ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2024

இயற்கையின் மூலாதாரம்

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக...!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை... எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்... அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு “மின்காந்தச் செயலாக” நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்...” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி...” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக...” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக...”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக...” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்...” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி... ஆகாயம் என்ற கண்டப் பகுதி... காற்று என்ற இருதயப் பகுதி... நீர் என்ற வயிற்றுப் பகுதி... அக்கினி என்ற குறிப் பகுதி... மண் என்ற மூலப் பகுதி... இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது...
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை... அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை...!

காற்று நூல்...! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி...” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.

March 16, 2024

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்...?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து... தெளிந்ததை... ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்...!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக... அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்...!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே… மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது... கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து... சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக...”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது...!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்... ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்... வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே...!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்...!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்...!”

1.அன்பு சித்தர்களும்... அன்பு மகரிஷிகளும்... அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்...!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது...?

சாதாரண ஆன்மாக்களின் இயக்கமும்… குருநாதர் ஆன்மாவின் இயக்கமும்…!

சந்தர்ப்பத்தில் திடுக்… என்று நாம் பயந்துவிட்டோம் என்றால் பய உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடும். அடுத்து அதனுடைய எண்ணத்தை (பயத்தை) நமக்குள் தூண்டும்.

பயமான எண்ணங்களுடன் இருந்தோம் என்றால் அந்த ஆத்மா நமக்கு ஒத்துழைக்கும். ஆனால்…
1.நல்லதை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் அந்த நேரத்தில் பய உணர்வுகளை அந்த ஆன்மா ஊட்டும்
2.நாம் நல்ல காரியங்கள் செய்வதை அப்போது தடைப்படுத்தும்.

காரணம்… அந்த ஆன்மா கடைசி நேரத்தில் எந்த பயத்தால் உடலை விட்டு உயிர் பிரிந்ததோ அதே நிலையில் இருந்து தான் நமக்குள் அது செயல்படும்.

ஆனால் நாம் நல்லதை நினைக்கும் பொழுது அதற்கு எதிர் நிலையாகும் நல்ல உணர்வுகளுடன் நம்முடைய நினைவை செலுத்திச் சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலே பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்

தியானத்தில் நாம் எடுக்கும் சக்தி கொண்டு உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் (உயிரான்மாக்கள்) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நாம் இந்த உணர்வின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அந்த உயிரான்மா நமக்குள் அடங்கி
2.நல்ல சக்திகளைப் பெறும் பொழுது “நம் எண்ணத்தை ஓங்கிச் செயல்படுத்த” இது உதவும்.

பேய் என்கின்றோம்… அருள் என்கின்றோம்…! பல ஆன்மாக்கள் இப்படி நமக்குள் வந்து இயங்கி விடுகின்றது. அவைகள் நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு நம் உடலுக்குள் இருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

உதாரணமாக பஸ்ஸிலே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அன்புடன் பண்புடன் நாம் இருக்கின்றோம். அந்தச் சமயம் எதிர்பாராதபடி ஒரு மனிதன் பஸ்ஸின் குறுக்கே ஓடுகின்றான்… நாம் பார்த்து விடுகின்றோம்.

1.அடிபட்டு விடுவானே…! என்ற பயத்தை ஓங்கி ஆ… என்று ஏக்கத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவன் தப்பி விடுவான்
2.அடிபட்டு விட்டால் என்ன ஆகும்…! என்று அவன் மேல் உள்ள ஏக்கத்தினால் பயத்தின் உச்சகட்டம் அடையும் பொழுது
3.பய உணர்வாலே இதற்கு முன் அடிபட்டு இறந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்து விடும்.

அப்படி வந்துவிட்டால் அது எப்படிப் பயமான எண்ணங்கள் கொண்டு செயல்பட்டதோ… அந்த உடலில் “கடைசி நிமிடம் பட்ட அவஸ்தைகள் அனைத்தும்” நமக்குள் வந்து இயங்கத் தொடங்கும்.

ஆகவே என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என்னுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் “அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு புண்ணியம் கிடைக்கும்…”

உடலை விட்டு நாம் எப்போது பிரிந்தாலும் நம் உடலில் இருந்த ஆன்மாக்களும் வெளியில் வந்து… நல்ல ஆத்மாவாக… மனித உடலைப் பெறக்கூடிய தகுதி பெறும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

1.உடலை விட்டு குருநாதர் பிரிந்து சென்ற பின் அவரின் உயிராத்மா அது எந்தெந்த நிலைகளைச் செயல்படுத்தியது…? என்றும்
2.வெளியிலே செல்லும் பொழுது “மற்ற ஆத்மாக்கள் கவராத வண்ணம்” இவரின் ஆன்மா எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட்டது…? என்பதையும்
3.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது “அதனுடைய இயக்கச் சக்தியை” எமக்கு உணர்த்திக் காட்டினார்
4.அவருடைய ஆன்மா எவ்வாறு விண்ணுலகம் செல்கின்றது…? அது எந்தெந்த நிலைகள் செயல்பட்டது…? என்பதையும் எனக்கு உணர்த்தினார்.
5.எனக்குள்ளும் (ஞானகுரு) அந்தச் சக்திகள் உணரப்பட்டது… உணர்ந்து கொண்டேன்.

ஆனால்… சாதாரண மனிதர்களின் உயிரான்மா… உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழல முடிகின்றது..

அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் (உடலுடன் உள்ளவர்கள்) ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து… எண்ணத்தை ஓங்கச் செய்து… அவர்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க முடியும். அந்த ஆன்மாக்கள் தவமோ தியானமோ செய்யவில்லை என்றாலும் அவர்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க முடியும்.

ஏனென்றால் உடலுடன் உள்ளவர்களிடம்… அவரின் உணர்வுகள் உண்டு.
1.சப்தரிஷி மண்டல ஆற்றலை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்
2.எண்ணத்தால் உந்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வுகளை எடுத்து வளர்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகிறார்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உயர்ந்த சக்திகளை நாம் எளிதில் பெற முடியும். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் குருநாதர் வழியில் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று…
1.துவண்ட நிலையில் இருக்கும் உங்கள் நல்ல குணங்களுக்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து
3.அந்தத் தூண்டுதலின் உணர்வு உண்டு செவிப் புலனால் ஈர்க்கச் செய்து
4.மகரிஷிகளின் உணர்வு கொண்டு ஒவ்வொன்றையும் இயங்கச் செய்வதனால்
5.சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது விண்ணை நோக்கி உங்களால் ஏக முடியும்
6.மேல் நோக்கி நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் சுவாசத்திற்குள் அது ஈர்க்கப்படும்.

ஆக… அரும் பெரும் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

March 15, 2024

சப்தரிஷிகளுடன் ஒன்றிணைந்து நீங்கள் வாழுங்கள்

விஞ்ஞானிகளால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட அணுகுண்டுகளும் விஷக்கதிரியக்கங்களும் நம் பூமிக்குள் தான் சுழன்று கொண்டுள்ளது. அவர்கள் பூமிக்குள் வெடித்ததும் சரி… பிரபஞ்சத்திற்குள் வெடித்ததும் சரி… சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் “நஞ்சின் தன்மையாகப் படர்கின்றது…”

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப்படும் பொழுது…
1.மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழிக்கப்பட்டு
2.ஆரம்ப காலங்களில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்களோ… அதாவது மிருகங்களைப் போன்று வாழும் நிலை உலகம் பூராம் மாறப் போகின்றது.

ஆனால் இந்த பூமி மீண்டும் பரிசுத்தமாக வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். அப்படி ஆநாலும்… காட்டு மனிதர்கள் அவர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி… மீண்டும் மனிதனுடைய நிலைகள் இப்போது எப்படி வளர்ச்சி ஆகி வந்ததோ… அதைப் போல் பல சுற்றுகளில் நாம் வந்து… இந்தப் பூமி பல முறைகள் மாறி… மனிதனாக வரும் நிலை பின்னாடி தான் உருவாகும்.

ஆகையினால் நம் பூமி கூடிய சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் தகுதி பெறுகின்றது

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத்தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் சேர்க்கப்பட்டு… சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கிடைக்காது தடைப்படுத்தும் நிலை வரப்போகின்றது. அப்படித் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது…
1.நீர் நிலைகள் பூமியிலே அதிகமாகப் பெருகி எடை கூடி… அதனால் சுழற்சியின் வேகம் அதிமாகி
2.சூரியனுடைய ஈர்ப்பை விட்டு விலகிச் செல்லும் நிலை வருகின்றது.
3.அப்படி இறங்கும் நிலை வந்து விட்டால் ஐஸ் பாறைகளாகக் குளிர்ந்து விடும்
4.எந்த நேரத்தில் இது ஏற்படும்…! என்று சொல்ல முடியாது.
5.ஒரு நொடிக்குள் இந்த பூமியினுடைய சுழற்சி வட்டத்தில் இருக்கும் நீர்கள் அனைத்தும் உறைந்து பனிப் பாறைகளாகிவிடும்.

நன்றாகத்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்தார்… திடீரென்று மயக்கம் ஆனார். பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தமே இல்லை என்பார்கள். ஏனென்றால் சில் விஷத்தின் தன்மை பாய்ந்த உடனே இரத்தத்தில் இருக்கும் செவ்வணுக்கள் பூராம் மாறி… வெள்ளை அணுக்களின் இயக்கம் அதிகமாகி… அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சிவிடும்.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் ஒரு நொடியில் பெரும் கோளாக மாறி வியாழன் கோளைப் போன்று வெகு வேகமாகத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் வந்த சந்திரனும் இதன் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய் மற்ற கோள்களும் பிரிக்கப்படுகின்றது ஏனென்றால் சூரியனுடைய ஆற்றலைக் காட்டிலும் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் கொண்ட சில நிலைகள் சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் வெகு காலமாகும். குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு இந்த உண்மையை இயக்கங்களை அது எவ்வாறு…? என்பதை அவர் காட்டினார். அவர் சொன்ன வழிப்படி தான் இதை வெளிப்படுத்துகின்றோம்… ஆகவே
1.இனி கூடுமானவரையிலும் நம் நினைவலைகளை
2.ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

இல்லை என்றால் கூடிய விரைவில் மனிதனுடைய சிந்தனைகள் அது மாறப் போகின்றது. நாம் அதிலே சிக்கக் கூடாது.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இப்போது யாம் உபதேசிக்கும் இதைப் போன்ற ஞானத்தின் வழித் தொடர்பைப் பெறும் சந்தர்ப்பமும் அபூர்வம்…!

என் (ஞானகுரு) மனைவி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது குருநாதரைச் சந்திக்க நேர்ந்த்து. மனைவியை அவர் குணப்படுத்திணார். அதன் மூலம் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தான் இந்த ௷ய் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

எனக்குக் கல்வியறிவு இல்லா விட்டாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் அவர் பதிவு செய்த ஞான வித்துக்களைக் கூட்டி வளர்த்துக் கொண்டேன்.
2.அப்படி வளரத்ததிலிருந்து பல வித்துக்களை உருவாக்கும் தன்மையை குருநாதர் உருப்பெறச் செய்தார்.

அதைக் கேட்டறியச் செய்து ஆற்றல் மிக்க நிலைகளை உங்கள் உடலில் உள்ள 1008 நல்ல குணங்களுக்குள் பதிவு செய்து… உரமாக… ஊட்டம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து எதிர்காலத்தில் வரும் தீமைகளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள இது உதவும்.

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.

யாம் உபதேசிப்பதை அடிக்கடி அடிக்கடி நீங்கள் கேட்கப்படும் பொழுது
1.சூரியனின் காந்தப்புலனால் அது கவரப்பட்டு இங்கே நாம் வாழும் இடங்களில் சுழன்று கொண்டே இருக்கும்.
2.யாரெல்லாம் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ
3.அவர்கள் எல்லோருக்கும் இது கிடைக்கக்கூடிய வாய்ப்பாக அமையும்.

தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.
1.சப்தரிஷிகள் அவர்கள் குடி கொண்டிருக்கும் இடங்களுக்கு
2.அவர் உணர்வுடன் கலந்து… அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ முடியும்.

அந்தத் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குக் கொடுப்பது.

தியானத்தின் மூலம் தான் எதையுமே அறியவும் உணரவும் முடியும்

பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்... அறிவு... நினைவின் ஆற்றல்... செயலாக்கத்தின் உந்துதல்... என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்...” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெற வேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்...!

March 14, 2024

சுவாச நாடிகளைக் காட்டுவதே நாகர் உருவம்

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக...!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெற வேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்...?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்...!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது...!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்...!

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சியாகிக் கண்கள் தோன்றிய பின்… ஒவ்வொன்றிலும் “தான் நல்லது என்று நினைத்து…”
1.தன்னைப் பாதுகாக்கும் உணர்வைப் பார்த்துப் பார்த்துத் தான் சுவாசித்த உணர்வின் தன்மை
2.”பாதுகாக்கும் உணர்வை விளைய வைத்து… அந்த வித்தின் சத்தைத் தொடர்ந்து தனக்குள் கூட்டிக் கொள்கிறது…”

அவ்வாறு ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட விளைவின் தன்மை அனைத்தும்… உயிருடன் ஒன்றித் தனதாகின்றது. இதனால் தான் மனித உடல் பெறுவதற்கு முன்
1.முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த உயிர் என்று
2.அதைப் பத்து அவதாரம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.மனித உடலுக்குள் உயிரின் தன்மை கொண்டு வந்தபின் நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

அன்று ஒரு அசுரன் (விஷம்) எனக்கு எதிலுமே அழிவில்லை என்று விஷ்ணுவிடம் கேட்கின்றான். வானத்திலும் அழிவில்லை… மூன்று உலகிலும் எந்த விதமான அழிவும் இருக்கக்கூடாது… மிருகத்தாலும் நான் சாகக்கூடாது… மனிதனாலும் நான் சாகக்கூடாது என்ற வரத்தை வாங்கிக் கொண்டு வருகின்றான்.

எதிலுமே ஊடுருவக்கூடிய சக்தி தான் விஷம் (தீய சக்தி எதிலுமே ஊடுருவும்). பால் தூய்மையாக இருக்கிறது என்றாலும் அது சத்து உள்ளது தான் ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால்… பாலின் சத்து அனைத்துமே இழக்கச் செய்து… விஷம் தனது கவர்ச்சிக்குள் வைத்துவிடும்.

இதே போன்றுதான் விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள்… சூரியன் ஆனாலும் “இயக்கச் சக்தியாக” தனக்குள் அடக்கி வரும் பொழுது அது செயல்படுத்துகிறது.

ஒருவர் தவறு செய்கின்றார் அல்லது ஒரு குழந்தை தவறி கீழே விழுகிறது என்றால் அதை நாம் நேர்முகமாகப் பார்க்கப்படும் பொழுது ஊடனே வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனை என்ற விஷம் உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அசுரன் நமக்குள் புகுந்து நல்லதை அவனுக்குள் அடிமையாக்கச் செய்கின்றான். இந்த உட்பொருளைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுப்பதாக காண்பிக்கப்பட்டு மிருகத்திலும் சேர்ப்பில்லாதபடி மனித உடலிலும் சேர்ப்பில்லாதபடி ஆகாயத்திலும் இல்லாத படி பரந்த வெளிகளிலும் இல்லாத படி வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகள் கொண்டு
2.இந்த உயிரிலே மோதும் நிலைகள் நமக்கு வாசல்படி மூக்கு

நாராயணன் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான். இந்த உடலுக்குள் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தியாக நமது உயிர் இருக்கின்றது.

ஆகையினால் நர நாராயணன்…! இந்த வாசல்படியில் அமர்ந்து அசுர உணர்வின் வேட்கைகளை உள்ளே நுழையாத வண்ணம் தீய உணர்வின் தன்மையை மாய்த்து விடுகின்றான்.

அதாவது
1.உயிரின் பால் (புருவ மத்தியில்) கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.ஆற்றல் மிக்க மகரிஷிகளின் துணை கொண்டு வாசல்படியில் வைத்து அசுர உணர்வுகளை மாய்த்து விட்டால்
3.நல்லதைக் காத்துக் கொள்ள நம்மால் முடிகிறது.

மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஒளியின் சக்தியைத் தனக்குள் கூட்டி ஆற்றல் மிக்க நெருப்பாகக் கூட்டி… அந்த நெருப்புக்குள் தீய விஷத்தின் தன்மை மாய்த்தால் அது தான் நரசிம்ம அவதாரம் என்பது. பத்து அவதாரத்தில் இது முக்கியமானது. மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்.

1.இந்த ஆற்றல்மிக்க சக்திகளை எவர் ஒருவர் பெறுகின்றனரோ
2.அவரே நாராயணன் தொடர் கொண்ட ஒளியின் சிகரமாகப் பெற முடியும்.

மகாபாரதத்திற்குள் அன்று வியாசக பகவான் இவ்வளவு தெளிவாக நமக்குக் கொடுத்துள்ளார் நரசிம்ம அவதாரம் என்றால்… கடவுள் எங்கோ இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான்… என்று நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.

March 13, 2024

நீல வண்ண ஆத்மா

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே...!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதிசக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்... சந்திரன்... அக்கினி... என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.(சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்)

செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொண்டிட இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்...?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்...!” (எங்கும் நிறைந்தது) என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ...?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்... முக்குணங்கள் என்றும்... உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்...” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து
1.தியான வழித் தொடர்பில் நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.

ஆகவே… நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

குரு துணை அவசியம் வேண்டும்

மெய் வழியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வருவோருக்கு அந்த உணர்ச்சிகளை உந்தச் செய்து ஞானிகள் உணர்வான சத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).
1.இதைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு எவ்வாறு ஏற்படுத்தினாரோ அதே போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.
2.மெய் உணர்வுகளை அவர் எப்படித் தனக்குள் படைத்தாரோ… அதைப் போன்று ஒவ்வொரு நொடியிலும் நான் அதை எடுத்துக் கொள்கின்றேன்.

உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது நட்சத்திரங்களின் சக்தியையும்… சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… அந்த உணர்வின் தன்மைகளை ஈர்த்து எடுத்துக் கொண்டுதான் உங்களுக்கு உபதேசிப்பது.
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் பல கோடி உணர்வுக்குள்ளும் அதை இணைத்து மாற்றி
2.நல்ல உணர்வாகப் பெறக்கூடிய தகுதியை எற்படுத்துகின்றோம்.

காரணம்… மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகளை சாதாரண மக்கள் கவர முடியாது. அதற்குண்டான வலுவான காந்த சக்தி தேவை.

சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர வேண்டும் என்பதற்கே யாம் இப்போது உபதேசிப்பது. உபதேசத்தின் வாயிலாகத் தான் அதை நீங்கள் பெற முடியும்.

புத்தகங்களில் படிப்பதைப் போன்று அந்த ஞானிகள் உணர்வைப் படித்தாலும்… படித்த நிலைகள் கொண்டு அந்த ஞானிகள் அருளைப் பெறும் தகுதி இல்லை.
1.காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனை நீங்கள் பெற முடியும்.
2.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
3.அந்த சக்திக்குண்டான வித்து தேவை…
4.அதற்குத்தான் “குரு வேண்டும்…” என்று சொல்வது… அவரின் துணை இருந்தால் தான் அதை எடுக்க முடியும்.

என்னுடைய (ஞானகுரு) முயற்சி எது…? என்றால் மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு வருவதும்… துன்பம் வரும் போது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதும் தான்…!

யாம் பதிவு செய்த வித்திற்கு ஒரு அரை மணி நேரா௳அவது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணி எடுத்து… உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும்.

பின்… உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணினால் யாம் பாய்ச்சிய உணர்வின் சக்தி உரமாகக் கிடைத்து
1.உங்களுக்குள் மன கலக்கமோ குழப்பமோ அவைகளை அகற்றி
2.உடல்களில் வலியோ வேதனையோ இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு உதவும்.

அப்படி உதவுவதற்குத் தான் தியானமும் ஆத்ம சுத்தியும் பயிற்சியாகக் கொடுப்பது.

ஞானிகள் இங்கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை எல்லாம் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.ஒரு செயின் தொடர்பு போன்று அந்த ஞானிகள் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டால்
2.ஆத்ம சுத்தி செய்யும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்… துன்பங்களைத் துடைக்க முடியும்.

March 12, 2024

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

ஒருவர் மீது நாம் பாசமாக இருக்கின்றோம். ஆனால் அவருடன் வேறு ஒருவர் சண்டையிடுகின்றார்... அதனால் இவர் சோர்வடைகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

பாசத்தால் சோர்வான எண்ணமும்… சண்டையிட்டவர் மீது வெறுப்பும் நாம் அடைகின்றோம். நல்ல குணங்களுடன் நாம் இருந்தாலும்
1.அந்த நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சேர்த்துச் சுவாசிக்க நேர்கின்றது.
2.அவ்வாறு சுவாசித்தவுடனே போர்…! சுவாசித்தது உயிரிலே பட்டவுடனே இங்கே எரிச்சல்
3.இந்தத் துடிப்பின் உணர்வலைகள்… உந்தி நம்மை இயக்குகிறது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஆணைகள் இட்டவுடனே அது எலெக்ட்ரானிக்காக மாறி… நம கொடுத்த அழுத்தத்தின் (COMMAND) தன்மை கொண்டு அது எந்த உணர்வின் செயலோ அதற்குத் தக்கவாறு அந்தக் கம்ப்யூட்டர் இயங்குகிறது.

அதே போல் நாம் சுவாசித்த உணர்வுகள் (வெறுப்பும் சோர்வும்) உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுக்கொப்ப உயிருக்குள் கடினமான எண்ணங்கள் தோன்றுகிறது.
1.அந்த உணர்வு நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் செல்களில் இயக்கியவுடனே
2.அதற்குத் தக்கவாறு நம் உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

உதாரணமாக தறியிலே துணியை நெய்யப்படும் பொழுது ஒரு நெறிக்கட்டையை வைத்து எம்பிராய்டரி பூ வேலைகளைச் செய்வார்கள். அந்த இயந்திரத்தில் ஒன்றை (PEDAL) மிதித்தால் போதும்.

அதனின் காலகட்டப் பிரகாரம்… ஒவ்வொரு நிமிடத்திற்குத் தக்கவாறு அந்தப் பின்களை (PIN) மாற்றி மாற்றி அழுத்திப் போடும் பொழுது அந்தத் துணியில் அழகான பூ வேலையாகச் செயல்படுத்தும்.

அதைப் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு உணர்வின் செயலாக
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்களை இயக்குவதும்
3.பேசிய உணர்வலைகள் கொண்டு திருப்பிப் பேசுவதும்
4.கண்ணிலே எதிர்நிலையான அலைகள் பாய்வதும் அதைக் கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதும் போன்ற இயக்கத்தின் நிலைகள் அமைகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும்… கண் கொண்டு தவறு செய்வோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தாலோ… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு… உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றது.

இந்த உணர்வலைகள் சீறிப்பாய்ந்து உடல் முழுவதும் படரப் படும்பொழுது போர்… நெகடிவ் பாசிடிவ்…! அதாவது நம்முடைய உயிருக்குள் வெப்பமாகும் பொழுது… அதே சமயத்தில் கதிரியக்கச் சக்தி அந்த இரண்டின் நிலைகள் மோதும் போது போர்.

அந்தப் போரின் நிலைகள் கொண்டு… எதிர் சக்தியான வியாழன் கோளின் சத்தும் அதனுடைய கதிரியக்கங்கள் இரண்டும் சேர்க்கப்படும் பொழுது
1.சுழற்சியாகிக் (திருகிக்) கொண்டிருக்கும் இந்த உணர்வின் தன்மையை
2.எதிர்நிலையான நிலையில் தாக்குதலாகும் பொழுது அது சீர்பட்டு நேர் துடிப்பாகின்றது,
3.இப்படி… போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டுள்ளது.
4.சத்ரு மித்ரு என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

உதாரணமாக… ரோட்டிலே நாம் செல்கிறோம் என்றால் அந்த நேரம் ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பு நமக்குள் ஈர்க்கப்பட்டு… அது நல்ல உணர்வுகளுடன் மோதும் போது தான்… “நமக்கு ஆபத்து…” என்று அறிந்து கொள்கின்றோம்.

ஆக… வேகமாக இயக்கப்படும் பொழுது
1.பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.

ஓவ்வொரு உணர்வும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது. ஆகவே அருள் ஞானிகள் உணர்வை அடிக்கடி நாம் எண்ணி எடுத்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்கும்… நம்மை அருள் வழியில் அது அழைத்துச் செல்லும்.

உயிர் வழி சுவாசம்

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்...” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக...!” (உயிர்) அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது...! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்...!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி...” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்...” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி - சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்...” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

March 11, 2024

சிவ சக்தி – ஆதி சக்தி

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி... பூமிக்குள்ளும் சரி... ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி... படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி...!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்... மணங்களும்... நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி...!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே...!

மூவுலகம் என்பது எவை...?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள... பாதாளம்...! என்ற எண்ணமா...?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி... நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள... மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்

விண்ணின் ஆற்றலும்… மனிதனுக்குப் பின் அடுத்த நிலை என்ன…? என்ற நிலையும்… நமது குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து அதனை வலுக் கொள்ளச் செய்து கொண்டே வருகின்றோம்.

அவர் உணர்த்திய வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைச் செய்யும் சக்திகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அதிகாலை நான்கிலிருந்து ஆறரை மணி வரையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானத்தில் இருந்து… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் வலுவாக்கி… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து…
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “உந்தித் தள்ளினால்” ஒளிச் சரீரம் பெறுகின்றனர்…
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழத் தொடங்குகின்றார்கள்.
3.”ரிஷிகளுடன் ரிஷிகளாக” அவர்கள் ஒன்றி வாழும் தகுதி பெறுகிறார்கள்.
4.அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் மகரிஷிகளுடன் எளிதில் இணைகின்றது.

பின் ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரங்களில் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும் பொழுது… நாம் விண் செலுத்திய குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

அவர்கள் முன் சென்றால் பின் அவர்கள் உணர்வின் துணை கொண்டு நாமும் அங்கே செல்கின்றோம்.

முதலில் மனித உடலை நம் முன்னோர்கள் பெற்றனர். அவர் உணர்வுடன் ஒன்றி அவரைப் போல நாமும் மனிதராக உருப்பெற்றோம்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால்… அந்த உணர்வுடன் ஒன்றி நாமும் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

1.வழி வழி செய்து கொண்ட இந்த நிலைகள் காலத்தால் மறைந்தே போய்விட்டது
2.ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் முன்னோர்களை விண் செலுத்துவோம்.

விஞ்ஞானத்தினால் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது நுகரும் சக்தியை… என்றுமே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலையாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எப்பொழுது எந்த நிலையில் இந்த ஆன்மா பிரிந்தாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையும் பருவமாக ஏற்படுத்தினால் ஒழிய மீளும் மார்க்கம் வேறு இல்லை.

காரணம்…
1.மீண்டும் மனித உடல் பெறும் காலம் எப்பொழுது…” என்று சொல்ல முடியாது… வெகு காலம் ஆகிவிடும்
2.நஞ்சு கலந்த உலகமாக மாறும்போது நஞ்சு கலந்த உணர்வைச் சேர்த்து விட்டால் அடுத்து மனிதனல்லாத உடலைத்தான் நாம் பெற முடியும்.

பின் அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்றால் அதற்குள் “இந்த உலகம் இருக்குமா…?” என்று சந்தேகத்தைத் தோற்றுவித்துவிடும். ஆகவே
1.இன்று இப்போது நல்ல நினைவிருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து அதன் வழிகளில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! என்று இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த உலகமோ இந்த உடலோ நமக்குச் சொந்தம் அல்ல… ண்ஹாம் சொந்தமாக்க வேண்டியது அருள் உணர்வுகளைத் தான். இன்றைய செயல் நாளைய சரீரம்…!

March 10, 2024

நாம் “சுத்த சைவமாக” இருக்க வேண்டும்…!

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை...!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே - தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்... ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி... தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்...!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை... அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக... அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

“உலகைக் காத்திடும் கடவுள்களாக” நாம் வளர்ச்சி பெற வேண்டும்

பிறவியில்லா நிலை அடையும் தகுதியை இப்போது இருக்கும் இந்த உடலில் இருந்து நாம் உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது...? என்று நமக்குத் தெரியாது...!

புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்...
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே “பல கோடி ஆண்டுகள்” வாழும் நிலை வரும்.

இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.

1.எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு
2.எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு
3.இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து
4.நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் இதைக் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்... “இந்த மனித உடலிலிருந்தே...!”

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.

நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக... உருவாக்கும் கடவுளாக... ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்...!

ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.

இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்... “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்...!”

ஒளியின் சரீரம் பெற்றாலும்… ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில்… ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… அவர்கள் தனித்து வாழவில்லை.

அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!

March 9, 2024

இந்த உலகிற்கும் நமக்கும் இனி எது தேவை…?

மனிதனுக்கு மனிதன் இரக்கமற்றுக் கொன்று அதை ரசித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளே அதிகமாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாற்றம் அடைந்து… விஷக் கிருமிகளும் அதிகமாக உருவாகிக் கொண்டே உள்ளது… கொடூர நோய்களும் உருவாகின்றது கொடூரச் செயலைச் செயல்படுத்தும் தன்மைகளும் மனித உடலுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் வான் வீதியில் விஞ்ஞானிகள் பரீட்சித்துப் பார்த்த விஷத்தன்மைகளும் (குண்டு வெடிப்புகள்) அதிக அளவில் பரப்பப்பட்டதனால்
1.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் நச்சுத்தன்மை அடைந்து விட்டது.
2.அது உமிழ்த்தும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து ஜீரணிக்கும் சக்தியை இழந்து விட்டது.

அதே போன்று நமது உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நஞ்சினை வென்றிடும் ஆறாவது அறிவைப் பெற்றிருந்தாலும்… மாறுபடும் தன்மை வரும் பொழுது மனித உடலையே சீர்குலையைச் செய்யும் நிலை ஆகிவிடுகின்றது… சிந்தனையை இழக்கச் செய்கின்றது. உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உருவாகத் தான் உயிர் உருவாக்கும்.

நமது உயிரின் துடிப்பு நிலைகள் சீராக இயக்கிக் கொண்டிருக்கும் போதும் அது அதற்குத் தக்கவாறு உடலில் உள்ள எல்லா அணுக்களை இயக்குகின்றது. அதே சமயம் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலிலும் இதைப் போல அது சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதாவது…
1.ஒவ்வொரு உயிரும் எலக்ட்ரிக் என்ற நிலையில் இயக்கத் துடிப்புகளை உருவாக்குகின்றது
2.அதன் உணர்வின் துணை கொண்டு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
3.அது எது எதுவோ அதனின் உணர்வாக எலக்ட்ரானிக்காக மாற்றி அமைக்கின்றது.

இருப்பினும் வான் வீதியில் வீசிய கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகி விட்டது. இந்தப் பூமியிலிருந்து வெடிக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்களால் துருவப் பகுதியில் ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. ஆகையினால் துருவத்தின் வழியாக வடிகட்டப்படாத விஷத்தன்மைகளே பூமிக்குள் வந்து கொண்டிருக்கிறது.

விஷங்கள் பூமிக்குள் வரப்படும் பொழுது மனிதனுடைய செயலும் விஷத்தன்மையாகின்றது
1.கதிரியக்கப் பொறிகள் தாவர இனங்களிலும் பரவப்பட்டு அவைகளின் குணங்களும் மாறத் தொடங்கி விட்டது
2.அதை உணவாக உட்கொள்ளும் மனிதனுடைய குணாதிசயங்களும் மாறுபடுகின்றது.
3.விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாறி ஒவ்வொரு உடல்களிலும் மாற்றங்கள் ஆகின்றது.

சூரியன் தனக்குள் கவரும் சக்திகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது “எலக்ட்ரிக்கின் இயக்கச் சக்தி” அதிகமாக வளரத் தொடங்கி விட்டது.

உதாரணமாக ஒரு எலக்ட்ரிக் வயரிலே இரு மடங்கு மின்சாரம் அதிகரித்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பல்புகளோ மற்ற இயந்திரங்களோ அது பியூஸ் (எரிந்து) ஆகிவிடும். அப்போது ஒலி அதிர்வுகள் அதிகமாகின்றது. நாம் இயக்கக்கூடிய சாதனங்களும் வேகமாக இயங்கி… பழுதடைந்து விடுகின்றது.

அது போல் தான் ஒவ்வொரு உயிரினங்களின் துடிப்பும் இரு மடங்கு ஆகும் போது
1.மனித உணர்வின் எண்ணங்கள் துரித கதியில் இயங்கி
2.சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து விடுகின்றது.

மனிதனுக்குள் சிறு மூளை பாகங்களில் விஷத் தன்மை பரவினால் “உணர்ச்சியின் வேகங்கள் அதிகரிக்கும்…!” பித்து பிடித்த உடலில் பார்த்தால் நரம்புகளில் பல மடங்கு வீரிய சக்தி உண்டு

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களில்… காட்டு விலங்குகளில் உயிரின் இயக்க ஓட்டம் அதிகரிக்கப்படும் பொழுது அதுவும் மாற்றம் அடைந்து காடுகளிலிருந்து அகன்று “அசுரத்தனமான தாக்குதலில் இறங்கவும் கூடும்…”

இத்தகைய நிலைகள் நம் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டுள்ளது.
1.கதிரியக்கப் பொறிகளால் சூரியனுக்குள் மின் உற்பத்தி அதிகமாகி… மின் அணுக்களின் வேகத் தொடர் அதிகரிக்கப் போகிறது.
2.அதனால் இந்தப் பிரபஞ்சமே சீர் கெடும் நிலையும்… அதனின் செயலாக்கம் தணியும் நிலையும் வந்து கொண்டிருக்கின்றது.

ஆதியிலே… சந்தர்ப்பத்தால் நஞ்சை வென்றிடும் சக்தி பெற்று வளர்ந்த அகஸ்தியன்… அவன் வளர்ச்சியில் துருவத்தின் ஆற்றலைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று கணவன் மனைவி இருவருமே உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக்கி நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்றுத் துருவ நட்சத்திரமாக… அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகள்
1.நமக்கு முன் இந்தக் காற்றுக்குள் இருப்பதை நுகர்ந்து பழகுவதற்குத் தான்
2.கூட்டுத் தியானங்களை உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

அதே சமயத்தில்…
1.நாம் தியானத்தில் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் தணியத் தொடங்கினால் விஷத்தன்மைகள் ஆட்கொண்டு விடும்
2.பல கோடிச் சரீரங்களில் சம்பாதித்த சக்தியை வலிமை பெற்றதை அழித்துவிடும்.

ஆகவே… இந்த உலகமே விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில்… வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வைக் கவரும் சக்தியாக நஞ்சினைப் பிரித்திடும் மனித உடலை உருவாக்கிய “பரசுராம்” என்ற நிலையில்… அதன் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அழியாத நிலைகள் கொண்டு “ஒளிச் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்…!”

ஆனால் உடலில் இச்சைக்குச் சென்றோர் அரசராக ஆனார்கள். மற்றவர்களை வீழ்த்தி அதிலே மகிழ்ச்சி பெற்று… பல மதங்களாக பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு அழித்திடும் நிலையாக வளர்ந்து விட்டது.

ஆனால் அத்தகைய அரசர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் இன்று மக்களாட்சி என்று வந்துள்ளது. மக்களாட்சி என்றாலும்…
1.அரசியலிலும் அதே நிலைகள் இன்று வளர்ந்து விட்டது
2.அதிலும் எத்தனையோ பிரிவுகள்… ஒருவருக்கொருவர் பகைமை.

நன்மையை எதிர்பார்த்திருக்கும் மக்களோ கலக்க உணர்வு கொண்டு சிந்திக்கும் தன்மை குறைந்து எப்படி வாழ்வது…? என்ற நிலையிலேயே உள்ளார்கள்.

ஆகவே சிதறுண்டு போகும் இந்த நிலையில் இருந்து மீட்டிட
1.நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உலக மக்கள் அனைவருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.தனக்குள் அந்த ஆற்றலை விளைய வைத்து மக்களுக்கு இந்த அலைகளை அனுப்ப அனுப்ப
3.நல்லதை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது உதவியாக அமையும்.

துருவ தியானத்தில் எத்தனை ஆயிரம் பேர் இப்படி எண்ணி எடுக்கின்றோமோ… பரவச் செய்கின்றோமோ… தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகின்றார்கள் அவர்களுக்கு இது கிடைக்கும்.

இரு மடங்கு அதிகரிக்கப் போகும் மின் அணுக்களின் தன்மைகளிலிருந்து நாம் அனைவரும் மீள்தல் வேண்டும்.

அதற்காக அகஸ்தியன் சென்ற வழியில் அவன் உணர்வை மட்டும் அவனுடைய வளர்ச்சியில் இருந்து நாம் பிரித்து எடுத்து வளர்த்துப் பழக வேண்டும்.

கடந்த காலங்களில் பிரபஞ்சத்தின் இயக்கமும்… மற்ற நிலைகள் எவ்வாறு…? என்று உபதேசித்த உணர்வுகளிலிருந்து அதை மாற்றி
1.அகஸ்தியன் வழியில் அவன் சென்ற பாதையில் அவன் உணர்வையே தொடர்ந்து வளர்த்து
2.துருவ நட்சத்திரமான நிலையை வரிசைப்படுத்தி… நம் உடலில் உள்ள அணுக்களை அதன் வழி மாற்றி
3.இனி இந்த உடலில் இருந்து எப்பொழுது நாம் அகன்றாலும்… பகைமை உணர்வு தாக்கப்பட்டாலும்
4.நம்முடைய நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருத்தல் வேண்டும்.

இது நமக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக… பிரபஞ்சத்திலிருந்து வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.

ஆகவே நமது குரு காட்டிய வழியில் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற மறவாதீர்கள்…! தீமைகளை அகற்றும் அந்த வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சுண்ணம்

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு...!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது...?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்...” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்...” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி... உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது... “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்...?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது...?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…!

இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

March 8, 2024

ஆத்மாவைச் சுகமாக்க வேண்டும்

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்... மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ... பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன...!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை... பூகம்பம் வரும் நிலை... பெரும் மழை வரக்கூடிய நிலை...! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு... உடுத்தி... உறங்குவது தான் வாழ்க்கை...! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு...?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்...!

எதையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் தான் மனிதன்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு உபதேசிக்கின்றான். நுகர்ந்த உணர்வுகள் மனைவி உடலில் விளைகிறது.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்து தன் இனத்தை விருத்தி செய்யும் நிலையாகக் குழந்தைகள் இன்று எப்படி உருவாகின்றதோ இதைப் போன்று தான்
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து… இரு உயிரும் ஒன்றாக்கப்பட்டு…
2.நஞ்சினை வென்றிடும் உணர்வாக இருவரும் விளைவித்துக் கொள்கின்றனர்.
3.ஒளிக்கதிர்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றனர்.

அதாவது… அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… கணவன் உயர வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… தனது வாழ்க்கையில் கண்டறிந்த உணர்வுகள் அனைத்தும்
1.கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த அருள் எனக்குள் வளர வேண்டும் என்றும்…
2.மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும்… என்று அந்த அருள் ஒளி எனக்குள் கூட வேண்டும் என்றும்
3.இருவருமே இந்த உணர்வுகளை எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.இரு உயிரையும் ஒன்றாக இணைத்திடும்… ஈர்த்திடும் உணர்வுகள் ஒன்றிடும் பருவத்தை அடையச் செய்கின்றது.

இப்படி அடைந்த உணர்வுகள் தான் உடலை விட்டுச் சென்ற பின் சத்தியவான் சாவித்திரி…! இன்னொரு உடலுக்குள் அழைத்துச் செல்லாது “ஏகாந்த வாழ்க்கை” வாழும் நிலை பெற்றனர்.

ஆகவே உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒன்றி வாழும் பொழுது “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…”

நம் பூமிக்குள் வரும் அந்த உணர்வினைக் கூர்மையாக உற்றுப் பார்த்து இருவருமே ஒன்றாக அந்த உணர்வை ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வினை அவர்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் அணுவாக வளர்த்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி…
1.தான் நுகரும் உணர்வுகள் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக…
2.“இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளிக்கதிராக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…”

அணுக்களாகி… வளர்ச்சியில் கோளாகி… கோள் நட்சத்திரங்களாகி… நட்சத்திரம் சூரியனாக எப்படி ஆனதோ இதைப் போன்று தான் உயிரணுவாகி… பல கோடிச் சரீரங்கள் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனித உடலை உருவாக்கி… மனிதனான பின் “தன் எண்ணத்தால்” உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

சூரியன் ஆனபின் தான் மற்றொன்றைத் தனக்குள் வளர்த்து தீமைகள் அகற்றி ஒளியின் சுடராக மாற்றுவது போன்று உயிரணு மனிதனாகத் தோன்றிய பின்… அனைத்தையும் ஒளியாக்கும் தகுதி பெற்றது தான் அது.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் ஒவ்வொரு பொருளும் உருவாகின்றது. ஆனால் மனிதனான பின் ஒன்றைக் கவர்ந்து உருவாக்கும் திறன் பெற்றவன்.

அத்தகைய திறன் பெற்ற நாம்… அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சி அருள் ஞானிகள் பெற்ற உணர்வினைப் பெறும்படி செய்கிறேன் (ஞானகுரு).

அதே சமயத்தில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் சென்று
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருக்கும் அதனுடன் உங்கள் நினைவினை இணைக்கச் செய்து
3.கூர்மையாக நினைவாக்கி அதைக் கவரும் பருவம் உங்களுக்குள் ஆக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது தீமையை விளைவிக்கும் அணுக்களுக்கு அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் இரையாகி
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகள் அகன்று “ஞானத்தின் வழியில் வளர்ச்சி பெறும் தகுதி பெறுவீர்கள்…”

March 7, 2024

நொடிக்குள் பெற வேண்டிய உன்னத சக்தி

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக... பிரம்மத்தின் பிம்பமாக... சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு...மித்ரு... என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திட வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல...!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்...!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது...?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.
1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.
3.தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில்
4.அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்து விசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்...!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்தி… சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேர செயல்பாடாக...”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்... எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக... தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ... சம்சாரி என்றோ...” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.