1.எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது கல்யாணராமா…! (மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்யும்
நிலைகள்)
2.அந்த மகிழ்ச்சியை உருவாக்குவதற்குத் தான் கோவில்களில் தெளிவாகக் காட்டுகிறார்கள்.
அரசன் மதத்தின் அடிப்படையில் அரசு ஆட்சி புரிவதற்கு மக்களை ஒன்று
திரட்டினாலும் மக்கள் மத்தியிலே அதே மதத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து
செய்யும் நிலையில் வருகிறார்கள்.
அரசன் தன் ஆசையின் நிலை கொண்டு இதை எல்லாம் செய்தாலும் அந்த அரசனுக்குக் கீழ் தான்
மக்கள் இருக்கிறார்கள். அரசனால் உருவாக்கப்பட்ட மதமாக இருந்தாலும்…
1.ஞானிகளோ சாதாரண மக்களும் அவர்கள் தத்துவத்தைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தினார்கள்.
2.அப்படி உருவாக்கப்பட்டது தான் ஆலயத்தின் சாஸ்திரங்கள்.
எல்லோருடைய பகைமைகளையும் அந்த ஆலயத்தில் மறக்கச் செய்கின்றார்கள். ஒற்றுமை ஏற்படும்படிச்
செய்கிறார்கள்.
அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ
நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அலைகளாக மாற்றுகின்றது.
அதை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன்னாடி பரவச்
செய்கிறது. அதிகாலை 4.30லிருந்து 6.00 மணி வரை நம் புவிக்குள் பரவச் செய்கின்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருந்தால்
காலையில் 4 மணிக்கு எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பரவ
வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
எல்லோரும் ஏகோபித்த நிலையில் அவ்வாறு எண்ணினால் மனிதர்கள் ஈர்க்க மறுத்த… மனிதர்கள்
பிடிப்பில்லாத மற்ற தீமையான உணர்வுகளை எல்லாம்.. காலை 6 மணிக்குச் சூரியனின்
ஒளிக்கதிர்கள் கவர்ந்து மேலே கொண்டு சென்று பின் கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.
2.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலம் (பரமாத்மா) தூய்மை
அடைகின்றது.
அதற்குத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து அதிகாலையில்
வணங்கும்படிச் செய்கிறார்கள்.
அங்கே இருக்கும் ஆற்றிலே உடல் அழுக்கையும் போட்டிருக்கும் உடைகளின்
அழுக்கையும் போக்குகின்றோம். அப்படியும் போகவில்லை என்றால் சோப்போ மற்றதையோ
போட்டுத் தூய்மையாக்குகின்றோம்.
தூய்மையாக்கிய பின் அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை எண்ணி எடுக்கும்படிச் செய்கிறார்கள்.
1.நாம் அந்த அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் (திருமணம்) கலந்து கொண்டால்
2.அந்தச் சக்தி நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையாகின்றது
3.அந்த ஒளியின் கதிராக தனக்குக் கீழ் அதை மற்றதை இயக்கும் சக்தியாகப் பெறும்.
அந்த ஆற்றலை வைத்து பூமியில் உள்ள ஓசோன் திரை கிழிந்ததையும் அடைக்க முடியும். எப்படி…?
ஓசோன் திரை கிழிந்து அதனுடைய விளைவுகள் என்னென்ன செய்கிறது…?
விண்வெளியிலிருந்து வரும் விஷத்தன்மைகள் அதன் வழி கூடி நம் பூமிக்குள் பரவிக்
கொண்டே உள்ளது.
ஆனால் அது எல்லா இடத்திலும் நிற்காது. அதாவது விஷத்தன்மையாகப் பூமியில்
பரவினாலும்…
1.தன் இனத்தை எடுத்து அங்கங்கே ஒரு குவியலாக வரும்.
2.குறிப்பிட்ட பகுதியில் இருக்கும். எல்லா இடத்திற்கும் போகாது.
நாம் வசிக்கும் தெருவையும் ஊரையும் காக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தி எல்லோரும் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று
1.ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இந்த அலைகளைப் பரப்பினால்
2.இந்த அலைகள் அடர்த்தியாக வந்தவுடன்
3.அந்த விஷத் தன்மைகளை விலக்கி விட்டுவிடும்.
4..இந்த ஒரு பகுதியாகவது கொஞ்சம் காக்கப்படும்
5.அப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்கு தான் இதைச் சொல்கிறோம்