1. வியாபாரத்தில் மற்றவர்கள் உணர்வுகள் இயக்கும் நிலை
வியாபாரங்களில்
கொடுத்தது வரவில்லை என்றால், “கொடுத்தேன், வரவில்லை” என்ற
இந்த உணர்வை எடுத்து, இந்த
உணர்வோடு சேர்த்து
இன்னொருவரைச்
சேர்த்தால்,
கடன்
வாங்குவார்கள் பின் போய்விடுவார்கள்.
கடன் கொடுத்தோம், இன்னும் வரவில்லை என்று எண்ணும்போது, அதைச்
சமாளிக்க இருந்த
பணத்தைக் கொண்டு சரக்கை
வாங்கச் சென்றால், மட்டமான சரக்கை வாங்கி வந்துவிடுவோம்.
அந்த
மட்டமான சரக்கு எப்படி
விற்கும்?
என்
வியாபாரமே நின்று போய்விட்டது என்போம். இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.
உணர்வுக்கொப்ப
எண்ணங்களை மாற்றி, நல்லவை
என்றாலும் மறந்துவிட்டுச்
செய்து விடுவோம்.
எப்படியும்
லாபத்தைப் பெறுவோம் என்று
செய்தாலும், முதலில் லாபம் வரும். பின், அது தடை என்ற உணர்வுகளை, ஊட்டிவிடுகின்றது.
நம் எண்ணம், நமக்கே எதிரியாக உருப்பெற்று, நம்முடைய நினைவும் நல்லதைப் பெறாது நமக்குள்ளே எதிரியை
உருவாக்கி விடுகின்றது.
நல்வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலையில்லை.
2. தியானம்
செய்தால் எப்படி பிரச்னைகள் தீரும் என்பார்கள்?
இதைக்
கேட்டுணர்ந்தோர், உங்களுக்குள்
இந்த அறிவின் தன்மை வளர்கின்றது. தீமைகள் வரும் பொழுது அதை மாற்ற உங்கள் (ஆண்கள்) நினைவின் ஆற்றலை துருவ நட்சத்திரத்தினுள்
செலுத்தி சிறிது நேரம் அதிகமாகிவிட்டால், இதைப் பார்ப்பவர்கள்
“இவனுக்கு
வீட்டுக் கவலை இருக்கின்றதா?
எவனோ சாமியார் சொன்னான் என்று
எண்ணிக் கொண்டே உட்கார்ந்திருக்கிறான்” என்பார்கள்.
இது மாதிரி, புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
அதே சமயத்தில் பெண்கள், எப்படியோ
இவர் பாடுபடுகின்றார். ஆனால்,
உணர்வுகள் அவரை அறியாமல் இயக்குகின்றது. நாம் எப்படியாவது, அவருக்கு
மன வலிமை பெறச் செய்யவேண்டும் என்று தியானம் செய்தால், கொளுந்தியாலோ, நாத்தனாரோ,
“யாராவது சும்மா
உட்கார்ந்து கொண்டிருந்தால்,
கஷ்டத்தை மாற்றிவிட முடியுமா?”
என்ற
உணர்வுகளை ஊட்டுவார்கள்.
அவர்
குடும்பத்தின் நிலை அறிந்து எப்படியும் மாற்றவேண்டும் என்று வீட்டிற்குச் சென்றாலும்,
சுழன்ற
இருளுக்குள் சென்று,
அடர்த்தியின்
நிலை சென்றடைந்த பின்,
ஒளியின்
தன்மை வெளிப்படாதபடி மங்கிவிடுகின்றது.
3. யாரோ செய்து கொடுப்பார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்
இப்படி
நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும், உலக
இயல்புகள் விஷத்தன்மை
கொண்ட நிலைகளில் மாறி வரும்போது, பக்தி
கொண்ட உள்ளங்கள் அதைப் பற்றிக்கொண்டு, பக்தி என்ற ஒன்றையே நம்பும் நிலை இருகின்றது.
ஆண்டவன்தான், அந்த தெய்வம்தான் காக்கும் என்ற நிலைகளில் இருக்கின்றனர்.
ஆனால், அந்த நிலை இருந்தாலும் “நான் இப்படியெல்லாம் உன்னையே நினைத்து வணங்கினேனே, எனக்குத் துன்பம் வருகின்றதே” என்ற இதுவும் வருகின்றது.
ஆக, நாம்
எதன் மேல் பக்தி கொள்கின்றோம்?
யாராவது
நல்லவர்களைப் பார்த்தால், சந்தோஷம் அடைவதற்குப்
பதிலாக பெருமூச்சு விடுவார்கள்.
நாம் இத்தனையும் செய்ய, ஆண்டவன் நமக்குக்
கொடுக்க மாட்டேன் என்கின்றான் என்பார்கள்.
இதுமாதிரி சொல்லி ஒருவரை
குற்றவாளியாக்குவோம்.
வசதி
இருப்போரைப் பார்த்தார்கள் என்றால், அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர்கள் எதை நினைக்கின்றார்களோ அந்த உணர்வின் தன்மையாகி,
அவர்களுக்குத்
துன்பம் செய்கின்றான்,
இவர்களுக்குத்
துன்பம் செய்கின்றான்,
ஏமாற்றிக்
கொண்டே உள்ளான்,
இந்த தெய்வம் அவனுக்குத் தான் கூரையைப் பிய்த்துக்
கொட்டிக் கொண்டே இருக்கின்றது, என்பார்கள்.
இவைகளெல்லாம்
சந்தர்ப்பம். இது எதை உருவாக்குகின்றது? இப்படி மாற்றும் உணர்வுகள் உருப்பெற்றுவிடுகின்றது.
ஆனால், நாம் நன்மை செய்யவேண்டுமென்றால் நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழந்துவிடுகின்றது.
4. அருள்ஞான நூல்களைப் படிக்க வேண்டும்
ஆகையினால், நாம் இதனை உருவாக்க யாம் வெளியிட்ட நூல்களை (தபோவன அருள்ஞான வெளியீடுகள்) சிறிது நேரம் படிக்க வேண்டும்.
இவர்கள்
நினைப்பதை மாற்ற வேண்டுமென்றால், சாமி
என்ன சொல்லி இருக்கின்றார்கள்? தீமையான உணர்வுகள் நம்மை எப்படியெல்லாம் தாக்குகின்றது? என்று சிறிது நேரம் சத்தமாகப் படித்தால், இவர்களின்
மாறான உணர்வும் இணைக்கப்படும் பொழுது, அவர்களுக்கு நினைவு வரும்.
என்னடா
படிக்கிறாய்? என்பார்கள். படிக்கும் பொழுது, முதலில் படிக்காதே என்று சொல்லுவார்கள்.
விடாமல்
படிக்கும் பொழுது, நல்ல உதாரணங்களைச் சொல்லும் பொழுது உற்றுக்
கேட்பார்கள்.
சிறிது
சிறிதாக, நம் மேல் இருக்கும்
வெறுப்புகள் மாறும்.
நல்லகளை
அவருக்குள் புகுத்தி அந்த நிலையை மாற்றமுடியும்.
சில பேர், வைராக்கியமாக, சாமி சொன்னதை எடுத்துக் கொள்வார்கள். “என்னை விடமாட்டேன் என்கிறார்களே” என்று திருப்பிப் படித்தால் என்ன ஆகும்?
என்னால்
புத்தகமும் படிக்கவில்லை.
நாம்
எதுவும் செய்ய முடியவில்லை என்ற உணர்வுகள் கலந்து
நமக்குள்
மனச்சோர்வும், மனச்சஞ்சலமும், வந்துவிடுகின்றது.
நாம்
நல்லவைகளுக்குத் தானே போகின்றோம்,
இப்படிச் செய்கின்றார்களே,
என்ற விஷத்தின் உணர்வுகளை நமக்குள் மாற்றப்படும் பொழுது, நம்முடைய செயலாக்கங்களும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
இப்படி
வாழும் நாம் ஒவ்வொரு நொடியிலும், நமக்குள் அருள் ஞானத்தைப் பெறவேண்டும். அவர்கள் செயல்களில் உண்மையை உணரும் பருவம் வரவேண்டும் என்ற ஏக்கத்தைச் சிறிது நேரம் எடுத்துவிட்டு,
அந்த
உணர்ச்சியை கண்களால் பார்த்துவிட்டு
உணர்வின்
அலைகளைப் பரப்பவேண்டும்.
அப்படிச்
செய்யும் பொழுது அவர்களும்
அதைக் கேட்க நேருகின்றது. இப்படிச் சில நாள் சிறிது நேரம் மட்டும் படிக்க வேண்டும்.
அதையே படித்துக்
கொண்டிருந்தால், அவர்
சங்கடமாக இருக்கும் பொழுது அதைச் செய்தால், “ஏண்டா கத்திக் கொண்டிருக்கிறாய்? இருக்கிற
துன்பத்தில்”, என்ற
நிலைகளில் இதுவும் வந்துவிடும்.
அமைதி
கொண்டு இருக்கும் நேரத்தில், இதனைச்
சிறிது வெளிப்படுத்தி உற்று
நோக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.
5. அருள்ஞான உணர்வுகள் நமக்குள் பக்குவத்தைப் பெறச் செய்யும்
நெல் பதரினை
நீக்க “சொலவுகளை” எடுத்துத் தூவுவார்கள். காற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் தூவினால் அந்த பதர் நீங்கும்.
காற்று
இல்லாத சந்தர்ப்பத்தில் தூவினால் போகவே போகாது
திரும்பத்
திரும்ப தூவ வேண்டும்.
அப்படி, திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, சுத்தப்படுத்த முடியாதபடி சோர்வடைந்துவிடுவோம். பதர் அதிகமாகி, பிரியாத நிலைகளில் அடைப்பட்டுவிடும்.
இவைகளெல்லாம், சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தவறுகள் கூடுகின்றது.
மதில் என்ற
நிலைகள் மறைத்தால், அப்பகுதியில்
பதரை நீக்கினால் என்னவாகும்? அந்தக்
காற்று புகாது. அதே மாதிரி, வாகனங்கள்
தொடர்ந்து செல்கின்றது. கரை ஓரத்தில் பதரை நீக்குகின்றீர்கள். ஆனால், அங்கே வரும் காற்றினைத் தடைப்படுத்தினால்
பதர் நீங்காது.
பிறருடைய
உணர்வுகள் பல
வகையிலும் உணர்ச்சிகளைத்
தூண்டி, வெறுப்பென்ற நிலைகள்
வருகின்றது. அப்பொழுது,
நல்ல
சொற்கள் நமக்குள் ஆகாதபடி,
அவர்கள்
உணர்ச்சிகள் நமக்குத்
திரை மறைவாக்கிவிடுன்றது.
ஆகவே, திரை மறைவுபடுத்தும் உணர்வினை நீக்க அருள் ஒளி என்ற
உணர்வை, நமக்குள்
சேர்த்துக் கொண்டால், நமக்குள் வரும், தீமையின் பதர்களை
நீக்க இது உதவும்.
சந்தர்ப்பங்கள், எப்படி நாம் நல்லது பெறாதபடி தடைபடுத்துகின்றது? என்று அந்த சுற்றுப்புறச் சூழ்நிலையை உணரச் செய்கின்றது.
அதற்குத்தக்க சந்தர்ப்பத்தில்
படும்பொழுது செயல்படுத்துகின்றது.
மற்றவர்கள்
உடல்களில் உள்ள பதர்களை நீக்கும் சக்தியாக நம் சொல் ஆகின்றது. இதைப் போன்று, குடும்பத்தின்
நிலைகளில் தவறுகளை நீக்கும் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.
இவைகளை
எல்லாம் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
ஆக, தியானவழியில் உள்ள அனைவரும் உங்கள் வாழ்க்கையில்
தெரிந்து, தெளிந்து,
தெளிவாக வாழச் செய்யும்
அந்த அருள்ஞானத்தைப் பெற்று,
அருள் சக்தி
பெற்று, என்றென்றும்
அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.