Sunday, July 13, 2014

பத்து மகரிஷிகள் - கோலமாமகரிஷி 8

1. கடும் தவமிருந்து சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே
இந்த உடலை விட்டுச் சென்றால்
ஒளிசரீரம் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான்
அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது, நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும் பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப்படும்போது ஏற்படக்கூடியது வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்பகாந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது.

அப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவிட்டத்திற்குச் செல்கின்றது.

ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, ‘கிர்’ என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய இந்த வெப்பத்தின் நிலைகள்,
பூமியின் நடுமையத்தில் தேங்கி
வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

அதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று  சொல்வார்கள்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.
2. கோலமாமகரிஷி இப்பொழுது பாய்ச்சும் ஆற்றல்
கோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான் இப்பொழுது எடுத்து உபதேசிக்கின்றோம்.

ஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.

ஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள் உள்ளே சென்று, அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட,
முடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,
அந்தச் சக்தியை மாற்றுவதற்காக,
அத்வைதத்தின் தத்துவத்தை
(சூட்சமம் - கண்ணுக்குப் புலப்படாத நிலை)
ஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.

மக்கள் அனைவரும் எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.
நல்லதை நினைக்கின்றார்கள்,
நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.

பக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில் அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று, எந்தெந்த பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சி வசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.

நாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது.
நாம் தவறு செய்யவில்லை.
அந்தத் தவறு இல்லாத நிலைகளில்
எத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும்  பெறவேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம்.

இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ, அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள்.

அந்த உணர்வின்  ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்றுவிட்டது.

அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.
3. கொல்லூரில் எடுத்து வளர்த்த சக்தி
நம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை, சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு, இந்த உணர்வின் தன்மையை, யாம் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை,
யாம் சொல்லும் இந்த முறைப்படி,
யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ,
அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.