ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2025

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்


மனித உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு உணர்வின் தன்மை உயர்ந்த உணர்வின் சக்தியாக மாற்றக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு உடலிலும் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று மனிதன் தீயதை நீக்கி ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெறுகின்றான்.
 
இதனைக் கடவுளின் பத்து அவதாரங்கள் வராக அவதாரத்தில் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் பன்றித் தலையை போட்டுத் தெய்வமாகக் காட்டப்பட்டு கும்பிடச் சொல்கிறார்கள் என்றால் அதில் உள்ள உட்பொருளைநாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ச்சி பெற்று வந்தோம்...?
2.ஒவ்வொரு சரீரத்திலும் எப்படி எல்லாம் ஆற்றல்களைப் பெற்று வந்தோம்…? என்று மெய் உணர்வுகளைத் தான் காட்டி இருந்தார்கள்.
 
ஆனால் அந்த மெய் வழிகளை நாம் காலத்தால் அறிய முடியாது போய் விட்டது. ஆனால் அதை எல்லாம்
1.இப்பொழுது நான் அதைப் பேசுகிறேன் என்றால் அதற்குண்டான தகுதி பெற்றவன் அல்ல.
2.மெய்ஞானியான மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின்  உணர்வால் மெய் உணர்வலைகளை யாம் காண முடிந்தது.
 
இருந்தாலும் அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் எனக்குப் பல இம்சைகளைக் கொடுத்தார். அந்த இம்சைகளை எல்லாம் மாற்றுவதற்கு மெய்ஞானியின் அருள் ஒளியினை எப்படிப் பெற வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.
 
1.துன்பங்களைக் கொடுத்து அந்தத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியினைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
2.ஆனால் உங்களுக்கோ துன்பம் ஏற்படும் போது அந்தத் துன்பத்தை நீக்க மெய் ஒளி பெறும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.
 
ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
 
எனக்கு துன்பங்களைச் செயற்கையில் உண்டாக்கித் தான் அந்தத் தீய நிலைகளை நீக்குவதற்கு ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.. எனக்குள் அது வளர்ந்தது.
 
அது போன்று உங்களுக்குள்ளும் அந்தச் சக்தி வளர வேண்டும் என்பதே எம்முடைய ஆசை.
 
குருநாதர் காட்டிய அந்த அருள் வழி கொண்டு துன்பங்களை நீக்கி அந்த உயர்ந்த ஆற்றல்களை நான் பெற்றது போன்று உங்களை அறியாது வரக் கூடிய துன்பங்களை நீக்க உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தின் நிலைகளை வளர்க்க முடியும்.
 
என்றும் பேரின்ப நிலையாக பெருவீடான நிலைகள் பெற முடியும் என்பதை உங்களுக்குள் இப்பொழுது தெளிவாகக் கொடுக்கின்றோம். ஆனால் லேசாகச் சொல்கின்றோம் என்று இதை விட்டு விடாதீர்கள்.
 
விவசாய ஆபீஸில் எவ்வளவு நாளோ பக்குவப்படுத்தி நமக்குக் கொடுத்த வித்தினை அவர்கள் சொன்ன முறைப்படி அதை விதைத்து நீரை ஊற்றினால் இவ்வளவு பலன் தரும் என்று சொல்வது போல்
1.குருநாதரிடம் 12 வருட காலம் அவர் எனக்குள் பதிவு செய்த
2.அதன் மூலம் வளர்த்துக் கொண்ட அருள் வித்தைத் தான் உங்களுக்குள் அருள் வாக்காகப் பதிவு செய்கின்றோம்.
 
யாம் பதிவு செய்த வாக்குகளுக்குள் உங்களுடைய நினைவலைகளைச் செலுத்திக் கூட்டி காற்றிலிருந்து அந்த ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பெருக்கி அதை வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் கொடுக்கக் கூடிய தியானப் பயிற்சி. ஞானிகள் சென்ற வழியும் அது தான்…!
 
ஆனால் சாமியிடம் சென்றால் தலைவலி போகும் மேல் வலி போகும் வயிற்று வலி போகும் என்றால் அது வளர்ச்சிக்கு வர முடியாது.
1.சாமி சொன்ன வழிகளில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
2.வலிகள் நீங்கும் என்ற உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது தன்னாலே போகும்.
3.அந்த வழியில் செல்லும் பொழுது இருள் நிற்காது. அந்த இருளை நீக்கிடும் ஒளியின் தன்மை பெற வேண்டும்.
 
ஆனால் பாத்திரங்களிலே ஓட்டை உடைசலை அப்போதைக்கப்போது ஒட்டி அடைப்பது போன்று இந்தச் சாமி செய்யும் அந்தச் சாமியார் ஏதாவது செய்வார் என்று சென்றால் அது எல்லாமே கழன்றுவிடும்.
 
அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளர வேண்டும். அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும். உங்களுக்குள் அந்த சக்தி ஓங்கி வளர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
 
நம்மைப் போன்ற பூமியிலே வாழ்ந்த மனிதர்கள் தான் ரிஷித் தன்மையை அடைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள். அவருடைய உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றோம்.
 
ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அனைத்தும் தெரிந்து விட்டேன் என்ற நிலை வந்தால் தான் என்ற நிலை வளர்ந்து விடும். அது போன்று இல்லாதபடி உங்கள் அனைவருக்கும் பதிவு செய்கின்றேன்.
 
ஒன்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒன்றுக்குள் இணைத்து அதனின் துணையுடன் வளர்க்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலை வருமே தவிர
1.சாமி இவ்வளவு பெரிய ஆற்றல் பெற்று இருந்தாலும்
2.து எல்லாம் எனக்குள் ஜீரணிக்கும் அந்த குரு பலம் கொண்டது தான்.
 
அதே போன்றுதான் நீங்கள் எந்த கரண்டுடன் தொடர்பு கொள்கின்றீர்களோ அதன் நிலைகள் தான் வளர்ச்சி இருக்கும். ட்ரான்ஸ்பாரம் மாறி இருக்கும் போது வேறு லைனில் இணைத்தோம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மையும் திசை மாற்றிவிடும்.
 
ஆகையினால் மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கரண்ட் எத்தகைய லைட்டை நாம் போடுகின்றோமோ அதற்கு தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய முடியும். நமக்குள் எந்த வலுவோ அதை நாம் பெற முடியும்.
1.குரு காட்டிய அருள் வழிப்படி அந்தக் கரண்டின் தொடர்வரிசையில் நாம் செல்லும் பொழுது தான்
2.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

July 10, 2025

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்


வேதனையான உணர்வை அதிகமாக எடுத்தால் அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.புவியின் ஈர்ப்பில் நடந்து செல்லப்படும் பொழுது
2.நமது கால் பாதங்களிலும் முழங்கால் கீழ் உள்ள பாகங்களிலும் வேதனை உணர்வுகள் அதிகமாகப் பரவுகின்றது.
 
இதன் உணர்வுகள் கீழ்பாகங்களில் உறையும் தன்மை ஏற்பட்டால்
1.நாளடைவில் நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுதோ படுத்திருக்கும் பொழுதோ
2.இதனின் உணர்வுகள் நமது இரத்தத்திலே கலந்து மிகக் கடினமாக உறையும் தன்மை கொண்ட நிலையாகி விடுகின்றது…”
 
இப்படிப்பட்ட துகள்கள் இரத்தத்தில் கலந்து கொண்டால் ஆங்காங்கு இரத்த நாளங்களில் நுண்ணிய பாதை இருக்கும் பாகங்களில் இது உறைந்து நின்றால் அந்தந்த பாகங்களில் உள்ள உறுப்புகளை சீராக இயங்க விடாதபடி தடுக்கும்.
 
அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்கு உணவு போய்ச் சேராது தடைப்படுத்துவதனால் அந்த உறுப்புகளை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது. இதனால் அந்த உறுப்பின் தசைகள் குறைவடைகிறது.
 
இது போன்ற பிணிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ மருந்துகளைக் கொடுத்து பக்குவங்களைச் செய்து இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றார்கள். விஷம் கலந்த உணவின் உணர்ச்சிகளை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றனர்.
1.இதன் உணர்வுகள் ஊடுருவி அந்த விஷத் துகள்களை உடைத்தாலும்
2.இயற்கையில் செயல்படுத்தப்பட்ட விஷத்தின் இயக்கங்கள் உடல் முழுவதும் ஊடுருவிச் செல்கின்றது.
3.இரத்தத்தில் உள்ள உணர்வுகளைக் கவர்கின்றது.
 
ஆக விஷ உணர்வுகள் கொண்டு விஷத் துகள்களைக் கரைத்து விடலாம்.
1.”கரைத்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது.
2.கலந்த உணர்வோ நமது இருதய பாகங்களுக்குச் செல்லப்படும் பொழுது அங்கே வலி ஏற்படுகின்றது…”
 
இங்கே வடிகட்ட முடியாத நிலைகளில் அவை நமது சிறு மூளை பாகம் செல்லும் பொழுது கண்களிலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தடைப்பட்டு கண்களில் ஈர்க்கும் தன்மை குறைந்து அங்கே அழுத்தம் அதிகமாக உருவாகும் பொழுது நமது கருவிழியில் திரைப்படமாகக் காட்டும் அந்தக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய உணர்வுகளை இது மறைத்து விடுவதனால் கண்களிலும் பார்வைக் குறைவு ஏற்படுகின்றது…”
 
ஏனென்றால் இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்ததனால் புவியின் ஈர்ப்பில் நாம் இருப்பதனால் உடலுக்கு வேளை இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது வேதனையினால் உருவான விஷத்துகள்கள் கீழ் நோக்கி வந்து நமது காலின் கீழ் பாகங்களில் உறைகின்றது.
 
இதைப் போன்ற நிலைகள் நம் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்கும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நுண்ணிய பாகங்களுக்கும் சென்றால் அங்கே அழுத்தம் அதிகரித்து அதனுடைய பாகங்களும் அடைப்படுகின்றது.
 
சிந்தித்துச் செயல்படக்கூடிய மனிதராக இருப்பின் இந்த உணர்ச்சிகள் தேங்கி வரும் பொழுது நுண்ணிய அலைகளைச் சீக்கிரம் கிரகித்து அறியும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
 
நமது உடலில் பிற உறுப்புகளை இயக்கும் நுண்ணிய பாகங்களுக்கு ஆணையிடும் சிறுமூளை பாகத்தில் சிறு மூளை பாகத்தில் தடை ஏற்படும் போது நமது இயக்க உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன.
1.அதனால் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சீராக உணவு கிடைக்காது அந்த உறுப்பும் பலம் இழந்து விடுகின்றது.
2.இதனால் உடல் நலியத் தொடங்குகின்றது.
3.விஷத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானால் நமது சிறுநீரகம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி விடுகின்றது.
 
இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…!
 
உதாரணமாக நாம் ஒரு புலியைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புலியை நுகர்ந்து பார்த்த பின் அதனின் வலிமையைக் கண்டபின் அச்ச உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.
 
ஏனென்றால் புலி மிகவும் கொடூரமானது. அதன் உருவத்தைப் பார்த்தால் புலியிடமிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் ஓம் நமச்சிவாய. அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய உணர்வுகளுக்குள் இது பதிவாகி நமது உடலில் நடுக்கத்தின் உணர்வு வரப்படும் பொழுது நமது உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபடுகின்றது.
 
1.இந்த நடுக்க உணர்வுகளால் கல்லீரல் வடிகட்டும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அது சமயம் நுரையீரலும் சீராக இயக்குவதில்லை.
3.இயக்க நிலைகள் பதட்டம் அடைவதால் இரத்தத்தில் உள்ள கழிவைப் பிரிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சீராக இயக்க முடியாத நிலை வருகின்றது.
 
அதே சமயம் பித்த சுரப்பியில் இத்தகைய விஷத்தன்மை அதிகமாகும் பொழுது பித்த சுரபியின் வளர்ச்சியும் அதிகமாகிறது. பித்தத்தின் தன்மை அதிகரித்தால் அதனுடைய இயக்கமும் அதிகமாகின்றது.
1.அந்த பித்தம் உடல் முழுவதும் பரவி மற்ற அணுக்களையும் நடுங்கச் செய்து பலவீனமடையச் செய்கின்றது.
2.நம்மிடத்தில் சிந்திககும் ஆற்றலைக் குறைக்கின்றது தலை சுற்றலும் வருகின்றது.
3.ஏனென்றால் பயத்தால் நுகர்ந்த உணர்வுகள் கொண்டு அதற்குத் தக்க அணுக்களை நமக்குள் சேமித்து அதனின் உணர்வை வளர்க்கின்றது.
 
இப்படி பித்தத்தை நமக்குள் அதிகப்படுத்திப் பழகிவிட்டால் அதிகமான பித்தத்தைச் சுரக்கும் அடுத்த உடலை உருவாக்கி அதன் உணர்வுகளையும் ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக மாற்றுகின்றது.
 
இது போன்ற நிலைகளை எப்படி மாற்றுவது…?
 
அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். எப்பொழுது தீமை என்று வருகின்றதோ துன்பம் வருகின்றதோ அடுத்த கணமே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய் அணுக்கள் துருவ நட்சத்திரத்தினுடைய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.இப்படி ஒரு இரண்டு நிமிடம் அந்த உயர்ந்த சக்தியை எல்லா அணுக்களிலும் பெறச் செய்தோம் என்றால்
6.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நஞ்சான உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெற விடாதபடி தடைப்படுத்துகின்றது.
 
தீமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். இதை நாம் அவசியம் செய்து பழக வேண்டும்.

July 9, 2025

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் கிடைக்கும் நன்மை

 

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் கிடைக்கும் நன்மை


1.அம்மா அப்பா அருளால் குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
 
இதற்குப் பெயர் ஆத்ம சக்தி என்பது.
 
அடிக்கடி ஆத்ம சுத்தி செய்வதால் பெறும் நன்மை:-
இப்படி நாம் அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நாம் எண்ணி எடுத்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது.
1.நாம் பரப்பிய அந்த அலைகளை
2.மீண்டும் நாமே எடுத்துப் பெருக்கிக் கொள்ள இது உதவும்.
 
ஒருவரிடம் சண்டை போட்டால் என்னை இப்படிப் பேசினான் பேசினான்…” என்று எண்ணப்படும் பொழுது அந்த உணர்வலைகள் ஒலிபரப்பாகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.
 
மீண்டும் சண்டையிட்டவனை நாம் எண்ணும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்த அந்த அலைகள் குவிந்து
1.எங்கே போனாலும் சண்டை வரும் பேசினாலும் சண்டைநம்மைப் பார்த்தாலே மற்றவருக்கு வெறுப்பு வரும்.
2.இதைப் போல் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய வாய்ப்பாக நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.
 
உடலில் உள்ள ஆன்மாவைப் புனிதப்படுத்தும் முறை:-
ஒரு சிலர் உடலிலே ஆவி புகுந்து விட்டது பேய் பிடித்து விட்டது அருளாடுகிறது என்று சொல்வார்கள்
1.இது எல்லாம் எந்தெந்த குணங்களிலே ஓங்கி எடுத்துக் கொண்டோமோ இன்னொரு ஆத்மா வெளியில் இருப்பது இங்கே வந்துவிடுகிறது.
2.காரணம் மனிதன் இன்னொரு உடலுக்குள் வந்து தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.
 
ஆனால் எந்த குணத்தின் உணர்வுடன் அவன் இறக்கின்றானோ அதே உணர்வு கொண்டு ஒரு மனிதன் ஏங்கி இருந்தால் அந்த உடலில் ஈர்க்கப்பட்டு விடும். எந்த நிலையில் ஆன்மா நோயாகி உடலை விட்டுப் பிரிந்ததோ புகுந்த உடலில் அதே நோயை உருவாக்கி அவனையும் வீழ்த்தும்.
 
தற்கொலை செய்து உயிர் பிரிந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்றால் அங்கேயும் தற்கொலை செய்ய வைக்கும். பக்தியின் நிலைகளில் முருகன் எனக்கு இப்படிச் செய்தானே என்ற வேதனையான எண்ணத்துடன் பிரிந்திருந்தால் அதே பக்தி கொண்டு யாராவது எண்ணினால் அந்த உடலில் சென்று முருகன் இப்படிச் செய்கின்றானே என்று ஆட்டிப்படைத்து அங்கேயும் நோயாக்கி அவனையும் வீழ்த்தும்… அடுத்து மனிதனாகப் பிறப்பதில்லை.
 
1.த்தகைய ஆன்மாக்கள் நமக்குள் சரியான நிலையில் கட்டுப்பட்டால் தான்
2.இந்த மனித வாழ்க்கையில் நாமும் நல்லதை எடுக்க முடியும்.
 
ஆனால் பேயை ஓட்டுகின்றேன் என்று யார் செயல்படுத்தினாலும் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியை வெளியேற்ற முடியாது.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைஅந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைஅதற்கும் உணவாக ஊட்டி
2.அந்த ஆன்மாவை நமக்குள் நல்லதாக மாற்றினால் ஒழிய யாரும் மாற்றவே முடியாது.
 
அப்படி யாரும் மாற்றியதாகச் சொன்னால் ஒரு போக்கிரியான ஆவியை வைத்து அடக்கலாம். ஆனால் அந்த போக்கிரியான ஆன்மாவும் மந்திரத்தால் செருகப்பட்டால் அந்த ஆவி முதலில் புகுந்ததை அடக்கிவிடும்.
 
ஆனால் து இயங்கத் தொடங்கி போக்கிரியான உணர்வுகளை இங்கே உருவாக்கும் உடலுக்குள் கை கால் குடைச்சல் அதிகமாகும் அதனால் விளையக்கூடிய உடல் வலிகள் எந்த டாக்டரிடம் சென்றாலும் அது நிவர்த்தி ஆகாது.
 
இது போன்ற மீண்டும் மீண்டும் தீமையின் நிலைகளுக்கு மரணமடையும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியுமே தவிர நல்லதை நீங்கள் காண முடியாது.
 
ஆகையினால் நீங்கள் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். காற்றுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பரவி உள்ளது. அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.நம்மையறியாது கெட்டது நமக்குள் வந்து எப்படி ஆட்டிப்படைப்பதை மாற்றி அமைக்க
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அந்தத் துன்பத்தை அகற்ற
3.”நம் எண்ணம் தான் உதவுமே தவிர மற்ற யாரும் காப்பாற்ற முடியாது.
4.நீங்கள் எடுத்துக் கொண்ட “அந்த எண்ணத்தை உங்கள் உயிர்தான் சிருஷ்டிக்கின்றது
5.சிருஷ்டித்த உணர்வு தான் உங்களுக்குள் விளைகின்றது… உங்களை இயக்குகிறது.
 
நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் பிரம்மமாக இருந்து அந்த குணத்தினைச் சிருஷ்டிக்கின்றது. அந்தச் சக்தியின் உடலாக இயக்குகின்றது ஆகவே… நீங்கள் எண்ணியதை நடத்திக் கொடுப்பது உங்கள் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்.
 
கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நாம் எண்ணுவது நமக்குள் விளையும்…”

July 8, 2025

கூட்டுத் தியானம் மிக மிக அவசியம்… ஏன்…?

கூட்டுத் தியானம் மிக மிக அவசியம்… ஏன்…?


எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானிக்கப்படும் பொழுது அந்தச் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
 
வீட்டிலே கவலை சஞ்சலம் மேல் வலி இடுப்பு வலி இது போன்று எத்தனையோ நிலைகளைச் சந்திக்க நேர்கின்றது. இருந்தாலும்…
1.கூட்டுத் தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரே ஏக்க அலையுடன் நாம் தியானிக்கிறோம்.
 
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எல்லோரும் ஒன்று போல் சொல்கின்றோம்.
 
இது அனைத்தையுமே காந்தப்புலன்கள் கவர்ந்து கொள்ளும்.
1.ஒவ்வொருத்தருடைய உடலில் இருக்கக்கூடிய துன்ப நிலைகளை மறந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒன்று போல் எடுத்து ஏக்க உணர்வுடன் பதிவு செய்யப்படும் பொழுது
3.எப்படிப் பல விதமான சத்துகள் உடைய செடிகள் பல குணங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து அது உயர்ந்த மரம் செடிகளாக விளைகின்றதோ
4.பல விதமான பொருள்களைச் சேர்த்துக் குழம்பை ருசியாகச் சமைத்து மகிழ்ச்சியாக உணவாக உட்கொள்வது போன்று
5.கூட்டு தியானத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இதைப் போன்று சொல்லி
6.ஒருவருக்கொருவர் இந்த உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது எல்லோருடைய உணர்வின் மணமும் ஒன்று சேர்கின்றது.
 
காரம், புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் சேர்த்து ருசியாகுவது போன்று இந்த வாழ்க்கையில் எந்த நிமிடத்திலும் எந்த நேரத்திலும் கூட்டுத் தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை கலந்து எடுத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் சுவை மிக்க நிலைகளாக உருவாக்க இது உதவும்.
 
அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை ஏற்படுத்தத் தான் இந்தக் கூட்டு தியானம். கூட்டுத் தியானம் இருப்பதே அதற்குத்தான்.
 
1.பல சங்கடமான எண்ணங்கள் இருந்தாலும் அது அனைத்தும் ஒன்று சேர்த்து
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று ஒரே உணர்வுடன் ஒலியை எழுப்பப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகிவிடுகிறது.
3.பதிவு செய்து ந்த எண்ணத்தை நமக்குள் வலுப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானம்.
 
கூட்டு தியானம் இருந்து பழகிக் கொண்டவர்கள் உடலை விட்டு உயிரான்மா பிரிந்தாலும் கூட… அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து நாம் கூட்டு ஐக்கியமாக இருந்து விண் செலுத்தப்படும் பொழுது மீண்டும் இந்த உடல் என்ற கூட்டிற்குள் செல்லாதபடி தடுத்து ஒளிச் சரீரம் பெறும் நிலைக்கு நாம் உந்தித் தள்ளலாம்…”
 
அதற்குத் தான் கூட்டுத் தியானங்களில் சப்தரிஷி மண்டலத்தினை நினைவுபடுத்தி அந்த உணர்வுடன் உங்களை இணைக்கின்றோம்.
 
சிறு துளி பெரு வெள்ளம். அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் எடுத்து கூட்டு தியானங்களில் ஒரே நிலையில் இருந்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று ந்தி தள்ளி அங்கே இணைக்க முடியும். அப்போது அவர்கள் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
 
1.கடும் தவம் இருந்தோ வரம் வாங்கியோ எடுப்பதற்குப் பதிலாக
2.இராக்கெட்டை உந்து விசை கொண்டு விண்ணிலே ஏவி அங்கிருக்கக் கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை அறிந்துணர்வது போல
3.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தின் மூலமாக
4.உடலை விட்டு பிரிந்த உயிரான்மா இன்னொரு உடல் பெறாதபடி ஒளிச் சரீரம் பெறும் தகுதிக்கு அங்கே உந்திச் செலுத்தலாம்.
 
அப்படி அல்லாதபடி கடும் ஜெபம் இருந்து நான் தனித்து விண்ணுக்குப் போவேன் என்றால் அது முடியாது. ரிஷித்தன்மை பெற்றவர்களும் இதைப் போன்று மக்கள் மத்தியிலே விண் செல்லும் மார்க்கத்தை அங்கே ஊட்டி அவ்வாறு தான் அவர்கள் விண் சென்றார்கள்.
 
இந்த தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மாக்களை நாம் உந்தி விண் செலுத்தி விடுகின்றோம். நாம் இந்தப் பூமிக்குள் இருந்தால் மீண்டும் உடலுக்குள் தான் வர வேண்டி வரும்.
 
அதிலிருந்து தப்புவதற்குண்டான வழியைத்தான் இங்கே உபதேசிக்கின்றோம். இது ஞானிகள் கண்ட அறவழி…”
 
மந்திரத்தைச் சொல்லி சொர்க்கலோகம் போகலாம் என்றால் அந்த மந்திரத்தால் அடுத்தவன் கையிலே சிக்கித் தவிக்க வேண்டி வரும். அப்படிப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அப்படி நீங்கள் செல்லலாம்.
 
இல்லைகூட்டுத் தியானம் இருந்து யாம் என் சொல்லும் முறைப்படி விண்ணுக்கும் செல்லலாம். ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்.
1.இந்த உடல் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைக் கழற்றி எறிந்து விட்டு
2.அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றால் அது உங்கள் மனதைப் பொறுத்துத் தான் உள்ளது.
 
ஆக அந்த மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கும்போது உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் நீங்கும்.தற்குண்டான சக்திகளைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.சாமி ஏதோ சொல்கிறார் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
2.இப்பொழுது நாம் உங்களைத் தேடி வந்து தான் இதைக் கொடுக்கின்றோம்.
 
நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்த சக்தியைப் பெற முடியும் என்ற வாக்கினையும் பதிவு செய்கின்றோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!
 
அதே சமயத்தில் இப்பொழுது நன்றாக இருக்கின்றோம் திடீரென்று உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அய்யய்யோ இறந்து விட்டாரே இப்படி ஆகிவிட்டதே…!” என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.
 
தியானத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று விண் செலுத்தினால்
1.ஜிர்…ர்ர்… என்று அந்த ஆன்மா மேலே போய்விடும்
2.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) அவசியம் தேவை.
 
அதைச் செய்வதை விடுத்து விட்டு அழுகிய சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே புதைக்கலாமா…? அங்கே புதைக்கலாமா…? சமாதி கட்டி அழகுபடுத்தலாமா…?” என்று யோசனை செய்து கொண்டிருந்தால் இந்த புவியின் ற்றுக்குள் தான் வர வேண்டி வரும்.
 
1.இந்த நாய் எப்படியோ போகின்றது… அது பூராம் குப்பை… என்று தூக்கி எறிந்து விட்டு
2.உயிராத்மா அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் நிலையான நிலைகள் பெற வேண்டும் என்று
3.அங்கே கொண்டு போய் விண்ணிலே செலுத்த வேண்டும்.
 
இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்…! உடலிலிருந்து தான் உயிராத்மா அழியா ஒளி உடல் பெற முடியும். ஏனென்றால் இந்த உடல் அழியக்கூடிய சமாச்சாரம் தான்.
 
உயிராத்மா மெய் ஒளி பெற வேண்டும்… அது தான் முக்கியம்…!
 
மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இந்த உடல். அது மண்ணுடனே மண்ணாக மக்கட்டும். மண்ணிற்குள் இருந்து எடுத்த சத்தை உயிர் ஒளியாக மாற்றிய பின் விண்ணுலகம் செல்ல வேண்டும்
 
எல்லோரும் அந்த ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

July 7, 2025

உபதேசத்தைக் கேட்டுவிட்டு “சாமி நன்றாகக் கதை சொல்கிறார்” என்று எண்ணினால் அது உங்கள் இஷ்டம்...!

உபதேசத்தைக் கேட்டுவிட்டு “சாமி நன்றாகக் கதை சொல்கிறார்” என்று எண்ணினால் அது உங்கள் இஷ்டம்...!


இன்றைய விஞ்ஞான உலகம் எதிலே இருக்கின்றது…? காற்று மண்டலம் விஷமாகி விட்டது. புழு பூச்சியைக் கொல்வதற்காக உணவுப் பயிர்களில் விஷத்தைத் தூவுகின்றார்கள். ஆக சாப்பிடும் உணவிலே விஷம்…. உணர்விற்குள் விஷம்.
1.விஷம் கலந்து விட்டால் சிந்தனை இல்லை ஆனால் அதைத்தான் கலந்து உணவாகச் சாப்பிடுகின்றோம்.
2.சிந்திக்கும் திறனை இழந்து கொண்டே வருகின்றோம்.
 
உடலில் ஏதாவது வலி எடுக்கிறதா…? காய்ச்சல் அடிக்கின்றதா…? உடனே ஒரு இன்ஜெக்ஷன். அந்த ஒரு டோஸ் போட்டதும் நின்று விடும்… நிற்கவில்லை என்றால் இன்னொரு டோஸ் சேர்த்துக் கொடுப்பார்கள். எல்லாம் நின்று விடுகின்றது.
 
பின் விளைவாக… உடலுக்குள் இனிப்புச் சத்தை எல்லாம் மாற்றி விடுகின்றது. காய்ச்சலுக்கு ஊசி போட்டேன் அடுத்தாற்போல் சர்க்கரைச் சத்து வந்துவிட்டது.
 
அதே போல் காய்ச்சல் என்று சொல்லி இன்னும் நான்கு டோஸ் போட்டோம் என்றால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகிறது. நம் இரத்தங்களில் உப்புச் சத்து வந்து விடுகின்றது.
 
தலை வலிக்கு என்று மாத்திரை சாப்பிடுவார்கள்.
1.எப்பொழுதெல்லாம் தலை வலிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிட்டாய் சாப்பிடுவது போல் மாத்திரையைச் சாப்பிடுவார்கள்தலைவலி நின்றுவிடும்
2.கூடிய சீக்கிரம் கிட்னியில் விஷத்தினைப் பிரிக்கும் நிலையினை அந்த வலுவை இழந்து விடுகின்றது கிட்னி சரியாக வேலை செய்யாது.
 
இப்படிப்பட்ட விஞ்ஞான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் யாம் குறையாகச் சொல்லவில்லை.
1.ஏனென்றால் அவசரத்திற்கு இந்தத் தலைவலி நீங்கினால் போதும் என்று விரும்புகிறோம்.
2.ஆனால் சிறுகச் சிறுக நம் சிறுநீரகங்கள் பாதிப்படைவது நமக்குத் தெரிவதில்லை.
3.கடைசியில் இலட்சக்கணக்கில் அதற்குச் செலவழிக்க வேண்டி வருகின்றது.
 
இது மட்டுமல்ல அறியாத நிலையில் இருந்தால் மயக்க மருந்தோ மாத்திரையோ கொடுத்து ஆளை அபேஸ் செய்து ஆஸ்பத்திரியில் நம் உடலில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகள் கண்கள் சிறுநீரகங்கள் இதையெல்லாம் திருடி விடுகின்றார்கள். அது வியாபாரம் ஆகின்றது விஞ்ஞான உலகம் அப்படி இருக்கின்றது.
 
பண வசதி படைத்தவனுக்கு இந்தக் கண்கள் மற்ற உறுப்புகள் எல்லாம் பயன்படுகிறது. குழந்தைகள் காணாமல் போய்விட்டது என்று கேள்விப்படுகின்றோம்.கடத்திக் கொண்டு போய் என்ன செய்கின்றார்கள்…? குழந்தைகளின் மூளையை எடுத்து வடிகட்டி மருந்தாகத் தயார் செய்கிறார்கள்.
 
பண வசதி உள்ளவர்கள் வயதானவர்கள் 75 வயதாகி விட்டது உடல் சுருங்குகின்றது உணர்வுகள் சுருங்குகின்றது.
1.சிறு குழந்தைகளிடம் இருக்கக்கூடிய மூளைகள் மூலமாக உருவாக்கிய சத்துக்களை ஊசியாக அவர்களுக்கு செலுத்தப்பட்டவுடன்
2.அவர்கள் வயசுப் பிள்ளையாக மாறிவிடுகின்றார்கள்.
3.குழந்தைகள் சாக வேண்டும் ஆனால் அவர்கள் வயதுப் பிள்ளையாக வாழ வேண்டும் என்று
4.இன்றைய விஞ்ஞானத்தில் இது நடந்து கொண்டிருக்கின்றது.
 
விஞ்ஞான வழியில் போக வேண்டும் என்றால் அப்படிப் போகலாம். இந்த உலகம் பூராம் விஷத்தன்மை பாயும் நேரத்தில் மெய் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தப்பிக்கலாம்.
 
காடு மேடலாம் விஷத்தன்மை பரவி விட்டது. மேலை நாடுகளில் எல்லாம் தழைத் பாம்புகளை அது போன்ற சத்துள்ளவைகளை ஆடு மாடு போன்ற மற்ற தான் வளர்க்கும் உயிரினங்களுக்குக் கொடுத்து நன்றாக வளர்த்து அந்த மாமிசங்களை இவர்கள் உட்கொள்கின்றார்கள்.
 
அதே மாதிரி மனிதர்கள் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்வதுமனிதன் தனியாகச் சென்றால் அவனுக்கு உதவி செய்வது போன்று அழைத்துச் சென்று அவனையே அறுத்து வேக வைத்துச் சாப்பிட வேண்டியது. அப்படிப்பட்ட காலம் வந்துவிட்டது.
 
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலை உலகிலே உருவாகி விட்டது…!
 
சில இடங்களிலே நாங்கள் அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று வளர்ப்பார்கள். கடைசியில் எங்களுக்குக் குழந்தை வேண்டும் (தத்துக்கு) என்று சொல்லி மேலை நாடுகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.
 
வேண்டிய உறுப்புகளை மட்டும் எடுத்துவிட்டுக் கப்பலில் சென்று மற்றதைத் தூக்கிக் கடலிலே வீசி விடுகின்றார்கள்.
 
இதெல்லாம் இன்று நடந்து கொண்டிருப்பது
1.மனிதன் மிருகம் ஆகிவிட்டான்
2.இந்த உலகத்தில் தான் இன்று வாழ்கின்றோம்
3.உலகத்தில் மாற்றத்தினுடைய நிலையில் நெருங்கி விட்டது.
 
இதிலிருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்யப் போகின்றீர்கள்…?
 
மந்திரத்தினால் யந்திரத்தினால் நன்றாக வேண்டும் என்று எண்ணினால் அந்த வழியில் செல்லுங்கள். இல்லை என்றால் இப்பொழுது யாம் உபதேசிப்பது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த ஆற்றல் மிக்க சக்திகளை வளர்த்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.
 
உங்களுடைய இஷ்டம் தான் அது…!
 
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைத்தையும் நான் கண்டேன். பார்த்தேன் உண்மையைச் சொல்கின்றேன்.
2.நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று உயர்ந்த சக்திகளைக் கொடுக்கிறோம்.
3.அதை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்
4.இல்லை சாமி நன்றாகக் கதை சொல்கின்றார் என்று நினைத்துக் கொண்டு போனாலும் போகலாம்.
5.”பழைய நிலைகளிலிருந்து மாறாதபடி அப்படியே இருக்கலாம்…”
 
இது எல்லாம் உங்களுடைய இஷ்டம் தான்.
 
நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். திட்டியவர்களைப் பற்றி எண்ணியவுடன் அல்லது காதிலே கேட்டவுடன் அவர்களை உடனே தாக்க வேண்டும் என்று எப்படி அந்த வேகங்கள் வருகின்றதோ அதே போன்றுதான்
1.நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.உங்கள் துன்பங்களை அகற்றிவிட்டு நோய்களை அகற்றிவிட்டு உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.
3.அந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் யாம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம். “அது உங்கள் இஷ்டம்…”
 
இன்று வாழ்கின்றோம் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
 
ஆனால் இறந்த பின் உடலுக்குள் பேயாக ஆடுவதையும்தீயிலே குதித்து இறந்து விட்டது என்றால் அடுத்த உடலுக்குள் சென்று அய்யய்யோ அய்யய்யோ எரிகிறது என்று அலறிக் கிடப்பதையும் பார்க்கலாம்.
 
இறந்த பிற்பாடு இந்த ஆன்மாக்கள் அடுத்த உடலில் புகுந்து விட்டால் இப்படித்தான் வேலை செய்யும்.
 
மருந்து குடித்து இறந்ததென்றால் அந்த ஆன்மா ஒரு உடலுக்குள் சென்றால்அது மருந்தைக் குடிக்கும் போது தொண்டை எல்லாம் எப்படி மண்ணையைப் பிடித்து இறுக்கியதோஇந்த உடலில் அதே மாதிரி இயக்கும்.
 
ஆக இறந்த பிற்பாடு எங்கே செல்கிறோம்…? என்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அவனை வீழ்த்தி விட்டு அந்த விஷத்தின் தன்மை கொண்ட அடுத்த உடல் பெறுவதற்கு மிருக இனங்களாகச் செல்வதற்குத் தயாராகி விடுகின்றது.
 
இப்படித்தான்… “நாம் செத்த பின் சொர்க்கலோகம் போகிறோம்…” என்று சொல்வது.
 
ஆகையினால் இந்த உண்மை நிலை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மெய் வழியின் தன்மை பெற வேண்டும் என்றால் இது போன்ற தியானங்களின் மூலம் அந்த ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க முடியும்.
 
அவர்கள் எல்லாம் பத்தாவது நிலையான கல்கி நிலையை அடைந்தவர்கள். அந்த உயர்ந்த எண்ணங்களை எடுக்க வேண்டும் என்றால் அதற்குத் திறன் வேண்டும். அதற்கு வேண்டிய மின்சாரம் தேவை…”
 
எமது குருநாதர் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை உடலுடன் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொண்டதை அது எப்படி…? என்று எமக்கு உபதேசித்தார்.
1.மெய் ஒளியின் தன்மையைப் பெருக்கும் நிலையும் மனித உணர்வுகள் அண்டாத நிலையும்
2.அந்த விண்ணுலக ஆற்றலை எடுத்து அதை வளர்த்துக் கொள்ளும் முறையையும்
3.மெய் ஞானிகள் அருள் சக்திகளை எடுக்கும் தகுதியையும் எனக்கு ஏற்படுத்தினார்.
 
12 வருட காலம் அனுபவமாகப் பெற்றேன். அதைத் தான் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் நினைவு கொண்டால் ஆத்ம சுத்தியின் மூலமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளை அகற்ற முடிகின்றது.
 
கருணைக்கிழங்கினை வேக வைத்து விஷத்தை நீக்கிப் பல சுவை மிக்க பொருள்களைப் போட்டு அதை உணவாக உட்கொண்டு மகிழ்ச்சி அடைவது போன்று
1.எப்படிப்பட்ட சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் புகுத்தி
2.அந்த ஆற்றலைத் தனக்குள் சேர்த்து உடலுக்குள் தீமை வராதபடி தடுக்க இது உதவும்.