ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2014

எம்மைச் சந்தித்த தியான வழி அன்பர் ஒருவரின் அனுபவம் - ஞானகுரு

1. இன்னல்களிடமிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தார்
அன்பர் ஒருவர் தம் உடலில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்,
இன்னல்களிலிருந்து தாம் விடுபடவேண்டும்
என்ற எண்ணத்துடன் எம்மைச் சந்திக்க வந்தார்.

அதாவது, அவருக்கு வாய் பேச வரவில்லை, கை கால்களும் சரியாக இயங்கவில்லை. இதற்காக வேண்டி, பல நாட்கள் பல வைத்தியர்களிடம் போய் வைத்தியம் பார்த்திருந்தார்கள். வைத்தியங்கள் அவருக்கு உதவில்லை.

இந்த சூழ்நிலையில், அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் என்று எம்மைத் தேடி வந்தார். எப்படியும் தான் குணமாக வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில் நோக்கத்தில் வந்தார்.

அப்போது, அவர் குணமாக வேண்டும், அருள் ஞானம் பெறவேண்டும் என்று அதற்குண்டான அருள் உணர்வுகளை அவரின்பால் யாம் பாய்ச்சினோம். இந்நிலையில்,
யாம் பாய்ச்சிய அருள் உணர்வின் பால்
அவருக்குப் பற்றானது.

அப்போது, அருள் உணர்வுகளை தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, தம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம் அவருக்குள் உற்சாகம் வருகின்றது. 

அவர் தாம் பூரண குணம் அடைந்தபின், அதே ஆர்வ உணர்வில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி ஏங்கி தியானிக்கத் தொடங்கினார்.

இப்படி, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எண்ணி ஏங்கி தியானிக்கின்ற பொழுதெல்லாம்,
புவியில், காற்றில் கலந்துள்ள
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள்,
அவருடைய சுவாசத்தில் கலந்து அவருக்குள் இணைவதால்,
அவருக்கு ஆனந்த வாழ்க்கையும், சிந்திக்கும் ஆற்றலும்,
தீமைகளை அகற்றும் தன்மையும் வருகின்றது.
2. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அனைத்து மக்களும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்
இதைத் தொடர்ந்து அவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை அனைத்து மக்களும் பெறவேண்டும் என்ற ஆசை வருகின்றது.

தனக்கு என்று நினைக்கவில்லை. எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆசையில், சுயநலம் இல்லாதபடி பொது நலத்திற்கு வருகின்றார்.

அனைத்து மக்களும் அருள் ஞானம் பெறவேண்டும், அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற ஆசையின் காரணத்தினால் தான் அவர் பேருண்மையின் உணர்வுகளை உணர முடிந்தது.

அதன் வழியே, அவர் எண்ணிய காரியங்களும் அதாவதுஇதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி செயல்படுத்தினால், அந்த காரியம் அவர் எண்ணியது போன்றே சிறப்பாக அமைந்தது. 
அவர் எடுத்துக் கொண்ட
வலுவான உணர்வின் தன்மை கொண்டுதான் இதன் நிலையானது.

இதுதான் வசிஷ்டர் பிரம்ம குரு. குரு கொடுத்த உணர்வுகளை, தாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் அருள் உணர்வுகளை அவர் தமக்குள் எடுக்கப்படும் பொழுதுஅவருக்குள் பிரம்மமாகின்றது.
பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.
எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும்,
மெய்ப்பொருளைக் காணும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுடன்,
யாம் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள்
அவருடைய உடலுக்குள் சென்று,
அவருக்குள் நலமாகும் சக்தியாகின்றது.
உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய ஆற்றல் அவர் பெறுகின்றார்.