கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்றும் வராக அவதாரம் என்றும் ஞானிகள்
காட்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு உடலையும் உற்றுப் பார்த்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
1.தீமைகளிலிருந்து விடுபட எந்த உடலைக் கூர்மையாக உற்று பார்த்ததோ
2.அதனின் உணர்வை வளர்த்து அடுத்து அதே உடலாக உருவம் பெறுகின்றது அந்த
உடலுக்குள் சென்று…!
இப்படித்தான் தீமையில் இருந்து விடுபடும் உடலின் வலிமை பெற்று வளர்ந்த நிலைகள்
கொண்டு வராகனாக உடல் பெறுகின்றது. வராகனாக உடல் பெற்ற பின் என்ன செய்கிறது…?
தன் வலிமையான உணர்வைப் பாய்ச்சித் தீமையைப் பிளந்து சாக்கடைக்குள் மறைந்துள்ள
(நறுமணத்தை) நல்ல உணர்வை நுகர்ந்து உணவாக
உட்கொள்கிறது.
நாற்றத்தைப் பிளந்து நல் உணர்வை நுகரும் தன்மையைத் தன் வாழ் நாள் முழுவதும் பெருக்கி
இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைந்து
மனிதனாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.
மனிதனான பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள தீமை விளைவிக்கும்
நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நஞ்சை மாற்றிடும் சக்தியாக “ஆறாவது அறிவு
வருகின்றது…!”
ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் இந்தக்
காற்றுக்குள் மறைந்துள்ள அருள் மகரிஷியின் உணர்வை வலுப் பெறச் செய்து எண்ணத்தால் அதனை
நுகர்ந்தறிந்தால் வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளை எல்லாம் ஒளியாக மாற்றிட
முடியும்.
1.இதனை எவர் ஒருவர் சீராகச் செயல் படுத்துகின்றாரோ அவரே அடுத்துப் பிறவியில்லா
நிலை அடையும் தகுதி பெறுவர்.
2.அந்த மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் குடும்பங்களிலும் பரவச் செய்து மரணமில்லாப்
பெரு வாழ்வாக வாழ முடியும்.
ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோணத்தில் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்
(ஞானகுரு). அந்தப் பதிவின் நினைவாற்றலை நீங்கள் கொண்டு வந்து தீமையை அகற்றிடும்
சக்தியாக விளைய வேண்டும்.
இன்று காற்று மண்டலங்களில் கடுமையான நச்சுத் தன்மைகள் பரவினாலும் அருள்
மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த உலகம்
முழுவதும் பரவி தீமைகள் புகாத நிலையில் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான்
இந்த உபதேசம்.
1.ஆக… நான் ஒருவன் (ஞானகுரு) இருந்து இதை ஒன்றும் செய்ய முடியாது.
2.நான் செய்வேன்..! என்று சொன்னால் அது நானாக அகந்தையாகப் பேசிக் கொள்ளலாமே
தவிர
3.நான் செய்வேன் என்றால் இது அகந்தைக்குரியது
தான்…!
4.நானாக ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு நெல் என்றுமே ஒருவருக்குப் பசியைத் தீர்த்தது இல்லை. அதை விதைத்துப் நெல்
குவியலாக உருவாக்கிய பின் அளவுகோல் அளந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரது
பசியையும் போக்கவும் முடியும்.
ஆகவே அதைப் போல நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த அருள்
மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி அழுத்தமான நிலைகள் கொண்டு அந்த மூச்சலைகளை
இந்தக் காற்று மண்டலத்திலே பெருக்க வேண்டும்.
நம்மையும் காத்து மக்களையும் காக்கும் சக்தியாக வளர வேண்டும்.