ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2016

மற்றவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ்வதைப் பார்த்து நாமும் ஆசைப்படுகின்றோம்... அழியாச் சொத்து எது?

டயானா, தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆக, மற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது. ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது”.

அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்.., ஆசை நம்மை விட்டபாடில்லை.

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்.., நாமும் அவரைப் போல் வரக்கூடாது..,” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில், “மெய்ஞானிகள்.., பிறவியில்லா நிலை அடைந்தனரே..,” அதை நாம் பெறலாம்.

நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

இல்லை என்றால் மீண்டும் இழிநிலை சரீரத்தைப் பெறுகின்றோம். பேய் மனம் கொண்டு மற்றொர்களைத் தாக்கிடும் நிலை உருவாகும்போது பேய் மனம் கொண்டு ஒன்றைத் தாக்கி அதை உணவாக ரசித்திடும் நிலைதான் வரும்.

இன்றைய உலகில் மனிதனுக்குள் அந்தப் “பேய் மனம்..,” தோன்றிவிட்டது அசுர உணர்வுகள் வளர்ந்து விட்டது.

மற்றவர்களைத் துன்புறுத்துவது, சித்திரவதை செய்வது, கொலை செய்வது, இதையெல்லாம் செய்து ரசிக்கும் தன்மைதான் வருகின்றதே தவிர மற்றவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உணர்த்திய மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு அந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் நெறி எனக்குள் வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறத் தயங்காதீர்கள்.

இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்களுடைய நிலைகளை எண்ணாதீர்கள்.

ஏனென்றால், “என்னைத் தவறாக நினைக்கின்றார்கள்.., கேவலமாகப் பேசுகின்றார்கள்..,” என்று அவர்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அதன்வழி தான் நமக்குள் வரும்.

நாம் பார்க்கும் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுங்கள். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் வலுவினை உங்களுக்குள் பெறுங்கள்.

நம் உடலே நமக்குச் சொந்தமில்லை. நாம் சேமித்த எந்தச் சொத்தும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், நம் உயிரான்மாவிற்குச் சேர்க்கும் மகரிஷிகளின் அருள் சக்தி ஒன்றுதான் என்றுமே அழியாத சொத்து.

அந்தக் கணக்கினைக் கூட்டினால் என்றுமே நாம் நிலைத்திருக்க முடியும். பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடையலாம்.

December 23, 2016

கால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்

மோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,?” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் செய்வதில்லை.

தன்னைச் சார்புடையோர் அல்லாது வரும்பொழுது அது பகைமை உணர்வுகளை நுகர்ந்து சீறிப் பாய்ந்து தாக்கும் நிலை வருகின்றது.
 
ஒரு மனிதனை அன்பு கொண்டு அரவணைக்கும் தன்மை வந்துவிட்டால் அந்த உணர்வின் தன்மை அவர் வரும் பொழுதே மோப்பத்தை வைத்து “என் நண்பன்..,” என்று சொல்வோம்.

அதே சமயத்தில், தன் குழந்தை என்ற நிலையில் அவன் பண்பு கொண்டு வளர வேண்டும் என்றும் பண்பு கொண்டவனாக வர வேண்டும் என்று எண்ணுகிறோம்.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்பு கொண்ட உணர்வை வளர்த்து நமக்குள் அந்தப் பண்பு கொண்ட அணுவின் தன்மையாக வளர்கின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் விளைய வேண்டும். அவனையறியாது இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் தன்மை வேண்டும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுவதே அந்தப் பண்பான நிலைகள்.

இத்தகைய உணர்வை வளர்த்து அவனிடம் சொல்லி அணுகும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து பதிவாக்கிவிட்டால் அவன் மோப்பம் அந்தப் பண்புகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் இருளை மாய்க்கின்றான்.

ஆனால், வெறி கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது நமக்குள் எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாக வைத்துக் கொள்கின்றோமோ அந்த வெறி கொண்ட உணர்வின் தன்மையாகத்தான் நாம் வெளிப்படுத்துவோம்.

அந்த உணர்வுகள் வெளிப்படும்பொழுது எவரின் உடலில் ஏற்கனவே இருளச் செய்ததோ அந்த உணர்வுகள் இங்கே மோப்பத்தைக் காணும் பொழுதே தன் மேல் வெறுப்படையும் தன்மையும் இருளச் செய்யும் நிலையும் வருகின்து.

இன்று கால பைரவர் என்று சொல்கிறோம். அதன் பொருள் என்ன?

நாம் நுகர்ந்த உணர்வுகள் நாம் மோப்பத்தால் எடுக்கப்படும் பொழுது பைரவர் என்று சொல்லும் பொழுது அதனின் வலிமை கொண்டு அதைத் தீமை என்று உணரச் செய்கின்றது.

தன் உடலைக் காக்கத் தன் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அதனை வீழ்த்தும் உணர்வுகளை இங்கே தூண்டுகின்றது.

ஆகவே தான் கால பைரவர் என்றும் அதற்கு நாயைக் காவலாக வைத்துள்ளார்கள். வெகு தொலைவில் வரும் உணர்வை நுகர்ந்தறிந்து தன் எஜமானைக் காக்கும்.

தன் எண்ணத்தில் பிறர் மேல் வெறுப்பின் உணர்வுகள் உருவாக்கிவிட்டால் அது தன்னைக் காக்கும்.

உதாரணமாக, தந்தை வெறுப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வின் தன்மை குழந்தையின் உடலில் வரும் உணர்வுகளை இருளச் செய்துவிடும்.

இருண்டு விட்டால் எந்த வெறுப்பின் தன்மை உருவாகியதோ மீண்டும் யாரிடம் (குழந்தையிடம்) இந்த உணர்வின் தன்மை வந்ததோ அந்த உணர்வை நுகர்ந்து மீண்டும் தந்தைக்குள் இருண்டு போகும் நிலையே வருகின்றது.

ஆக, எவர் உடலிலிருந்து வெறுப்பின் தன்மை வந்ததோ அந்த உடலைக் காக்க விரும்புகின்றது.

இருப்பினும் இந்த உடலின் மோப்பம் கண்டு அந்தச் சமயம் நுகர்ந்தாலும் நுகர்ந்த உணர்வு பகைமை உணர்வாகித் தனக்குள் (தந்தைக்குள்) சின்னாபின்னமாக்கி விடுகின்றது.

உடலில் நோயாக மாறுகின்றது. வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

ஆனால், இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்?

கால பைரவர் அவர் தீமைகளை வெல்லக் கூடியவர் என்று அவருக்குக் கொண்டு போய் அர்ச்சனை செய்து யாகங்கள் செய்கின்றோம்.

அர்ச்சனை செய்து யாகங்களைச் செய்து அந்த பைரவரை வசப்படுத்தினால் “நாம் விரும்பியதை.., நமக்குச் செய்வார்..,” என்று இப்படி மனிதனின் வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழும்படிச் செய்துள்ளார்கள்.

மதங்களை உருவாக்கி மதத்தில் இயற்றிய சட்டங்களை நமக்குள் உருவாக்கி அதனின் சாங்கிய நிலைகளை உருவாக்கும் பொழுது அதுவே நமக்குள் கடவுளாக நின்று செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

“மதத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் உணர்வுகளே..,” நம்முள் அதிகமாகச் செயல்படும் பொழுது உள் நின்று அதன் வழியே நம்மை இயக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி முறைகள் இன்று மாறிவிட்டது.

நமக்குள் எது இயக்குகின்றது? நாம் நுகரும் குணங்கள் எப்படிப்பட்டது? என்பதைத் தன்னைத்தான் அறிதல் என்ற நிலைக்குத்தான் ஞானிகள் உருவங்களை அமைத்துத் தெய்வத்தின் செயலாகக் காட்டினார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் நடந்தோம் என்றால் தன்னை அறிந்து, வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைந்து அழியா ஒளியின் சரீரம் பெற முடியும். 

December 22, 2016

நல்லது நமக்குள் வராது தடைப்படுத்துவது எது? எதனால்?

காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.

அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது, அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.

ஏனென்றால், அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்துவிடுகின்றது.

ஆகவே, அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது? என்று அதை உணரும்படிச் செய்தார்.

இப்பொழுது நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.

வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.

அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.

ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.

நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகையை நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

அதற்குத்தான் செடிகளுக்கு உரம் போடுவது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளுக்குள் வலு ஏற்றும்படிச் செய்கின்றோம்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இணையச் செய்தால், நல்ல உணர்வுகள் இயங்கவிடாமல் செய்யும் தீய உணர்வுகளை அருள் மகரிஷிகளின் உணர்வுகள் செயலிழக்கச் செய்துவிடும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவில் பெருக்கச் செய்தால் அதனின் அடர்த்தி அதிமாகி தீமை செய்யும் உணர்வின் அலைகள் நம் அருகே வராதபடி நம்மைப் பாதுகாக்கும்.

நலம் பெறுக வளம் பெறுக, மகரிஷிகளின் அருள் சக்தி பெறுக. 

December 19, 2016

களிமண்ணால் செய்த விநாயகரை வருடந்தோறும் கடலிலே கரைக்கின்றோம் ஏன்?

விநாயகர் சதுர்த்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உட் பொருள் என்ன என்று பார்ப்போம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் எங்களுடன் பணி புரிவோர் எங்கள் வாடிக்கையாளர்கள் அனவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று சூரிய உதய நேரத்தில் நாம் அனைவரும் இந்தச் சக்தியைக் கவர்தல் வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து இவ்வாறு கவர்ந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் இணைந்து நமக்குள் நம்மையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வுகள் அனைத்தையும் செயலற்றதாக்கி விடுகின்றது.

இந்தப் பரமான பூமியில் பரவிக் கொண்டிருக்கும் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நமக்குள் இந்த ஆற்றல்மிக்க சக்தி இணைந்து கொண்ட பின் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது.

எப்படி வேப்ப இலையின் சத்தை அந்த மணத்தைக் கண்டபின் ரோஜாப்பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றதோ, ரோஜாப்பூவின் நறுமணத்தைக் கண்டபின் பிற தீமைகள் நகர்ந்து ஓடுகின்றதோ இதைப் போன்றுதான் தீமையான உணர்வுகளை விலகச் செய்தல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

நம் வாழ்க்கையில் ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை.

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.


வருடந்தோறும் விநாயகரைக் களிமண்ணால் செய்து அதைக் கடலிலே கரைக்கும் நிலையைக் காட்டியதன் உட்பொருளே நாம் அனைவரும் அருள் மகரிஷிகளின் உணர்வைத் நமக்குள் சேர்த்து தீமையை விளைய வைக்கும் உணர்வலைகளை ஒட்டு மொத்தமாகக் கடலிலே இறக்கி அதைக் கரைத்துவிட வேண்டும் என்பதைத்தான் சொன்னார்கள் ஞானிகள்.

December 18, 2016

விஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்டினார், உணர்த்தினார்

குருநாதர் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது? இந்த உயிரணுக்கள் எவ்வாறு விளைகின்றது?

இந்தக் கோள்கள் தனக்குள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு அது வளர்கின்றது? என்ற நிலைகளைச் சாப்பாடு கூட இல்லாதபடி காட்டில் அமர்த்தி இதை அறியும்படிச் செய்தார்.

விஞ்ஞானிகளோ பல நிலைகள் கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு கண்டு கொண்டே இருக்கின்றார்கள். இன்று முழுமையும் காணவில்லை.

அன்று மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்தப் பதிந்த உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கும் பொழுதுதான் விண்ணிலே நடக்கும் அதிசயங்களை உணரும்படிச் செய்கின்றார். சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்தார்.

அதையெல்லாம் கண்டேன், உணர்ந்தேன், தீமைகளை வென்றிடும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அப்படிக் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளைத்தான் உங்களுக்குள் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே வருகின்றேன். நீங்களும் அதையெல்லாம் பெற்று தீமைகளை வென்றிடும் ஆற்றல்கள் பெறவேண்டும். உங்களால் முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் பரவி கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் தீமைகளை வென்றிடும் ஆற்றலாகப் பரவ வேண்டும்.

தீமைகளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் விளைந்திட வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

அதே போல் மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் தியானிக்கும் பொழுது தியானத்தில் உங்களுக்கு அந்தச் சக்தி நிச்சயம் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்கும் நிலைக்குத் தான் இந்த உபதேசம். அருள் ஞான உணர்வினை நீங்கள் மகிழ்ந்து மகிழ்ச்சியுடன் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

குருநாதர் பெற்ற சக்திகளை எமக்குக் கொடுத்த உணர்வுகள் அனைத்தும் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த இருளை நீக்கிடும் ஆற்றல் பெறுவீர்கள். அதில் மறைந்த உணர்வின் பொறிகளை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமையற்ற உணர்வுகளாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் யாம் உபதேசித்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அதிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்.

நம் உடலையும் நம் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்த முடியும். உங்களில் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வுகளை இந்தப் பூமியிலே பரவச் செய்து இந்தப் பூமியையும் நாம் பரிசுத்தப்படுத்த முடியும்.

குரு காட்டிய உணர்வுகளைப் பதியச் செய்த இந்த நினைவாற்றலின் வலுக் கொண்டு துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் சக்திகளைப் பெற்று அவைகளின் துணை கொண்டு அனைவரையும் பெறச் செய்வோம்.

December 17, 2016

இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் ஒளிமயமாக ஆக்குவது போல் நாமும் பேரொளியாக ஆக முடியும்

நீங்கள் உயர்ந்து வாழ்ந்திட தவமிருக்கின்றேன். எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை.

சதா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நீங்கள் பெறவேண்டும் என்ற அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

விஞ்ஞான அறிவால் எந்தெந்த வகையில் தீமைகள் விளைகின்றது? அதிலிருந்து உலக மக்களை எவ்வாறு காத்திட வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி அந்த ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவதே என்னுடைய தவமாகும்.

தியானம் செய்யும் நீங்களும் இதைப் போன்று உலக மக்கள் நலம் பெறத் தியானியுங்கள். உலக மக்கள் நலம் பெறத் தவமிருங்கள். அந்தப் பண்படும் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் விஞ்ஞான அறிவால் இனி வரும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்து மக்களையும் காக்க முடியும்.

தனக்குள் மோதுவதைச் சூரியன் தன் அரவணைப்புடன் தான் கவர்ந்து நஞ்சினைப் பிளந்து ஒளியின் சுடராக இந்த உலகத்தை இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் அனைவரது உணர்வுகளையும் ஏற்று அந்த நஞ்சினைப் பிளந்து நஞ்சினைப் பிளந்திடும் உணர்வலைகளைப் பரப்பிக் கொண்டுள்ளார்.

நாமெல்லாம் அருள் ஒளியின் சுடராகப் பெற்று பேரொளியாக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. குருநாதரின் அருளை அனைவரும் பெறும் தகுதியை இந்த உபதேசத்தின் மூலமாக ஏற்படுத்துகின்றோம்.

அனைவரும் குரு அருளைப் பெற்று அவரின் துணை கொண்டு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட எனது ஆசியும் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்வதைக் காண வேண்டும். அதில் பேரானந்த நிலைகளைப் பெறவேண்டும் என்று தான் குருநாதர் எமக்குச் சொன்னார்.

ஆகவே, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு உலக ஞானம் பெற்று இனி வரும் காலங்களை மகிழ்ச்சி பெறும் நிலையாக மாற்றுவோம்.

மெய்ஞானம் பெறுவோம். மெய் உலகைப் படைப்போம், என்றும் பதினாறு என்ற நிலையில் விண்ணிலே என்றுமே ஒளியாக வாழ்வோம்.

December 16, 2016

யாம் சொல்வதைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கு யாம் கொடுக்கும் பாதுகாப்பு


குடும்பத்தில் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால், அவன் சந்தரப்பம் நோய்வாய்ப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதனால் அவன் வேதனைப்படுகின்றான். குழந்தை வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் அதைச் சுவாசித்து வேதனைப்படுகின்றோம். வேதனைப்பட்டு அழுகின்றோமே தவிர வேதனையை நீக்கும் உபாயம் இல்லை.

மருந்தைக் கொடுக்கலாம், காசைக் கொடுக்கலாம், ஆனால் முழுமைக்கும் வேதனைப்படுகின்றோம்.

அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடலில் இருளை நீக்கும் அருள் சக்தி பெறவேண்டும். அதே போன்று குழந்தையும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,

அறியாது சேர்ந்த அந்த இருள் நீங்கி அவன் தெளிவான நிலைகளில் வரவேண்டும் என்று நீங்கள் அந்த உணர்வலைகளைக் கொஞ்சம் பாய்ச்சிப் பாருங்கள்.

இப்படிச் செய்தால் அது உங்களைக் காக்கும். குழந்தையையும் காக்கும். இந்த நிலைக்கு வரவில்லை என்றால் அது உங்களுடைய இஷ்டம்.

குருநாதர் காட்டிய நிலையில் காடு மேடெல்லாம் சுற்றினேன், கஷ்டப்பட்டேன். அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.

அந்த ஆசை நிறைவேறும் என்ற நிலைகளில்தான் கூடுமான வரையிலும் நான் நேரம் காலம் பார்க்காமல் உபதேசித்து வருகிறேன். மற்ற மார்க்கங்களிலோ மற்றவர்களோ இந்த நேரத்திற்குத்தான் வரவேண்டும், அப்பொழுதுதான் பார்க்க முடியும் என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால், நீங்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ஆறுதல் சொல்லக்கூடிய அளவிற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்தினாலும், அதைக் கேட்பார் இல்லை. தலை வலியும் மேல் வலியும் தான் நான் கேட்க வேண்டியுள்ளது.

எனக்கு பிழைப்பதற்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும்,
அந்த அருள் கொடுங்கள்,
அந்த ஞான சக்தி கொடுங்கள்
என்று கேட்பார் யாரும் இல்லை. நீங்களே எண்ணி நீங்களே தான் வளர்க்க முடியும்.

ஆகவே, வேதனையையும், நோயையும் வளர்ப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்க வேண்டாம்.

அதனால் தான் நீங்கள் எந்நேரம் வந்தாலும் அந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம் என்று சொன்னால் அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், அப்படிச் செய்யாமல்
எனக்கும் அந்த வேதனயைத் தான் தூண்டுகின்றீர்கள்.

வேதனையை நீக்குவதற்கு மணிக்கணக்கில் நான் இப்படி உபதேசிக்கின்றேன். அதை எடுக்க வேண்டுமா இல்லையா..?

ஒரு நாளைக்கு எனக்கு என்று ஒரு நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் எப்படி நாம் உடுத்தும் துணிகளில் உள்ள அழுக்கை சோப்பைப் போட்டு வெளியேற்றுகின்றோமோ அதே மாதிரி பல மகரிஷிகளின் அருளை நான் எடுக்கின்றேன்.

அந்த மகரிஷிகள் எதெனதன் வழிகளில் எடுத்தார்களோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து என் ஆத்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்.

இல்லாமல் போனால் உங்களை மாதிரி என் உடலில் பல நோய் வரும். ஏமாந்தேன் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி சர்க்கஸில் விளையாடுகிற மாதிரி
பிறருடைய உணர்வு அதிகமாகிவிட்டால்
அவர்களின் உணர்வுகள் என்னைத் தாக்கத்தான் செய்யும்.

இதே போல நான் சொன்னபடி கேட்டு வழி நடக்கும் மற்ற தியானவழி அன்பர்கள் அருள் வழியில் பெற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவர்கள் போகும்போது அவர்களிடமும் இதே போன்று கஷ்டம், வேதனை என்று சொல்கின்றார்கள்.

தியான வழி அன்பர்கள் இத்தகைய நிலையைச் சந்திக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் நான் அந்த மகரிஷிகளின் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

இல்லையென்றால், நானே இப்படி இருக்கின்றேன் என்றால் அவர்களுடைய நிலை எப்படி இருக்கும்?
அவர்களையும் காக்கப்பட வேண்டும்
நல்லதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வைக்க வேண்டும்,
நல்லதை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்
தியான வழி அன்பர்கள் இதைப் பெறவேண்டும் என்று
ஊக்கத்தை நான் கொடுக்கின்றேன்.

ஆர்வத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்லும் நிலையில் கஷ்டத்தையெல்லாம் அவர்களிடமும் சொல்லும்போது என்ன ஆகும்?

ஆக, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நான் அதைச் செய்யவில்லை என்றால் தியான வழி அன்பர்களும் இரண்டு நாள் சொல்லிவிட்டு பின் சோர்வடைந்துவிடுவார்கள்.

நல்லது செய்யவேண்டும் என்று எண்ணினால் அந்த வலுவை அவர்களுக்குக் கொடுத்து அவர்களுக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்து யாம் அந்த வலுவை ஏற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும்போது எனக்கு குருநாதர் எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ அந்த நிலையில்தான் யாமும் செயல்படுகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியினை நீங்கள் கடைப்பிடியுங்கள். அவருடைய துணை கொண்டு எல்லா மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். தீமைகளிலிருந்து விடுபடும் பேராற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள். பெற்ற அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள், அந்த உணர்வை உங்ககள் மூச்சலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

அதன் வழி நடந்தால் விண்ணும் மண்ணும் போற்றக் கூடிய நிலையில் அந்த மாமகரிஷிகளைப் போன்று ஆவீர்கள். எமது அருளாசிகள்.  

December 15, 2016

காசைக் கொடுத்துக் கஷ்டத்தைப் போக்கத்தான் விரும்புகின்றோம் – குருநாதர் எனக்குக் கொடுத்தது என்ன?

ஒவ்வொரு அணுவின் தன்மையும் எவ்வாறு செயலாக்குகிறது என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

அவர் காட்டிய அருள் வழியில் எனக்கு எதையெல்லாம் போதித்து உணர்வினைப் பதிவு செய்தாரோ அவை அனைத்தையுமே உங்களிடம் ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜை அன்று (வைகுண்ட ஏகாதசி) தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றேன்.

எனக்கு ஆறே மாதத்தில் எல்லாவற்றையும் காண்பித்தார் குருநாதர். அதே போல் ஆறு மாதத்தில் உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றால் “நீங்கள் எங்கே..?”

இந்த வாழ்க்கையில் “அது அப்படி இருக்கிறது.., இது இப்படி இருக்கின்றது..,” மனைவி இப்படிப் பேசுகின்றது கணவர் இப்படிப் பேசுகின்றார், பையன் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான் வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று பல உணர்வில் இருக்கின்றீர்கள்.

இந்த உணர்வை எடுத்துத் தியானத்திற்குச் சென்றால் “நீ தியானமிருந்தால் சாமியாராகப் போய்விடுவாய்..,” என்று மனைவியோ கணவரோ ஒருவரை ஒருவர் சொல்லத் தொடங்கிவிடுகின்றார்கள்.

உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் “என் அப்பாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது..,” என்று பையன் பேசுகின்றான் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.

“நீங்கள் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றீர்கள். நானும் கேட்டேன்.., ஆனால், என்னால் முடியவில்லை..,” என்று இப்படித்தான் நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது.

ஏனென்றால், கோவிலுக்குச் சென்று சாமிக்கு தேங்காய் பழம் உடைத்து அதற்கென்று அங்கிருக்கும் பூசாரிக்கு காசைக் கொடுத்து இரண்டு அபிஷேகத்தைச் செய்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் பாவமெல்லாம் போய்விடும் என்று செய்கின்றோம்.

நமக்காக வேண்டி காசைக் கொடுத்திருக்கின்றான். அதற்காக அங்கே ஒலிகளை எழுப்புகின்றார் பூசாரி.

அப்பொழுது அவர் செய்யும் அர்ச்சனை நேரடியாக ஆண்டவனுக்குப் போய் அவர் அதற்காக மனமிரங்கி வந்து நம் கஷ்டத்தை எல்லாம் போக்குவார் என்று இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், “நம்மை ஆள்பவன்… யார்…?” இதைத்தான் குருநாதர் காட்டினார்.

இந்த உடலுக்குள் பல கோடி உணர்வுகள் பல கோடிச் சரீரங்களை எடுத்து வந்தாலும் இதை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிரே ஆண்டவன்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இரையாகி, உணர்வின் செயலாக உடலாக்கி, அதனின் உணர்வின் செயலாகத்தான் நம்மை உயிர் இயக்குகின்றான் என்ற நிலையை “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..,” என்று கீதையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் அணுகியவர்கள் அனைவரும் இந்த உடலின் இச்சைக்கும் ஏதோ சாம்ராஜ்யத்தை ஆளப்போவது போலவும் பலரும் “தவறான வழியில்” சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவர் விண்ணுலகில் பேரானந்தப் பெருநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் உணர்வின் துணை கொண்டு அவர் பெற்ற உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது உங்களிடம் பதிவு செய்யும்போது உங்கள் நினைவாற்றல் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் பால் எளிதில் செல்லும்.

அதன் வழி கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற இது உதவும்.