ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2014

கடவுளும் இல்லை... பூதமும் இல்லை...! என்று சொன்னவர் குழந்தைக்கு நடந்தது...!

இப்பொழுது இறந்த பிற்பாடு நாம் என்ன செய்யப்போகின்றோம்? பேய் ஆடுகிறதா? பேய் ஆடுமோ? எப்படி அது வந்துவிடும் பார்க்கலாம், என்றெல்லாம் சொல்வார்கள். பிறகு அவர்களுக்குள் புகுந்தால்தான் தெரியும்.

இப்படித்தான் ஒருவர் சாமியே இல்லை, பூதமே இல்லை என்று எம்மிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் குடும்பத்திற்குள்ளே என்ன ஆகியது? இதே மாதிரி இறந்த ஒரு ஆன்மா அவர் குடும்பத்திற்குள் அவருடைய பிள்ளை மேல் ஆவி வந்து பிடித்துக்கொண்டது.

வந்தவுடனே, என்னமோ கதையெல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றது, என்று சொல்லிக் கொண்டு என்னிடம் அவர் ஓடி வந்தார்.

என்னிடம் கடவுளே இல்லையென்று நீ சொன்னாய் அல்லவா என்றேன்.

அடக் கடவுளே..! என் பிள்ளை அதற்குத் தெரியாத வார்த்தையெல்லாம் பேசுகின்றது. எப்படி என்று தெரியவில்லை என்கிறார்.

அடுத்து அந்தக் குழந்தை தலையிலிருந்து குங்குமம் வருகின்றது. அந்தக் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், தலையிலிருந்து அந்த குங்குமம் வருகின்றது. ஏதாவது, பேசினால், நல்ல நறுமணங்கள் வருகின்றது.

இது என்னப்பா..,? விசித்திரமாக இருக்கின்றது என்கிறார்.

நீ தான் பேயும் இல்லை, பூதமும் இல்லை என்று சொல்கின்றாய். சாமியே இல்லை என்கிறபோது இது எப்படி இருக்கிறது என்று பார்.

ஒரு மனித உடலை இழந்த பின், அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் போனால் என்ன செய்கின்றது? என்பதை நீ தெரிந்து கொள் என்று அவரிடம் சொன்னேன்.

அப்புறம் தன்னுடைய நாஸ்தீகத்தை எல்லாம் விட்டுவிட்டார்.

நீ மந்திரவாதிகளிடம் எல்லாம் போக வேண்டாம். நீ நான் சொல்லும் வழிகளில் இந்த மாதிரி மகரிஷிகளை எண்ணி தியானம் செய். தியானம் செய்து
மகரிஷிகளின் அருள் சக்தி
என் குழந்தை பெறவேண்டும் என்று பாய்ச்சு.

அந்த குழந்தையின் தன்மைக்குள் செயல்படும் ஆவியின் தன்மைகளை நீ நிறுத்த முடியும் என்று நான் சொன்னேன்.

அப்புறம் நான் சொன்ன பிரகாரம் அவர் தன் குழந்தைக்குச் செயல்படுத்தினார். அது சரியாகியது. 

May 15, 2014

உடலைவிட்டுப் போனால் தெரியப் போகிறதா.., என்று எண்ணி என்ன செய்கிறார்கள்?

இன்றைய உலகில் எத்தனையோ பேர், நாம் இந்த உடலை விட்டு இறந்த பிற்பாடு என்னவாக ஆகப் போகிறோம்?

அதைப் பற்றி நமக்கென்ன தெரியப் போகிறது? என்றிருப்பார்கள்.

அதே சமயத்தில், சில பேர் நாம் இப்பொழுது மனிதனாக இருக்கிறோம். இறந்த பிற்பாடு,
மனிதனாகப் பிறக்கின்றோமா?
நாயாகவோ, அல்லது பேயாகவோ பிறக்கிறோமா?
இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு இருக்கப் போகின்றோமா? என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் செய்கின்ற தவறுகளை இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருப்பார்கள்.

ஏனென்றால், இயற்கையின் நிலைகள் காலத்தால் இயற்கை எப்படி இயங்குகின்றது? இறந்த பிறகு என்ன என்ற நிலைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் என்ன? என்ற நிலைகளை அறிந்து கொண்டால் நாம் அடைய வேண்டிய எல்லையை அடையலாம். அதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.

May 14, 2014

பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?

1. பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?
அன்று அருணகிரிநாதர் செல்வந்தர். அவருடைய தாய் தந்தையர் செல்வத்தை நிறையச் சம்பாதித்து வைத்திருந்தனர். அந்தச் செல்வச் செருக்கில் இவர் என்ன செய்தார்?

அந்தக் காசுகளை வைத்து அருணகிரிநாதர் தாசிகள் வீடுகளுக்குச் சென்று செலவழித்தார். செல்வங்களை எல்லாம் அதிலே செலவழித்து விரயம் செய்து, கடைசியில் அவருக்குக் குஷ்டரோகம் நோயே வந்துவிட்டது. இருந்த செல்வம் முழுவதும் மறைந்தது. ஆக, அவர் செய்த தவறுகள் ஏராளம்.

முருகன் கோவிலில் எல்லாம் அருணகிரிநாதர் பல பாடல்கள் பாடியுள்ளதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம். முருகனைப் பற்றி நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். எவ்வளவு பெரிய குற்றவாளி? இவருக்கு எப்படி ஆண்டவன் இந்த சக்தியைக் கொடுத்தார்? கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்கள். பார்க்கலாம்.
2. அருணகிரி நல்லவனாக வேண்டும் என்ற பாசம் சகோதரிக்கு
அருணகிரியின் கூடப்பிறந்த சகோதரி தன் தம்பியின் மேல் பாசமாக இருந்தது. ஆனால், அருணகிரியோ காசை வைத்து ஊதாரித்தனமாக நடந்தான். சகோதரிக்குத் திருமணமாகவில்லை.

தன் சகோதரன் அருணகிரி நல்லவனாக வேண்டும்.
அவன் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும்.
அவன் உலக ஞானம் பெறவேண்டும்,
பெரிய அறிவாளியாக அவன் வரவேண்டும் என்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டது சகோதரி

தாய் கருவிலே பெற்ற சக்தி திருஞானசம்பந்தருக்கு, ஆனால், அருணகிரிநாதருக்கு தன் சகோதரி வழியில் சக்தி கிடைக்கின்றது.

அருணகிரியின் சகோதரி திருஞானசம்பந்தரைப் பற்றிய நூல்களை அதிகமாகப் படிக்கின்றது. அவர் எப்படியெல்லாம் விஷத்தைப் போக்கி, விஷமான நிலைகளிலிருந்து மீட்டினார் என்பதைப்பற்றி அவருடைய நூல்களைப் படித்து, பாராயணம் பண்ணி வைக்கின்றது.
3. சகோதரனை எண்ணியே அருள் ஆற்றலை வளர்த்துக் கொண்டது அருணகிரியின் சகோதரி
அதன் வழியில் தன் சகோதரனுக்குள் இருக்கும் அந்த விஷமான உணர்வுகள் நீங்கி, “அவன் திருந்த வேண்டும்” என்று அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

திருஞானசம்பந்தர் எதையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளாரோ, வான இயலின் தத்துவத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார். அந்த உணர்வெல்லாம் தன் சகோதரன் பெறவேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று தன் சகோதரனை எண்ணி, அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது அருணகிரிநாதரின் சகோதரி.

ஆக, இந்த உணர்வுகள் சகோதரியின் உடலுக்குள் விளைகின்றது. விளைந்து வந்தபின்,
தன் சகோதரன் திருந்த வேண்டும், திருந்த வேண்டும்,
அவன் அருள்ஞானம் பெறவேண்டும் என்று எண்ணுகிறது.

பல பல சித்தர்களைப் பற்றியும், அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்திய அந்த உணர்வுகளையும் தான் படித்து, அந்த உணர்வின் தன்மை தன் சகோதரன் பெறவேண்டும் என்ற நிலைகளில் அங்கே செய்துகொண்டே வருகின்றது. தான் படித்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகளில், தன் சகோதரன் மேல் பாசமாக இருக்கின்றது.

சகோதரனை எண்ணியே இந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

அந்த உணர்வெல்லாம் தன் உடலிலே இங்கே வளர்த்துக் கொண்டது. ஆனாலும், அருணகிரியோ அவன் திருந்தினபாடில்லை.
4. அருணகிரியின் பிடிவாதம்
கடைசியில், அருணகிரிநாதருக்குப் பல நிலைகளாகி குஷ்டரோகமாகித் தத்தளிக்கின்றான். பணமெல்லாம் விரயமாகிவிட்டது. சகோதரன் கேட்கும் பொழுதெல்லாம் பணத்தையும் நகைகளையும் கொடுத்தது. பெரும் செல்வந்தராக இருந்த நிலை எல்லாம் மாறி, கடைசியில் எல்லாம் அழிந்துவிட்டது.

இன்று சாப்பாட்டிற்கே தொல்லையாகின்றது. அருணகிரியின் சகோதரி ஒரு இடத்தில் கூலிக்கு வேலை செய்து, பாத்திரம் தேய்த்து அந்த வருமாணத்தை வைத்து உணவை உட்கொள்கின்றது.

அப்பொழுது சகோதரன் வருகின்றான். நான் தாசியிடம் போனேன். அவள் என்னை அவமதித்துவிட்டாள். நான் எப்படியும் அவளை அடைந்தே ஆகவேண்டும். ஆகவே, “எனக்கு அவசியம் நீ காசு கொடுதே ஆகவேண்டும்” என்று தன் சகோதரியிடம் பிடிவாதமாக விடாப்பிடியாகக் கேட்கின்றான்.

சகோதரியோ, என்னிடம் காசு ஏதப்பா? எல்லாவற்றையும் இழந்துவிட்டாய். இனி என் உடல்தான் இருக்கின்றது. நீ அங்கே இச்சையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

ஆகவே, என்னுடைய உடலையே நீ பயன்படுத்திக்கொள் என்று சொல்லி, தன் சகோதரனுடைய நிலைகளை எண்ணி அவனின் இந்தச் செயலைப் பார்த்து மூர்ச்சையாகி, அருணகிரியின் சகோதரி மடிந்து விடுகின்றது.

தன் சகோதரன் மேல் உள்ள எண்ணத்தால், உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் உயிரான்மா அருணகிரியின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றது. புகுந்தபின், அவன் என்ன செய்கின்றான்?
5. தன்னையறியாது வந்த தவறிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றார் அருணகிரி
தனக்கு உதவி செய்த சகோதரியே போய்விட்டது. இனி, எனது வாழ்க்கையில் என்ன இருக்கின்றது என்று எண்ணிய அருணகிரி திருவண்ணாமலை மேல் இருக்கக்கூடிய கிளி கோபுரத்தின் மீது ஏறி, தன் உடலை மாய்த்துக் கொள்ள ஏறுகின்றான்.

அப்படி மடிய வேண்டும் என்ற நிலைகளில் வானை நோக்கி ஏகுகின்றான்.

என் சகோதரி போய்விட்டாள்,
இனி என்னை ஆதரிப்பதற்கு யார் துணை இருக்கிறார்கள்?
ஆகவே, இனி என்னுடைய இந்த உடல் மடிய வேண்டும்.
அடுத்த ஜென்மமாவது நான் புனித நிலைகள் பெறவேண்டும்.

என்னை அறியாது வந்த தவறிலிருந்து நான் மீளவேண்டும்.

இந்த உணர்வை ஓங்கி வளர்த்துக் கொண்டு, அங்கே மடிவதற்குத் தயாராகின்றான். கோபுரத்திலிருந்து விழும் பொழுது இந்த எண்ணமெல்லாம் வந்த பிற்பாடு,
அருணகிரியின் சகோதரி உயிரான்மா
அவன் உடலுக்குள் இருப்பதால்
அவனைக் கீழே விழாதபடி தடுத்து நிறுத்துகின்றது.
6. சகோதரி கற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரின் உணர்வுகள் அருணகிரிக்குள் வந்து, ஞானி ஆகின்றார்
அப்படி தடுத்து நிறுத்தப்படும்போது, அவன் ஏங்கி நிற்கின்றான். அவன் உணர்வுகள் அங்கே ஞானம் வருகின்றது. ஆக மடியவில்லை. தன் சகோதரியின் உணர்வுகள், அதாவது அவள் கற்றுக்கொண்ட உணர்வின் ஞானம் எல்லாம் அங்கே வருகின்றது.

சகோதரி கற்றுக்கொண்டு வந்த உணர்வுகள் (திருஞான சம்பந்தரின் உணர்வுகள்) அந்த அருணகிரிநாதர் உடல்களிலே அது வருகின்றது. அப்பொழுது, அந்த உணர்வின் தன்மை கொண்டு இவன் மடிவதற்கு மாறாக, அவனுக்குள் உணர்வின் ஞானம் அங்கே தோற்றுவிக்கின்றது.

ஏனென்றால், சகோதரியின் உணர்வுகள் அவனுக்குள் இருந்து இந்த உணர்ச்சிகளை இங்கு ஊட்டுகின்றது. அங்கு மடியாத நிலைகள் கொண்டு அங்கு அப்போது தான் பாடுகின்றான்.

‘’நாத விந்துகள் ஆதி நமோ நம
வேத மந்திர சொரூபாய நமோ நம
வெகு கோடி”
என்று அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

ஆக, எதன் வழி கொண்டு அவன் பாடுகின்றான்? சகோதரன் மேல் உள்ள பாசத்தினாலே, சகோதரி அது கற்றுக்கொண்டு வந்த உணர்வின் நிலைகள் அங்கே அவனுக்குள் இயக்குகின்றது.

அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
அவன் உடலிலே பெறப்படும் போது
திருஞானசம்பந்தர் பெற்ற அந்த உணர்வெல்லாம் இவனுக்குள் வருகின்றது.

அவர் பார்வையில் நஞ்சு கலந்த நிலையில் நீக்கும் இந்த உணர்வை சகோதரி படித்துக் கொண்ட நிலையில், தன் சகோதரன் இப்படியெல்லாம் ஆக வேண்டும் என்ற உணர்வை எடுத்துக்கொண்ட இந்த உணர்வுதான் அந்த ஆன்மா உள்ளே சென்றபின், அவனுடைய குஷ்ட ரோகங்கள் எல்லாம் மாறுகின்றது.

ஆக இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றான். ஆறாவது அறிவின் தன்மை பெற்று திருஞானசம்பந்தர் கூறிய உணர்வெல்லாம் அந்த அறிவின் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் ‘’ரா ரா ரா.., டி டி டி.., ரு ரு ரு..,’’ என்ற வகையிலே அவன் பாடுகின்றான்.

அந்தக் காலத்தில் வில்லிபுத்தூரார் அவர் சுற்றுப்பயணம் வரும் போது அவருடன் வாதம் என்ற நிலையில் நடக்கின்றது.

அப்பொழுது, கவிப்புலமைப் பரிசீலிக்க காதிலே துரட்டியைப்போட்டு வைத்துக் கொள்வது, தப்பாகி விட்டால் அவரின் காதை அது அறுத்து விடுவது என்ற இந்த தத்துவமெல்லாம் அந்த அரசர் காலங்களிலே இருந்து வந்தது.

அப்போது அருணகிரிநாதர் என்ன செய்கின்றார்?, ‘’ராராரா டிடிடி ருருரு’’ என்கின்றார்.

ஆக சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் எந்த உணர்வின் தன்மை கொண்டு எடுக்கின்றதோ அந்த உணர்வு உறையப்படும் போது அதன் உணர்வின் நாதங்கள் எப்படி ஆகின்றது?

உணர்வின் தன்மை வரப்படும் போது, இந்த உணர்வின் தன்மை உடலாகும் நிலைகளில் மனிதனானபின் உணர்வுகள் எவ்வாறு ஆகின்றது? என்ற உண்மைகள் இந்த பாடலுக்குள் வருகின்றது.

அப்பொழுது, அந்த வில்லிபாரதத்தை எழுதியவர் வில்லிப்புத்தூரார் இதைக்கண்ட பின் தோற்றுவிடுகின்றார். அதில் சரணமடைகின்றார். ஆனால், அருணகிரிநாதர் படித்திருந்தாரா? இல்லை.

இந்த தத்துவத்தின் நிலைகளை அவருடைய சகோதரி படித்திருந்தது. திருஞான சம்பந்தர் வழியில் கற்றுக்கொண்டது. பல ஞானிகள் கொடுத்த நூல்களைப் படித்துக்கொண்டது. தன் சகோதரன் இந்த நிலைகள் வரவேண்டும் என்றும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டது

ஆனால், அதே சமயத்தில் சகோதரன் மேல் உள்ள ஏக்கத்தால் அவன் செய்த முறை கொண்டு மீளவில்லையே என்று அவனை எண்ணியே அந்த ஆன்மா செல்லுகின்றது. அவன் உடலுக்குள் இது பாய்ந்து தத்துவ ஞானி ஆகின்றது.

May 13, 2014

திருஞானசம்பந்தர்

1. தாய் ஏங்கி சுவாசித்த உணர்வு ஞானக் குழந்தையாகப் பிறந்தது
அந்தக் காலத்தில் திருஞானசம்பந்தர் எப்படி சக்தி பெற்றார் என்று பார்ப்போம். அவருடைய தாய், குழந்தை இல்லையென்று ஏக்கம் ஆகும்பொழுது
இந்தத் தாய் அந்த கோவிலிலே சென்று
புத்திர பாக்கியம் வேண்டும் என்று ஏங்கி
பல காலம் அதே உணர்வுடன் இருக்கின்றது.

அங்கு கோவிலிலே கதாகாலட்சேபங்கள் செய்யப்படும் பொழுது, அதையெல்லாம் உற்றுப்பார்க்கின்றது. நம்பிக்கை கொண்டு இதை நாம் வணங்கி வந்தால், தவமிருந்தால் நமக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சீர்காழி ஆலயத்தில் இப்படி அந்த தாய் வணங்கிக் கொண்டு வருகின்றார்.

அதே சமயம் அதனுடைய எண்ணங்கள் வலுப்பெற்று கருவிலே குழந்தை உருவாகின்றது. கரு உருவானபின், அந்தத் தாய் என்ன செய்கின்றது? கதாகாலட்சேபங்கள் நடப்பதை உற்றுப்பார்க்கின்றது.

அங்கே சிவனைப் பற்றி சொல்கின்றார்கள். அவர்கள் சொல்லும் உணர்வை நுகர்கின்றது.
சிவன் எதையெல்லாம் செய்கின்றானோ
அந்த சக்திகளையெல்லாம்
தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெறவேண்டும்,
பெறவேண்டும் என்று எண்ணுகின்றது.

அங்கு அற்புத நிகழ்ச்சிகள் எதுவெல்லாம் நடக்கின்றதோ, அதையெல்லாம் என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெறவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து, தன் நினைவினைக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குச் செலுத்துகின்றது.
2. நஞ்சை நீக்கிடும் ஆற்றல் தன் குழந்தை பெறவேண்டும் என்று தாய் எண்ணுகின்றது
அதே சமயத்தில், சிவன் அந்த விஷத்தை எப்படி நீக்குகிறான் என்று அந்தக் கதாகாலட்சேபங்களில் சொல்வதையும், அந்த ஈஸ்வரன் எண்ணவெல்லாம் செய்கிறான் என்று அந்தக் கதைகளில் கூறுவதையெல்லாம் அப்படியே என் குழந்தை பெறவேண்டும் என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

ஆகவே, என் குழந்தையின் பார்வையில் நஞ்சுகள் நீங்கவேண்டும்.
இறந்தவர்களை மீட்டவேண்டும்.
இந்த உணர்வெல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெறவேண்டும்.
அந்த ஈசனின் அருள் பெறவேண்டும் என்று தாய் எண்ணுகின்றது.

ஆகவே, அத்தகைய நிலைகளிலே வளர்ந்தபின், சிவன் ஆலயத்தில் அந்தச் சிவனைப் பார்த்து அந்தத் தாய் வேண்டுகின்றது. விநாயகரைப் பார்த்து அது வேண்டுகின்றது. அங்கு சிவன் ஆலயத்தில் முருகனைப் பார்த்து இதையெல்லாம் வேண்டுகின்றது.

அந்த எண்ணமெல்லாம் எண்ணி, என் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அது பெறவேண்டும் என்ற உணர்வினை, தாய் எண்ணி ஏங்கி அந்த உணர்வுக்குள் அது பெறுகின்றது.

ஆகவே, தாய் எதையெல்லாம் கண்ணால் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை கொண்டு, சொல்லின் வடிவம் இந்த உணர்ச்சிகள் இந்த உடலுக்குள் சென்று, கருவில் வளரும் குழந்தைக்குள் விளைகின்றது.

குழந்தை (திருஞானசம்பந்தர்) பிறந்தபின், பிறருடைய உடலில் விஷம் தீண்டியிருந்தால்
இவர் பார்வை பட்டபின்
அவர்களுடைய உடலில் உள்ள விஷம் இறங்கிவிடுகின்றது.
விஷத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் அதுவும் நீங்குகின்றது.

இத்தகைய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. தாய் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் கருவிலே அது விளைகின்றது. அவர் பிறந்த பிற்பாடு, அவரைப் பார்த்தவுடன் மற்றவர்களுடய பிணிகள் போவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

ஆக, அங்கிருக்கக்கூடிய அம்பிகையின் அருள் பெற்றவர் என்ற நிலைகளில் அங்கே அவரைப் போற்றித் துதிக்க ஆரம்பிக்கின்றார்கள். பராசக்தியின் அருள் பெற்றவர், பராசக்தி ஞானப்பாலைக் கொடுத்தாள் என்றெல்லாம் கதைகளில் சொல்வார்கள்.

ஆனால், தாய் அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து அந்தக் கருவிலே விளைந்தது.

அவர் வளர வளர இவர் பார்வையில் எத்தகைய விஷத்தால் தாக்குண்டவர்களின் நோயும் நீங்குகின்றது. திருஞானசம்பந்தர் என்ற நிலைகளில் அவரின் வளர்ச்சிகள் பெறுகின்றார்.
3. திருஞானசம்பந்தர் வெளிப்படுத்திய பேருண்மைகள் இன்று வெளிவரவில்லை
அவருடைய இளமைப் பருவத்தில் இந்த உணர்வின் சக்திகள் பெற்றபின் ஒரு சமயம் ஒரு இளம் பெண்ணை விஷம் கொண்ட பாம்பு தீண்டிவிடுகின்றது. இவர் வெளி ஊருக்குச் சென்றிருந்ததால் அந்தப் பெண்ணின் சுட்ட சாம்பலை எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

திருஞானசம்பந்தர் வந்தவுடன், என் குழந்தையை விஷம் தீண்டி இறந்துவிட்டது. ஆகையினால் என் குழந்தையை எழுப்பிவிடுங்கள் என்று அதனுடைய தாய் தந்தையர் கேட்கின்றனர்.

அப்பொழுது, திருஞானசம்பந்தர் சொல்கின்றார். உடலை விட்டு அந்த உயிரான்மா போய்விடுகின்றது.
ஆனால், அது நிலைத்திருக்கின்றது.
ஆகவே அது இறப்பதில்லை என்று கூறுகின்றார்.
உன் குழந்தை எப்படி இருக்கிறது பார் என்று காட்டுகின்றார்.

அப்பொழுது, அந்த அழகான நிலைகளில் தன் குழந்தை இருக்கின்றது என்று பார்க்கின்றார்கள். ஆக, அவர்கள் என்ன செய்கின்றார்கள்?

என் குழந்தையை எனக்குக் கொடுங்கள் என்று கேட்கின்றனர். அதை நீங்களே திருமணமும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர் அந்தப் பெண்ணின் தாய் தந்தையர்.

திருஞானசம்பந்தரோ, அது எப்படி நான் திருமணம் செய்து கொள்வேன்? என்ற நிலையில் வாக்குவாதங்கள் நடக்கின்றது. ஆக, இறந்ததை மீட்ட முடியாது.

அந்த உணர்வின் அலைகள் (ஆன்மா) இந்த ரூபமாகத்தான் இருக்கும் என்று அங்கே எடுத்துச் சொல்கின்றார். எந்த விஷத்தின் தன்மை பாய்ந்ததோ, அந்த உணர்வின் ஆன்மாவாகத்தான் இருக்கும்.

விஷத்தின் எண்ணம் கொண்டதால், அடுத்த பிறவி
விஷத்தன்மை கொண்ட பாம்பாகத்தான் அது பிறக்க முடியும்.
தவிர, கன்னியாக இங்கே வரமுடியாது
என்று தெளிவாக்குகின்றார் திருஞானசம்பந்தர்.

இப்படி இவர் வெளிப்படுத்திய இந்த உண்மைகள் எதுவும் சாஸ்திரங்களில் வெளிவரவே இல்லை.

May 11, 2014

இன்று புதுவிதமான வைரஸ் கிருமிகள் பரவக் காரணம் என்ன?

விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் பலவாறு பரவி, மக்களை இன்றைக்கு மடியச் செய்யும் நிலைகள் வருகின்றது.

இன்று நமக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணு உலைகளை உருவாக்குகின்றோம். அதிலிருந்து வரும் கசிவுகளை சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

அணு உலைகளிலிருந்து வரும் இந்த அணுக்கசிவுகள் (கதிர்வீச்சுகள்) நம் பூமி முழுவதும் பரவுகின்றது.
அதன் எல்லையை நுகர்வோர் அனைவரையும்
இத்தகைய விஷத்தன்மை கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இந்த உணர்வு மனித உடலில் இறந்தபின் இதனால் இறந்தபின், இந்த அணுக்கள் தன்மை மீண்டும் பெருக்குகின்றது. மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது, மிகக் கடுமையான நோய்களாக மாறுகின்றது.

ஆக, முதலில் மனித உடலுக்குள் சென்று அந்தத் தீய அணுக்களின் தன்மை உருவாகின்றது.
இவன் இறந்தபின்
இதே உணர்வு மனிதன் ஒத்த நிலைகள் கொண்டு
புதுவிதமான நோய்கள் வருகின்றது.

இதைத்தான் “வைரஸ்” என்ற நிலையில் ஒவ்வொன்றுக்கும் என்னென்ன நிலைகள் என்று இன்றைக்குப் பரிசீலித்துப் பார்க்கும் பொழுது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூட சொல்லி வருகின்றார்கள்.

ஏனென்றால், இந்த அணுத்தன்மைகள் உடலில் நுகர்ந்துவிட்டால், அது அணுக்களானபின், எப்படி கேன்சர் விஷத்தன்மை கொண்டு ஆனபின், எந்த விஷத்தைக் கொண்டும் அந்தக் கேன்சரை நீக்க முடிவதில்லையோ, இதைப் போல அந்த வைரஸ் என்ற கிருமிகள் அதிகமாகிவிட்டால், அதை மற்ற மருந்து கொண்டு மாற்றுவதற்கு முடியவில்லை.
ஆக, எதிர்நிலையாக வரும் பொழுது
காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும்.

அந்தக் காய்ச்சல் அதிகமாக இருக்கும் பொழுது, இதை மாற்றுவதற்காக ரத்தங்களைப் பரிசோதித்து இவனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையும் இது கண்டுப்பிடிப்பதற்கே தொடர்ந்து குறைந்தது பத்து நாளாவது ஆகும்.

இந்த உணர்வின் தன்மை சேர்த்து சேர்த்து, அதற்கு இது ஒத்துக் கொள்கின்றதா, இந்த உணர்வின் தன்மை எது என்ற நிலையிலும் இது புதுவிதமான வைரஸாக இருப்பதனால் இதற்கு நிலைகள் என்ன என்று பல மருந்துகளை கொடுத்து அதைப் பரிசீலித்துப் பார்ப்பார்கள்.

அதற்கப்புறம் அது பலவீனமானால் சரி, இல்லையென்றால் அந்த வைரஸின் தன்மை அதிகரித்து அந்தக் காய்ச்சலையே (புது விதமான காய்ச்சல்) போக்க முடியாமல் எத்தனையோ பேர் பல அவஸ்தைகள் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால், இதைப் போன்ற அணுக்கதிர்களால் தாக்கப்பட்டு
இந்த உணர்வின் தன்மை மண்ணிற்குள் வந்து.
இன்று அந்த இடத்தில் வாழ்பவர்களுக்குள் இணைந்து,
அவர்கள் இறந்தார்கள் என்றால் அந்த அணுக்கள் பரவுகின்றது.

அவர்கள் யாருடன் பழகினார்களோ அந்த உடல்களில் இது பரவுகின்றது. இப்படி வரப்படும் பொழுது இந்த வைரஸ் இந்த அணுக்கள் இந்தத் தன்மைகள் வருகின்றது.

ஆக, ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு எப்படி வருகின்றது என்ற நிலையும், நமது குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.

இன்று அதிலிருந்து மீட்டுவதற்காக, துருவ நட்சத்திரம் இந்த விஷக் கதிரியக்கங்களை வென்றது.

அந்த உணர்வின் தன்மையைப் பருகச் செய்யும்
இந்த உணர்வின் தன்மைகளைத்தான்
உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வது.

May 10, 2014

நான் எந்தத் தவறும் செய்யவில்லை ஆனால் எனக்கு ஏன் கெட்டது நடக்கிறது என்று குழம்புகிறோம்...! தவறுக்குக் காரணம் யார்...?


இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் தியானித்து உணர்வலைகளைப் பரப்பினோம் என்றால், நம்மிடம் பொருள் வாங்கியவர்கள்,
“இவர்கள் கடையில் வாங்கினேன்,
சரக்கு நன்றாக இருந்தது” என்பார்கள்.

அதே சமயத்தில், நீங்கள் சங்கடமான நிலையில் இருந்து பொருளைக் கொடுத்துப் பாருங்கள். சரக்கு வாங்கியவர்கள்
“ஐயோ போய்விட்டதே,
நஷ்டமாகிவிட்டதே” என்பார்கள்.

அடுப்பிலே வேலை பார்த்தால், கவனக்குறைவாகி பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடும், நாம் வேதனைப்படுவோம். இந்த சங்கட உணர்வுகள் அங்கே தாக்கப்படும். ஏனென்றால், இந்த உணர்வினுடைய ஆதிக்கம் அங்கே செயல்படுகிறது.

ஒரு மனிதன் சங்கடமான நிலைகளில் இருக்கப்படும் பொழுது, பொருள் தரனதாக இருந்தாலும் நிச்சயம் சுவை மாறுபட்டுவிடும்.

ஏனென்றால், இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பேசப்படும் பொழுது, இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படுகிறது, இந்த உணர்வின் நிலைக்கொப்பத்தான் இயக்கம்.

நான் அதைச் செய்தேன்,
இதைச் செய்தேன் என்றால்
“யாரும்” ஒன்றும் செய்யவில்லை.
ஆக, உலகத்தினுடைய உணர்வினுடைய நிலைகளில் இந்த உணர்வுகள்தான் இயக்கம்.