“கோவில்” - இது
காளி கோவில், இது முருகன் கோவில், இது மாரியம்மன் கோவில் என்று நாம் சொல்கின்றோம்.
கிறிஸ்தவ மதத்தில்
ஏசு என்ற நிலைகளில் பொதுவாக இருப்பினும் ஒரு தத்துவ ஞானியின் பெயரை வைத்து இது இந்தச்
“சர்ச்” என்ற நிலைகளில் அந்தக் குணங்களைச் சொல்லி பெயரை வைக்கின்றார்கள்.
முருகன் கோவில்
என்று இங்கே வைக்கும்பொழுது சர்ச்சுக்கு ஒரு நல்ல மனிதனின் பெயரை அவர்கள்
வைப்பார்கள். நல்லொழுக்கத்தின் குணத்திற்கு அவர்கள் ஒரு பெயரை அந்த ஆலயத்திற்குச்
சூட்டியிருப்பார்கள்.
நாம் கோவில்
என்கிறோம். அவர்கள் இன்ன சர்ச் என்று என்று சொல்லும் பொழுது அந்தக் குணத்தின்
தத்துவத்தை அங்கே போதிக்கின்றார்கள்.
இதைப் போலத்தான்
முகமதியர்களும் “பள்ளிவாசல்” என்று இன்ன பள்ளிவாசல் என்று சொல்கின்றார்கள்.
ஏனென்றால் பள்ளி என்றால் கற்றுக் கொடுக்கும் நிலைகள்.
நாம் கோவில்
என்கிறோம். அறிவை ஊட்டும் நமக்குள் அந்த எண்ணங்கள் நமக்குள் தெய்வமாக இருந்து செயல்படும்
என்ற நிலைகள்.
ஆகவே, இன்ன
பள்ளிவாசலில் இன்னார் என்ற நிலைகளில் அவர் நல்லதைச் செய்தார் என்று அந்தத் தத்துவ
ஞானியினுடைய நிலைகளில் பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
அவர்கள் காட்டிய
நிலைகளில் இந்தப் பள்ளிவாசலில் யார் அந்த நற்குணங்களை எடுத்தார்களோ அவரின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மெய்
ஒளியைப் பெற முடியும், நல்லவைகளைச் செய்ய முடியும் என்ற நிலைகளைக்
காட்டுகின்றார்கள்.
ஆகவே, எல்லா
மதங்களில் எடுத்துக் கொண்டாலும் இதே நிலைகள் தான்.
சீக்கியர்களை
எடுத்துக் கொண்டாலும் “குருத்வார்” என்று சொல்வார்கள். சீக்கிய மதத்திற்குக்
குருவாக இருப்பினும் அதிலே அவர்களின் தத்துவத்தை எடுத்துக் கொண்ட நிலைகளில் இன்ன
குருத்வார் என்ற நிலைகளில் அங்கே காட்டப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு
மதங்களிலும் காட்டிய நல் ஒழுக்கங்களில் தப்பில்லை.
இதைப் போல் அன்று
அரசர்கள் தனக்கென்று மதங்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் சட்டங்களை இயற்றி அந்தச்
சட்டத்தின் வழிகளில் வேள்விகளை இப்படிச் செய்தால் “இந்தக் கடவுள் நமக்குச்
செய்யும்” என்று சாஸ்திரங்களை எழுதுகின்றார்கள்.
இங்கே எப்படிச் சாங்கிய
சாஸ்திரங்கள் உண்டோ அதே போல் ஒவ்வொரு நல்லவரையும் மகான் என்று அழைக்கப்பட்டு அந்த
ஞானிகளின் பெயரை வைத்து சர்ச்சுகளையும், பள்ளிவாசல்களையும், குருத்வார்களையும்
உருவாக்கி அவர்கள் சொன்ன நல் ஒழுக்கங்களை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று தான் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.
அதன் வழிகளில்
நடந்தால் நமது வாழ்க்கை இவ்வாறெல்லாம் இருக்கும் என்று அங்கே காட்டப்பட்டது.
இவையெல்லாம்
இதற்கு முந்தி எமக்குத் (ஞானகுரு) தெரியாது. குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர்) இதனை விளக்கியபின் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
கடவுளைக் காக்க மதத்தின் கீழ் இன்று எப்படிச் செயல்படுகிறார்கள்?
எல்லா மதங்களும்
நல்ல ஒழுக்கங்களைத் தான் கற்பித்துள்ளது.
எந்த எந்த
மதத்தின் தன்மையில் இங்கே வந்தாலும் அவர்கள் வகுத்துக் கொண்ட சட்டத்தில் சிறிது
பிழைகள் ஏற்பட்டால் உடனே “துரோகி” என்ற நிலைகளை எடுத்து வெறுப்பின் உணர்வுகளை
வளர்த்து அந்த உணர்வின் தன்மையே காலத்தால் மாறுபடும் நிலைகள் வருகின்றது.
அன்றைய அரச
காலங்களில் ஓர் அரசனுக்கு ஒரு மனைவி என்றால் பல மனைவிகளையும் சில மதத்தில் கட்டிக்
கொள்ளலாம் என்ற தத்துவம் உண்டு.
இருந்தாலும்
பிறக்கும் குழந்தைகள் மூன்று குழந்தைகள் ஆகிவிட்டால் தலை மகனுக்கே அரசுப் பட்டம்
என்று வகுத்து வைத்தனர்.
அரச
நிலையாக இருந்தாலும் அந்தச் சட்டத்தை இயற்றி அவர்கள் வகுத்துக் கொண்ட உணர்வுகள் குலதெய்வம்
என்ற நிலைகளில் வைத்து “நம்மை ஆண்டு கொள்ளும் அந்தச் சக்தி” என்ற
நிலைகளில் மதத்தின் அடிப்படையில் அரசர்கள் இத்தகைய நிலைகளை வகுத்துக் கொடுத்தனர்.
அரசன் வழியில் குடிமக்களுக்கும் அவர்களின்
இணக்கத்துடன் வளர குலதெய்வம் என்ற நிலைகளும் அல்லது தெய்வம் என்ற நிலைகளில் இதையே பதிவு
செய்து வைத்துவிட்டால் இதை (இவ்வாறு எண்ணியதை) நமது உயிர் 'ஓ' என்று ஜீவனாக்கி 'ம்'
என்றாகும்போது நமக்குள் அது “கடவுளாக..,” அதை மீண்டும் எண்ணும்போது (கடவுளாக உள்
நின்று) நமக்குள் இயக்கமாகின்றது.
எந்தச் சட்டத்தை எந்த அரசன் இயக்கினானோ
அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக யாராவது போய்விட்டால் அவன் அந்தக் கடவுளுக்கு விரோதமானவன்,
இந்த நீதிக்கு விரோதமானவன் என்றும் இயற்றியுள்ளார்கள்.
ஏனென்றால் ஒவ்வொரு மதங்களும் தனக்குள் இயற்றப்பட்ட
அதுவே சட்டமாக்கப்பட்டு “அது தான் நீதி” என்ற நிலைகளில் வகுக்கப்பட்டு மனிதன் அந்த
அரசுக்குக் கீழ் ஒழுக்க நெறிகள் கொண்டு வருவதற்கே இதனைச் செய்தார்கள்.
இத்தகைய நிலை இருந்தாலும் கடவுளின் நிலைகள்
இப்படி உருவாக்கப்பட்டு எல்லா மதங்களிலும் இதைப் போன்று பல நிலைகள் உருவாகிவிட்டது.
அதிலே ஒவ்வொரு அரசனும் தன்னுடைய முதுமையின்
நிலைகள் வரப்படும்போது அவருக்குப் பிறந்த குழந்தைகள் - ஒரு மனைவி இருந்தாலும் மூன்று
மக்களாகிவிட்டால் இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆட்சி பிடிக்கும் நிலைகளில் போர்
முறைகள் வந்து அவர்களுக்குள் குலதெய்வங்களின் பெயர்களையும் மாற்றி வைத்து “எங்கள் குலதெய்வம்
இது வேறு.., அவர்கள் குலதெய்வம் அது வேறு..,” என்ற நிலைகளில் இனங்கள் பிரிக்கப்பட்டு
இப்படித்தான் உலகெங்கிலும் “மதங்களுக்குள் இனங்கள்” பிரிக்கப்பட்டது.
இன்றும் பார்க்கலாம். முகமதியர் மதமாயிருந்தாலும்
அதற்குள் இனம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் செய்கின்றனர்.
இந்து மதமாக இருப்பினும் இதற்குள் இனங்கள்
பிரிக்கப்பட்டு இந்த மதத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் “நீயா.., நானா..,” என்று போர்
செய்து கொண்டு இருக்கின்றோம்.
சீக்கிய மதத்தில் எடுத்துக் கொண்டாலும்
அவர்கள் இயற்றிய நிலைகள் கொண்டு கடவுளுக்குத் துரோகம் செய்கிறார் என்ற நிலைகள் கொண்டு
குரு துரோகம் செய்கிறார் என்று இந்த இனத்துக்குள் ஒருவருக்கொருவர் போர் செய்யும்
நிலைகள் இருக்கின்றது.
ஆக, அந்த இனத்தையும் காப்பதில்லை. இவர்கள்
காட்டிய நல்லொழுக்கத்தை யாரும் காப்பதில்லை.
இதே போல் புத்த மதத்தில் எடுத்துக் கொண்டாலும்
அவருடைய பிற்காலங்களில் இவர் வகுத்துக்கொண்ட நிலைகளுக்கு மாறாக வருகிறார் என்றும்
அதற்குள் உள் பிரிவுகள் வந்து ஒருவருக்கொருவர் போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஜைன மதத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுளைப்
பற்றி எங்கள் தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறினார்கள் என்று கடைப்பிடித்தாலும் அதற்குள்ளும்
தவறு செய்தார் என்று அதிலேயும் ஒவ்வொரு அரசனும் கடைப்பிடித்த நிலைகள் இந்த முனிவருடைய
நிலைகள் வேறு அந்த முனிவருடைய நிலைகள் வேறு, எங்களுடைய கடவுள் என்று அதற்குள்ளும் இனங்கள் பிரிக்கப்பட்டது.
அன்றைய காலங்களில் ஜைனர்கள் யாசித்தே வருவார்கள்.
ஒவ்வொரு உயிரிலும் கடவுள் என்ற நிலைகளில் ஏங்கி “பிச்சாந்தேகி” என்று உணவுக்காக வீடு
வீடாகச் சென்று நிர்வாண நிலைகள் கொண்டு உலகம் உய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தாலும்
காட்டுக்குள் மறைந்திருந்து வாழ்வார்கள்.
உணவை யாசித்துப் பெற்ற பின் அவர்கள் வாழ்த்திவிட்டுச்
செல்வார்கள். நான் கடவுளை அடையச் செல்கிறேன், எனக்கு அன்னமிட்ட அந்த மக்களைக் காத்திட
வேண்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.
ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்புடைய நிலைகள்
கொண்டு அனைவரையும் வளர்க்க வேண்டும் என்று இவ்வாறு இருப்பினும் அதிலேயும் வாழ்க்கையில்
வரப்படும் பொழுது மதத்திற்குள் மதம் இனமாகப் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் முறை.
புத்த மதங்களிலும் இதே தான். சீனாவில் புத்த
மதத்தின் தத்துவம் வேறு. இலங்கையில் தத்துவம் வேறு. ஜப்பானில் புத்த மதத்தின் தத்துவங்கள்
வேறு.
ஆகவே, நாட்டுக்கு நாடு அந்த ஞானிகளுடைய தத்துவங்களை
எடுத்துக் கொண்டாலும் தன் ஆட்சி பீடத்திற்காகவே அவர்கள் அமைக்கப்பட்டு அதன் வழிகளில்
மக்களைத் தனக்குள் ஒன்று சேர்த்து வரவேண்டும் என்று எண்ணினாலும் அதற்குக் கீழ் காலத்தால்
அது பேதங்கள் உருவாக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் மத பேதம் இன பேதம் என்று மதத்திற்குள்
இன பேதங்கள் பிரிக்கப்பட்டு மனிதனுக்கு மனிதன் நியாயம் பேசிக் கொண்டுள்ளோம்.
ஆக, நல்லதைப் பேசுகின்றோம். ஆனால், அடுத்த மனிதனை அழித்திட வேண்டும் என்ற உணர்வின் ஏக்கமே
நமக்குள் அதிகமாகப் பரவிவிட்டது.
மதங்களால் இயக்கப்பட்ட சாஸ்திர நிலைகளிலும்
சாங்கிய நிலைகளிலும்தான் சிக்குண்டு உண்மையினுடைய நிலைகளை நாம் அறிய முடியாது இன்றும்
தவித்துக் கொண்டிருக்கின்றோம்.
எத்தகைய வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்து
கொண்டோமோ அந்த மதத்திற்குக் கீழ் நல்ல ஒழுக்கத்தைக் காட்டினாலும் நல்ல ஒழுக்கத்தைக்
கொண்டு அவன் இந்த மதத்திற்கு விரோதமாகச் செய்கின்றான் என்று எதிர்மறையானதைப் பதிவு
செய்யும் பொழுது அந்த மதத்திற்குள்ளேயே வெறுப்பின் தன்மை வளர்க்கப்பட்டுவிடுகின்றது.
வெறுப்பின் தன்மை கொண்டு “இவன் துரோகி” என்று
பறைசாற்றும் பொழுது அவன் மீண்டும் “இவனை துரோகி” என்ற நிலைகளில் மதங்களில் இது உருவாக்கப்பட்டு
அதனின் நிலைகளில் தான் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டுள்ளது.
இன்றைய உலக நிலை
இந்த நிலைகளில் எதை எதை நமக்குள் வளர்த்துக்
கொண்டோமோ மனிதனுக்குள் விளைந்த இத்தகைய உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூமியில் படர்ந்து
கொண்டேயுள்ளது.
அன்றைய காலங்களில் மந்திரம் எந்திரம் என்ற
நிலைகளில் போர் முறைகள் வந்தாலும் இன்று இயந்திரத் துப்பாக்கிகளும் அணு விசைகளும் வந்துவிட்டது.
எலெக்ட்ரானிக், லேசர் முறை கொண்டு போர் முறை
உருவாகி யுத்தங்கள் வரும் நிலை ஆகிவிட்டது. மனிதன் மனிதனையை இரக்கமற்றுக் கொன்றிடும்
நிலை ஆகிவிட்டது.
இது தான் இன்றைய நிலை. எந்த மதத்திற்குள்
ஏற்படுத்தப்பட்ட கடவுளாக இருந்தாலும் அந்த மதத்தையே காக்க முடியாத நிலைகள் உள் பூசல்கள்
அதிகமாகிவிட்டது.
மனிதன் மனிதன் என்ற நல் அறிவை இழக்கும் போர்
முறைகள் வந்து மனிதனுக்குள் மனிதன் அழித்துக்கொண்டு இருக்கும் நிலைகள் தான் உலகெங்கிலும்
பரவியுள்ளது.
மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் ஆட்சியும்,
தன் கொள்கையைக் காப்பதற்காகப் போர் முறைகள் செய்து, தனக்கு எதிர்நிலையாக இருப்பதை
அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் தோன்றியதே தவிர இவர்களுக்குள் வணங்கிய கடவுள் மக்களைக்
காக்க வந்ததா..,? கடவுள் இவரைக் காப்பாற்றியதா…,? கடவுளைக் காக்க மனிதர்கள் தன் மதத்தின்
கீழ் எப்படிச் செயல்படுகிறார்களா..,? என்று சற்றுச் சிந்தித்து பாருங்கள்.
இதைத்தான் எமது குருநாதர் காட்டினார்.
மனிதனாக இருக்கும் நமக்குள் கடவுளாக இருக்கும்போது
நாம் எண்ணியதை இயக்கி 'ஓ' என்று ஜீவனாக்கி கடவுளாக அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகிறது?
என்று காட்டினார்.
எல்லோரும் மெய்ஞானிகளாக வேண்டும் என்ற நிலையில்
விண்ணுலகில் வாழ்பவர்கள்
எல்லா மதங்களிலும் “எல்லோரும் வாழ வேண்டும்”
என்ற நல் உணர்வை ஊட்டியவர்கள் அனைவருமே விண்ணுலகில் இன்றும் சப்தரிஷி மண்டலத்தில்
“மதமற்ற நிலைகளில்” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
உலக மக்கள் எல்லோரும் அருள்ஞானிகளாக வேண்டும்,
மெய்ஞானிகளாக உயர்ந்திட வேண்டும் என்ற உணர்வின் தொடர் கொண்டு வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும்
உள்ளனர்.
அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியினை
நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையை, நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச்
செலுத்துவோம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவும்
சப்தரிஷி மண்டலம் அடைவதே கடைசி எல்லை. இதுதான்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள்.
எல்லோரும் நல்லவரே...!
உயிரே கடவுள்... உடல் ஆலயம்...!