1. “நாளை
என்னவோ நடக்கட்டும்” இன்று அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் எண்ணுகின்றார்கள்
ஆரம்பத்தில் யாம், அநேகம் பேருக்குப் பலநிலைகளை சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள், சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.
மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது?
அதை எப்படிக் கொண்டுவரவேண்டும்? என்று
குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உணர்த்துகின்றோம்.
ஆனால், பெரும் பகுதியானவர்கள் என்ன செய்கின்றார்கள்?
நாளை என்னவோ நடக்கட்டும்.
இன்று
நான் தொழிலில் முன்னேற வேண்டும்.
தான் ஒன்றைச் சொன்ன அந்த வார்த்தையையும், தன்னையும் மற்றவர்கள் மதிக்கும்படி செய்ய வேண்டும் என்று, இப்படித்தான் தலைகீழாகக் கொண்டு
போகிறார்கள்.
அருளைப் பெருக்கி, இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.
2. குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது
ஆகையால், யாம் மற்ற நிலைகளை நிறுத்திவிட்டு, இப்பொழுது எல்லோரையும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்கு கொண்டு வருகின்றோம்.
அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது, அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள்.
ஆகையால்,
“குருநாதர் சொன்னார்” என்ற நிலையில்,
இணைத்துப் பார்க்கும் பொழுது உங்களுக்குள் உருவாகும்.
சாமி (ஞானகுரு) சொன்னார், இதையெல்லாம் பெறவேண்டும் என்று எண்ணப்படும் பொழுது, நீங்கள் எண்ணிய ஆற்றல்
பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
நான்
தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.
குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது.
ஆகவே,
இதன் வழியில்தான் நீங்கள் அனைத்தையும் அறிய முடியும்.