1. பிறரின் முன்னேற்றத்தைக் கண்டு அங்கலாய்த்தால் நம் உடலிலுள்ள
நல்ல அணுக்களைக் கொல்கின்றோம் என்று அர்த்தம்
ஒருவர்
தொழிலில் முன்னேற்றமடைந்து, அவருடைய
மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்த பின் என்ன செய்கின்றார்கள்?
அவர்களைப் பார்த்து அங்கலாய்த்து, ”பார், நான் இத்தனை தொழில் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை”.
ஆனால், ஆண்டவன்
அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்” என்று எண்ணுவார்கள்.
ஆக,
அவர்பால் உயர்வைக்காட்டி
தன்பால்
அங்கலாய்த்துக் கொள்ளப்படும் பொழுது,
தனக்குள்
இருக்கும் நல்ல அணுக்களுக்கு உணவு கொடுப்பதில்லை.
நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.
“அங்காளேஸ்வரி” என்ன செய்கின்றது? அது, தன்
குழந்தையையே பிளக்கின்றது. குடலை உருவுகின்றது. அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.
இதைப்
போன்றுதான், நாம் வேதனையை நுகர்வதனால்
நமது உடலினுள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல
குணங்களை, நாம் பிளந்து விடுகின்றோம்
என்பதை உருவமாக்கி, அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து,
அங்கே மடி
மீது குழந்தையை வைத்து
குடலை
உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
நமக்குள்
வளர்ந்துவரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது, யாரையோ பார்த்து
அங்கலாய்த்து, அதனின் உணர்வின் சக்தியை நமக்குள்
அதிகரிக்கப்படும் பொழுது, அது நம்மிடத்தில் உள்ள அணுக்களைப் பிளந்து விடுகின்றது, என்பதனைத் தெளிவாக் காண்பித்தார்கள், ஞானியர்கள்.
2. தெய்வத்திற்கு
பலி கொடுத்தால், வெறி கொண்ட உணர்வுகள்தான் வளரும்
ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்? அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும், கோழியும், கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள்” என்று தான் செய்கின்றோம்.
நமது நல்ல
குணங்களைக் கொன்றிடும் நிலையாக, அவளுக்கு
இன்னொரு ஜீவனைப் பலி கொடுத்து, அவள்
செய்வாள் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு, அகங்கார உணர்வுகளை எடுத்து பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்துவிட்டால், இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.
பின், இதிலும் காரியம் சித்தி ஆகவில்லை என்றால் தன் சொந்தமோ, நண்பர்களோ, அவர்களுடைய
உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும், வெறிகொண்ட
உணர்வுகளைப் பெறும் நிலையாகின்றது.
ஆக, இந்த உணர்வின் தன்மையினைக் கொண்டு வரப்படும் பொழுது, எவர்மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ, அவருடைய உடலுக்குள் இவர் இறந்தபின் இவருடைய உயிரான்மா புகுந்து கொள்ளும்.
பலி
கொடுத்து அரக்கச் செயல்களை செயல்படுத்தும் பொழுது, இந்த உணர்வுகள் வளர்ந்து, அந்த உணர்வின் தன்மை வந்தபின், எந்த நிலையை உருவாக்கி அசுர உணர்வின் குணத்தைத் தனக்குள்
பார்த்தாரோ, அந்த உணர்வின் வலுக்கொண்டு
இந்த ஆன்மா வெளி வந்தபின்,
தன் மேல்
வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ
அல்லது இவர்
மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ
இது
ஈர்க்கப்படுகின்றது.
நோய்வாய்ப்பட்டு
இவர்கள் மரணமடையப்படும் பொழுது, தன்
நண்பர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்தால் இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா அங்கே அங்காளேஸ்வரி போன்று காட்சி
தரும்.
ஆக, அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண
முடியாதபடி, “ஐயோ, என்னை விரட்டுகின்றது, ஏதோ என்னைத் துரத்துகின்றது” என்ற நிலை வரும்.
ஆக, வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்துவிட்டால், அவர் உடலுக்குள் சென்றால் இதுவே செய்யும்.
எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக் கொண்டதோ, அதன்
ரூபமாகக் காட்சி கொடுத்து, “இது வருகிறது” என்றும், சோர்வடையும்
நேரங்கள் எல்லாம், “என்னைத் துரத்துகின்றது, தூங்க விடுவதில்லை” என்றும் சொல்வார்கள்.
எந்தச்
சிலையைப் பார்த்து, அந்த
உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொண்டதோ, மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்றபின்
எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை,
எனக்கு கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை என்றெல்லாம்
இந்த உணர்வு
கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
அசுர
உணர்வின் செயல்களையே அங்கே
செயல்படுத்தும்.
ஆகவே, இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக அந்த உடலில் வளர்ந்து, அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக்
கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும். ஆக, இவ்வழியில்தான் மரணங்கள் நேரிடுகின்றது.
3. பகைமையை அகற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
எத்தனனையோ
கோடி சரீரங்களில் நாம் பலவற்றிற்கு இரையாகி, அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து மனிதனாக இன்று நாம் உருவாகியுள்ளோம்.
பகைமை
உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கி, பகைமையற்ற நிலையாக மாற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, அதன் செயலாக்கமாக
தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே,
இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும்,
துருவ நட்சத்திரமாகவும்,
வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நாமும், துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால், நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும், வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்து, ஒளி பெறும் உணர்வுகளை நம்முள் வளர்த்து, சப்தரிஷி
மண்டலங்களின் அருள்வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக வாழ்ந்திடல் வேண்டும்
அவ்வாறு
வாழ்ந்து வரும் அனைவரும், பகைமையை அகற்றி, பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும், மலரைப் போன்ற மணத்தையும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெற்று, வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறுவதற்கு எமது அருளாசிகள்.