிதறலைத்
தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு
கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம்
வரும்
4.அப்பதட்டத்திலிருந்து
வருவது தான் கோபமும்.
இப்படி நாமே வளர்த்துக்
கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின்
மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.
ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக்
கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப்
பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய
ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.
இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப்
பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள்
இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.
ஆண்டவன் ஒரே சமயத்தில்
பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும்
வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.
சூட்சும நிலையில் உள்ளவர்கள்
(ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவரவரின்
எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி
வாழ்கின்றான்.
உள் மனம் வெளி மனம் என்பதல்ல
இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே
ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.
1.இன்று மக்களுக்குப் போதனை
நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது
பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது
பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின்
நிலை இன்று.
முந்தைய காலத்தில் பல நீதி
நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும்
விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை
வெளியிட்டார்கள்.
இன்று அனைத்து நீதி நூல்களையுமே
ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின்
வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.
“முள்ளை முள்ளால் எடு...”
“வைரத்தை வைரத்தால் அறு...” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட
எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு
மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.
இவ்வுலகில் வந்து குவியும்
அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக்
காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.
போகரின் நிலையும் போகரை
ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து
வைத்துள்ளார்கள்.
இக்காற்றில்தான் அனைத்து
நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும்
பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.
இவ்வுடலையே கல்லாகவும்
எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை
தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.
வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட
முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.
அனைத்துமே இவ்வெண்ணத்தினால்
வந்ததுதான்...!
உலக சக்தியும்... சக்தியாக
சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கிவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால் “அனைத்து சக்திகளையுமே
நம்முள்ளே கண்டிடலாம்...!”
இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்
வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.