ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2024

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

 

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

 
ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.
 
மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.
 
இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.
 
சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.
 
ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.
 
மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?
 
ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.
 
மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.
 
சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.
 
மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.
 
ம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.
 
அந்நிலையில் இருந்து மீண்டு மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.

September 7, 2024

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

 
உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.
 
“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.
 
வேதனை ருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! ராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்... இப்படியும் உள்ளார்கள்.
 
உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு இங்கேயே படுத்திருந்து அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.
 
அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப்டுத்துவிட்டு காலையில் செல்லலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
 
இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை என்று ஜீவ அணுவாக மாற்றி ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் ணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.
 
மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப்ரவுகின்றது.
 
விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”
 
ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.
 
எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.
 
ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.
 
தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”
 
நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.தை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.
 
விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.
 
ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம் என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.
 
நாம்ண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை ண்ணும் பொழுது – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

 
பல நிலைகளில் பல உயிரணுக்கள் காற்றிலும் பூமியிலும் பூமி மட்டத்திற்குக் கீழ் நிலையிலும் உள்ளன. ஜீவன் பெற்றும் உள்ளன.
 
பல உயிரணுக்கள் அச்சூரியனின் சக்தி பெற்று இவ்வுலகைச் சுற்றிப் பறந்த நிலையிலும் பறந்து கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடுபடுத்தும் நிலை பெற ஆவல் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.
 
இவ்வுலகில் இப்புண்ணிய பூமியில் மனிதர்களாக வாழும் நாம் நாம் பெற்ற பாக்கியமாக இதைக் கருதி நல்லுணர்வு பெற்று நாம் பெற்ற பாக்கியத்தைப் போற்றி வாழ்ந்திட வேண்டும்.
 
இம்மனித சக்திக்கு
1.இவ்வுலகம் இவ்வுலகைப் போல் உள்ள மற்ற உலகங்கள் மற்ற மண்டலங்கள்
2.எல்லாவற்றையுமே அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.
 
தான் பெற்ற பாக்கியத்தை அறிந்து வாழ்ந்திடாமல் ஆண்டவன் என்பவனையே பல வழிகளில் எண்ணி ஏற்கின்றார்கள். எவ்வழி எண்ணி ஏற்றாலும் நல்வழியில் நம் வழியைத் தவறுக்கு அடிபணிய வைத்திடாமல் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.
 
மந்திரம் மாயம் பில்லி சூனியம் ஏவல் வித்தைகள் ஜாதகம் ஜோதிடம் ஆருடம் இப்படிப் பல வழிகளை நம்பி தன்னையே அதற்கு அடிமையாக்கி தன்னுள் பல ஆசை நிலைகளை வளர்த்துக் கொண்டு பல அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்ந்து என்ன பயன்…?
 
1.பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை ஏன் நமக்கு…?
2.அச்சக்தி நம்முள் இல்லையா…? என்ற எண்ணம் கொண்டு நம்மை நாமே பிறருக்கு அடிமைப்படுத்திடாமல்
3.பயம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்திடாமல் நம் எண்ணத்தை நாம் சுத்தமாக்கிக் கொண்டு
4.மகரிஷிகளின் சக்தியை நாம் பெற்று வாழும் வாழ்க்கையை விட்டு
5.ஏன் பல நிலைகளை எண்ணி நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்…?
 
மனித சக்திக்கு எல்லா உயிரினங்களையும் அறிந்து வாழும் நிலை உள்ளது. அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு நன்மையும் தீமையும் நன்மை தீமை என்பன நல்ல அணுக்களையும் தீய அணுக்களையும் நம்முள் ஈர்த்து எடுக்க முடியும்…. பல ஆவிகளின் தொடர்பையும் நாம் பெற முடியும்.
 
நல்ல ஆவிகளும் துர் ஆவிகளும் சுற்றிக்கொண்டே உள்ள இந்த உலகில் நாம் எடுக்கும் நினைவைக் கொண்டு எந்த ஆவியினுடைய தொடர்பையும் நம்மில் ஈர்த்து அவ்வாவியின் நிலை அறிந்து அவ்வாவிக்கு உகந்த மணங்களை அதற்கு நாம் அளித்து அவைகளை நம் ஏவலுக்கு நாம் கட்டுப்படுத்திப் பல நிலைகளை அறிந்து கொள்ள அதனுடைய தொடர்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.
 
இந்நிலையில் நாம் வைத்துக் கொண்டால் அதனுடைய செயல் திறன் நாம் அதை ஏற்கும் நிலை கொண்டு அவை நமக்கு எல்லா நிலைகளையும் உணர்த்திக் கொண்டே வரும்.
 
அதன் நிலைக்கும் நம் நிலைக்கும் சிறு மாற்றம் கண்டால் அதன் நிலை மாறுபட்டு அது நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்ததோ அந்த நிலை கொண்டே தீங்கும் செய்து விடும்.
 
பில்லி சூனியம் ஏவல் இப்படிப் பல நிலைகள் எல்லாம் பல ஆவிகளின் வசியத்தால் வருபவைகள் தாம்.
1.இந்த நிலையில் அடிமைப்பட்டு வாழ்பவர்களுக்குத் தன் ஆத்மாவிற்கு உகந்த நிலையைச் சேமிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.
2.தான் செய்யும் வினையே தன்னை வந்து தாக்கும் என்று அறியாமல் செய்யும் நிலை தான் இவைகள் எல்லாம்.
 
ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் வந்து பிறக்கவே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.
 
காரணம்… ஆவி உலகில் பல நாட்கள் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடேற்ற எத்தனையோ காலங்கள் தவம் பெற்று இவ்வுலகில் பிறக்க ஆவல் கொண்டு விட்ட குறையை முடிக்க வந்து பிறக்கும் தாம் தாம் பிறந்த பயனையே எண்ணிப் பார்க்காமல் பிறகும் பல இன்னல்களுடன் பல ஆசை நிலையில் இப்பிறவியில் தான் பெற்ற பாக்கியத்தை எண்ணி
1.இப்புவியில் தான் பிறக்க இப்புவியாளும் ஈசனின் சக்தியைப் பெற்றுப் பிறந்துள்ளோம் என்று உணர்ந்து
2.தாம் எடுத்த பிறவியை எந்த நிலை கொண்டு நாம் போற்றி வணங்கிட வேண்டும் என்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

September 6, 2024

நரசிம்மா

நரசிம்மா

உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.
 
சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… எண்ணம்…”
 
இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.
 
பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.
 
இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.
 
நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”
 
நாம் நுர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.
 
றாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது ளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.
 
இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நநாராயணன் பிந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.
 
ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.
 
காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.
 
நாம் இதை மாற்றி அமைக்க முடியும் மாற்றி அமைக்க வேண்டும். கஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும் பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.
 
இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.
 
இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.
 
ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

 

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

ஒரு இயேசுநாதரும் வால்மீகி முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம் அறிகின்றோம்.
 
அவர்கள் பிறவி எடுத்து பல உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள் எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
நம் உயிராத்மாவிற்கு நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின் அருளைப் பெற்று வாழ்வதுவே.
 
பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.
 
பால் புகட்டத் தாய் பாடம் புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று ஒன்றுடன் ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில் நான் என்ற தனி நிலையில் இல்லாத நாம் அப்பெரியோர்களின் அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும் பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச் செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

September 5, 2024

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை. நஞ்சிடமிருந்து தாய் தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது
1.கருவிலே வளரும் அகஸ்தியனுக்குள் அந்தச் சக்திகள் இணைகின்றது.
2.நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெறுகின்றது.
 
பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அறிவில்லாத நிலையில் வானியலை உற்றுப் பார்த்தாலும் அதை அறியும் அறிவே அவனுக்கு இல்லை ஆனால் (அவன் உடலில் நஞ்சை முறித்திடும் சக்தி இருப்பதால்)
1.கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் கருவிழியின் வழியாக அந்தச் சக்திகள் ஊடுருவுகின்றது.
2.சூரியனிலே ஏற்படும் மோதல்களைப் பார்க்கின்றது
3.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை அகஸ்தியனுக்குள் மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது.
4.சூரியனின் இயக்கத்தையும் அவன் காணும் சக்தி பெறுகின்றான்.
 
இது எல்லாம் இயற்கை சந்தர்ப்பத்தால் தான் அவனுக்குள் உருவான நிலைகள்.
 
நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வுகளை அவருடைய தாய் தந்தையர் புலனறிவால் அறிந்த பின் அவர்கள் நுகர்ந்த பச்சிலை மூலிகைகளின் விஷத்தின் தன்மைகள் கருவிலே வளரப்படும் போது அது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
 
இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும்
2.அருள் ஒளியின் தன்மையை உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும்.
 
அந்த நோக்குடன் தான் எமது (ஞானகுரு) உபதேசத்தை உங்களை உற்று நோக்கும்படி செய்து உணர்வின் தன்மை நுகரும்படி செய்து
1.நுகர்ந்த உணர்வுகளை ஜீவணுக்களாக மாற்றும்படி செய்வதற்கே
2.எமது குரு இட்ட கட்டளைப்படி இதைச் செயலாக்குகின்றேன் தெளிந்து கொள்ளுங்கள்.
 
பிற சக்திகளைச் சூரியன் எவ்வாறு கவர்கின்றது…? என்ற நிலையையும் அண்டங்கள் எவ்வாறு உறுப்பெற்றது என்ற அதன் தொடர்வரிசையையும் அகஸ்தியன் காணுகின்றான்.
 
விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கத்தின் தன்மை அறியப்படும் போது எங்கிருந்து விளைந்தது…? அதனுடைய உணர்வின் தொடர் எங்கிருந்து வந்தது…? என்று காணுகின்றாண்.
 
ஆனால் மெய்யை உணரும் ஆற்றல் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலாகத் தாயின் கருவிலே உருவாக்கப்படும் பொழுது
1.தனக்குள் விளைந்த நிலையுடன் மோதப்படும் பொழுது
2.விண்ணின் ஆற்றல் எவ்வாறு உருவானது…? என்று அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது
3.ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது…? என்று உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் தோற்றுவிக்கின்றது
 
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை விஞ்ஞானத்தினால் வரும் விஷத்தினை வென்று நஞ்சற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து இந்த உடலில் இருந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான்…”
 
அந்த நிலையை அடைந்தது தான் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும். இதைப் போன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட அண்டத்தில் உண்டு...!”
 
1.அதிலே இணைந்த உணர்வுகள்
2.அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
3.ஒளியின் சரீரமாக அழியா வல்லமை பெறச் செய்யும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து
4.நமக்குள் எண்ணியதை உருவாக்கும் அதனைத் தெளிவாக்குதல் வேண்டும்.
5.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நாம் இணைய வேண்டும்.
 
அதற்குத் தான் இதை எல்லாம் பதிவு செய்கின்றேன். பதிந்து கொண்ட பின் நினைவு கொண்டு அதை நீங்கள் கவர்ந்து செயலாக்க முடியும்.

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”


நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும்,
1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு
2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை
3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்
4.எந்த நிலைக்கும் அவ்வாத்மா நம் எண்ணத்திற்கு உகந்தபடி செயல்படும் தன்மை பெறும்.
 
நமக்கு இயேசு மகான் எப்படிக் கிடைத்தார்…? ஆழ்வார்கள் பலர் நமக்கு எப்படிக் கிடைத்தார்கள்…? சூட்சும நிலை கொண்ட இவ்வாத்மா பெரியோர்கள் எல்லோரும் தன் நிலைக்கு உகந்த உடல்களை எப்படி எப்படி எடுத்துப் பிறவி எடுக்காமலேயே இவ்வுலகில் வாழ்கின்றார்கள்…? என்ற நிலை புரிந்து நாம் வாழ வேண்டும்.
 
பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாம் பிறவியிலிருந்து அந்நிலை பெற்று வரவில்லை சில உடல்கள் அவ்வுடலில் இருந்து ஆவி பிரிந்து சென்ற பிறகு அவ்வுடல்களை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்…
 
ஏன் அந்த உடலில் இருந்து சென்ற ஆவிக்கு அவ்வுடலில் திரும்பவும் வந்து செயல்பட முடிந்திடாதா…? என்ற எண்ணம் கொள்ளலாம்.
 
அவ்வுடலுடன் இருக்கும் பொழுது அவ்வாவிக்கு எந்த நிலையில் சக்தி பெற்றதோ அந்த நிலையில் தான் அது செயல்பட முடிந்திடும்.
1.பயத்துடனும் இவ் உடலில் உள்ள வலியின் கொடுமையினாலும்
2.உடலை விட்டுப் பிரியும் ஆவியினால் திரும்பவும் அந்த உடலை ஏற்றுச் செயல்படுத்திட முடிந்திடாது.
 
அந்த நிலையில் வருவது தான்... பல ஞானங்கள் பெற்ற இவ்வுலகுக்கு இன்னும் தொண்டு செய்ய வேண்டும்…” என்ற நிலையில் உள்ள பெரியோர்களின் ஆவி இவ் உடலில் வந்து செயல்படுகிறது.
 
சாதாரண ஆட்டு இடையனாக இருந்த இயேசு பிரான் ஆடு மேய்க்கும் நிலையில் அவர் உடலை ஒரு கருநாகம் தீண்டியதால் அவர் ஆவி பிரிந்தது.
 
அந்த நிலையில் உடல் கெடாத நிலையில் இருந்ததால் அவர் சிறுவனாக அன்பு கொண்டிருந்த அவரின் தாய், தந்தையின் நிலை அறிந்து அந்த உடலை ஒரு மாபெரும் ரிஷி ஏற்றுக் கொண்டார்.
 
மக்களுக்கு நல் வழி புகட்ட அந்த உடலில் இருந்து கொண்டே அந்த ரிஷி தன் நிலையில் தன் வழியில் மக்களுக்குப் புகட்டிச் சென்றார்.
 
அவ்வேசுபிரான் இன்னும் எங்கும் செல்லவில்லை. எவ்வுடலை ஏற்று எந்த நாட்டில் வாழ்ந்தாரோ அந்த நிலைக்கு எல்லாம் வந்து செல்கின்றார். எண்ணி ஏற்று ஈர்க்கும் நிலை இல்லை அங்கு இன்று.
 
ஜெபம் பெற்று அறிந்திட்டால் அவரின் நிலையை அறிந்திடலாம்.
1.பல ரிஷிகளும் தவ முனிவர்களும் ஆதி நாளிலேயே தோன்றிய நாடப்பா இந்நாடு.
2.அதனால் தான் இன்றும் இங்கு இன்னும் தெய்வ நம்பிக்கை என்று ஒரு பயமாவது உள்ளதப்பா.
 
அவ்வாண்டவனின் சக்தியை ஈர்த்து ஏற்கும் நிலையை இவ்வுடலுடன் நாம் உள்ள நிலை கொண்டே ஒவ்வொருவரும் அறிந்து வாழ்ந்தால் பல ஜென்மங்கள் எடுத்து ஆவி உலகில் அல்லல்பட வேண்டியது இல்லை.
 
இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டு நம்முள் உள்ள இறைவனின் சக்தியால் ஊட்டம் பெற்று நம் உயிராத்மாவை உன்னத நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும்.
 
இவ்வுடலை எந்த அணுவும் ஏற்கும் நிலையில் உள்ளதால்
1.நாம் நம் உடலைத் தீய அணுக்களின் ஏவலுக்கு ஆளாக்காமல் நல்லோரின் ஆசி பெறத்தான்
2.நாம் நம் ஜெபத்தையும் நம் எண்ணத்தையும் செயல்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

September 4, 2024

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்

இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன் ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும்


நாராயணன் என்று சூரியனைச் சொன்னாலும் லட்சுமி நாராயணா…! அதாவது
1.காந்தத்தால் ஈர்க்கப்பட்டு மோதலில் ஏற்படுவது வெப்பமும்
2.தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை அணுத்தன்மையாக மாறி அது இயற்கையில் இணைந்து வாழும் சூரியனாக வாழ்கின்றது.
 
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் நாராயணன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. ஆதிசேஷன் என்பது விஷம். ஆதியிலே நாளடைவில் விஷம் ஆகும் பொழுது விஷமற்றதை அது தாக்கி அதிலே வெப்பத்தை உருவாக்குகின்றது.
 
1.வெப்பம் உருவானால் தான் இரண்டறக் கலக்கும் தன்மை வரும்
2.விஷம் எதிலேயும் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது.
3.விஷம் விஷமற்றதைத் தாக்கி ஊடுருவும் பொழுது வெப்பத்தின் தணல் கூடுகின்றது
4.ஊடுருவும் தன்மை வரும் பொழுது ஈர்க்கும் சக்தியும் அங்கே வருகின்றது.
5.ஈர்க்கும் சக்தியும் வெப்பத்தை உருவாக்கும் சக்தியும் இந்த விஷத்திற்குத் தான் உண்டு.
 
வெப்பத்தால் உருவான நிலைகள் விஷத்தின் தன்மை அடைந்தாலும் அதே அணுவின் தன்மை மோதப்படும் பொழுது இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருக்கின்றது.
 
ஏனென்றால் பௌதீக முறைப்படி விளக்கம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
நான் படிக்காதவன் தான் நமது குருவும் படித்தவரல்ல. உணர்ந்தறிந்து நுகரும் ஆற்றலைப் பெற்றவர். அகஸ்தியன் படித்தவன் அல்ல…! அகண்ட அண்டத்தினுடைய சக்தியும் தனக்குள் வளர்த்து விளைய வைத்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டவன்.
 
1.அவனின்று வரும் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.ருண்ட உலகமாக மாறும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்
3.நம்பிக்கை உள்ளோர்கள் இந்தச் சக்தியைப் பெறலாம்.
 
அல்லது இந்த உடலின் வாழ்க்கை தான் சதம் என்று நிலையில் சென்றால் இந்த உணர்வின் தன்மை கொண்டு இருள் சூழும் நிலைக்கே அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் உயிர்.
 
அதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும்.
 
இதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அருள் ஒளியின் உணர்வுகளை இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது அதனுடைய நினைவாற்றல் வந்தால் இந்த உணர்வின் இயக்கமாக மாற்றி உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் வல்லமை பெறுகின்றீர்கள்…! அத்தகைய வல்லமை பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
 
ஏனென்றால் கற்காதவன் (என்னுடைய) உணர்வுக்குள் குருநாதர் அதைப் பதியச் செய்யும் போது அதை நுகர்ந்து… உணர்வின் அறிவாக எனக்குள் அதனின் இயக்கச் சக்தி வந்தது.
 
அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி அதனுடைய செயலாக்கங்களாக உங்களுக்குள்ளும் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.
 
நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை குரு அருளின் உணர்வுகள் உங்களுக்குள் அதைப் பதிவு செய்கிறது. அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றி ஒளி பெறும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.
1.அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லாத நிலை அடைந்து
2.ஒளியின் சரீரமாக நாம் மாற வேண்டும் - இந்தப் பிரபஞ்சம் அழிவதற்கு முன்.
 
வேதனை உணர்வு கொண்டால் மனிதல்லாத ரூபத்தை மாற்றி நரக வேதனைப்படும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும் மனித உடலை இழந்து விடுவோம்.
 
அப்படிப் பிறந்தாலும் அசுர செயல்களை செயல்படும் உணர்வாகத் தான் மாற்றும். ஆகவே இன்றைய விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து நாம் மீள்தல் வேண்டும் எமது குரு அருளால் நஞ்சிலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும்…”
 
ஒவ்வொரு உணர்வுகளிலும் பல கோடி வித்தன்மை கொண்டு கவர்ந்து வந்தாலும் விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு நினைவாற்றலும் நீங்கள் நுகரும் பொழுதே அதை ஜீவ அணுவாக “ஒளியாக” மாற்றும் தன்மை வருகின்றது.
 
அருள் ஒளி பாய்ச்சி உணர்வின் தன்மையை இணைக்கப்படும் பொழுது அது வலு இழக்கும் தன்மை வருகின்றது
1.அதனால் தான் இணைத்தே உங்களுக்குள் அருள் உணர்வை நுகரச் செய்கின்றேன்.
2.ஒளியான வீரிய அணுவாக உங்களுக்குள் விளைய வேண்டும்
3.தீமைகளை அடக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்
4.தீமையற்ற உடலை உருவாக்க வேண்டும்
5.பிறவி ல்லா நிலை அடைந்த அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்க வேண்டும்
6.அருள் வழியில் நீங்கள் இதைக் கடந்து செல்ல வேண்டும்
7.விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அரவணைப்பில் நீங்கள் செல்ல வேண்டும்.
 
அப்போது நச்சுத் தன்மைகள் அங்கே கரைக்கப்படுகின்றது. உங்களுக்குள் மோதும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள். அந்த நிலை உருவாக்கத்தான் இதைத் தெளிவாகக் கூறுகின்றேன் (ஞானகுரு).