ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2019

குறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது…!


தினசரி வாழ்க்கையில் குறைகளைக் காணும் பொழுது தான் விலகிச் செல்கின்றோம். குறையை உணர முடியவில்லை என்றால் அதிலேயே வீழ்ந்து மடிவோம்.

மற்ற உயிரினங்கள் எல்லாம் வருகின்றது, ஒரு விளக்கு (தீ) எரிவதைக் கண்டு வருகிறது. வேகமாக வந்தவுடனே கருகுகின்றது. அதற்குத் தெரியாது. ஆனால் மனிதர்கள் நாம் தெரிந்தவர்கள்.

இதைப் போல் நம்முடைய தூய்மைப்படுத்தும் எண்ணங்களும் உணர்வுகளும் நஞ்சால் கருக்கப்படுகின்றது. எப்படி…?

மற்றொரு மனிதனின் வேதனையை நுகரப்படும் பொழுது உணர்வின் வேகத்தால்… ஆசையின் நிலையாலே…
1.நாம் சரியாக இல்லை என்றால்
2.நம்முடைய நல்ல உணர்வுகளை அது கருக்கிவிடுகின்றது.

விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் உருவாகின்றது. அதே விஷத்தின் தன்மை நம்மைத் தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை ஆவியாக மாற்றிவிடுகின்றது.

இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது. ஆக விஷத்தால் கவரப்படும் பொழுது என்ன செய்கிறது…? எதிலே பட்டாலும் அந்த விஷம் அதைக் கெடுக்கின்றது.
1.அந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான்…
2.உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

நாம் இந்த உடலிலே எவ்வளவு நாள் இருக்கின்றோம்…? கோடிக் கோடிக் கோடி பணம் பெற்றாலும் இங்கே சரியான மனம் இல்லை என்றால் என்ன செய்யும்…? அந்தச் சொத்தையே பாதுகாக்க முடியாது…! சிதறிப் போகும்.

உங்கள் சொத்தைக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் உழட்டிக் கொண்டிருந்தால் அதைத் திருப்ப முடிகின்றதா…? பெரியவர்களால் சம்பாரிக்கப்பட்டது தான்…! இருந்தாலும் அதை இவர்களால் பாதுகாக்க முடிகின்றதா…?

அவர்களை எண்ணி நீங்கள் என்ன செய்கின்றீர்கள்..? படித்திருக்கின்றீர்கள்…! ஆனாலும் இந்தத் தியான மார்க்கத்தில் வரும் பொழுது
1.இப்படி இருக்கின்றதே..! என்று நீங்களும் உங்களுக்குள் வேதனையைக் கலக்கின்றீர்கள்.
2.அப்பொழுது அந்தச் செல்வம் நமக்கு வேதனைக்குரியதாக ஆகின்றது.

ஒரு நகரையே ஆட்சி புரியும் அந்தக் கால ஜமீந்தாராக இருந்தாலும் அது சிற்றரசருக்குச் சமம். அதனின் விளைவுகள் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது இது பகைமை உணர்ச்சியைத்தான் ஊட்டும். பகையை வளர்க்க முடிகிறது. நல்லதை வளர்க்க முடியவில்லை.

அதற்குத்தான் இந்தக் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை சேர்த்துப் பழக வேண்டும்.

இதை எடுத்துப் பழகுவதோடு மட்டுமல்லாதபடி அந்தத் துருவ தியானத்தில் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் வலு கூட்டிப் பழக வேண்டும். அந்தச் சக்தி பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நாம் பாட்டன் பூட்டன் முன்னோர்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் போயிருந்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைய வேண்டும் என்று அங்கே கரைக்க வேண்டும்.

அவர்களை அங்கே இணைத்து நம்முடைய தூதுவர்களாக ஆக்கிய பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியை எளிதில் பெற முடியும்.
1.அவர்கள் முதலில் ஒளிச் சரீரம் பெற்றுச் சப்தரிஷிகளாக ஆகின்றார்கள்.
2.அவர்களைத் தொடர்ந்து நாமும் அந்த எல்லையை அடைய முடியும்.

இதற்கு முன் பழக்கமில்லை. இப்பொழுது அதை நாம் செய்து வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து விடுபட்டுப் “பிறவியில்லா நிலையை…” அடைதல் வேண்டும்.