ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2019

உடல் உறுப்புகளுக்கு வலுவான சக்தியைக் கொடுக்கும் முக்கியமான தியானம்


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரல்:-
கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அங்கே பெறச் செய்தால் அதில் உள்ள ஆஸ்த்மா டி.பி. போன்ற அணுக்களை மாற்ற உதவும்.

இருதயம்:-
கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்தி அந்த நரம்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கப்படும் பொழுது இருதயத்தை இயக்கும் அந்த நரம்புகளுக்கு வலு சேரும்.

1.அதிலே அடைப்புகள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே அதிகரிக்கப்படும் பொழுது
2.இரத்தத்தின் அழுத்தம் அதிகமாகி அதை எல்லாம் கரைத்துவிடும் சக்தி கிடைக்கின்றது.
3.கரைத்துவிடும் அல்லது அந்த அடைப்புகள் அகன்றுவிடும்.

கல்லீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் கல்லீரல் பெறவேண்டும் என்று எண்ணினால் அதில் உள்ள விஷத்தன்மை குறைந்து சீராக வடிகட்டும் தன்மையும் நம் உடலில் ஆரோக்கியமான நிலையையும் உருவாக்கும். நம் உடலில் உள்ள மண்ணீரலுக்கும் இதைப் போன்று செயல்படுத்துங்கள்.

மண்ணீரல் (பித்த சுரப்பிகள்):-
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் நுகர்ந்து மண்ணீரலுக்குள் செலுத்தப்படும் பொழுது அந்தப் பித்த சுரப்பிகளில் விஷத்தைத் தணித்திடும் அருள் சக்தி அங்கே பெற முடியும்.

எப்படி ஒரு நாகம் விஷத்தைப் பாய்ச்சி தன் உணர்வை எடுத்து நாகரத்தினமாக மாற்றுகின்றதோ இதைப் போல்
1.நம் உடலில் விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தியும் இல்லை.
2.அளவுக்கு அதிகமாக ஆனாலும் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் விஷத் தன்மையாக மாறுகின்றது,

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளில் சேர்க்கப்படும் பொழுது
1.அது சம அளவாக மாறி சாந்தம் கொண்ட அணுக்களாகி
2.நல்ல ஜீரணிக்கும் சக்தியாக உருவாகின்றது,

இதைப் போல் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் செலுத்திக் கொண்டு வாருங்கள்.

ஜீரண உறுப்புகள்:-
கண்ணின் நினைவை இப்பொழுது உங்கள் குடல்களில் செலுத்துங்கள்.

குடல்களில் வேதனை என்ற விஷத்தன்மைகள் இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குடல்களில் உள்ள அணுக்கள் வீரியமாகின்றது… உற்சாகம் அடைகின்றது.

அப்பொழுது அந்த விஷத்தின் தன்மையை அடக்கி குடல் உறுப்புகளைச் சீராக இயக்கக்கூடிய அணுக்களாக மாறுகின்றது.

கிட்னி (சிறுநீரகங்கள்):-
அடுத்து உடலில் உள்ள கிட்னிக்கு (சிறுநீரகங்கள்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பரவச் செய்யுங்கள்.

கிட்னியில் விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டால் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் பலவீனமடைந்து விடுகின்றது. அது பலவீனமடைந்து விட்டால் விஷத் தன்மைகளை வடிகட்டும் தன்மை இழந்துவிடும்.

1.வடிகட்டாத அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அது விஷம் தோய்ந்த இரத்தமாகி எல்லா உறுப்புகளையும் சீராக இயக்காதபடி
3.உப்புச் சத்து… சர்க்கரைச் சத்து… போன்ற நிலைகள் அதிகரித்து விடும்… சமப்படுத்தும் தன்மையையும் இழந்துவிடும்.

அதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கிட்னியை உருவாக்கிய அணுக்களில் பாய்ச்சி அதை வீரியமாக்கி விஷத்தை வடிகட்டும் சக்தி வாய்ந்த கிட்னியாக உருவாக்குங்கள்… உங்களால் முடியும்…!

ஆகையினால் இதைப் போல் நீங்கள் எண்ணி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை பெறச் செய்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் வலுப் பெறச் செய்யுங்கள்.

1.நோய்கள் வராது தடுக்க முடியும்
2.ஒளியான அணுக்களை உடலில் உருவாக்க முடியும்.
3.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.