ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2019

ஆழ்நிலை தியானத்தின் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்... பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்... இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்... இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு... இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்... காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக... இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு... இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட... தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன...?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை...!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.
மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ... பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற... ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை...
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்...!

புரிந்ததா...!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு
போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்... போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்... வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே...
பலவாகக் கலந்து பெறுவேனே...!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே...
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே...

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி... பணிவேனே...!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே... ...
ஏறும் படியில்... ஏறுவேனே...!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை... வளர்ப்பேனே...!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த... “தெய்வ நிலை பெறுவேனே...!”
என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

October 27, 2019

காசியில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது நடந்த நிகழ்ச்சி


என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். பார்த்தால் மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும் அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்... எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்...! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்...? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ...ம் ஊ....ம் ஊ...ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்...?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான் என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்...! வெறும் எட்டணா தான்...! என்கிறான்.

பரவாயில்லையே... இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே...! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா...! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்...! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்... சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே...! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல... என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்... இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்... எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது...! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்...! என்றேன்.

கசக்கிறது...! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது...! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது... கசக்கிறது... என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்...! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி...! பாபுஜி மாப் கரோஜி...! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்...! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்...?

உஸ்ஸ்க்...! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்... அவன் பின்னாடி போகாதே... என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது...? என்று கேட்டேன். சொன்னான்...! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்...? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி...! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்...! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா... விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்...! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு... நீ சாப்பிட்டுப் பார்... எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்...! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ....! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்...! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.

இயற்கையைப் பயன்படுத்தும் மனிதனைப் பற்றியும் இயற்கையை வளப்படுத்தும் சித்தனைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை...” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ...ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்...!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்... உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்... குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்... இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது...? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்... பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்...?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன...? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்...! இவையும் ஞானம் தான்...!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்... கவி ஞானமும்...! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது...?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட...” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்...!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா...?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா...?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்... சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்...!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்...!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்...!”

October 26, 2019

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்...” எப்படி இருக்கும்...? நடந்த நிகழ்ச்சி


நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்...? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது...?

ஐய்யய்யோ...! என்னை வெட்டிப் போட்டார்களே... வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே...! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்...
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்...!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது... என்ன செய்வது...? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்... என்று சொல்லி...!

இது என்ன...? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா... பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது...? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது...! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது...? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி...
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?  
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது...?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது...?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

“உள் உணர்வின் மேம்பாட்டை” வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து...!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே... எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்...?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்...!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே...
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து...
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்...” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

October 25, 2019

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது...?


குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே... இந்தப் பாவிகள்...!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை...! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்...! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு... அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது...!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்...! என்று இருக்கும்... வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் பொறுமிக் கொண்டு நன்றாக இருக்கும்... ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்...
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ...
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா...! என்னைக் கொல்கின்றீர்களேயடா... என்னைக் கொல்கின்றீர்களேயடா...!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது...?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது...?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது...? சென்றபின்... புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது...? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்...? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து... பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து... அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.