ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2014

பூமி உறைபனியாக மாறினால் திரும்பிவிடும்

1. யுரேனியம் எப்படி உருவாகின்றது?
சூரியன் தனது இயக்கத்தால், விஷத்தின் தன்மையை, தனது பாதரசத்தால் தாக்கி, வெப்பம், காந்தம் என்ற நிலைகளை உருவாக்கி, கடைசி நிலைகளில் உள்ள விஷத்தைத் தனக்குள் கவர்ந்து, அந்த விஷம் ஒரு இயக்க அணுவாக மாறி, அது எதிலே போய் இணைகின்றதோ, அந்த உணர்வை அது இயக்கும். 

27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களை அமைத்து, அதிலே வருவதைத் தன் உணவாக உட்கொண்டாலும், அவை சூரியன் அருகிலே வரப்படும்போது, தனது பாதரசத்தால் மோதுவதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

ஆனாலும் சூரியன் கவரும்போது, பூமி இடைமறித்தால், பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வருவது மோதி, மின்னலாகி, கடலிலே பட்டால், யுரேனியமாக மாறுகின்றது.
மரத்தில் பட்டால் கருகுகின்றது. பூமியின் பரப்பில் பட்டால், ஊடுருவி நடு மையம் அடைகின்றது.

இவ்வாறு, 27 நட்சத்திரங்களும் கலந்து, கொதிகலனாகி, இயக்கச் சக்தி வருகின்றது. இந்தக் கலவைகள், பலவிதமான வித்தியாசமான நிலைகள் வரப்படும்போது, உணர்வுக்கொப்ப பாறைகளும், மண்களும் மற்றும் பலவிதமான நிலைகள் மாற்றமாகிக் கொண்டேயுள்ளது.

இதையெல்லாம் பார்ப்பதற்கு, இரண்டு வருடம், மின்னல் அதிகம் உள்ள இடங்களுக்கு குருநாதர் கூட்டிச் சென்று, சாப்பாடு இல்லாமல் பார்க்கச் சொன்னார். ஒரு நிமிடம் மாறிவிட்டால், பார்க்க முடியாது.
இப்படி, கடலில் மின்னல் அலைகளில் தாக்கப்படும்போது, மணலாக உருவாவதை, விஞ்ஞானிகள் யுரேனியமாக மாற்றி, கதிரியக்கப் பொறிகளாக மாற்றி, அணுகுண்டுகளாக வெடிக்கச் செய்து, இது வெடித்த பின்,
அதே இயக்க அணு தனக்குள் எடுத்து, பூமியில் பரவியிருந்தாலும், 
அதிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் பிரபஞ்சத்தில் படர்ந்து,
அருகில் இருக்கும் புதனுக்குச் சென்று, உலோகங்களாக மாறி,
புதனில் வெளிப்பட்டு, சூரியனில் பாதரசமாக மாறுவதை, 
விழித்திருந்தே பார்க்கச் செய்தார்.

பிரபஞ்சத்தில் நம் பூமி ஒன்றில்தான், தாவர இனங்களின் வளர்ச்சி உள்ளது. தாவர இனங்களின் மணத்தை உயிரணு நுகர்ந்து, இயக்கச் சக்தியாக மாறுகின்றது. தாவர இனத்தின் சத்து உயிரிலே மோதி, ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதுதான் பிரணவம்.

மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை இருப்பதினால், அது உயிரில் மோதும்போது பிரணவம். அங்கு விஷத்தின் ஆற்றலே வரும், வளர்ச்சியும் குன்றி இருக்கும். 

நம் பூமியில் மட்டும்தான், இதன் உணர்வுகள் வளர்ச்சியாகி, மனிதனாக வளரச் செய்கின்றது. இதைத் தெளிவாக தெரிந்துகொள்தல் வேண்டும்.

ஆக, அணுகுண்டுகளை வெடித்து இங்கு பரப்பச் செய்யும்போது, இதன் துணை கொண்ட கோள்களிலும், இது சேர்கின்றது. நமது பூமியில் கதிரியக்கம் எங்கெல்லாம் அதிகமாகின்றதோ, அங்கெல்லாம் உணர்வுகள் கரைகின்றது.
கரைந்த உணர்வுகள், பூமி சுற்றப்படும்போது,
அது பூமிக்குள் போகும் பக்கமெல்லாம்,
மோதல் ஏற்படுகின்றது.

எப்படி கடல் அமைதியாக இருப்பினும், அதில் உள்ள பாறைகள் மோதும்போது, சப்தங்கள் வருகின்றதோ,  அதைப்போல கூழாக பூமிக்கு அடியில் மோதும்போது, பாறைகளில் உள்ள இடைச் சந்தில் மோதி, வேகமாக ஓடும்போது,  அதிர்வு வருகின்றது. ஆகவே, இது மோதலில் வெப்பம் அதிகமாகும் பொழுது பூமி பிளக்கின்றது.
2. லேசர் கதிரியக்கங்களால் நம் பூமிக்குள் ஏற்படும் தீய விளைவுகள்
இதே மனிதன் லேசர் கதிரியக்கங்களை உருவாக்கினான். எப்படி மின்னல் ஊடுருவி ஓடுகின்றதோ, அந்த லேசர் இயக்கத்தை தனக்குள் எடுத்து, மின்னலைப் போல லேசரை உருவாக்கிவிட்டான்

மனிதனால்  இப்படி ஏற்படுத்தப்பட்ட உணர்வுகள் அனைத்தும், சூரியனையே சாடுகின்றது, சூரியனே அழியும்  நிலைகள் உருவாகிவிட்டது. அதற்குப் பின், உணர்வுகள் சிறுத்துவிடும். 

அதற்குமுன், இதை எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான், நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழிகள். அதைத்தான் இப்பொழுது, யாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்.
3. நம் பூமி உறைபனியானால் திரும்பிவிடும்
இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள், எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ, அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகி, பூமி திரும்பப் போகின்றது.

அது உறைபனியாகி விட்டால், சூரியனின் இயக்கம் இல்லை என்றால், பூமி நகர்ந்து செல்லும் பொழுது குளிர்ச்சி அதிகமாகி, இந்த உணர்வுகள் உறையும் பருவம் வருகின்றது. அதிலிருந்து தப்ப முடியுமா என்றால் முடியாது?

இன்று உள்ளது நாளை இல்லை. என்றும் நிலையானது உயிர். தீயிலே குதித்தாலும் உயிர் வேகாது.

உடலில் உள்ள உணர்வின் தன்மை, உடலில் உள்ள அணுக்களை,
உயிரைப் போல உருவாக்கிவிட்டால்
என்றும் அழியாது, இதுதான் வேகாநிலை.
               
அந்த வேகாநிலையை இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், வட துருவத்தின் வழி கவரும் பொழுது, பூமி உறைபனியாகி எடை கூடி குடை சாயும் நிலையில் இருந்தது.
அகஸ்தியன், பூமியை தென்பக்கமாக திசை திருப்பி
அதாவது சூரியன் பக்கமாகத் திருப்பி வைத்து,
சூரியனின் கதிர்கள் தென் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு,
உறைபனிகளை உருகச் செய்து,
கடல் நீராகப் பெருக்கச் செய்து
இன்று வரை சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதைத்தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கே அனுப்பி பூமியைச் சமப்படுத்தச் செய்தான் என்று காவியத் தொகுப்புகள் உண்டு.

அதில் உள்ள மூலத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதைப் படிப்போர் அனைவரும் அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காத்திடும் அருள் சக்தி பெறவேண்டும். அருள் ஞானிகளாக வரவேண்டும் என்பதுதான் நமது குரு காட்டிய அருள் நெறிகள்.

கணங்களுக்கெல்லாம் ஈசா, கணேசா

நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம். பல கோடி சரீரங்களில் தீமைகளை நீக்கி, நீக்கி, அந்த வினைகளுக்கு நாயகனாக, தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது என்பதை, சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

எல்லா உயிரினங்களும் விஷத்தைத் தன் உடலாக்கி, வலுவாக இருக்கின்றன. மனிதனோ, விஷத்தினை நஞ்சாகப் பிரித்துவிட்டு, நல்ல உணர்வை வலுவாக்கி, நஞ்சை மலமாக்கும் திறன் பெற்றவன்.

நஞ்சென்று தெரிந்து கொண்டபின்,
நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது மனித உடல்.
அதனால்தான் “அங்குசபாசவா”, என்று காட்டப்பட்டது.
தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வந்தபின், தீமையை நீக்கிடும் சக்தி பெற்றது மனித உடல்.

இதையெல்லாம் உருவாக்கியது நமது உயிர். நம் உடலில் உள்ள கணங்களுக்கு எல்லாம் ஈசா, கணேசா என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன், இந்த உயிரை மதித்து நடப்பதற்கு, வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்று, இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனானபின், எத்தனையோ உயிரினங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ இயந்திரங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ தாவர இனங்களைப் புதிது புதிதாக உருவாக்குகின்றான்.

எந்த உயிர் மனிதனாக உருவாக்கியதோ அது முழுமுதல் கடவுள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் இதைச் சொல்லியுள்ளான்.
என்று மனிதனை உருவாக்கியதோ,
அது முழுமையான கடவுள்.

ஆகவே, அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும். ஒளியின் சரீரம் பெறவேண்டும். மனிதனுக்குத்தான் அந்தத் தகுதி உண்டு.

அவனோடு ஒன்றி, அவனாக மாறும் பக்குவத்தைத்தான் ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர், அதாவது, உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும் நிலை. அந்த நிலை நீங்கள் பெற எமது அருளாசிகள்.

January 5, 2014

சிவன் ஆலயத்தில் காட்டப்படும் பிரதோஷம் - நந்தீஸ்வரனுக்குச் சாப்பாடு எது?

நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும், வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் பிற தோஷங்களாக (பிரதோஷம்) நமக்குள் வந்துவிடுகின்றது.


பிற தோஷத்தை எப்படிப் போக்குவது? என்றுதான் சிவன் ஆலயத்தில் காட்டப்படுகின்றது.


நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்றால்,  மாலை 4 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று, விளக்கு பூஜை வைத்து, அர்ச்சனை செய்து, விரதம் இருந்து, ஈசனுக்கு அபிஷேகம் செய்தபின், நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.


அதாவது, நான் எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டிருக்கின்றேன். குடும்பத்தில் நோயும், கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கின்றான். நீ போய் ஈசனிடம் சொல் என்று,
பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக,
அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.


நந்தீஸ்வரன் என்றால்,
நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை
உயிரான ஈசன் உருவாக்கும்.
நம் உடலுக்குள் போனவுடன், அதே குணத்தை உருவாக்கும்.


நமக்குள், நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று, நந்தி நமக்குள் சென்று, அவன் எப்படி தீமைகளை நீக்கினானோ, அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.


அப்படி நீக்குவதற்கு  நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்? என்பதற்காக காலை 4 மணிக்கு இதை எடுத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று,
நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குத்தான்,
இப்படி சாப்பாடு கொடுக்க வேண்டும்.

January 4, 2014

மெய்யை அறியச் செய்வான் நாரதன்


1. மெய்யை உணர்த்தக்கூடிய அணுவின் ஆற்றல் - நாரதன்
உலகை சிருஷ்டிக்க ஒரு அணுவின் தன்மை ஆகின்றது. அத்தகைய அணு தான் “நாரதன்’ என்பது.

ஆக, ஒரு கோளின் தன்மையானாலும், ஒரு உணர்வின் தன்மயானாலும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு உணர்வின் ஆற்றல் மற்ற பொருள்களில் பட்டவுடன், அது உருவாக்கும் மாற்றமும்,
பூமியிலேயோ, மற்றவைகளிலோ,
அதிசயப்படத்தக்க அந்த உணர்வின் ஆற்றல்கள்
இயங்குவதை நாம் பார்க்கலாம்.

இன்று நாம் சிறுநீரை டெஸ்ட் செய்யும் பொழுது, நாம் ஒரு திரவத்தை ஊற்றியவுடன், அதற்குத்தக்கவாறு அதனுடைய உணர்வுகள் எவ்வாறு பிரித்துக் காட்டுகின்றது. அதனுடைய சத்துக்கள் எவ்வாறு பிரித்து, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான், அந்த மெய்ஞானிகளிடம் இருந்து வெளிப்படுவதை, மனிதன் சுவாசத்தில் ஈர்க்கப்பட்டால், மனிதனுக்குள் அந்த மெய்யை உணரக்கூடிய  ஆற்றல்கள் நமக்குள் வளர்கின்றது.
 
நாரதர் என்ற அலையைச் சுவாசிப்பதற்குத்தான், இன்று நாம் செய்யும் இந்தத் தியானத்தின் பலன். ஆக, நாரதன் கலகப்பிரியன். அந்தக் கலகமோ நன்மையில் முடியும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய, அந்த மெய் ஒளியின் தன்மையைத் தான் நாம் இந்த தியானத்தால் சுவாசித்து, அந்த உணர்வின் ஆற்றலை நம் உடலுக்குள் செலுத்திவிட்டால்,
அந்த மெய்ஞானிகள் எவ்வழிகளில் சென்றார்களோ,
அதைப் போன்று மெய் ஒளியின் தன்மையை
நம் எண்ணத்திலே தோற்றுவித்து, அந்த உணர்வுகளைச் சுவாசித்து,
நம் உடலுக்குள் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறுகின்றோம்.

அப்படி சக்தி பெற்றபின், பேரண்டத்தின் பேருண்மையை, நமக்குள் உளமாற வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும், வருகின்றது. அந்த ஆற்றலை வளரச் செய்வதற்குத்தான், இந்த தியானத்தைச் செய்கின்றோம்.
2. இருளான பொருள்களை எரித்து வரும் வெளிச்சத்தால் - பொருளைக் காண்கின்றோம்
இன்று, இருளான பல பொருள்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து, மற்ற பொருள்களைக் காண்கின்றோம். மற்ற பொருள்களைச் சேர்த்து, ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வின் நிலைகள் ஆக்குவது போன்று,
நமக்குள் நம் எண்ணத்தை ஒளியாக்கி,
நமக்குள் எண்ணும் நிலையினுடைய தன்மையை,
சிருஷ்டிக்கும் தன்மை பெற்ற நாம்
ஒவ்வொருவரும் செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும் தன்மைதான், அந்த மெய்ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படுத்தும், அந்த நாரதரான உணர்வின் அலைகளை நாம் சுவாசித்து, நம்மையறியாமல் இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டுத்தர, இந்த நாரதர் என்ற இந்த அணு, நமக்கு வழிகாட்டும்.

இன்று ஒருவன் நமக்குத் துன்பம் செய்தான் என்றால், இப்படிச் செய்தான் என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். “இரு நான் பார்க்கிறேன்” என்றும், “உன்னை அழித்துவிடுவேன்” என்று பயமுறுத்தி இருந்தால், அவனை நினைக்கும் பொழுதெல்லாம் “திடுக்… திடுக்…” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்.

அந்த பய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து, அப்பொழுது நாம் செயலிழக்கச் செய்யும் நிலையும், மேலும் பல நிலைகள் வருகின்றது. ஏனென்றால், அவன் பதித்த நிலைகள் நமக்குள் வேலை செய்கின்றது.

உங்களுக்குள் எத்தகைய பயம் வந்தாலும், மெய்ஞானியரின் அருள் சக்தியைப் பதிவு செய்து, யாம் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

“ரிஷியின் மகன் நாரதன்” அவன் ஒரு முனிவன். ஏனென்றால், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக் கூடிய ஒளிதான், ரிஷியின் மகன். அந்த ஒளியிலிருந்து வந்ததுதான் அந்த அணு நாரதன். அந்த உணர்வின் செயலாக்கம்தான் நாரதன்.
அந்த உணர்வின் தன்மை வந்தவுடன், அதன் ஆணைப்படி அது நல்லதை வழிகாட்டி, இருளை மாய்க்கும் தன்மை – முனி என்ற நிலையை அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள். ஆகையினாலே, அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று, இருளினை நீக்கி அருள் வழி வாழ்வோம்.

மெய்ஞானியர்களின் அருள் சக்தியை நம்முள் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைதான் இந்த உபதேசம்.

January 2, 2014

பிள்ளை இல்லாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சொல்வதன் பொருள் என்ன....?

1. தாய் தந்தையரை வணங்கிக் குழந்தைகளை ஆசி பெறச் செய்ய வேண்டும்
வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருந்து, தியான முறைப்படி அனைவரும், வீட்டிலிருக்கக்கூடிய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் சப்தரிஷிமண்டலத்துடன் இணைய வேண்டும், அந்த உயிராத்மாக்கள் ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று அந்த குடும்பத்திலுள்ளோர்கள் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணியபின், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி, நாங்கள் பெற வேண்டும், என்று உங்கள் உடலுக்குள் நினைத்துவிட்டு,
நம் வீட்டில் அனைத்து இடங்களிலும்
அந்தச் சக்தி படர வேண்டுமென்று,
உங்கள் வீட்டின் பதிவிலே,
நீங்கள் எடுத்துக்கொண்ட அலைகளை,
நம் பூமியிலே ஈர்த்து படரச்செய்கின்றீர்கள்.

அப்படி படரச்செய்தபின், குழந்தைகளும் அம்மா, அப்பா அருளாசியால் "நலமும் வளமும் பெற வேண்டும்’’, ‘’கல்வியில் ஞானம் பெற வேண்டுமென்று" அம்மா, அப்பா அருளாசி பெற நாம் பழகிக் கொடுக்க வேண்டும்.

நம் குழந்தைகள், வெகுதூரத்தில் ஹாஸ்டலில் படித்தாலும், இப்படி எண்ணி விட்டுத்தான் செயல்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருக்கிறோம் என்ற நினைவை, அவர்களுக்கு ஊட்டிப்பழக்க வேண்டும். இதைப்போல, குழந்தைகளுக்கு நாமும் அந்த அருளாசியைக் கொடுக்க வேண்டும்.

சூரியன், ஒரு குடும்பத்தினுடைய நிலைகளாக, மற்ற கோள்கள் எத்தனை உணர்வுகள் குணங்கள் கொண்டிருந்தாலும், ஒரே அமைப்புக்குள் ஒன்று சேர்ந்து பிரகாசிக்கின்றது.

அதைப்போல, ஒரு குடும்பத்திற்குள் பத்து குழந்தைகளின் எண்ணங்கள் மாறுபட்டிருந்தாலும், தாய் தந்தையை வணங்கும் நிலைகள் கொண்டு,
ஒரே இனமான எண்ணங்களுக்கு வரும் போது
தாயின் சொல்லைக் கேட்கும்.
அந்தக் குழந்தைகளுடைய உணர்வை மாற்றி,
நல்வழியில் இட்டுச் செல்லவும் இது உதவும்.
2. நம் குழந்தைகள்தான் நம்மை பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியும்
ஆக, தாய் தந்தையரிடம் அந்தப் பாசங்கள் வளர்ந்தபின், நாம் இந்த உடலை விட்டுச்சென்ற பின், அந்தக் குழந்தைகள் யாம் இப்பொழுது காட்டிய வழிகொண்டு,
தாய் தந்தையருடைய உயிராத்மாக்களை,
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலையாக,
ஒளிசரீரம் பெற வேண்டும் என்று அவர்கள் ஏங்கி,
உடனடியாக விண் செலுத்த வேண்டும்.

எந்தச் சாமியாரும் விண் செலுத்த முடியாது
நம் குழந்தைகள்தான் விண்செலுத்த முடியும்
எந்த ஜோசியமும் நம்மை அனுப்பாது,
எந்த உடலின் சரீரமாக இருக்கிறார்களோ
அந்த குழந்தைகள்தான் விண்ணிலே செலுத்த வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படி அலைவரிசைகளை வைத்திருக்கின்றனரோ, அதேபோன்று தாய் தந்தையரின் உணர்வின் அலைகள்தான், தசைகளாக இன்னும் இங்கு இயங்குகின்றது

அவர்கள் உணர்வின் சத்துக்கள் அணுக்களாக இருக்கும்போது, அந்த அணுவின் உணர்வுகளாகத்தான் இருக்கும். அதன் வழி கொண்டு, நாம் துடிப்பான இருக்கமான தொடர்புகொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின்  சத்துக்களை நாம் பெருக்கி, அவர்களுடன் இணைக்கச்செய்து உயிராத்மாவை விண் செலுத்த வேண்டும். 

அப்பொழுதுதான் அந்த ஒளிசரீரத்தைப் பெறமுடியும்.

இன்று கூட்டுக்குடும்ப தியானம் இருப்போர் அனைவருமே, பௌர்ணமி தியானத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைக்கச்செய்ய வேண்டும்.

பௌர்ணமி தியானத்தன்று, சப்தரிஷி மண்டலம் நம் அருகிலே வருவதனாலே,
இந்தப் புலனறிவுக்குள்
அந்த அலைகளின் எண்ணங்களைச் சிக்கச்செய்து,
உங்கள் ஆற்றலை அதனுடன் இணைக்கச் செய்து,
அந்த ஒளியான எண்ணங்கள் உங்களுக்குள் தோற்றுவிப்பதனாலே,
அடிக்கடி நாம் அந்த எண்ணங்களை எடுக்கும் போது,
சப்தரிஷிகளின் அருள்சக்தியைப்பெற முடிகின்றது

அந்த ஆற்றல் இல்லாதபடி, நாம் எதையுமே அனுப்ப முடியாது அதைப்போன்று, ஒரே உணர்வுகொண்டு எண்ண அலைவரிசையில், ஒவ்வொருவரும் இந்த கூட்டுத்தியான நேரங்களில் எண்ணி, அந்த சப்தரிஷி மண்டலங்களின் அருள்சக்தி பெற வேண்டுமென்று எண்ணி ஏங்கிவிட்டு, இறந்தவர்களுடைய உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, அதை உந்தி அனுப்பவேண்டும்.

அப்பொழுதுதான், அந்த சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை, நாம் அனைவரும் பெற முடியும்.

January 1, 2014

“எப்பொழுது பார்த்தாலும் இவன்/இவள் இப்படித்தான்” என்று குறையாகச் சொல்வார்கள் - உண்மை என்ன...?

1. “எப்பொழுது பார்த்தாலும் இவன் இப்படித்தான்” என்று குடும்பங்களில் குறை வந்துவிடும்
ஒவ்வொருவரும் குடும்பத்திலோ, மற்ற நிலைகளிலோ, நம்மையறியாமல், அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள், அவர்கள் உடலில் வேலை செய்துவிடுகின்றது. அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும், முடியவில்லை.

இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட, லேட்டாகி விட்டது என்கிற பொழுது, அவனை நினைத்தவுடன், 
“அவன் எப்பொழுது பார்த்தாலும், இப்படித்தான் இருக்கிறான்”. 
ஒரு காரியத்திற்குப் போனால், லேட்டாகி, 
அந்தக் காரியத்தை முடித்தவிட்டு வருவான், என்று சொல்வோம்.

ஜெயித்துவிட்டு வந்தான் என்றால் கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். 
அவன் சென்று வந்த காரியம் என்ன என்று கேட்காதபடி, அவன் இப்படித்தான், எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான், என்று அவனைத் திட்டவும், பேசவும், ஏசவும்தான் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும்கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும். அதைக் கேட்டு அறிவதற்கு தாமதமாகும்.

நாம் நல்லது நினைத்தாலும்கூட, நம்மையறியாமல்
அந்த உணர்வுகளை நிற்கச் செய்வோம்.
அந்த உணர்வின் தன்மை
அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்துவிட்டால், அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது,
நாம் என்ன நல்லது செய்தாலும்,
அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.
2. உண்மையை அவர்கள் உணர வேண்டும் என்று எண்ணி
ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்
ஆகையினாலே, அதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால், “ஆத்ம சுத்தியை” நாம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்து முடித்தபின், அவர்கள் "பேசிய" முறைகள், அவர்கள் "செய்த" முறைகள், அவர்கள் உணர்ந்து, அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும், என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். வாயிலே சொல்லிவிடாதீர்கள். சொன்னால் வம்பு வந்துவிடும்.

உங்கள் எண்ணத்தால் இப்படி வளர்க்கச் செய்யும் பொழுது, அந்த உண்மையின் தன்மையை அவர்கள் அறியும் தன்மை வந்துவிடும். ஏனென்றால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சோர்வோ, மனச் சஞ்சலமோ, வெறுப்போ அடைந்தால், இதைப் போன்ற உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள்
நம்மை அறியாமையிலிருந்து மீட்க,
நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள், இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. மாமியாருக்கும், மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு, அப்பாவைக் கூடப் பிடிக்காது. அந்த அளவிற்கு, இன்று பெரும்பகுதி ஆகிவிட்டது.

இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே, அந்த நிலைதான். இதைப் போன்ற நிலைகளெல்லாம், நாம் ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வலைகளை மாறாமல் இருப்பதற்கு, இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம், என்று எண்ணி விடாதீர்கள். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்கு வாக்காகக் கொடுத்து, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு, இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.

நம்மைத் திட்டுபவர்களிடம் “திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் ரஎன்று சொல்லிவிடுங்கள்

ஒவ்வொரு நிமிடமும், நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி, உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு, உங்களைத் திட்டியவர்கள், அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது, நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி, எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ, அந்த சமயம், நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ,
அது அவர்களுக்கு நடந்து,
“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்”
என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது, உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால், நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டே இருந்தபின், என்று நாம் அவரிடம் சொல்லிவிட்டால், அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டு, திட்டியவரிடம், “நீங்கள் எப்படியெல்லாம் திட்டினீர்களோ, அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம்” என்று
சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்
அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்மசுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன், “ஆ” என்று அவர்கள் இழுத்தால் போதும், அவர்கள் அறியாமல் செய்த தவறை, நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று, அவர்கள் செய்த தவறை உணர்த்தும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.