நமது எண்ணம் எந்நிலையில் செல்கின்றதோ அந்நிலை கொண்டே நமது சுவாச நிலைகள்
செயல்படுகின்றன.
1.நாம் உணர்ச்சி வயப்படும் பொழுது
2.நெடி கலந்த நிலைகள் நம் உயிரினத்தில் (புருவ மத்தியில் உள்ள உயிரில்)
தாக்கப்படும் பொழுது
3.உணர்ச்சிகளால் “உயிரினத் துடிப்புகள் அதிகரிக்கின்றன...”
இந்நிலையில் கோப உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது நம் நிலையை நாம் கட்டுப்படுத்த
முடியாமல் சக்தியை இழக்கின்றோம்.
இதே போல் சோர்வான எண்ண நிலைகள் இருக்கும் பொழுது மந்தமான சில சுவாச நிலைகள் நம்
உயிரில் தாக்கப்படும் பொழுது உயிர் துடிப்பு மிகவும் “குறைவான துடிப்புடன்…”
இயங்குகிறது. அப்பொழுது ஏதாவது செயல்படுத்த முயலும் பொழுது நம் சரீரத்தால் முடியாத
நிலை ஆகின்றது.
நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச அலைகள் நம் மன நிலையைப் பொறுத்து
1.கோப நிலையில் உள்ள பொழுது நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச அலையும்
2.சாந்த நிலையில் நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச நிலையும்
3.சோர்வான நிலையில் நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச நிலையும்
4.இப்படி எந்தெந்த நிலைகளில் நாம் ஈர்த்து வெளிவிடுகின்றோமோ
5.அந்தந்தச் சுவாச அலைகள் அனைத்தும் நம் உடலின் ஈர்ப்பு நிலை கொண்டு நம்மையே
சுழன்று கொண்டிருக்கும்.
ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தப் பொருளின் பேரில் எப்படிப்பட்ட
எண்ணத்தைச் செலுத்துகின்றொமோ அந்நிலை கொண்ட சுவாச நிலை நமக்குக் கிடைக்கின்றது.
நமக்கு ஆகாதவரைக் காணும் பொழுது நம் எண்ணம் உணர்ச்சியால் உந்தப்பட்டு நம்மைச்
சுழன்று கொண்டிருக்கும் துவேஷ அணுக்களின் நிலை நம் உயிரினத்திற்குத்
தாக்கப்படுகின்றது.
நாம் ஈர்க்கும் எண்ணங்கள் நம்மை எப்படிச் சுழன்று கொண்டேயுள்ளதோ அந்நிலை கொண்டே
நாம் கண்டிடும் கனவிலும் சுழல்கின்றது.
நாம் விழிப்போடு இருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட எண்ண அலைகளும் நிலைகளும்
நாம் உறங்கும் சமயம்
1.அந்தந்த எண்ண அலைகள் சுவாசத்தின் வழியாக உயிரிலே படும் பொழுது
2.அங்கு ஒலிக்கும் சப்த அலைகள் நம் எண்ணத்தில் வருகின்றன.
3.அந்த எண்ண அலைகளே (தூக்கத்தில்) நம் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அது
கனவாகத் தென்படுகின்றது.
இந்தக் கனவின் நிலையை வைத்துத்தான் இன்றைய விஞ்ஞானிகள் பல நிலைகளை விஞ்ஞான
ரூபத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
பல வித நிழல் படங்களையும் “எக்ஸ்ரே…” போன்ற படம் எடுக்கும் கருவிகளையும் அச்சப்த
அலைகளுக்கு உகந்த இரசாயண நிலைகளைக் கண்டுபிடித்து இந்தக் காற்றிலே ஒன்றுடன் ஒன்று
ஒரே மாதிரிக் கலந்த நிலை கொண்ட காற்றை ஒரு நிலைப்படுத்தி அதைப் பதிவாக்கும் உபகரணங்களையும்
உருவாக்கியுள்ளார்கள்.
கனவு நிலை கொண்டு தான் இன்றைய விஞ்ஞானிகள் பல வகை விஞ்ஞானங்களைக்
கண்டுபிடித்து வான மண்டலத்தில் உள்ள எல்லா நிலைகளையும் அறிந்திட பல அவசர நிலையில்
செயல்படுத்துகின்றார்கள்.
1.முற்றும் அறியும் நிலையை… விஞ்ஞானத்தில் கண்டிடவே
2.பல கோடிப் பொருள்களையும் பல நாட்களையும் விரயம் செய்து
3.விஞ்ஞானத்தில் இவை எல்லாம் கொண்டு வரப்பார்க்கின்றார்கள்.
ஆனால் அன்று வாழ்ந்த ஞானிகளும் சித்தர்களும் உயர்ந்த சுவாச நிலையைப் பெற்று
அச்சக்தியினைத் தன் உயிரினத்தில் (உயிரிலே) பாய்ச்சி அந்நிலை கொண்டே சகல
சக்திகளையும் பெற்று தன் சுவாச அலைகளை வெளியிலே பாய்ச்சி அந்தச் சுவாச நிலை கொண்டே
மண்டலங்களின் சக்தி நிலைகளை அறிந்து அச்சக்தி நிலைகளை எல்லாம் தன்னுள் ஈர்த்தனர்.
1.சரீரத்தில் உள்ள பொழுதே
2.தான் எப்பொழுது விரும்புகின்றார்களோ… அப்பொழுது இந்த உடலை விட்டுச்
சித்தர்கள் வெளியேறுகின்றார்கள்.
3.இன்றும் அழியாத நிலையில் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
4.நாம் எண்ணும் நிலைக்கு நம்முள் ஒருவராக நம்முள்ளேயே வந்து
5.நமக்குப் பல நிலைகளை இன்றும் வந்து போதிக்கின்றார்கள்.
6.எண்ணிய நேரத்தில்… எங்கும்… எந்த உடலில் சென்றிடவும்…
7.அந்த உடலை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் பெற்று அந்தச் சித்தர்கள் வாழ்கின்றார்கள்.
இன்றும்… இனி என்றும்… முடிவில்லா இந்த உலகினில்… முடிவில்லாமல் வாழ்ந்திடும் அந்தச்
சித்தர்கள் அவர்களும் நம்மைப் போல் ஒரு காலத்தில் பிறவி எடுத்து வாழ்ந்தவர்கள்
தான்…!
ஆதியில் படிப்பும் பாடமும் கல்வியும் பட்டமும் எந்த நிலையும் இல்லை. அன்றையக்
காலத்திலேயே தன் அறிவினாலேயே தான் எடுத்த சுவாச நிலை கொண்டு சகல நிலையும்
அறிந்திடும் பேறு பெற்றான் அக்காலச் சித்தன்.
அவர்கள் பெற்ற நிலையை நாமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றேன்.