ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2014

அகஸ்தியரின் அற்புத சக்திகள் - நீர் சக்தி

1. நீர் நிலைகளைப் பெருக்கும் சக்தி பெற்றவர்
நமது பூமியில், உண்மையின் தன்மைகளைக் கண்டுணர்ந்த முதல் மனிதர் அகஸ்தியர். அகஸ்தியர் தம் வாழ்நாளில், தமது தாயின் கருவில் பெற்ற  பேரருள் துணை கொண்டு, மலைப் பகுதிகளில் உள்ள தாவர இனங்களின் உணர்வுகளை நுகர்ந்து அறிவதற்காக, பல பகுதிகளுக்குச் சென்றார்.

இந்திய எல்லைக்குள் எத்தனை மலைப் பகுதிகள் இருந்ததனவோ, அத்தனை மலைப் பகுதிகளிலும் அலைந்து திரிந்து ஒவ்வொரு தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறிந்தார்.

காவிரி என்று சொல்லும் பகுதியில்,  "பாகமண்டலம்"  என்ற ஒரு இடம் உண்டு.
அந்த பாகமண்டலத்தில், அகஸ்தியர் அமர்ந்து, தம்முள் விளைந்த சத்தினை அங்கே பரப்பப்படும்பொழுது, மேகக் கூட்டங்கள் வருவதை அங்கே அடக்கி, தமக்கு வேண்டிய நீர் நிலைகளை உற்பத்தி செய்து கொண்டவர் அகஸ்தியர்.

வறண்ட பிரதேசமாக இருந்த இடங்களுக்கு, அகஸ்தியர் சென்று அமர்ந்து தியானம் செய்ததன் காரணமாக, அங்கே மேற்பரப்பில் நீர் ஊற்றுக்கள் தோன்றின.

இப்படி,  அகஸ்தியர் சென்ற இடமெல்லாம், அவர் பாதம் பட்ட இடமெல்லாம், அகஸ்தியருடைய அருள் சக்தி மண்ணில் படரப்படும் பொழுது, நீரினைக் கவரும் ஆற்றல் பெற்றன.

ஏனென்றால் அகஸ்தியர், வேண்டிய நீரை, ஜீவ சக்தியைக் கவரும் சக்தி பெற்றவராக இருந்தார். இதனால் அவர் சென்ற இடமெல்லாம் நீர் நிலை பெருகி, செழிப்பின் தன்மையைப் பெற்றன. 
2. பல சஞ்சீவிகளையும், உணவுப் பொருள்களயும் உற்பத்தி செய்தவர் அகஸ்தியர்
மனிதர்களுக்குத் தேவையான பற்பல சஞ்சீவிகளையும், தாவர இனப் பொருள்களையும் உற்பத்தி செய்தவர், அகஸ்தியர் தான்.
அகஸ்தியர் அக்காலத்தில் தாம் கற்றுணர்ந்த உணர்வின் தன்மையை, தமது உடலில் விளைவித்த நிலைகள் கொண்டு, மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற கனிவர்க்கச் செடிகளை, தாவர இனங்களை உருவாக்கினார். நாவற்பழம் போன்று இருக்கும். அது அந்த காலத்தில், மனிதருக்கு உணவாக உட்கொள்ள உதவியது.

கொய்யாப்பழத் தாவர இனங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது என்று கூறுகின்றார்கள். காட்டுப் பகுதியில், கொய்யா மரத்தை ஆதியில் உருவாக்கியவர் அகஸ்தியர் தான். கொய்யா மரம், நம் நாட்டுச் சரக்குதான்.

காட்டுப் பகுதியில் விளைந்த கொய்யாப் பழங்கள், மலைவாசிகளுக்கு உணவுப் பொருளாக இருந்தது. வரகு என்று சொல்கின்றோமே, அந்த தானியமும் அகஸ்தியரால் உருவாக்கப்பட்டது தான்.

இன்னொன்று அரிசி போன்றே இருக்கும், ருசியாகவும் இருக்கும். அதை எடுத்து தேய்த்துச் சாப்பிட்டால், ரொம்ப ருசியாக இருக்கும்.  இவைகள் எல்லாம் மனித வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று அகஸ்தியரால் செயல்படுத்தப்பட்ட நிலைகள்.

இது போன்ற நிலைகளை, எமக்குக் காண்பித்து உணர்த்தியவர் நமது குருநாதர் தான். யாம் உண்மையின் உணர்வை அறிவதற்காக, இத்தனையும் கொடுத்தார். 

தை பிறந்தால் வழி பிறக்கும் - பொங்கல் திருநாள்

1. சூரியன் பூமியில் உள்ள அனைத்தையும் பொங்கி வளர்க்கச் செய்கின்றது
சந்திரன் சிறுகச் சிறுக தேய்ந்து தன் முழு ஒளியும் மறைந்து, பின் அக்கோளின் ஜீவ பிடிப்புக் கொண்டு, சூரியனின் ஒளியைச் சிறுகச் சிறுகப் பெற்று பௌர்ணமி ஆகின்றது. இதைப் போல், மனிதனாக வந்த நாம் சர்வத்தையும் அறிந்திடும் நிலை பெற்றவர்கள்.

ஒளி பெற்றால் எவ்வாறு பிற பொருள்கள்
நம் கண்களுக்கு புலன் ஆகின்றதோ
இதை போல் மனிதனான உணர்வின் நிலைகள் கொண்டு, நல்ல உணர்வின் ஒளியை உயிரின் ஒளியாக மாற்றி, ஒளியின் சுடரில் இருந்து மறைக்கும் தீய உணர்வுகளில் இருந்து நம்மை காக்க அம்மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் சுவாசித்து நஞ்சினை நீக்க வேண்டும் என்ற நிலை உணர்த்தவே தை பிறந்தவுடன்பொங்கல்பண்டிகையை ஏற்படுத்திக் காட்டினார்கள்.

சூரியனின் பொங்கல் எப்படி? என்று மெய்ஞானிகள் உணர்த்தியதை பார்ப்போம். சூரியன் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு வெப்ப காந்தங்களாகப் பரவச் செய்து, எதை எதையெல்லாம் தனக்குள் எடுத்து உயர்ந்த நிலைகள் பெற்றதோ, அதை போல நாமும் பெறவே பொங்கல் பண்டிகை.

சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் ஒரு ரோஜாப் பூ வெளிப்படுத்தும் மணத்தை தான் கவர்ந்து கொண்டால், அந்த ரோஜாப் பூ மணத்தின் அலைகளாலும் ரோஜாப் பூ செடியின் மேல் சூரியனின் காந்த சக்தி படும்போது, அதற்குள் இருக்கும் உணர்வை தனக்குள் கவர்ந்து, ரோஜாப் பூ செடியைப் பொங்க வைக்கின்றது.

அதே மாதிரி நாம் நெல் பயிரிட்டு சுவைமிக்க நிலைகளாக உணவாக உட்கொண்டலும், இதனின்று வெளிப்படும் சத்தை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்தாலும், அதே சூரியனின் காந்த சக்தி இதற்குள் இருக்கக்கூடிய காந்தத்திற்குள் மோதப்பட்டு, இது இயக்கப்பட்டு, எதனின் இயக்கமோ அதனின் உணர்வை தனக்குள் கவர்ந்து பொங்கி வழிகின்றது. வையெல்லாம் சூரியனால் படைக்கப்பட்ட நிலைகள்.
2. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்வதுதான் பொங்கல் திருநாள்
நம் உடலான பிரபஞ்சத்திற்குள் நம் உயிர் சூரியனாக இருந்து, உயர்ந்த எண்ணங்களை (மகரிஷிகளின் அருள் உணர்வுகளை) நமக்குள் செலுத்தி,
நாம் நம் உடலிலே
பொங்கச் செய்வதுதான் பொங்கல் நன்னாள்.

சூரியன் அனைத்து சக்திகளையும் பொங்க வைக்கின்றது. நம் உடலிலே இருக்கக்கூடிய சக்தி, நமக்குள் நன்றாக இருந்தாலும் இன்று நாம் பொங்கல் வைக்கும்பொழுது, எவ்வாறு அறுசுவையாகப் படைக்கின்றோமோ அதைப்போல் மனித வாழ்க்கையில் நாம் பொங்க வைக்க வேண்டும்.

ந்த மகரிஷிகள் நஞ்சைப் பிளந்து உணர்வின் தன்மை தனக்குள் விளைய வைத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அவர்கள் படைத்த உணர்வுகள், விண்ணிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை முறித்து தான் உணவாக எடுத்துக் கொண்டு, அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது நமது பூமிக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

அவ்வாறு வரும் ந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து, நமக்குள் அந்நிலையைச் சேர்க்கும் நிலையாக, ஒரு வித்தாக “தை பிறந்தால் வழி பிறக்கும்என்று அமைகின்றது. அந்த ஞானியின் அருள் சக்தியான அந்த வித்தை நமக்குள் விளையச் செய்ய வேண்டும்.

நம்முடன் பகைமை கொண்டவர்களின் உணர்வு அலைகளில் மகரிஷிகள் அருள் ஒளி படரவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயயல்படும் திறன் பெற வேண்டும், அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை பெறவேண்டும் என்று எண்ணத்தை நாம் எண்ணி
நம் உயிரான நெருப்புக்குள்
நம் உடலான பாத்திரத்திற்குள் செலுத்தி,
இதைப் பொங்க வைக்க வேண்டும் என்ற நிலை கொண்டுதான்,
பொங்கல்” திருநாளை உருவாக்கினார்கள் மெய்ஞானிகள்.

தைப் பொங்கல்அன்று வீட்டை மட்டும் சுத்தப்படுத்தி வெள்ளை அடித்து அழகு செய்தால் போதாது. நம் ண்ங்களையும் உணர்வுகளையும் சுத்தம் செய்து நல் உணர்வலைகளை நமக்குள் கூட்ட வேண்டும்.
3. அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற “மூச்சலைகளை” உலகம் முழுவதும் பரவச் செய்வோம்
நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு,
வ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த அழுக்குகள் நீங்கி
மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் வளரவேண்டும் என்று
எல்லோரும் எண்ணினால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்படுகின்றது. கவரப்பட்டு பரவுகின்றது.

நாம் அனைவரும் இத்தகைய உணர்வலைகளை நமக்குள் மைத்து, நாம் வெளியிடும் மூச்லைகளை சூரியனின் காந்த சக்தி கவந்து நமது வீட்டிற்குள்ளும், தெருவிற்குள்ளும், நாடு முழுவதும் படரச் செய்கின்றது. நமது உடலுக்குள்ளும் படர விடுகின்றது.

மகரிஷிகள் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் விடும் மூச்சலைகள், அந்த உணர்வை அனைவரும் கூட்டாக எடுக்கும்போது,
பகைமை மறைகின்றது.
சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட வேதனையான நிலைகள் மறைகின்றன.

இந்த உர்வின் அலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நஞ்சின் தன்மையை செயலிழக்கச் செய்கின்றது.

வாழ்க்கையில் வந்த நஞ்சினை நீக்கி, உயிரினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நிலையான சரீரம் கொண்டு இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் நுகர்ந்து,
நம்மைச் செயலற்றதாக்கச் செய்யும்
எத்தகைய தீய உணர்வுகளையும் மாற்றி மைக்கும்
நன்னாள்தான் பொங்கல் திருநாள்.

இப்படிச் செய்வதற்குத்தான் மெய்ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளாக இதைத் தேர்ந்து எடுத்து, நாம் எண்ண வேண்டிய நல் உணர்வை உணர்த்தினார்கள்.

January 14, 2014

நம் குழந்தைகளுக்கு எப்படி அருள் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்?

1. நம் குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்
நாம் இரக்கம், ஈகை, அன்பு கொண்டு வாழும் பொழுது, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது, அதற்கு மாறாக, அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், வேதனைப்படுகின்றோம்.
இதனால் வேதனையின் உணர்ச்சியாகி,
“அவன் இப்படி இருக்கிறானே சரியாகப் படிக்கவில்லையே,
அவனின் எதிர்காலம் என்னாவது” என்று எண்ணி
இதனைச் சமைத்து, நமது உடலையும் கெடுத்து,
அவனிடத்திலும் கோபப்பட்டு, வேதனைப்படுகின்றோம்.

அவ்வாறு வேதனைப்பட்டு, அவனிடம் “ஏன்டா இப்படி இருந்தால் என்னாவது” என்று சொல்லும் பொழுது, இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும். இதனால் அவன் இன்னும் அதிகமாக படிப்பிலும், செயலிலும் மந்தமாவான்.

“அவன் படிக்கவில்லையே, இப்படிச் செய்கிறான்” என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது? வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய், நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.

பிறகு “அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும். அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற உணர்வு கொண்டு, நாம் அடிக்கடி இப்படி எண்ணினோம் என்றால், நாம் எண்ணும் அந்த உணர்வுகள், அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

தந்தையான நாம் மகனைப் பார்த்து, “டேய் இங்கே வாடா” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்,

அதற்கு மகன், “அன்று என்னைத் திட்டினாய், இன்று என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்” என்பான். இதைத் தடுத்து நிறுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்?
2. வாலி, சுக்ரீவன்
“துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நான் பெற வேண்டும், என் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற வேண்டும்” என்று எண்ணி, நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை, முதலில் அடக்க வேண்டும்.

பின், தன் மகன், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும், அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் அருள்ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்” என்று
இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டு,
பின் இதன் நிலை கொண்டு
நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்? வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.

சுக்ரீவன், எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். மனிதரில் அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானவர். எல்லாத் தீமைகளையும், நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத்தான், சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.

"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்ன ஆகின்றது?
மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள்,
இங்கே நமக்கு முன்னாடி
நமது ஆன்மாவில் இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்
நமக்குள் வலிமையானபின்,
வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை,
நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கி விட்டுவிடும்.

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது, அதனின் உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து கொண்டு, மேலே சென்று விடுகின்றது. இதன் மூலம், நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.
3. நம் குழந்தைகளைப் பக்குவப்படுத்தும் முறை
இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின், அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும், அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும், அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி, இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றி சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, சீதா, இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும், காந்தமும், கவர்ந்து கொள்கின்றது. ஆகவே இது பரப்பிரம்மம். எந்த சுவை இணைந்ததோ, அதன் மணம் வரும்பொழுது ஞானம்.

அப்பொழுது, தன் மகனைக் கண் கொண்டு பார்த்து “அவன் அருள்ஞானம் பெற வேண்டும்” என்று, சொல்லால் சொல்கின்றோம்.
அவன் இதைக் காதால் கேட்கின்றான்.
அவனின் கண் கவர்கின்றது.
உயிரால் நுகரப்படும் பொழுது,
நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி
அவனை ஆளச் செய்கின்றது. “ஆண்டாள்”.

நாம் இப்படிச் சமைத்து சொல்லக் கூடிய சொல்லை, சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப, உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இப்படி, இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால், நாம் வெளியூருக்கு எங்கும் சென்றால், அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால், அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை, அறியும் தன்மை வருகின்றது.

இப்படி நாம் சொன்னவுடனே, வாயுபுத்திரன் “ஆஞ்சநேயன்” இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி. ஆக, அவன் இராமனின் தூதுவன்.  நாம் எண்ணிய நல்ல எண்ணங்கள் வாயுவாகச் சென்று, அங்கே இயக்குகின்றது.
இதனால், மகன் சோர்விலிருந்து விடுபட்டு, சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறுகின்றான். கல்வியில் சிறந்த ஞானம் பெறுகின்றான். குடும்பத்தில் ஒற்றுமையும், பண்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். குழந்தைகளை இப்படி நாம் பக்குவப்படுத்தி வளர்க்க வேண்டும். எமது அருளாசிகள்.

January 9, 2014

துருவ நட்சத்திரத்தைக் கண் வழி பதிவாக்கியபின், எளிதில் அதனின் ஆற்றலைப் பெறலாம்

1. கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
யாம் கொடுக்கும் இந்த உபதேசங்களைப் பதிவு செய்யும் நினைவு, உங்களிடம் வேண்டும். இதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தீர்கள் என்றால், உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால், “இவ்வாறு செய்யலாமா?” என்றால் அந்த உணர்வு வரும். அப்புறம் மருத்துவரிடம் பொருள் செலவாகும். நாம் செய்த இந்தக் காரியமெல்லாம் போய்விடும். அடுத்தவர்களிடத்தில் வெறுப்பாகப் போய்விடும். தொழில் செய்யும் இடங்களில், தொழிலும் பாழாகிப் போய்விடும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் இதைக் கேட்கும் பொழுது, உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிக் கேட்டுணரும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்களையெல்லாம் நீக்கக் கூடிய ஒரு காற்று புகுகின்றது. தீமைகள் அகலுகின்றது. கேட்கும் பொழுது அமைதி கிடைக்கின்றது. அடுத்து, இதை வளர்த்து வருவதற்கு, நீங்கள் தியானத்தை வலுப்படுத்த வேண்டும்.

அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம், அதை மாற்றுகின்றோம், இதை மாற்றுகின்றோம் என்ற நிலைகளில் எதுவுமில்லை.

ஆனால், இதைப் பயன்படுத்தக் கூடிய பக்குவத்தைத்தான், உங்களுக்குக் கொடுக்கின்றோம். நமது வாழ்க்கையில் உடலுக்குப்பின், மனிதனானபின், பத்தாவது நிலையை அடைய வேண்டும், அதாவது ஏகாதசி விரதம்.

தியானவழிப்படி, காலையிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும், எங்கள் குழந்தைகள் நல் வழியில் நடக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் அன்பும் பண்பும் வளர்ந்திட வேண்டும். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும், என்ற இந்த உணர்வை எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு பலவிதமாக உள்ளது. எடுத்துப் போட்டீர்கள் என்றால், ருசி வந்துவிடுகின்றது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.

காரம் என்ற நிலைகளில் அடிமையாகிவிட்டால், இராவணன் – சீதாவைச் சிறைப்படித்தான். அந்தக் கோபமான உணர்ச்சிகள் அதுதான் “தசப்பிரியன்” நம் நல்ல உணர்வுகளைக் கவர்ந்து, நம் நல்ல குணங்கள் காணாமலே போய்விடும். இப்படிப்பட்ட நிலைகள் வரக்கூடாது என்றுதான் இராமாயணமே எழுதியுள்ளார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால், இதை உங்களிடம் பதிவு செய்வதெல்லாம், “ரிகார்ட்". ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடுகிறார்கள். மீண்டும் தட்டியவுடனே என்ன செய்கின்றது? இயங்குகின்றது.

அதே போன்று, நீங்கள் ஆசிரியரிடம் படிக்கின்றீர்கள். படிப்பதை, சரியாக ஒழுங்காகப் படிக்கின்றீர்கள். திரும்பவும் எண்ணும் பொழுது சீராக வருகின்றது.

ஆனால், படிக்கும் பொழுது கவனம் சிதறியிருந்தால் அது ஞாபகம் வராது. இப்பொழுது யாம் உங்களிடம் பதிவு செய்துதான் பேசுகின்றோம்.
அதை எடுக்கின்றதும், வளர்ப்பதுவும்,
தீமையை நீக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.
2. துருவ நட்சத்திரத்தைக் கண் வழி பதிவாக்கியபின், எளிதில் அதனின் ஆற்றலைப் பெறலாம்
ஏனென்றால், நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்கும்.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ, அதை கண்வழி பதிவாக்குகின்றீர்கள். அதை எண்ணியவுடன் கண் என்ன செய்யும்?

துருவ நட்சத்திரத்தை, கண் வழி பதிவாக்கி எண்ணுகின்றீர்கள் என்றால், அதைக் காற்றிலிருந்து எடுத்து உங்கள் ஆன்மாவாக மாற்றும்.

அப்படி ஆன்மாவாக மாறி சுவாசிக்கும் இந்த உணர்வுகள்,
உங்கள் உடலுக்குள் செல்லும்.
ஆக, உணர்வுகள் உணர்ச்சிகளாகி,
சக்திவாய்ந்த நிலையில் செயல்படும்.
அதாவது தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால், செம்பும் பித்தளையும் ஆவியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்திருந்தாலும் சரி, தீமை என்ற நிலைகளிலிருந்தாலும் சரி, தீமை என்ற உணர்வுகளை எடுத்து இருந்தாலும் சரி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று இதை எடுத்துவிட்டோம் என்றால், இதன் வீரியத்தைத் தணித்து, நல்ல அணுக்களாக உருவாக்கி, நல்ல சுத்தமான இரத்தமாக மாற்றிக் கொண்டுவர முடியும். இப்படி வளர்த்துக் கொண்டால், இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

தங்கத்தில் எப்படி திரவகத்தை ஊற்றி சுத்தப்படுத்துகின்றார்களோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நமக்குள் பெறவேண்டும், என்று நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாந்தமும், ஞானமும், விவேகமும்
நாம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் செய்தோம் என்றால்,
நமது உயிரிலே போய் இணைந்து,
நமக்குள் நல்ல சக்தி ஜீரணித்து,
நல்ல சத்து கிடைக்கும்.

January 8, 2014

நமது உயிரின் இயக்கமே சங்கு சக்கரம்...!

1. சங்கு சக்கரதாரி விஷ்ணு (நமது உயிரின் இயக்கம்)
வேதங்கள் என்ற முறையில் எது எது எதனில் மோதுகின்றதோ, அந்த நாதங்கள் வரும். வெறுப்பு, வேதனை சலிப்பு, சங்கடம் என்ற நிலைகளை நாம் எடுத்தால், அதற்குத்தக்க
சூரியனிலிருந்து வரக்கூடிய இயக்க அணு எடுத்துக் கொண்டதை
நாம் நுகர்ந்தால், உயிரிலே பட்டு மோதி,
உணர்ச்சிக்கொப்ப (அதுதான் சங்கு)
அந்த உணர்ச்சிகள் (சக்கரம்) நம்மை இயக்குகின்றது.

அதனால், நம் உயிரை சங்கு சக்கரதாரி என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அணுவின் இயக்கங்கள் நம்முள் எவ்வாறு இயக்குகின்றது. அதற்கேற்ப உயிரில் பட்டு, உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிக்கேற்ற உமிழ்நீராக மாறும்.
                    
உதாரணமாக, ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வை வெப்பம், காந்தம், விஷம் என்ற நிலையில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்றது. கோபமான உணர்ச்சிகளை நாம் உற்றுப்பார்த்து, அதை நமக்குள் நுகர்ந்தால் காரமான சுவையாக, காரத்தின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

ஆனால், அது வாலி வலிமை மிக்கது. காரம் என்ற நிலையும், அந்தக் காரம் என்ற நிலையை இணைத்தால் இதனுடைய செயல்கள் அடிமைப்படுத்திவிடும், மாற்றிவிடும், மாறிவிடும். இவ்வளவு பெரிய தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து, நம் வாழ்க்கை எவ்வாறு நடத்த வேண்டுமென்று காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

அந்தக் கோபமான உணர்வை நுகரப்படப் போகும் பொழுது, நம் உயிரிலே பட்டபிறகு சப்தங்கள் வருகின்றது. உணர்ச்சிகள் இந்த சப்தமாகி, இதே உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றன.
அந்த உணர்வுதான் சப்தம்.
உணர்ச்சிகள் இயக்குகின்றது,
“சக்கரம்” இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் கார உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது, என்ன செய்கின்றது? கோபமாகின்றது.

ஒருவர் வேதனையான உணர்வுடன் பேசுகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம், நுகர்கின்றோம் – வாலி அந்த வேதனையான உணர்வுகள் நம் சாந்தமான குணத்தை அழிக்கின்றது. ஆக, நமக்குள் சிந்தனையற்ற நிலைகள் ஏற்பட்டு, நாம் சோர்ந்து விடுகின்றோம்.

இதுபோல நுகர்ந்தால் என்ன ஆகின்றது? சங்கு - சக்கரம் நமது உயிரின் தெளிவான நிலைகள் கொண்டு
நாம் எப்படி இயக்குகின்றோம்?
எது இயக்குகின்றது?
நாம் எங்கிருந்து வந்தோம்?
என்ற நிலையில் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு.
2. சண்டை போடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?
கார்த்திகேயா – வெளிச்சத்தில் நாம் பொருளை அறிவது போல, உயிரின் இயக்கத்தை அறிந்துகொண்டு, நாம் ஆறாவது அறிவைக் கொண்டு சீராகப் பயன்படுத்தத் தவறினால், நமது வாழ்க்கை தேய்பிறைதான்.

எத்தனையோ கோடி இன்னல்பட்டு வந்தோம். இன்று, கோபம், வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வந்தால், நாம் அதன் நிலைக்கே செல்கின்றோம். நாம் நுகர்ந்த கோபப்பட்ட உணர்வின் உணர்ச்சிகள், நம் சிறு குடலில் தாக்கப்பட்டு அந்த உணர்வு வருகின்றது.

அதாவது இயக்க அணுவாக அங்கே இருந்ததைக் கவர்ந்து, உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி, அந்தக் கோப உணர்வுகளின் உணர்ச்சிகளாக மாறி, நம்மில் கலக்கின்றது. நம் ஆகாரத்துடன் உமிழ்நீராகச் சேர்க்கப்படும் பொழுது, நமது சிறுகுடலில் உள்ள அணுக்கள் தாங்காது படபடவென்றாகின்றன.

நாம் மிளகாயை வாயில் போட்டவுடன், “ஆ” என்று அலறுகின்றோம், அது விரிவடைகின்றது. அதே விரிவடையக்கூடிய அணுக்கள் சரியாக இயக்காததனால், கார உணர்ச்சிகள் ஆகாரத்துடன் கலந்து பெருங்குடலிலே இழுக்கப்படும் பொழுது, அது இழுத்து நசுக்கும்.

அவ்வாறு இழுத்து நசுக்கப்படும் பொழுது, கார உணர்ச்சியானால், “ஆ” என்று வாய் திறந்துவிடும். படபடவென்றாகும்.

வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு பேர் குரோதமாகச் சண்டை போடுவதைப் பார்த்தால் வயிறு வலிக்கின்றது, பேதியாகின்றது என்று ஆகிவிடுகின்றது. யாரும் தவறு செய்யவில்லை என்றாலும், அது தாக்கக்கூடிய சந்தர்ப்பம்.

ஆனால், பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இதெல்லாம் நமக்குள் உணர்ந்துவிடுகின்றது. பார்த்த இந்த உணர்வுகள் கருவிழி ருக்மணி, நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றிவிடுகின்றது. இது வித்தாக மாறிய பின்னால், உயிரிலே பட்டு உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இப்பொழுது நாம் கண்ணிலே பார்த்தோம். கண்ணிலே பார்த்தவுடன், “இதுபோலப் பேசியவன் போகின்றான் பார்”, என்ற உணர்வுகள் தோன்றும். இதே உணர்வுகள் பதிவு செய்தவனப் பார்த்தாலும், அன்றைக்கும் வயிற்றில் இலேசாகக் குழப்பம் செய்துவிடும். நாம் தவறு செய்யவில்லை. பதிவு செய்த நிலைகள் நம்மைச் செயல்படுத்திவிடுகின்றது.

இவ்வாறு பலவிதமான உணர்வுகள் நம் உடலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபடியும், யாராவது நண்பர்கள் அவரைப்பற்றிப் பேசினால், மறுபடியும் செயல்படுத்திவிடுகின்றது.

இன்றைக்கு விஞ்ஞான அறிவால், பலவித ஒளி அலைகளை பலவிதமான நிலையங்களில் ஒலிபரப்புச் செய்கின்றார்கள். அதே அலைவரிசையில் வைத்தால், வானொலி, தொலைக்காட்சிகளில் என்னென்ன காட்சிகள் நிகழ்ச்சிகள் என்று பார்க்க முடிகின்றது .

இதே போன்றுதான்,
தெருவிலே சண்டை போட்டவர்களை எண்ணினால்,
அவர்களின் உணர்வை திடீரென்று எண்ணினோம் என்றால்,
அந்தக் காரமான உணர்ச்சிகள் இங்கே வந்துவிடுகின்றது.
“இவ்வாறு பேசினேன்”, என்று கொஞ்சம் சேர்வடைந்தால் போதும்.

இந்த உணர்வுகள் பையன் சொன்னபடி வரவில்லை என்றாலும், கோபம் வரும். அதே சமயம் சாமான் வாங்கினால், மறந்துவிட்டு விட்டேன் என்றாலும் கோபம் வரும்.

இவ்வாறு உணர்வு வந்துவிட்டதென்றால், பொருள்கள் இருந்தாலும் கூட, இந்தக் கோபமான உணர்வுகள் காய்கறி நறுக்கும் பொழுது கையில் நறுக்கிவிடும். குழம்பில் இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவோம். உங்கள் வாழ்க்கையில் இதை நீங்கள் பார்க்கலாம்.
3. துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து, தீமைகள் புகாது தடுக்க வேண்டும்
இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் யாருமே தவறு செய்வதில்லை. நம் பதிவின் நிலை எது வருகின்றதோ, அதன்வழி வாழ்க்கையாக நம்மை வழி நடத்திச் செல்கின்றது நமது உயிர். இதையெல்லாம், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
“தீமையிலிருந்து விடுபடவேண்டும்” – “சாமி சொன்னார்” என்று, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று, இதை நீங்கள் நினைவில் எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்தீர்கள் என்றால், உங்களுக்குள் தீமைகள் புகாது சுத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் முடியும். எமது அருளாசிகள்.

January 7, 2014

கஷ்டத்தையும், வேதனையையும், குறையையும் சொல்லக் கூடிய இடம் அல்ல கோவில்

1. கஷ்டத்தையும், வேதனையையும், குறையையும் சொல்லக் கூடிய இடம் அல்ல கோவில்
கோவிலில் நாம் எதை எண்ண வேண்டும் என்று, நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். தெய்வச்சிலையை அங்கு வைத்து,
இந்தத் தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்,
தெய்வீக சக்தி பெறவேண்டும்,
தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறவேண்டும்,
வைரத்தைப் போன்ற சொல் ஜொலிக்க வேண்டும்,
செயல் ஜொலிக்க வேண்டும், வார்த்தை ஜொலிக்க வேண்டும்,
மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்.
இப்படி மக்கள் அனைவரும் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோவில்.

கோவிலில் பார்ப்பது “துவைதம்”.
நாம் எண்ணிப் பெறுவது “அத்வைதம்”.
அப்படி எண்ணும் பொழுது, அந்த
உணர்ச்சிகள் நம்மை இயக்குவது “விசிஷ்டாத்வைதம்”.
அந்த உணர்வின் தன்மை, தீமையை நீக்கும் சக்தியாக உடலாகின்றது” என்பதுதான் கோவிலின் தத்துவம். 

இதுவே ஞானிகள் காட்டிய நெறிகள்.

அந்த ஞானிகள் காட்டிய நெறிப்படி கோவில் என்பது, நம் உடலென்ற கோவிலைச் சுத்தப்படுத்த, புறத்தால் காட்டி, அகத்துக்குள் அருளைப் பெருக்கி, இருளை அகற்றும் ஞானக் கோவில்.

அது ஒவ்வொன்றும் நம்மை அறியாது சேரும் தீயவினகளை நீக்கும் அருள்ஞானக் கோவில். ஆகவே, கோவிலை நாம் மதித்து நடத்தல் வேண்டும். பிறருடைய கஷ்டத்தையோ, வேதனையையோ, சொல்லக் கூடிய இடமல்ல கோவில்.
2. மகரிஷிகள் பிறந்த நாடு - நமது நாடு
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினான் அகஸ்தியன். அதைப் போல, மனிதனுக்குள் உணர்வின் இயக்கமாக வந்த நிலையை, மனிதரில் ஒளியாக மாற்றிய அருள் உணர்வை நாம் கலந்து, இதைத் தணித்து, உணர்வின் தன்மையை ஒன்றாக்கி, பிறவியில்லா நிலை அடையச் செய்யக் கூடிய ஆலயம் அது.

நமக்குள் அறியாது சேர்ந்த, தீய வினைகளால் ஏற்பட்ட நோய்களை நீக்கும் நிலையாக, ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள். உலகிலேயே இல்லாத நிலைகளை, நம் நாட்டில் அமைத்தார்கள்.
வானவியல், புவியியல், தாவரஇயல், உயிரியலில்
நாம் எப்படி வளரவேண்டுமென்ற தத்துவத்தைக் கூறிய நாடு,
மகரிஷிகள் பிறந்த நாடு.
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று இருளை நீக்கி, ஒளி என்ற நிலைகள் பெற்று பகைமையில்லாத நிலைகளில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார், துருவ மகரிஷி.

அந்த நிலையைப் பெறுவதற்காகத்தான், ஆலயப்பண்புகளில் “ஏகாதசி விரதம்” என்று வைத்தார்கள். கடைசியாக வைகுண்ட ஏகாதசி என்று, எல்லா கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு என்று, வடக்கு வாயிலை வைத்திருப்பார்கள்.
அந்த அருளைப் பெற்று, ஏகாதசி அன்று ஒன்றுபட்டு இருந்தால், வடக்கு வாயில் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று, அந்த நிலை அடையலாம் என்று தெளிவாக ஆலயப் பண்புகளில் கூறியிருக்கின்றனர்.