நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே
மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளை, பெறவேண்டுமென்று எண்ணுங்கள்.
சாமியிடம்
போனோம் சாமி
கொடுக்கவில்லை என்று குறையை எண்ணாதீர்கள். சாமியிடம் போய், அந்த அருள் ஒளியை வளர்ப்போம், அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம்.
வாழ்க்கையில்
வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது நாம் பாதுகாப்போம். அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும்.
இருள்
விலகிப் பொருள் காணும்போது,
வாழ்க்கையிலும்
நீங்கள் பொருள் காணலாம்.
ஆக நம்
உடலில் எவ்வளவு
வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம்
கொடுப்பது “ஆத்ம சுத்தி”
என்ற ஆயுதம்.
எப்படி புலி
நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு, அம்பைக்
கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று, உங்கள் உடலுக்குள் நின்று,
உங்களை
வேட்டையாட நினைக்கும் தீய, விஷ
உணர்வுகளையும்,
வேதனைப்படச்
செய்யும் உணர்வின் தன்மைகளையும்
வேட்டையாடுவதற்குத்தான், இந்த ஆத்ம சுத்தி.
“ஓம் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து, உங்களை
வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின்
தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச்
செய்யுங்கள். அப்போதுதான்
அடங்கும்.
ஆக, வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்ககூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.
அந்த உணர்வின்
தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு
உங்களுக்கு கிடைக்கும்போது, மெய்ஞானிகள்
அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ,
அந்த
தீமையான உணர்வை மாய்க்க
அருள்
ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.
நிறையப்
பேர் சாமியிடம் சென்று வந்தோம், தலைவலியே
போகவில்லை. சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது? என்று
எண்ணுவார்கள்.
அருள்
வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால், மீண்டும்
வருவார்கள். அடுத்த முறை வந்து, “சாமி..,” என்று கேட்பார்கள். மூன்றாம்
முறை வரும் போது என்ன
செய்கிறார்கள்?
நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே
இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்?
அன்று
நடந்தது, இன்று “யாம்
சொன்ன வழிகளிலே நடந்தீர்களா?” என்று
யாம் அவர்களிடம் கேட்டால் “நேரம் இல்லைங்கே..,” என்று சொல்வார்கள்.
இது போன்று
நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள், எம்மிடம்
“என்ன சாமி? ஒன்றுமே
இல்லை” என்ற நிலைக்குப்
போய்க்கொண்டிருப்பார்கள்.
இம்மாதிரியாக
நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய்
விடாதபடி, நாம் மெய்வழி காண்போம். நமக்குள்
இருக்கக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான், இப்பொழுது யாம் உபதேசிப்பது.
ஆத்ம சுத்தி
என்ற அந்த ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.
நாம்
அனைவரும் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின், யார் துன்பப்பட்டு வந்தாலும்
நாம் ஆத்ம
சுத்தி செய்து கொண்டு,
அவர்கள்
உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க
அவர்களையும் அந்த “ஆத்ம சுத்தி” செய்யப் பழக்குங்கள்.
யாம் எப்படி
உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச்
செய்கின்றோமோ, இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள்.
உங்கள்
மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய
துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை
உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். உங்களை நீங்கள் நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெறமுடியும்.
யாரோ செய்து
கொடுக்கிறார்,
எவரோ செய்து
கொடுப்பார் என்று எண்ணாதபடி,
நாம் இதைப்
பெறமுடியும். இந்த ஆற்றல் மிக்க சக்தி நம்
உடலில் உண்டு, அந்த ஆற்றல் மிக்க சக்தியை
நாம் பெறமுடியும், என்ற
நிலைக்கு நாம்
வரவேண்டும்.
உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின்
வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது ஒவ்வொன்றும் நல்லதாகும்.
நம்மால்
முடியுமா? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு
விடுங்கள்.
எண்ணியதைப் படைக்கும் சக்தி
உங்களை
இயக்கிக் கொண்டிருக்கும்,
உங்களை
ஆண்டு கொண்டிருக்கும் இந்த
உயிருக்கு உண்டு.
ஆக, அதனுடைய துணை கொண்டு, அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ, நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ, அதைப் போன்று, நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி, அந்த உணர்வுகள் செயல்படும்.
உயிர் நம்மை ஒளியாக இயக்கிக்
கொண்டிருக்கும் அந்த உணர்வாக, நாம் மாற்ற வேண்டும்.