1. குழந்தைகள் செய்யும் தவறுகளை எண்ணி வேதனைப்பட்டால் என்ன ஆகும்?
உதாரணமாக, நாம் கண் கொண்டு பார்க்கும்பொழுது, பையன் தவறு செய்கின்றான், என்று நாம் நுகர்கின்றோம். நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், அவன் செய்யும் தவறான குணங்களுக்கும் எதிர்மாறான நிலைகளில் இருக்கும் பொழுது,
அவனுடைய
உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டபின்
அவன்
தவறு செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.
உணர்த்தியவுடனே
நாம் அறிகின்றோம்.
அறிந்தவுடன் அதை நிறுத்திவிட்டு, அவன் ஏன் அப்படிச் செய்கின்றான் என்று சிந்தனை செய்து அவனை நல்வழிப்படுத்த வேண்டும்.
அதை
விடுத்து, “இப்படிச்
செய்கிறானே” என்று வேதனைப்பட்டால்
வேதனை
என்பது விஷம்.
நாம்
சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.
சிந்திக்கும்
தன்மை இழக்கப்பட்டால், கோபமென்ற உணர்ச்சியின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது, சிந்தனையற்ற
நிலைகளில் அதீதமான உணர்வுகளை நாம் சேர்க்கும் பொழுது, இந்த
உணர்ச்சிகள் எல்லாம் நம் உடலில் கலக்கப்படுகின்றது.
அப்படிக் கலக்கப்படும் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து, இதை ஏற்க மறுத்தால் நாம் சோர்வடைந்து விடுகின்றோம்.
இப்படிப்
பண்ணுகின்றானே, என்ன பண்ணுவது? என்று
வேதனையாகி வெறுப்பானபின், நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் எல்லாம் சோர்வடைந்தால் நாமும் சோர்வடைகின்றோம்.
செய்வதறியாது
மயக்கப்படுவோரும் உண்டு. சமாளிக்க
முடியாத நிலையில், பதட்டமும், பயமும், நடுக்கமும்
ஏற்படும். அவனை எண்ணினாலே மயக்கம் வரும்.
நம்
பக்கத்து வீட்டில், யாராவது
இடைஞ்சல் செய்தாலும், மயக்கம் வரும் ரோட்டிலே, பக்கத்து
வீட்டிலே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுவதைப் பார்த்தாலே, சண்டை வரும். இவைகளெல்லாம், நம்மை அறியாது இயக்கக் கூடியது.
2. வேதனைப்பட்ட
உணர்வு ஒரு வித்தாக மாறுகின்றது
ரிக், சாம, அதர்வண, யஜூர்
தவறு
செய்யும் உணர்வுகள், பையன்
உடலிலே “ரிக்”. அவன்
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் வெளிப்படுவது “சாம”, இசை.
நமது
உடல் ரிக், அவன் மேல் அன்பு கொண்டு பரிவு கொண்ட நாம் பேசும் பொழுது, நம்முடைய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது, சாம, இசை.
பாலில்
பாதாமைப் போட்டால், பாலிற்கு
நல்ல சத்து இருக்கிறது. அதில் ஒரு துளி விஷம் பட்டால், அதற்கு
சக்தியிருக்கிறதா? நம்மை மயங்கத்தான் செய்கிறது. பாதாம்
வலு இழந்து விடுகின்றது.
பையன்
தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகர்ந்தோமென்றால், அதைக் குறைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்,
அவன்
செய்த தவறான உணர்வுகள்
நமக்குள்
வந்து எதிர் நிலையாகி,
நமது
நல்ல குணத்தை அடக்குகின்றது, மாற்றுகின்றது
இதற்குப்
பெயர் “அதர்வண”.
அவன்
இப்படிச் செய்கின்றானே, என்ற உணர்வின் தன்மையை வளர்க்க வளர்க்க, “யஜூர்”, ஓர் வித்தாகின்றது. அதனை எண்ணும் பொழுது வேதனைப்படும் உணர்வுகள் நம் உடலில் வித்தாகின்றது.
அவன்
இளையவன்,
நாம்
மூத்தவர்கள்,
“அவன்
இப்படிப் பண்ணுகிறானே” என்ற உணர்வுகளை வளர்த்து, நம்
உடலில் கலந்துவிட்டால் நம் உடலில் இரத்தக் கொதிப்பு வரும். நாம்
எதாவது எண்ணினால் “இப்படியாகிப் போய்விட்டதே” என்ற
வேதனை இரண்டும் கலந்து வரும்.
சிறு மூளை பாகம் செல்லக்கூடிய இடங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால், அந்த நரம்பு மண்டலம் வெடித்துவிடும்.
3. பரம்பரை
நோயாக மாறுகின்றது
யாரை
நினைத்து இந்த ஆன்மா வெளியில் செல்லுகின்றதோ, அவர் உடலுக்குள் சென்றுவிடுகிறது. நாம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று நினைத்தோம். அவனாலே வேதனையை அதிகமாகச் சேர்த்தோம். இறந்தபின், அவன்
உடலுக்குள்ளே போய், இதே
வேதனை என்ற உணர்வை உருவாக்கும்.
மான்
சாந்தமானது. புலி துரத்தும் பொழுது அதே நினைவாகின்றது. துரத்தும் நேரத்தில் அந்த உணர்வுகள் அதிகமாகின்றது. அது இறந்தால், புலியின்
ஈர்ப்பிற்குள் வந்து இந்த உணர்வை நுகர்ந்ததனால், புலியாக மாறுகின்றது.
பரிணாம
வளர்ச்சியில், புலிக்குண்டான குணம் அது மற்றொன்றை வேதனைப்படுத்திக் கொன்று சாப்பிடும். இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்ட தந்தை,
உடலை
விட்டுச் சென்றபின்,
மகன்
உடலுக்குள் சென்று,
நல்ல குணங்களையெல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடும்.
பையனைக்
காக்க வேண்டும் என்று எண்ணினாலும், இந்த உணர்வுகள் அதை பலவீனப்படுத்தி அதையே வளர்க்கும்.
அவனுக்கும்
கோபம் வரவைக்கும்.
அதன்
உணர்வுகள் தவறாகப் போக வைக்கும்.
தேடி
வைத்த செல்வத்தை, அவன்
பாதுகாக்க முடியாமல் போய்விடும். கடைசியில் அவனும் இதே கதியில் மடிவான்.
அதே
சமயத்தில், இவர் ஆன்மாவும் உடலை விட்டு வந்தபின் எதன் உணர்வுகள் அணுக்களாக மாறியதோ, அந்த
உடலை விட்டு வெளி வந்தபின், புலி
மேய்ந்து கொண்டிருந்தால், அதன் உணர்வின் வலுக்கொண்டு ஈர்த்துவிடும்.
அந்த
உடலுக்குள், அதே உணர்ச்சிக்குத்தக்க அதனுடைய கருவாகி, மனிதன்
ரூபத்தை மாற்றிவிடும். நாம் தவறு செய்யவில்லை. இதே போன்று நம் வீட்டில் அடிக்கடி பேசினால், பரம்பரை
நோய் என்று வரும். இரத்தக்
கொதிப்பு வந்ததென்றால், மற்றவர்களுக்கும் இதே போல் வரும்.
அவர் இரத்தக் கொதிப்பில் இறந்தார். அதே போல, அந்தக் குடும்பத்தில் பரம்பரை நோயாக மாறும்.
அந்தக்
குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும், யாராவது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, கருவில் வளரும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் விளையும்.
ஆக, மனிதனின் முடிவு எங்கு போகின்றது?
ஒரு
குடும்பத்தில் இப்படி ஏற்பட்டால், அடுத்து இந்தக் குடும்ப வரிசையிலும் இதே போன்று மாறும். அப்பொழுது
நாம் மனிதனானபின், ஒரு குடும்பத்தில் பரம்பரை நிலையாக இதே போல வரும்.
ஆஸ்துமா
நோய் போன்ற நோய்களும் இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட நிலைகளால் வருவதுதான். வாத நோய் வருவதும், இதைப்
போன்றுதான். அந்தக் குடும்பத்தில், பரம்பரை நோயாக மாறுகிறது.
எத்தனையோ
கோடி சரீரங்களைக் கடந்து வந்த நம் அம்மா, அப்பா, மனிதர்களாகப் பிறந்து நம்மை மனிதனாக உருவாக்கினாலும்,
சந்தர்ப்பத்தால்
மனிதனல்லாத உருவுக்குத்தான்
நாம்
திரும்பிச் செல்கின்றோம்.
4. துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சுவாசித்து, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த உணர்வுகள் எப்படியோ, அதற்குத்தக்கத்தான் மற்ற உடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர். இதைப் போன்ற நிலைகளை மாற்றத்தான், அடிக்கடி யாம் உங்களை ஆத்ம
சுத்தி செய்யச் சொல்வது.
தீமை வரும் பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று அந்த அருள் சக்திகளை
உயிரின்
வழியாக நுகர்ந்து,
உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களுக்கும் பாய்ச்சி,
உடனுக்குடன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.