“இந்தச் சாமியார் காப்பாற்றுவார், அந்தச் சாமியார் காப்பாற்றுவார் என்று சொல்கின்றார்கள்” என்று நீங்கள் எந்தச் சாமியாரையும் தேடிச் செல்ல வேண்டாம்.
நீங்கள், உங்கள் அம்மாவை மட்டும் தினமும் பாத நமஸ்காரம் செய்து, “அம்மா.., உங்களுடைய அருளாசி வேண்டும், நல்லது
நடக்கவேண்டும்”, என்று ஆசி
வாங்கிப் பாருங்கள்.
பின், நீங்கள் காட்டிற்குள்ளேயே
சென்று பாருங்கள் புலியோ, யானையோ, ஏதோ உங்களைத் தாக்க வரட்டும். அப்பொழுது, “அம்மா….” என்று அழைத்துப் பாருங்கள், அந்த மிருகங்கள் உங்களைத் தாக்காது. யாம் உங்களிடம் சவால் விடுகின்றோம்.
தாயின் உணர்வுகள், நம்முள்ளே பதிவாகி இருக்கின்றது.
நம்முடைய தாய்,
“நாம் நல்லவராக வர வேண்டும்,
ஆரோக்கியமாக இருக்க
வேண்டும்”
என்று “சதா நினைத்துக் கொண்டிருப்பவர்”.
நாம் குறும்புத்தனம் செய்யும் பொழுது, திட்டாமலா இருப்பார்கள். தாய், தான் பட்டினியாக இருந்தாலும், பரவாயில்லை. தன் பையனைக் காக்க
வேண்டும் என்று மகனுக்கு உணவைக் கொடுக்கின்றார்.
தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் கூட, தன் மகனைக் காக்க வேண்டும்
என்று பெரும் சிரமத்தையும் தாங்கிக் கொள்கின்றார். ஆனால், நாம் தாயை மதிக்கின்றோமோ, தாயை மதிப்பதில்லை.
நாம், நம் தாயை எப்படி மதிக்க வேண்டும்?
நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், “என்னுடைய அம்மாவிற்கு அருள் உணர்வுகள்
கிடைக்க வேண்டும். என்று வேண்டுங்கள்.
என்னை வளர்ப்பதற்காக எத்தனை கஷ்டங்கள்
அனுபவித்தார்களோ, அதெல்லாம் நீங்க வேண்டும்.
என் தாய் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்
அவர்களுடைய அருள் சொல்,
எனக்குள் எப்பொழுதும் இருக்க வேண்டும்” என்று எண்ணுங்கள்.
உங்களுக்கு ஒரு பெரிய சிரமமே வருகிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள். தொழில் வகையில் எவ்வளவோ கஷ்டம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில், நீங்கள் உங்களுடைய அம்மாவை நினைத்து தியானம் செய்யுங்கள்.
காக்கும் உணர்வு
வந்து,
உங்களுக்குள்
சிந்தனை பிறக்கும்.
உங்களுக்கு நல்ல
வழி காண்பிக்கும்.
இதை, நீங்கள் உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.