ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2016

நாம் வெளியிடும் எண்ணங்களும் மூச்சலைகளும் நம் வீட்டில் படர்ந்து எப்படி இயக்குகின்றது?

புது மனை புகுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீடு முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீட்டில் இருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை “வீடு முழுவதும் படரச் செய்ய வேண்டும்”.

இங்கு வருவோர் அனைவரும் மகிழ்ந்திடும் நிலையாக இருக்க வேண்டும். அவர்களுடைய சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை வீடு முழுவதும் படரவிட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் எண்ணும் எண்ணங்களும் வெளியிடும் சுவாசங்களும் அந்த வீட்டிலுள்ள சுவர்களிலும் தரைகளிலும் பதிகின்றது.

அப்படிப் பதிந்த நிலை எதுவோ அதனின் தன்மை அவைகளிலிருந்து வெளிப்பட்டு அங்கு வசிப்போர் மற்றும் அங்கு வருகை புரிவோர் அனைவரின் சுவாசங்களிலும் மோதி அவர்களுடைய உணர்வில் இது கலந்து அவர்களை மகிழச் செய்யும் நிலையாக அந்த உணர்வின் நிலைகள் இயக்கும்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்திலுள்ளவர்களால் வேதனை உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு அது சுவர்களிலும் தரையிலும் பதிந்து இருக்குமானால் என்ன ஆகும்?

அந்த உணர்வுகள் வீட்டில் இருப்போர் மற்றும் வருகை தருவோர் அனைவரின் உணர்வுகளிலும் மோதி அவர்களின் சுவாசத்தில் இது கலந்து அவர்களும் வேதனை வெறுப்பை வெளிப்படுத்தும் நிலையாக அந்த உணர்வின் நிலைகள் இயக்கும் என்பதின் நிலையறிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, புது மனை புகுவோர் தமது வீட்டில் நல்ல உணர்வுகளைப் படரவேண்டும்

கோபம் வெறுப்பு வேதனை போன்ற தீய உணர்வுகளை அகற்றி எப்பொழுதும் மகிழச் செய்திடும் நிலையாக இருக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை வீடு முழுவதும் நிறைந்திருக்கும் வண்ணம் உங்களுடைய உணர்வுகளைப் படரவிட வேண்டும்.

இதற்காக கூட்டுக் குடும்பத் தியானமும் கடைப்பிடித்து வர வேண்டும்.

புதுமனை புகுவோர் இதனை மனதில் இருத்தி விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் அமரச் செய்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

 அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பின் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த இல்லம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இங்கு குடியிருப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்  உடல் நலம் மன பலம்  மன வளம் தொழில் வளம் செல்வம் செல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உடல் நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அலைகளை நாம் கூட்டாகத் தியானித்து அந்த இல்லத்தில் படரவிடும் பொழுது அது ஆற்றல்மிக்க சக்தியாகப் படர்கின்றது.

அந்த இல்லத்தில் கூட்டுக் குடும்பத் தியானங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க இல்லத்தில் குடியிருப்போர் அனைவரும் மென்மேலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலையுடன் செயல்பட முடிகின்றது.

அந்த இல்லமும் புனிதமடைகின்றது.

August 19, 2016

தீமையான உணர்வுகளை நேரிடையாகப் பார்க்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்யவேண்டிய முறை

நாம் செய்ய வேண்டிய பணிகளை எண்ணிக் கொண்டு சாலையில் நடந்து கொண்டிருப்போம். அப்பொழுது எதிர்பாராது ஒருவர் காரில் அடிபட்டுக் கீழே விழுந்து விடுகின்றார்.

இதனைக் காணும் நாம் திடுக்கிட்டு “அச்சச்சோ.., என்று மனம் பதைபதைக்கின்றோம்.

அடிபட்டவர் இறந்துவிட்டாரோ அல்லது உயிருடன் இருக்கின்றாரோ என்று கூடப் பார்க்காமல் “அவருக்கு என்னவாயிற்றோ.., என்று மனம் பதைக்கும் பொழுது காரில் அடிபட்டு இறந்த உணர்வுகள் இங்கே ஒன்றாகி பதட்டம் அடைந்த நம் உடலுக்குள் இறந்தவரின் உயிரான்மா உள்ளே புகுந்துவிடுகின்றது.

ஒரு விளக்கில் (பல்பில்) நெகடிவ், பாசிடிவ் என்ற இரண்டையும் இணைக்கும் பொழுது அந்த பல்ப் எரியத் தொடங்குவது போல் பதட்டமைடைந்தவரின் உணர்வும் இறந்தவரின் உணர்வும் ஒன்றாக இணையும் பொழுது இறந்தவரின் ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்து செயல்புரியத் தொடங்குகின்றது.

அதாவது காரில் அடிபட்டு இறந்தவர் தன் வாழ்க்கையில் என்னென்ன வேதனைகளை அனுபவித்தாரோ அவையனைத்தையும் இவருடைய உடலில் செயல்படத் தொடங்குகின்றது.

சாலையில் நடைபெறும் இது போன்ற விபரீதங்களைத் தவிர பிற சண்டை சச்சரவுகளையும் நாம் காண நேரிடும்.

இரண்டு பேருக்குள் நடைபெறும் வாய்ச் சண்டையில் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சாபங்களும் வெளிப்படும்.

இதை நாம் உற்றுக் கவனிப்போம் என்றால் பிறர் யாரும் நமக்குச் சாபமிட வேண்டியதில்லை.

ஒருவர் மற்றொருவருக்கு விடும் சாபங்களை உற்றுக் கவனித்தாலே போதும். அந்தச் சாபத்தின் உணர்வுகள் நமக்குள் உட்புகுந்துவிடும்.

புகுந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து கை கால் குடைச்சல் சலிப்பு சஞ்சலம் போன்றவைகளை நம்மிடத்தில் உண்டாக்கிவிடும்.

கர்ப்பாமான பெண்கள் இதைப் போன்ற சாப உணர்வுகளைக் கண் கொண்டு உற்று நோக்கித் தனக்குள் பதிய வைக்கும் பொழுது அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு வினையாக, பூர்வ புண்ணியமாக சேர்ந்து அதனால் ஊனமுள்ள குழந்தையாகப் பிறந்துவிடும்.

இது போன்று தெருவில் நடக்கும் அசம்பாவிதங்களையோ மற்ற சண்டை சச்சரவுகளைக் காணும் பொழுது உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்வது மிகவும் நல்லது.

ஆத்ம சுத்தி செய்து நம்மைத் தீமையான உணர்வுகளிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் ஒரு பழக்கமாகப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.
விபத்துக்களைப் பார்த்த பின் செய்ய வேண்டியது
விபத்தில் அடிபட்டு இறந்தவரைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இறந்தவரின் உயிரான்மாவிற்குக் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று “அந்த உயிரான்மாவை உந்தி விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.
சண்டை சச்சரவுகளைப் பார்த்த பின் செய்ய வேண்டியது
சண்டை சச்சரவுகளைப் பார்க்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சண்டையிடுபவர்களின் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் சண்டையிடுபவர்களுக்குள் ஒன்றுபட்ட உணர்வுகள் உண்டாகி நட்புடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடம் தியானிக்க வேண்டும்.

இத்தகைய முறைப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டால் பிற தீமையான உணர்வுகள் நம்மைப் பாதிக்காதவாறு நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

August 18, 2016

இனி நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை தருபவையாக இருந்திட அருள்வாய் ஈஸ்வரா

இன்று பத்திரிக்கைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாலே வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி, குண்டு வெடிப்பு என்று அச்ச உணர்வுகளைத் தோற்றிவிக்கும் செய்திகளையே பக்கத்திற்குப் பக்கம் பெரிய அளவில் படத்துடன் போட்டிருக்கின்றார்கள்.

அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் அத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது அவைகள் எளிதில் நம்முள் பதிவாகிவிடுகின்றது.

பொழுது போக்கிற்காக பத்திரிக்கைகள், நாவல்கள் மர்மக் கதைகள் இது போன்ற கதைகளைப் படிக்கும் பழக்கம் பெண்கள், ஆண்கள் இருவருக்குமே உள்ளது.

அது சமயம் அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரப் படைப்பின் வேதனை, சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம், அவசரம், ஆத்திரம் ஆகிய உணர்வுகளை அதே உணர்வுடன் ஒன்றிப் படிக்க நேருகின்றது.

ஒவ்வொரு கதாபாத்திரம் செயல்படுவதையும் விவரித்து உருக்கமாக எழுதியிருப்பார்கள். நாம் கதைகளுடன் ஒன்றிப் படிப்பதால் அந்த உணர்வுகள் அனைத்துமே நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

சிறுகச் சிறுகச் சேரும் இந்த உணர்வுகளில் நாம் எந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் செயலின் நிலைகளில் நம்மைச் செயல்பட வைக்கும்.

அதே மாதிரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டால் இன்று பல சானல்களில் வித விதமான நிலைகளில் ஒளி பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதைக் குழந்தைகள் பார்க்கும் சந்தர்ப்பங்களில் தீமையின் உணர்வுகள் பதிய நேர்கின்றது.

குழந்தைகளுக்கு வேறு எண்ணம் இல்லை. ஆர்வத்துடன் உற்று நோக்கும் பொழுது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிவாகிவிடுகின்றது.

ஆனால், அவர்கள் வளர்ந்த பின்பு பதிந்த அத்தகைய உணர்வுகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு வருகின்றது. ஆகவே, இதனைத் தவிர்த்துக் கொண்டால் மிகவும் நலம் பயக்கும் செயலாக இருக்கும்.

இவ்வாறு பல வகையான தீமையின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்கின்றோம். பதிந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக நமக்குள் நம்மிடத்தில் விளைந்து விடுகின்றன.

இதனால் நாம் வேறு வேளையில் ஈடுபட்டிருக்கும் சமயம் நமக்குப் பின்னால் ஏதாவது ஒரு பொருள் விழுந்த சப்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்போம்.

என்னமோ, ஏதோ என்ற அச்ச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்போம். நாம் செல்லும் பஸ்ஸின் ஓட்டுனர் கவனமாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருப்பார்.

திடீரென்று இடையில் ஒருவன் பஸ் வருவதை அறியாமல் புகுந்து விடுவான். இதனால் ஓட்டுனர் “சடார்..,” என்று பிரேக்கைப் பிடிப்பார்.

ஆனாலும், நம் மனதிலோ “என்ன ஆயிற்றோ..? என்ற பயத்துடிப்பு உண்டாகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில் விபத்துக்கு உட்பட்ட நிலைகளில் எத்தனையோ வேதனையுடன் வெளிப்பட்ட அணுக்கள் பல வகைகள் உண்டு.

ஆகையினால் விபத்தைக் காணும் சம்வங்களில் நம்மையறியாமல் “என்ன ஆனது..? என்று ஆர்வ மிகுதியால் கூர்ந்து கவனிப்போம். அப்பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நம்முள் புகுந்துவிடும்.

விபத்து நேரவிருந்த ஆள் தப்பிவிடுவான். ஆனால், அது சமயம் நாம் சுவாசித்த அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் பிரமையை உண்டாக்கிவிடும்.

அச்ச உணர்வுகளைப் படித்ததன் விளைவு அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. ஓட்டுனர் “கிரீச்.., என்று பிரேக் போட்டவுடன் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வோம்.

அங்கு என்ன நடந்தது என்று கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் அறியும் தன்மையைக் கொடுப்பதில்லை.

ஆக இந்த உணர்வின் அலைகள் நமக்குள் இணைந்த பின் “அடிப்பட்டானே.., என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து நம்மைப் பித்தனைப் போன்று ஆக்கிவிடுகின்றது.

அதே நினைவில் இருந்தால் “ஐயோ.., யாரோ வருகிறார், கதவைத் தட்டுகிறார், ஐயோ.., மோதிவிட்டது, ஐயோ.., கழுத்தை நெரிக்கிறார் என்று உளற ஆரம்பித்துவிடுவோம்.

இதைப் போன்ற அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய அடுத்து நாம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் “கிரீச்.., என்று சப்தம் கேட்டால் போதும் ஒதுங்குவதற்குப் பதில் வண்டியிலேயே விழுந்துவிடுவோம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மையறியாமல் ஆபத்துக்கே அழைத்துச் செல்லும்.

எனவே எந்தப் பத்திரிக்கையை எடுத்துப் படித்தாலும் அதில் உள்ள செய்திகள் நமக்குள் பதிந்து ஆபத்தை உண்டாக்காமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகளைப் படித்து முடித்தவுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் இனி நாட்டிலும் இந்த உலகிலும் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை தருபவைகளாக இருக்க வேண்டும் ஈஸ்வரா என்று ஐந்து நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் மூலம் நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராமல் தடுத்து நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ள முடியும்.

August 17, 2016

நம்மைக் குறை கூறுபவர்களின், இடைஞ்சல் செய்பவர்களின் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டிய முறை

நாம் நம் வாழ்க்கையில் நன்மைகளையே செய்திருப்போம். நல்லவைகளையே பேசியிருப்போம். பலருக்குப் பல உதவிகளையும் தர்மங்களையும் நாம் செய்திருப்போம்.

பலருக்குப் பல உதவிகளை நாம் செய்திருந்தாலும் நமக்கும், நம் குடும்பத்தில் குழப்பங்களும் உடலில் நோய்களும் இருந்து அதிக வேதனைகளைத் தந்து கொண்டிருக்கும்.

நன்மைகளையே செய்து வரும் நமக்கு வேதனைகள் ஏன் வருகிறது? எதனால் வருகின்றது?  என்பது பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். மனித உணர்வின் சூட்சம செயல்களின் விளைவுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஒருவர் உதவி என்று கேட்டு வருவாரானால் அவர் தன்னுடைய சோகக் கதையை முதலில் உங்களிடத்தில் எடுத்துக் கூறி உங்களுடைய இரக்கத்தைப் பெற முயல்வார்.

நீங்களும் அவருடைய சோகக் கதையைக் கேட்டு அவர் மீது இரக்கம் கொண்டு அவருக்காக வருந்துவீர்கள்.

இவ்வாறு அவருடைய சோககக் கதையை ஆழ்ந்து கேட்கும் பொழுது அவருடைய வேதனையான உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் பதிகின்றது.

இது போன்ற வேதனையின் உணர்வுகளைத் திரும்பத் திரும்பக் கேட்க நேரும் பொழுது அவை உங்களிடத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

எதனை நாம் சுவாசிக்கின்றோமோ அது “ஓ என்று நம் சுவாசத்தில் கலந்து ஜீவனாகி “ம் என்று நமது உடலாகின்றது. எத்தன்மையான உணர்வை நாம் கவர்ந்தோமோ (சுவாசிக்கின்றோமோ) அத்தன்மையைத் தான் இயக்கமாக “நம் உயிர் இயக்குகின்றது என்பதை நாம் அறிய வேண்டும்.

வேதனையான உணர்வை நாம் கேட்டறிய நேரும் பொழுது அது நம் சுவாசத்தில் கலந்து அந்த உணர்வின் அணு செல்களாக நம் உடலில் விளைந்து விடுகின்றது.

வேதனையால் உருவான அணுக்கள் இந்த உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை இயங்கவிடாமல் நலியச் செய்திடும் நிலையாக அந்த உணர்வுகள் நம் உயிரில் இணைகின்றன.

கீதையில் சொல்லியபடி “நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நியதிக்கேற்ப எந்த வேதனையான உணர்வைப் பதிய வைத்துக் கொண்டோமோ அந்த வேதனையின் நிலையாக நம் உணர்வின் செயல்களும் இருக்கும்.

இதனால் நம்மிடத்தில் மனச் சஞ்சலங்களும் குடும்பத்தில் குழப்பங்களும் உருவாகின்றன. இதை மாற்ற வேண்டுமல்லவா?

ஆகவே, எவர் உங்களைக் குறை கூறினாரோ உங்களுக்கு இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரோ அவரின் உணர்வுகளை மனதில் பதிய வைக்க வேண்டாம்.

குறையான உணர்வுகள் உங்களுக்குள் பதியாமல் இருக்க உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். தீமைகள் நமக்குள் விளையாது தடைப்படுத்திவிடும்.

ஆத்ம சுத்தி செய்தால் அவர்கள் எத்தனை பேசினாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் நமக்குள் கவரும் நிலை வராது.

நாம் உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்யவில்லை என்றால் அவர்கள் எதை எதைக் கெட வேண்டும் என்று எண்ணிப் பேசினார்களோ அந்த உணர்வுகள் நாம் அவர்களை மீண்டும் எண்ண எண்ண அவர்கள் பேசியது அனைத்தும் நமக்குள் உருப்பெற்றுவிடும்.

க, அது நமக்குள் தீங்கினை விளைய வைத்துவிடும். அவர்கள் எண்ணியபடி நம் வாழ்க்கையில் நடந்துவிடும்.

யார் எத்தகைய தீங்குகள் செய்தாலும் அந்தத் தீங்கினை மனதில் வைக்காது நிலைக்காது அவைகளைத் தடைப்படுத்த வேண்டும். இது போன்ற உணர்வின் சூட்சம செயல்களின் வினைகளை அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஆகவே, வேதனைகளைப் பார்க்கும் பொழுதோ கேட்டறிய நேரும் பொழுதோ ஆத்ம சுத்தி செய்து வேதனையின் உணர்வுகள் நம்மிடத்தில் சாராது நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின் வேதனைகளை நம்மிடம் கூறுபவரை மனதில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவருடைய வேதனைகள் நீங்கி தொழில் வளம் உடல் நலம் குடும்ப நலம், உடல் ஆரோக்கியம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் கண்களை மூடித் தியானிக்க வேண்டும்.

அதே போன்று எவர் ஒருவர் உங்களைக் குறை கூறினாரோ இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரோ அவரை நினைவில் நிறுத்தி “என் பார்வை.., அவரை நல்லவராக்க வேண்டும் என்று அவர் உணர்வு நமக்குள் வராது தடைபடுத்த வேண்டும்.

அவர் என்னை எண்ணும் பொழுது அவருக்குள் நல்ல எண்ணம் வரவேண்டும். அவருக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகள் அகன்றிட வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்று இவ்வாறு முறைப்படுத்தி நினைவினைச் செலுத்தி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றோமோ உடனே நாம் தவறாது ஆத்ம சுத்தி செய்தோம் என்றால் நமக்குள் அந்தத் தீமையின் பதிவுகள் அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் நினைவால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நம் உடலில் விளைகின்றது. நம் மூச்சால் பேச்சால் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது. நம் இல்லத்திலும் இந்தப் பூமியிலும் படர்கின்றது.

அதனால் நாம் நம்மைத் தீமையற்ற உடலாகவும் மாற்றலாம். தீமையான உணர்வுகள் நம் உடலில் இணையாது தடுக்கும் சக்தி பெறலாம்.

நமது உயிர் நமது இயக்கத்தின் சக்தியாக இருக்கின்றது. நாம் எண்ணிய குணங்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றி அதன் இனப் பெருக்கம் தொடங்க வழி வகை செய்கின்றது.

நாம் உயர்ந்த மகரிஷிகளின் அருங்குணங்களை எண்ணுவோம் என்றால் அதை ஜீவ அணுக்களாக மாற்றி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தி நம் உடலில் ஜீவ அணுக்களாக விளையத் தொடங்கிவிடுகின்றது.

அந்த ஜீவ அணுக்கள் நம்முள் பெருகப்படும் பொழுது நம் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை எளிதில் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

August 16, 2016

நம் குலதெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமை

நாம் இன்று நல்ல நிலைகளில் இருப்பதற்குக் காரணமே நமது மூதாதையர்கள்தான். அவர்கள் தன் வம்ச வழியில் வரும் அனைவரும் நல்ல நிலை பெறவேண்டும் என்று எண்ணிப் பாடுபட்டவர்கள்.

அவர்கள் வாழ்ந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தொழில் முறைகளிலோ சொந்த பந்தங்களினாலோ பல வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேரிட்டிருக்கும்.

அந்த உணர்வுகள் அவர்கள் ஆன்மாவில் பதிந்திருக்கும். தான் உடலுடன் இருக்கும் காலத்தில் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப எதனை அதிகமாகப் பதிவு செய்ததோ அதனின் நிலைகளில் அந்த உயிரான்மா இருக்கும்.

அவர்களின் இரத்தச் சம்பந்தப்பட்ட வழித் தோன்றல்களான நாம் தான் அந்த உணர்வுகளை நம் வலுவான தியானத்தின் மூலம் மாற்றி அவர்களை என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடியும்.

யாரும் இறப்பதில்லை.
உடல் தான் இறக்கின்றது.
உணர்வுகள் அழிவதில்லை.
உணர்வுகள் மாறுகின்றது.
உணர்வுகள் மாறிக் கொண்டேயிருக்கும்.
உணர்வுக்குத் தக்கவாறு உடல்கள் மாறும்.

ஒளியின் சரீரமான உணர்வாக மாற்றச் செய்வதுதான் மகரிஷிகள் உணர்த்திய தியானம்.

எந்த உயிராத்மா தன் உடலை விட்டுப் பிரிந்தாலும் அந்த உயிரான்மா இந்தப் பூமியில் மனித சரீரத்தில் தான் வாழ்ந்த காலத்தில் யார் மீது அதிகப் பாசத்துடன் இருந்ததோ அல்லது யார் மீது அதிகக் குரோதம் கொண்டிருந்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களின் உடலில் உட்புகுந்து விடும்.

பாசத்துடன் இருந்தவர்கள் “இப்படி இறந்துவிட்டாரே.., என்று எண்ணுவார்கள்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா எந்த உணர்வுடன் உட்புகுந்தாலும் தான் வாழ்ந்த காலத்தில் எந்த நோயினால் அவதிப்பட்டதோ அந்த நிலைகளைத் தான் உடலிலும் செயல்படுத்தும்.

திரும்ப மனிதனாகப் பிறக்கும் நிலையில் அங்கு கரு ஆவதில்லை. தான் முன்பு எடுத்துக் கொண்ட வேதனை என்ற விஷத் தன்மையான உணர்வுகளைத் தான் புகுந்த உடலில் செயலாக்குகின்றது.

அதனின் வழியில் சுவாசிக்கின்றது. புகுந்த உடலில் அந்த விஷமான உணர்வுகளை வளர்த்துக் கொள்வதோடு  அந்த உடலையும் இந்த உணர்வின் ஆற்றலினால் வேதனைப்படச் செய்து நலியச் செய்கின்றது.

தானும் கெட்டுப் பிறரையும் கெடச் செய்கின்றது. எந்த உடலுக்குள் புகுந்து கொண்டதோ அது மரணமடையும் சமயம் தான் புகுந்து கொண்ட உயிரான்மா வெளிப்பட இயலும்.

எதனை அதிகமாக எந்த விஷத் தன்மையான உணர்வைத் தன்னில் வளர்த்துக் கொண்டதோ உடலை விட்டுப் பிரியும் இரு ஆன்மாக்களும் அந்த உணர்வின் மணத்தால் அதற்கொப்ப மறு உடலை உருவாக்கிக் கொள்கின்றன.

நம் குலதெய்வங்களான நம் வம்சத்து முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை பிற உடலில் புகாவண்ணம் நாம் காத்திட வேண்டும்.

நம்மைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் பாசத்துடன் வளர்த்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தங்களின் மனித வாழ்க்கையில் பெற்ற விஷமான வேதனையான உணர்வுகளை அவர்கள் ஆன்மாவில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பதிந்த தீய உணர்வுகளைச் சுருக்க வேண்டும்.

அவர்கள் மறு உடல் பெறாவண்ணம் நாம் செயல்பட வேண்டும். இதுவே நம் தலலையாயக் கடமையாகும்.

உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பிரிந்த ஆன்மாவை எண்ணித் துக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஆன்மாவை நம் குலதெய்வமாக மதித்து நம் குடும்பங்களைக் காக்கும் நிலை ஏற்படுத்துதல் வேண்டும்.

நாமும் நம் உறவினர்களுடன் கூடித் தியானிக்க வேண்டும். முதலில் அனைவரும் சேர்ந்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் கூடி வலுவேற்றிய சக்தியின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை விண் செலுத்த வேண்டும். மறு உடல் பெற்று வேதனைப்படாதபடி சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

குறிப்பு: ஆத்ம சுத்தி செய்யாமல் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தக் கூடாது. செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் நம் உடலில் உட் புக வாய்ப்புண்டு.

நம் பூமியிலிருந்து முதன் முதலில் விண் சென்றவர் அகஸ்தியர் இன்று துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார். அவரின் உணர்வின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றல்மிக்க சக்தியை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து பரவிக கொண்டிருக்கின்றது.

அவர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலங்களில் கடும் தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து உணர்வுகளை ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் ஆற்றலை குரு வழியில் கவர்ந்து ஆத்ம சுத்தி மற்றும் தியானம் மூலம் நமக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

நம்மிடம் வளர்த்த நிலைகள் கொண்டுதான் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பொழுது அவர்கள் ஆன்மாவில் பட்ட வேதனைகள் கரைகின்றது. ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்த பின் அந்த ஆன்மாக்கள் பெறும் விண்ணின் ஆற்றல்களை நாம் எளிதில் பெற முடியும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவுகின்றார். செயற்கைக் கோள் மூலம் விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதனுடன் இணைந்த நிலைகள் அதை பூமிக்கு அனுப்புகின்றது.

இங்கே கீழே உள்ள சாதனம் மூலம் அதைக் கவர்ந்து கொள்கின்றனர். அதைப் போல நாம் நம்முடன் வாழ்ந்த வளர்ந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெற முடியும்.

விண்ணின் ஆற்றல் நமக்குள் சேரச் சேர நம்மையறியாது நம்மிடம் சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது. நம் உயிரான்மா புனிதம் அடைகின்றது.

நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் எப்பொழுதும் அந்த சப்தரிஷிகளின் உணர்வின் ஆற்றலுடன் ஒன்றியிருப்பதால் பிறவியில்லா நிலை பெறுகின்றோம்.

ஆக, மனித வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் இன்னல்களைக் களைய முடிகின்றது. மன நிறைவும் மன மகிழ்ச்சியும் ஆரோக்கிய நிலையும் எல்லா நலமும் வளமும் பெற்று நாம் வாழ முடிகின்றது.

அதே சமயம் நம்மிடத்தில் அந்த உணர்வுகள் அதிகமாவதால் உயிருடன் ஒன்றிய அழியா ஒளிச் சரீரம் பெறுவது திண்ணம். நாமும் நன்மை பெறுகின்றோம். நம்மைச் சார்ந்தவர்களையும் நன்மை பெறச் செய்கின்றோம்.

சம்பிரதாயம், சடங்கு, சாங்கியம் இவைகளில் கவனம் செலுத்தாது இயற்கையின் உண்மை நிலைகளை உணர்ந்து உணர்வின் இயக்கங்களை உணர்ந்து செயல்படுங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பத்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொண்டபின்பு எங்கள் குலங்களின் தெய்வங்களான மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளி சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து பெரு வீரு பெரு நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் மூதாதையரின் உயிரான்மாக்களை விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வர வேண்டும். குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்வது அவசியம். இது அந்தந்தக் குடும்பத்தாரின் தலையாயக் கடமையாகும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம் செய்யும் அனைவரையுமே பௌர்ணமி அன்று ஒருங்கிணைக்கச் செய்து அன்று எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றலைக் குவிக்கச் செய்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை எளிதில் விண் செலுத்தும் நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த முறையில் முன்னோர்களை நாம் விண் செலுத்தும் பொழுது அவர்களின் துணை கொண்டு நாமும் அவர்கள் சென்ற எல்லையை சுலபத்தில் அடைய முடியும்.

நாம் விண் செலுத்திய ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களில் வளர வளர அந்த உணர்வுகளை நாம் பெறுதல் திண்ணம்.

August 15, 2016

மரணமில்லாப் பெரு வாழ்வு

உபதேசத்தின் நிலைகளை முன்பு விரிவடைந்த நிலைகளில் கொண்டு வந்தேன் (ஞானகுரு). அவை அனைத்தும் சுருக்கி உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெருக்கச் செய்கின்றோம்.

“பெருத்த நிலைகள் கொண்டு சிறுத்த நிலைகளை உருவாக்கப்பட்டு.., சிறுத்த நிலைகளிலிருந்து நாம் பெருத்த நிலைகளைப் பெறும்” சக்தியைப் பெறுகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் 25 வருட காலமாகப் பெற்று வந்த நிலையை உங்கள் மத்தியில் பரவச் செய்து அந்த உணர்வுகளை நீங்கள் ஏங்கிப் பெறும் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அதற்குகந்த சந்தர்ப்பம் நெருங்கி வரும் நேரத்தில் ஆற்றல்மிக்க சக்திகளை உங்களைப் பெறச் செய்யும் நேரத்தில் நீங்கள் இதை உங்களுக்குள் உருவாக்கத் தவறிவிட்டால் நாளை வரும் சிக்கலிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆகவே, எந்த நிலை ஆனாலும் நாம் இனி ஒரு பிறவி இல்லா நிலை பெறவேண்டும் என்று அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

நம் உடலும் நமக்குச் சொந்தமில்லை. எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமில்லை. எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை. இந்தச் செல்வத்தைக் காத்திடும் திறன் எவருக்கும் இல்லை.

ஆகவே, என்றும் நமக்குள் அழியாச் செல்வத்தை அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால் இதை யாரும் தடுக்க முடியாது. அதை அழித்திடவும் முடியாது.

அருள் சக்தியாக நமக்குள் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்திடல் வேண்டும்.

விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட அந்த மரணமில்லாப் பெருவாழ்வை நாமும் பெற முடியும்.

நோய்கள் நீங்கி உடல் நலம் பெறச் செய்யும் பயிற்சி

எதனின் உணர்வை நாம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை உயிர் நம் உடலாக மாற்றுகின்றது. நாம் வேதனை வேதனை என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டேயிருப்போமாயின் அந்த உணர்வுகள் நம்மிடத்தி;ல் பதிந்து ஜீவ அணுக்களாக விளைகின்றன.

வேதனை என்ற உணர்வால் விளைந்த நஞ்சான அணுக்களுக்கும் நம் உடலில் ஏற்கனவே விளைந்திருக்கும் நல்ல உணர்வின் அணுக்களுக்கும் போராட்டம் நடைபெறுகின்றது.

அப்பொழுது நம் உடலில் எதிர்மறையாகி கை கால் குடைச்சல் உடல் வலி ஆகியன உண்டாகின்றது. இந்தத் தீமையான உணர்வுகள் நம் உடலில் அதிகமாக விளையும் பொழுது நோயாக மாறுகின்றது.

கோப உணர்வுகளை நாம் பெறுவோமாயின் அவை நம் சுவாசத்தில் கலந்து உமிழ்நீராகி உடலில் இணைகின்றன. இந்தக் கோபமான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது நம் நரம்புகளில் முறுக்கேறி நம் உடல் “பட படவென” நடுங்கும் நிலை உண்டாகின்றது.

இத்தகைய கோப உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய இரத்த அழுத்தம் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களும் அதனைத் தொடர்ந்து பக்கவாதம் போன்ற நோய்களும் தாக்குகின்றன.

பிறருடைய வாழ்க்கையில் நடந்த வேதனையான சமவங்களைக் கேட்டறிய நேரும் பொழுதும் பிற நோயாளிகளின் வேதனைகளைக் கேட்டறிய நேரும் பொழுதும் பிற மனிதர்கள் விடும் சாபங்களைக் கேட்டறிய நேரும் பொழுதும் தீய உணர்வுகள் நம்மையறியாது நம்முள் பதிந்து நோயாக விளைந்து விடுகின்றன.

அதே சமயத்தில் பரம்பரையாக வருகின்ற நோய்களும் இருக்கின்றன. அதாவது முன்னோர்கள் உடலில் விளைந்த நோயின் அணுக்கள் நம்மிடத்திலும் அதே நோயினை விளைய வைத்துவிடும்.

ஆஸ்த்மா நீரிழிவு போன்ற நோய்கள் அத்தகைய வகையைச் சார்ந்தவை.

இவைகளிலிருந்தெல்லாம் நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு ஒரே வழி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைப்பதே.

வேதனைகள் அதிகமாக நம்மிடத்தில் விளையும் பொழுது அது கேன்சர் நோயாகவும் மாறிட வாய்ப்புண்டு. ஆகவே, வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் எடுக்காது தவிர்ப்போம்.

தீய உணர்வுகளால் விளையும் நோய்களே அதிகம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இத்தகைய தீய உணர்வுகளைக் கேட்டறியும் பொழுது அவை நம் ஆன்மாவில் பதிந்திடாவண்ணம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் உடலிலுள்ள நோய்கள் நீங்கி நாங்கள் பூரண குணமும் உடல் ஆரோக்கியமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வை ஏங்கித் தியானிக்கவும்.

நோயின் வேதனை நம் உடலில் எந்தப் பாகத்தில் இருக்கின்றதோ அங்கே துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து வலியின் தன்மை குறைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கேன்சர் நோயாக இருந்தால் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற வலுவான உணர்வுடன் உடலில் பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பரவச் செய்யவேண்டும்.

எந்த நோயாக இருந்தாலும் மேலே குறிப்பிட்டபடி ஆத்ம சுத்தி செய்தால் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி அதனால் நல்ல ஜீவ அணுக்கள் பலம் பெற்று வீரியம் அடைந்து நம் உடலில் தீமையை விளைய வைக்கும் அணுக்கள் செயல்படும் நிலையைப் போக்குகின்றது.

இவ்வாறு செய்யச் செய்ய நோயின் வேகம் குறைந்து குணம் தெரிவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நோயுற்றவர்களை நீங்கள் காணச் சென்றால் முதலில் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தியானித்து நமக்குள் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும். நீங்கள் நலம் பெறுவீர்கள் என்ற வாக்கினைப் பதியுங்கள். அதே போல் அவர்கள் தியானிக்கும் பொழுது நாம் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வின் ஆற்றலும் துணை நின்று சீக்கிரம் உடல் நலம் பெறவைக்கும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை வலுவேற்றிக் கொண்டு நோய்வாய்ப்பட்டவர் நலம் பெறவேண்டும் என்று தியானித்தாம் நன்மை உண்டாகும்.

அவர் நலம் பெறவேண்டி நாம் தியானிக்கும் பொழுது நமக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெருகுகின்றது. நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் வீரிய சக்தி பெறுகின்றன.

நோய் நீங்க நோயாளிகள் சதா காலை மாலை மதியம் இரவு என்று ஆத்ம சுத்தி செய்து தியானிக்கலாம். நேரம் காலம் கணக்கில் கிடையாது.

எவ்வளவுக்கெவ்வளவு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலுடன் ஒன்றி இருக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் நலம் பெறலாம்.