ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2014

பனை மரத்தில் கருப்பணசாமி...! - நிஜமா..?

1. பனை மரத்தில் கருப்பணசாமி இருக்கிறது என்று புரளியைக் கிளப்பச் சொன்னார் குருநாதர்
ஒரு சமயம் என்ன செய்யச் சொன்னார் நமது குருநாதர்? “நீ போய் சும்மா ஒரு புரளியைக் கிளப்பு என்று சொன்னார் குருநாதர்.

ஒரு பனை மரம் இருந்தது. ஒருவனுக்குக் காசைக் கொடுத்து, இரவு அங்கே போனேன், கருப்பணசாமி அங்கே வந்தது. கருப்பணசாமி ஒருவனை அடித்து அங்கேயே தூக்கிப் போட்டுவிட்டது. நான் இதைப் பார்த்து பயந்து வந்துவிட்டேன் என்று மற்றவர்களிடம் சொல்கிறான்.

இவன் இப்படிச் சொன்னவுடன் ஒருவன் அதற்காக வேண்டி, சில நிலைகளைச் செய்து கோழியை அறுத்து அந்த இரத்தத்தை அந்த இடத்தில் (பனை மரம்) போட்டுவிட்டு வந்தான்.

பார்த்தால் இரத்த இரத்தமாகக் கக்கிட்டான், தூக்கிக் கொண்டு போய்விட்டது என்றான்.

இதை அடுத்து இன்னும் இரண்டு பேரிடம் சொன்னவுடன் அங்கே போய்ப் பார்க்கிறார்கள்.

ஆக, பனை மரத்துக்கு அருகில் சென்றவுடன் அங்கே கருப்பணசாமி இருக்கிறது என்று பயப்படுகிறார்கள்.

இந்த பயத்திலேயே மாலை 6 மணி ஆகிவிட்டாலே யாரும் அந்தப் பக்கம் போவதில்லை.

ஆனால், அந்த சமயத்தில் அந்த எண்ணங்கள் இயக்கி
திடீரென்று, “அங்கே பேய் வந்து ஆடுகின்றது,
பேய் வருகின்றது” என்று அதிர்ச்சியாகி
அந்த உணர்வுகளை நுகர்வோருக்கெல்லாம்
அந்த நிலை வருகின்றது.

நுகரும்பொழுது அன்றைக்கு அந்தப் பக்கம் சென்றேன், பேய் வந்தது. நடுங்கிப் போய்விட்டேன் என்று பய உணர்வை வெளிப்படுத்துகின்றார்கள்.
2. அதிர்ச்சியால் உருவான அணுவிற்கு, அதிர்ச்சியான உணர்வை உணவாகக் கொடுக்கின்றது உயிர்
குருநாதர் இதையெல்லாம் பரீட்சாந்திரமாகச் செய்யச் சொல்லி
மனிதனுடைய உணர்வுகள் அவன் எப்படி எடுத்துக் கொள்கிறான்?
எப்படி நடக்கின்றது?
அவனுக்குள் எப்படி அந்த உணர்வுகள் விளைகிறது?
என்று எமக்கு தெளிவாக உணர்த்துகின்றார்.

நம்முடைய எண்ணங்கள்
நாம் நுகரும் உணர்வு எதுவோ
அதைத்தான் நம் உயிர் இயக்கி
“அந்த உணர்வின் அணுவாக” அது மாற்றுகின்றது

அப்படி உயிரால் உருவாக்கப்பட்ட “அந்த அணுவிற்கு”
அந்த அதிர்ச்சியான உணர்வே
உணவாகத் தேவைப்படுகின்றது.

ஏனென்றால், மக்கள் மத்தியில் ஒருவர் எண்ண உணர்வுகளை அது மீண்டும் பதிவு செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகின்றது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றார் நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

May 7, 2014

பயத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைப் பற்றி தெளிந்து, தெரிந்துகொள்ளுங்கள் - ஞானகுரு

1. எண்ணத்திற்குத் தக்கவாறுதான் ரூபம் தெரியும்
சில நேரங்களில் உட்கார்ந்து பாட்டி கதை என்று சொல்வார்கள். சில நேரங்களில் இரவிலே உட்கார்ந்திருக்கும் பொழுது பெரியவர்கள் சொல்வார்கள்.

அதாவது இரவிலே வயலில் போய் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று, அன்று ஏற்றத்தில் இறைக்கச் செல்வார்கள். அப்பொழுது, அந்த ஏற்றத்தில் இறைக்கும் பொழுது, காலையிலே இந்த மாதிரி தண்ணீர் ஏற்றத்தில் இறைக்க வேண்டும் என்று நினைத்துப் படுத்திருந்தார்.

உடனே என்ன செய்கின்றது? ஒரு பேய் வந்து கூட்டிக் கொண்டுபோய் தண்ணீர் இறைக்க வேண்டும் என்று சொல்லி வயல் காட்டுக்குக் கூட்டிச் சென்றது.

அப்பொழுது வேக வேகமாக வாரிக்கொண்டு தண்ணீர் போகின்றதாகவும், இப்படியெல்லாம் பண்ணியவுடனே வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் கூட வந்த வேலைக்காரன் தான் என்று நினைத்தேன். ஆனால், கடைசியில் பார்த்தால் பேயாகப் போய்விட்டது.

அப்படி ஆனவுடனே, தண்ணீர் எல்லாம் நிறைந்தபின், அந்தப் பேயை நினைத்தவுடன் பயந்து அதிர்ச்சியாகிச் செத்தான். இப்படி பேய் கதைகளைச் சொல்லிவிடுவார்கள்.

இந்த மாதிரி எண்ணும் பொழுது தனியாகப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

திடீரென்று ஒரு இலை ஆடுகின்றது என்றால்,
அதைப் பார்த்தவுடன்,
நம் எண்ணம் எதுவோ
அதற்குத்தக்கவாறு ரூபம் தெரியும்.
2. நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் நம்மைக் கொண்டு போகின்றது?
“ஐயோ, பேய் வந்துவிட்டது, பேய் வந்துவிட்டது என்று நாம் எண்ணியபடி எல்லாம் அங்கே தெரியும்.

அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது, தீடீரென்று ஏதாவது ஒன்று அந்தப் பக்கம் வந்தால் (காற்றிலே ஒரு இலை விழுந்தால் கூட) “ஆ!" என்று அதிர்ச்சியாகும்.

“ஆ என்ற உணர்ச்சிகள் வரும் பொழுது,
அந்த சிந்திக்கும் நிலைகளில் (மூளை பாகம்) தொடர்பு இழக்கும்.
அப்பொழுது, மூக்கு வாய் வழியாக எல்லாம் இரத்தமாக வரும்.
இரத்தம் இப்படி வந்து, இரத்த நாளங்களில் வெடித்துவிடுகின்றது.

ஆக, பேய் அடித்து இரத்தம் இரத்தமாகக் கக்குகிறான் என்று சொல்வார்கள்.

அதாவது, அதிர்ச்சியாகும் பொழுது அந்த உணர்ச்சிகள் TRANSACTION செய்யக்கூடிய உணர்வுகள் (மிக நுண்ணிய பாதைகளில் அதிர்ச்சியாவதால்) அதனால் இரத்த நாளங்கள் வெடித்துவிடுகிறது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்கள் நம் வாழ்வில் வரப்படும் பொழுது நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் நம்மைக் கொண்டு செல்கிறது? என்ற வகையில் இதைத் தெரிந்து கொள்வது நலம்.

May 6, 2014

உபதேசத்தை யாம் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணம்

1. திட்டியவர்களை நாம் திரும்பத் திரும்பதான் எண்ணுகின்றோம்
திட்டியவர்களைப் பதிவு செய்து அதை எண்ணிய உடனே நமக்கு கோபம் வருகின்றது.

அன்றைக்கு நாம் ஒரு கணக்குப் பார்த்தோம் என்றால், திட்டியவர்கள் எண்ணியவுடனே “இப்படித் திட்டுகிறார்களே” என்று எண்ணினால்
இந்தக் கணக்கை நாம் விட்டுவிடுவோம்.
தப்பும் தவறுகளாகத் தான் நாம் எழுத முடியும்.

அதே சமயம், எனக்கு இந்த மாதிரி துரோகம் செய்தான் என்று எண்ணினால் அங்கே தவறாக ஆகும். ஏனென்றால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றோம். ஆக, நம்மையறியாமலே இத்தகைய நிலைகள் நடக்கின்றது.

இதைப் போலத்தான் உள்ளுக்குள் இந்த உணர்வைப் பாய்ச்சிவிட்டால், ஆக தீமை என்ற உணர்வு நீங்கள் அறிந்துவிட்டால் அடுத்தகணம் பதிவு செய்துவிட்டால் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நுகர்ந்து கொண்டால் இதை அடக்கும்.

ஆக, ஒவ்வொரு நிமிடத்திலும் தீமைகளை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வரவேண்டும்.
இந்த நிலையை பெறச் செய்வதற்குத்தான்
திரும்பத் திரும்பச் சொல்லுகின்றோம்.
2. திரும்பத் திரும்பச் சொன்னாலும், சாமி என்ன சொன்னார் என்று திருப்பிச் சொல்லத் தெரியாது
என்னடா.., சாமி திரும்பத் திரும்ப இதையெல்லாம் சொல்கிறார். தலைவலியாக இருக்கிறது என்று சில பேர் எண்ணுகின்றார்கள்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் சாமி திரும்பச் சொல்கிறார். ஆனால் கேட்டு முடிந்தபின்,
சாமி என்ன சொன்னார் என்று கேட்டால்
திருப்பிச் சொல்லத் தெரியாது.

ஆக, திரும்பச் சொல்கிறார் என்று தெரியும் என்ன சொல்கிறார் என்று மட்டும் தெரியாது. இதைப் போல நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறோம்.

இராமாயணம் எழுதுகின்றார்கள். வான்மீகி எழுதிய இராமாயணத்தைத் திரும்பத் திரும்ப அதையெல்லாம் வாசிக்கின்றார்கள். அதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இராமாயணத்தை எத்தனை பேர் எத்தனை தடவை சொன்னாலும், வருடா வருடம் சொன்னாலும், அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். 

May 5, 2014

"நோயாளிகளைக் காக்க வேண்டும்...!" என்று ஆண்டவனுக்கு லெட்டர் எழுதிப் போடச் சொன்னார் குருநாதர்

1. டாக்டரிடம் சீட்டைக் கொடுக்கச் சொன்னார் குருநாதர்
ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார் தெரியுமா?

டாக்டரிடம் போய், “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா.., என்று என்னிடம் சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா., நீ அங்கே போகவே இல்லை, என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்?

“நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய் சொல்லுடா என்கிறார் குருநாதர்.

ஐயோ, அவர் பண்ணின கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்?
2. லெட்டரில் விலாசம் “ஆண்டவன்” என்று எழுதச் சொல்கிறார் குருநாதர்
நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா. லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு. உடனே எல்லோருக்கும் நோய் நீங்கவேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்\கிறார்.

சாமி, விலாசம் என்ன என்று கேட்டேன்?

எழுதுடா., ஆண்டவன்” என்று எழுதிக் கொண்டு போய் போடு! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார். 

இப்பொழுது, இதனுடைய உண்மையின் இயக்கங்களை, எண்ணங்களை இயக்கி உன்னை ஆள்பவன் யார்?

உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா..,” அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று நீ எண்ணு, உன் இருள் போகவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.

அப்பொழுது எழுதுவது நீ. அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய். இந்த லெட்டர் என்ன செய்யும்? நீ போடு.

ஆக, உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில், அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக
அந்த இயற்கையின் நிலைகளை,
உயிரின் இயக்க நிலைகளை
எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

ஆக, வேறு ஒன்றும் வேண்டியதில்லை. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
3. மகரிஷிகளின் அருள்சக்தி பெற நீங்களும் எழுதுங்கள்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.

அப்பொழுது இங்கே என்ன செய்யும்?

அங்கே பாஸாகிப் போய்விடும். உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும், எண்ணங்கள் கலங்குவதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.
இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக
குருநாதர் எமக்கு ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால், இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க அந்த அருள்ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

May 4, 2014

"உங்களை நீங்கள் நம்புங்கள்...!" என்று எதனால் அப்படிச் சொல்கிறோம்....?

1. மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் சொன்னார் குருநாதர்
நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது சில குடும்பங்களில் சில உடல்களில் என்னென்ன நடக்கிறது? ஏவலினுடைய நிலைகள் என்ன? ஆவியினுடைய நிலைகள் என்ன? என்று அறிவதற்காக வேண்டி, மூன்று இலட்சம் பேரை சந்திப்பதற்காக குருநாதர் எம்மை அனுப்பினார்.

ஏனென்றால், இயற்கையின் நிலைகள் எப்படியெல்லாம் நடக்கின்றது என்ற நிலைகளில், ஏவலினால் இயக்கப்படும் ஆவியின் செயல் தொடர்கள் எப்படி வருகின்றது? என்று நேரடி அனுபவமாக நமது குருநாதர் கொடுத்தார்.

ஆகையினால், இதையெல்லாம் நேரடி அனுபவமாகக் கண்ட பிற்பாடுதான் உடலுக்குப் பின் ஆவியினுடைய நிலைகள் எப்படி இருக்கின்றது? தெளிவாக உணர்ந்த பிற்பாடுதான் உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம்.

எத்தனையோ அவஸ்தைப்பட்டோம்.
ஆக, ஒவ்வொரு மக்களும் எப்படி வாடுகிறார்கள்?
இன்னொரு ஆவியின் நிலைகளை வைத்து
எப்படி இயக்குகின்றனர் என்று அறிவதற்காக அன்று குருநாதர்
எமக்கு FULL POWER கொடுத்துத்தான் அனுப்பி வைத்தார்.

அந்த உண்மைகளையெல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடுதான் இங்கே வந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை ஆரம்பித்தேன். ஆகவே, ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள்”.

உங்கள் உணர்வை எப்படி இயக்க வேண்டும்?
இயற்கை எப்படி இயக்குகின்றது?
உங்கள் உயிரின் இயக்கம் எப்படி?
அதன் வழி கொண்டு எப்படி அருள் உணர்வுகளை நுகரவேண்டும்?
அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை
நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை
உங்களுக்குள் அனுபவ வாயிலாக
இப்பொழுது கொண்டுவந்து கொண்டிருக்கின்றோம்.

பல ஆயிரம் பேரை இப்படிப் பார்த்து, அனுபவித்துத்தான் அந்த அனுபவ நிலையில் பெற்ற நிலைகளைத்தான் உங்களுக்கு இப்பொழுது சொல்கின்றோம். ஆக, நான் ஏதோ சொல்கின்றேன், நான் கல்வி அறிவு இல்லாதவன் என்று எண்ண வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில், விண்ணுலக ஆற்றல் னைத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
2. புகழோ, பொருளோ எனக்குத் தேவை இல்லை, நீங்கள் மகிழ வேண்டும், உங்கள் இருள் நீங்க வேண்டும்
நமது குருநாதர் எம்மிடம் சொன்னது:
அந்த உணர்வின் ஆற்றலை விண்ணிலே நீ வீசு,
உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி.
அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்.
தீமையற்ற நிலைகளாக ஆக்கு,

தீமைகள் இருக்கும் மனிதனுக்கு, தீமைகள் நீக்க அது உதவட்டும் என்று என் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ, பொருள் தேவைக்கோ அல்ல.

எனக்குப் பொருள் ஒன்றும் தேவை இல்லை.
புகழும் தேவை இல்லை.
நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். உங்களையறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

உங்களின் மகிழ்ச்சியான உணர்வுகள், மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது குருநாதர் இட்ட கட்டளை.

உயிரே கடவுள். அவன் வீற்றிருக்கும் இந்த உடல் ஆலயம். ஆகவே, அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று, நம்மைக் காத்து, மற்றவரையும் காத்து, மெய் உலகைப் படைப்போம். மகரிஷிகள் உலகை உருவாக்குவோம்.

இதைப் படிப்போர் அனைவரும்
உலகைக் காத்திடும் அருள் சக்தி பெற்று,
அற்புதங்களை நிகழ்த்திடும் அருள் ஆற்றல் பெற்று,
உலகுக்கு எடுத்துக்காட்டாக,
உத்தம ஞானிகளாக, மெய்ஞானிகளாக வளர்ந்திட
எமது அருளாசிகள்.
--ஞானகுரு வேணுகோபால சுவாமிகள்

May 1, 2014

சூதாட்டம் - பேராசை இவற்றால் எல்லாவற்றையும் இழந்துவிடுகின்றோம்

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று, அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி, நீக்கி, இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது, தீமை என்று தெரிகின்றது. ஆனால், சூதாடப் போகின்றோம்.

சூதாட்ட விளையாட்டில் தோற்கத் தோற்க,
விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று
திரும்பத் திரும்ப விளையாடி
எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்று, குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி, அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம், குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து, “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று, ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும்என்று, யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

என்ன ஆசீர்வாதம் வேண்டும்?என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்கு பால் வியாபாரி, “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை, இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன்.

இதுவும் போய்விட்டதென்றால், பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே,   குருதேவரிடம் சொல்லி நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள்என்று கூறினார்.

மறுநாள், குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது, பால் வியாபாரி எம்மிடம் வந்து, “அண்ணே, குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா?” என்று கேட்டார்.

பால் வியாபாரி கேட்டதை, ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு, “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடுஎம்மை பார்த்து, “அவனுக்கு ஆசீர்வாதம் கொடுஎன்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே, பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின். அவர் சீட்டு விளையாடச் சென்றார். சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார்.

சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி, எமக்குப் புது வேஷ்டி, புதுச் சட்டை, பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர், வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்கு படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால், அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார், பால் வியாபாரி.

குருநாதர் அதை வாங்கி தார்தாராகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில், ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும், பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால், தான் பெரிய பங்களாவே, காரே வாங்கி விடலாம்என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி, அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும், பெட்ஷீட்டும். வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருடைய நண்பர்களுக்கெல்லாம், “நீ காபி சாப்பிடு, நீ காபி சாப்பிடுஎன்று கூறி, அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு, “பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக் கொடுத்தபின்,
இவன் ஆசை எங்கே போகின்றது பார்?
ஏதோ ஜெயித்துக் கொடுத்தால்,
இனி சீட்டு விளையாடப் போகமாட்டேன் என்று தானே கூறினான்.

இழந்த பணத்தைச் சம்பாதித்தான், ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான், உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி வருவான் பார்?” என்று கூறினார்.

மறு நாள், பால் வியாபாரி சீட்டு விளையாடி, தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது. பால் வியாபாரி எங்களிடம் வந்து, “என்ன சாமி இப்படி ஆகிவிட்டதுஎன்று கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின், அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது. 

இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது,  போதும்எனும் மனம் வருவதில்லை.
நம்முடைய தொழிலை முன்னேற்றி
பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை. 

இப்படி, சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? அதிலிருந்து நீ எப்படித் தப்புவது? என்று அங்கு அனுபவபூர்வமாகக் காட்டினார்.