1. எப்படி
ஞானம் பெற்றார்?
இராமலிங்க அடிகளுக்கு கல்வியில் நாட்டமில்லை. அவருடைய
அண்ணியோ அண்ணனுக்குத் தெரியாமல் அவருக்கு ஆகாரம் கொடுக்கின்றது. ஆனால், இராமலிங்க அடிகளின்
அண்ணனோ “உன்னாலே தான் கெடுகிறான்” என்று அண்ணியை (தன் மனைவியை) அடிக்கின்றார்.
அண்ணியை அடிக்கப்படும் பொழுது, “நம்மால் தானே அண்ணிக்கு அடி கிடைக்கின்றது”
என்று இராமலிங்க அடிகள்
ஏக்கத்தில் எண்ணிய எண்ணத்தின் உணர்வுகள்,
அவர் எடுத்துக் கொண்டதுதான்
அருள்ஞானியினுடைய அருள் வாக்கு.
அருள்ஞானியினுடைய உணர்வலைகள் இராமலிங்க அடிகளுக்குக்
கிடைக்கும் பொழுதுதான் அவருடைய எண்ணமும் புனிதமாகின்றது. இராமலிங்க அடிகளும் அந்த மெய்ஞானத்தைப்
பெற்று, பிறருடைய துன்பத்தைப் போக்கும் அந்த ஞான வழிகளைத் தொடர்கின்றார்.
2. சாகாக்கலை, வேகாநிலை, போகாப்புனல்
இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி இந்தத் தெய்வம்
செய்யும், அந்தத் தெய்வம் செய்யும், இந்த மனிதர் செய்வார், அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை நம் எண்ணத்தில்
வளர்த்துக் கொண்டால், நாம் உடலுக்குள் இது சாகாக் கலையாக இந்தப்
பூமியிலேதான் சுழல முடியும்.
வேகாக்கலை என்றும் போகாப்புனல் என்ற நிலையை அடைய வேண்டும் என்று
வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.
ஆக,
அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள்
செலுத்தினால், “வேகாக்கலை” அடைய முடியும்.
வேகாநிலை அடைந்து, இனி பிறவியில்லா “போகாப்புனல்” இன்னொரு பிறவியில்
நாம் பிறக்காத நிலையை அடைய முடியும். ஆகவே
இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது. இந்த உடலிலே ஒளியாக வேண்டும்.
“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை”
நீ உயிராக இருக்கின்றாய்,
என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று
என்று பாடியுள்ளார்.
3. பிறருடைய
தீமைகள் எனக்குள் வரக்கூடாது
நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.
நீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.
பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.
பிறருக்கு நான் நல்லது செய்யக் கூடிய உணர்வு
வரவேண்டும்.
அந்த அருட்பிரசாதம், அவன் இல்லையென்று சொல்லாதபடி
என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை. சாப்பாட்டுப் பசி அல்ல,
அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
இருளிலிருந்து விடுபடவேண்டும்,
ஏகாந்த நிலை பெறவேண்டும்.
யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான்
அவர் பாடல்களில் பாடியுள்ளார்.