இந்த பூமியின் தன்மையில், நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும்
உண்டு. நீங்கள் பெறவேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததை
கீதையிலே சொன்ன மாதிரி, நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
நீங்கள் அனைவரும், மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும் என்ற
உணர்வின் நோக்கம் கொண்டு யாம் உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
இதைக் கேட்டுணர்ந்த நீங்கள்
இதைப் பின்பற்றினால்,
பிறர் வாழவேண்டும் என்ற உணர்வு,
உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து,
உங்களுக்குள் தீமையை
விளைவிக்கும் நிலைகளை அது ஒடுக்கும்.
தீமைகள் அவ்வாறு ஒடுங்கி, மெய்
உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு, இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று, இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி, அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழ முடியும்.
இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா
நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று, மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.