ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2014

தீமையான உணர்ச்சிகள் "நம்மை இயக்காதபடி" தடுக்கும் வழி - ஞானகுரு

நம் வீட்டில் குடும்பத்தில் சிறு சங்கடங்கள் வரும். சிலருக்கு சலிப்பு வரும், சிலருக்கு சஞ்சலம் வரும். அது தானாக வருவதில்லை.

பின் இது எப்படி வருகிறது?

ஆக, நுகர்ந்த சந்தர்ப்பம் அந்த சங்கட உணர்வுகள் வருகின்றது, இயகுகின்றது.
இந்த உணர்வின் வளர்ச்சி
உடலுக்குள் நல்ல அணுக்களை மாற்றி
இது முன்னேறி வருகின்றது.

நாம் உணவுகளில் என்ன செய்கிறோம்?

ஒரு பலகாரத்தை முலாம் பூசி சுவையாகச் செய்து வைக்கிறார்கள். அதாவது உள்ளுக்குள் இருக்கின்றது,

கசப்பான பொருளாக இருக்கின்றது.
அதை விழுங்குவதற்கு என்ன செய்வது?
அதற்கு மேல் சுவையாகப் போட்டு “லபக்” என்று விழுங்குகிறோம்.

இதே போலத்தான் நம் உடலின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது? அதை எப்படி நாம் மாற்றி அமைக்கிறது? என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால், பிறிதொரு உணர்வின் தன்மையை “கசப்பின் தன்மை” என்று தெரியாமல் நாம் எப்படி விழுங்குகின்றோமோ இதைப்போல உணர்ச்சிகள் தன்மை இயக்காதபடி நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

அப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தை யாம் அடிக்கடி சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் இணைத்துக் கொண்டே வந்தோம் என்றால், எந்தத் தீமையான உணர்ச்சியும் நம்மை இயக்காதபடி மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

அந்த அகஸ்தியன் சென்ற வழியில் நாமும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் பிறவியில்லா நிலை அடைய முடியும். அழியா பெரு நிலை அடைய முடியும்.