ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2014

நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி உள்புகுகின்றது?

1. கண்ணின் கருவிழி எலும்புக்குள் பதிவாக்குகின்றது, காந்தப்புலன் ஆன்மாவாக மாற்றுகின்றது
நாம் ஒரு நல்லவரைப் பார்க்கின்றோம். நாம் அதைப் பார்த்து நுகர்கின்றோம். கண்ணிலே பார்க்கின்றோம். நுகர்ந்து அதன் செயலை உணர்கின்றோம்.

ஒருவர் கோவிக்கின்றார் என்றால் கண்ணிலே பார்க்கப்படும்போது, அந்த உடலைப் பார்க்கின்றோம். அதாவது உடலிலிருந்து அவர்கள் என்ன செயலைச் செய்கின்றனரோ,
கண்ணின் கருவிழி ருக்மணி" படமெடுத்து
நமது நெஞ்சு எலும்புகளிலுள்ள ஊனுக்குள்
ஊழ்வினை" என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அங்கே பதிவாக்குகின்றது. ஆனால் உங்களுடைய நினைவை, “நேரமாகுமோ, வீட்டில் எப்படி இருக்கின்றார்களோ? என்று எண்ணி அந்த உணர்வைப் பதிவானால் இங்கே நான் பேசும் உணர்வு உங்களுக்குள் பதிவாகாது. நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

நான் பேசுவது உணர்வலைகளாகப் படர்கின்றது. ஆக, இதை கவனிக்கப்படும்போது உங்களுக்குள் பதிவாகின்றது.

நான்  பேசியது உணர்வலைகளாகப் படர்ந்து வருவதை, கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2. உயிரிலே மோதியபின் உணர்ச்சிகளாக மாறி, உமிழ்நீராகக் கரைகின்றது
ஆன்மாவாக மாற்றியதை உயிரில் உள்ள காந்தம் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

ஆகையினால்தான், நம் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும், அதிலே ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும், ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும் ஞானிகள் காட்டியுள்ளனர்.

நான் பேசும் உணர்வை காந்தம் கவர்ந்து, அதாவது லட்சுமி கவர்ந்து அந்த வெப்பத்தில் மோதும்போது நான் பேசிய உணர்வுகள் உங்களுக்குள் உணர்ச்சிகளாக மாறுகின்றது.

அப்பொழுது நான் என்ன பேசுகின்றேன் என்ற உணர்ச்சிகளை நீங்கள் நுகர நேருகின்றது. நுகரப்போகும்போது அந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை எண்ணிப் பார்க்கின்றோமோ, இதையெல்லாம் உமிழ்நீராக மாறியவுடன் பெருங்குடலில் வந்து சேருகின்றது.

நாம் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டிருந்தாலும், சத்தில்லாத ஆகாரத்தை சிறிதளவு சாப்பிட்டிருந்தாலும் உயர்ந்த ஞானிகளின் குணங்களையும் அந்த உணர்வுகளையும் கேட்டுணரும்போது அந்த உணர்வுகள் உமிழ்நீராகின்றது.

நமது வயிற்றுக்குள் சேரும்போது அந்த அணுக்களுக்கு நல்ல வீரிய சக்தி கிடைக்கின்றது. ஆகவே,
ஞானிகளின் உணர்வுகள் உமிழ்நீராகி உடலுக்குள் செல்லும்போது
நாம் சாப்பிட்ட ஆகாரத்தை
நல்ல இரத்தமாக மாற்றுகின்றது.