தீமையானவற்றை
நாம் காணும்பட்சத்தில், "மகரிஷிகளின்
அருள்சக்தி நாம் பெறவேண்டும்" என்று எண்ணி ஏங்கும்
பொழுது, நம்மிடத்தில்
உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது. இதைத்தான் “தெய்வச் செயல்” என்பது.
மேலும், யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ, அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர
வேண்டும்"
என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது, அங்கே கடும் சொல் வராது,
அது
கனிந்திடும் நிலையாக,
கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து,
அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி
அவர் நம் மீது கொண்ட பகைமையை
நீக்கி
நட்பினை வளர்க்கும்.
பிறவிப்
பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து, உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக, இன்றும் அந்த மகரிஷிகள் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன், நமது நினைவின்
ஆற்றல் அடிக்கடி அந்த மகரிஷிகள்பால் செல்லும்பொழுது,
அவர்களிடம்
நமது
உயிரான்மா இணைந்து,
அங்கே
சுழலும் சக்தியாக,
“பிறவி இல்லா நிலையை” அடையச் செய்கின்றது.
அவ்வாறில்லாமல் நமக்கு தீங்கு செய்பவரைப் பற்றியே
நாம் எண்ணிக் கொண்டிருந்தால், இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் நம் உயிரான்மா, அவரின் உடலுக்கு இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,
பின், அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன்
மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து,
அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி, இதுவும் வீழ்ந்து,
பிறிதொன்றைக்
கொன்று புசிக்கும்
உயிரினங்களின்
ஈர்ப்பிற்குள் சிக்கி
அதனின்
சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.
ஆகவே, நாம்
தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக நமது மெய்ஞானத்தை
வளர்க்கும் விதமாக, மெய்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்ப்போம்
அருள் உணர்வைச் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி, விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து
வரும் மகாஞானிகளின் ஈர்ப்பில் கலந்து, நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்.
ஒளிச் சரீரம்
பெறவேண்டும் என்ற பேரவாவுடன்
கூட்டுத் தியானங்களில் ஏங்கி
தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது அருளாசிகள்.