ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2014

யாம் கொடுக்கும் உபதேசத்தை சீராகப் பதிய வைக்க வேண்டியதன் அவசியம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள்துணை கொண்டு, யாம் இயற்கையின் இயக்க பேருண்மைகளை, அனுபவ ஞானமாக பல சிரமங்களுக்கிடையேதான் பெற்றோம்.

உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது, அந்த அருள் உணர்வுகளை உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.

எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஆர்வமுடன் இருப்பீர்கள். ஆனால், அருள் ஞான உபதேசங்களை கேட்டு, படித்த பிறகு சில நிமிடங்களில்,
சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்,
அதைப் பார்த்து, அதனின் உணர்வை ஈர்த்து,  
உங்களுக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

உதாரணமாக, ஒரு குரு, தம் சீடரை அழைத்து, அவருடைய கையில் காசைக் கொடுத்து, கடைக்கு சென்று கொழுக்கட்டை வாங்கி வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். சீடரும், தாம் கடைக்கு சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்கு கிளம்பினார்.

சீடர் கடைக்குச் செல்லும் வழியில், குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான், கடைக்குச் செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ, சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.

சீடர், அத்ரி சீ தூ…” என்று சொல்லிக் கொண்டு மூக்கை பொத்தியவாறு சாக்கடையைத் தாண்டிச் சென்றார். இப்படிச் சென்றவர், நேராக கடைக்குப் போய் நின்று, கொழுக்கட்டை தாருங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, அத்ரி சீ தூ…” கொடுங்கள் என்று கேட்டார்.

அதாவது, எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்? நல்லவைகளை அறிந்து கொண்டபின், சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அதைக் கண்களால் பார்த்து, அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.

இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில், வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி மீதும், குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும். குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும். இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்.

சாமி - நாம் எப்படி இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார். ஆனால் வீட்டில், மனைவி, குழந்தைகள் இப்படி இருக்கின்றார்களே என்று சொல்வார்கள்.

ஆக, தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, தன் மனைவி, குழந்தைகளிடம் வேக உணர்வைக் காண்பிப்பார்கள்.

னென்றால், எதிர் நிலையான உணர்வுகளான பின் நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.

ஆனால்அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து,  உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால்,
உங்களுடைய உடலில் உள்ள நோயைக் குறைக்க முடியும்.
குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும்,
சிந்தித்துச் செயல்படும் தன்மையும் வரும்.