இன்றைய உலகில் நாம் தவறே செய்ய வேண்டாம்…! நாம் தவறு செய்யாமலே அந்தத்
தவறுக்கு நாம் ஆளாகும் சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றது.
அதற்கு மூலம் எது..?
நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்...!
அந்த உணர்வை இயக்குவது யார்…?
நம் உயிர் தான்…!
நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இயக்கப்படும் போது மனிதனை உருவாக்கிய அணுக்கள் எத்தனை
பாடுபடுகின்றது..? எத்தனை வேதனைப்படுகின்றது…? இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம்
விடுபட வேண்டுமா இல்லையா…?
மனிதன் வாழ்வது கொஞ்சம் நாள் தான். நூறு வருடம் அல்லது நூற்று இருபது வருடம்
அதற்கு மேல் யாரும் வாழ்கிறார்களா…? எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டுப் போய்த்
தான் ஆக வேண்டும்…?
அப்பொழுது யாருடன் செல்ல வேண்டும்..? நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிருடன் தான் நாம்
இப்பொழுது செல்கின்றோம்.
ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி
2.நுகர்ந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக்கி
3.அந்தத் துருவ நட்சதிரத்தின் ஈர்ப்புக்குள் தான் நாம் சென்றாக வேண்டும்
ஏனென்றால் அன்று ஆண்ட அரசர்களால் இந்த உலகம் அழியும் தருணத்திற்கு
வந்துவிட்டது. இன்றும் அதிக மோசமான நிலைகளில் போய்க் கொண்டு இருக்கின்றது
பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அது வீடு வரைக்கும் வந்து சேருமா…?
கையில் பணம் கொண்டு வருவது தெரிந்தாலே தட்டிப் பறிக்க எத்தனையோ வழிகளில் இன்று
இருக்கின்றார்கள்.
சேர்த்த பணத்தை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் போனால் தப்ப முடிகிறதா
என்றால் அதுவும் இல்லை. சரி… பாங்க் லாக்கரில் வைத்தால் தப்ப முடிகிறதா..? என்றால்
அதுவும் இன்று கேள்விக் குறி தான்...!
அந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகிவிட்டது
ஆக எல்லா ஆசைகளும் இருந்தாலும் செல்வத்தைப் பாதுகாத்து வைப்பதற்குள்
போதும்…போதும்..! என்று ஆகி நிம்மதி இல்லாது வேதனைப்பட்டு நமக்குள் நோயாகவே
வருகின்றது. இதிலிருந்து தப்ப முடியாத நிலைகள் தான் இன்று இருக்கின்றது.
1.ஆகையினால் செல்வத்தைக் காக்க என்று யாரை எண்ணி ஏங்குகின்றோமோ மீண்டும் இந்தப்
பிறவிக்கே வந்துவிடுன்றோம்.
2.பிறரைக் காக்க வேதனைகளை எடுத்தாலும் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.
ஆனால் விஷத்தை எல்லாம் வென்று ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ
மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் ஓங்கி வளர்த்தோம்
என்றால் “உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது…!”
அப்பொழுது உயிர் அதை இயக்கி நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய்
நிறுத்தும். நாம் அழியாத ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
ஏனென்றால் நமக்குள் எத்தனையோ “ஊழ்வினை” என்ற வித்துக்கள் உண்டு. முந்தி
தெரியாது… இப்பொழுது அது எல்லாம் தெரிய வரும். அந்த வித்துக்களை எல்லாம் நாம்
ஒளியாக மாற்றிக் கொண்டே வருதல் வேண்டும்.