ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2023

விஞ்ஞான அறிவால் “எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”

மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட விஷக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள்ளும் சேர்ந்து அங்கேயும் இப்போது கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இருந்தாலும் இரு மடங்கு அழுத்தத்தின் தன்மை சூரியனுக்குள் அதிகமாகப் பாய்ச்சப்பட்டுப் பிரபஞ்சத்தில் அத்தகைய நிலைகள் பரவுமேயானால் “விஞ்ஞான அறிவால் வந்த இவை அனைத்தும் சூனியமாகிவிடும்...!”

இப்பொழுது இரு மடங்கு மின்சாரம் வயர்களில் வந்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட பல்புகள் அனைத்தும் ஃப்யூஸ் (FUSE) ஆவது போன்று இந்த உணர்வுகள் அதிகமானால்….
1.மனிதனுடைய சிந்தனைகளும் மிருகங்களுடைய உணர்வுகளும் மாறுபட்டு
2.”வெறி பிடித்தது…” போன்று உலகம் முழுவதும் பரவும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து நாம் மீள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற எது வந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் உடலில் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாளும் வளர்த்துக் கொண்டே வந்தால் மன உறுதி கிடைக்கும். நம்முடைய காரியங்களை எல்லாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற அந்த உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வார்கள்…
1.பிறருடைய கஷ்ட நஷ்டங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டே வந்தால்
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அவருக்கு வந்த கஷ்டமெல்லாம் நமக்குள் வந்து நம்மையும் அது பாதிக்கும்.
3.அவர் உடலுக்குள் வந்த அவர் நோய்களும் நமக்கும் வர நேருகிறது.

ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று “இந்தக் கணக்கைக் கூட்டினால்” இந்த உடலில் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

ஆக… அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க… மன உறுதி கொண்டு இந்த வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதே சமயத்தில்
1.நீங்கள் எடுத்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும்
2.உங்கள் மூச்சலைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் பரவி
3.நச்சுத்தன்மைகளைப் போக்கக்கூடிய சக்தியாகப் படரும்.

அகஸ்தியன் அன்று தன்னுடைய பார்வையில் இந்தப் பூமி குடை சாயும் நிலையில் இருந்ததைத் திருப்பி… வெப்பத்தின் தன்மை கூடச் செய்து “துருவத்தில் உறைந்த பனிகளைக் கடலாக மாற்றி…” பூமியைக் காக்கும் சக்தியாக அன்று அவன் செயல்படுத்தினான்.

அகஸ்தியனுக்கு முந்திய காலத்தில் இருந்த கடல் நிலைகள் வேறு அகஸ்தியனுக்குப் பின் வந்த கடல் நிலைகள் வேறு.

மனிதன் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் இன்று அதிகமாக… அதிகமாக… நீர் நிலைகள் பெருகி நிலங்கள் குறைந்து கடல் நீர் பெருக்கமாகி… ஊரை அழிக்கும் நிலையாக வருகின்றது.

துருவப் பகுதியில் உள்ள உறைபனிகள் அனைத்தும் உருக உருக கடல்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல…!

பூமிக்குள் வெப்பத்தின் தணல் அதிகமாகும் பொழுது பூகம்பங்களும் எரிமலைகளும் அதிகமாகி உள்ளே கொதிகலன்கள் அதிகமாகி “எந்த நேரத்திலும்…” இந்தப் பூமி சிதையும் நிலைகள் இருக்கின்றது. நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இதே நிலைகள் ஆகி கொண்டிருக்கின்றது.

ஒரு கோள் சிதைந்தாலே போதும்…! அதனுடைய விகிதாச்சாரம் மனிதனுடைய நிலைகள் அது கிடைக்காது போனால்
1.மனிதனும் மிருகமாகி விடுகின்றான்… விஞ்ஞானமும் அழிந்து விடுகின்றது…
2.இருளான உணர்வுகளே உலகெங்கும் பரவும் சந்தர்ப்பங்கள் வருகின்றது… இந்த விஞ்ஞானம் பயனற்றதாக ஆகிவிடும்.
3.இன்று செயல்படுத்தும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பூராமே பாழாகி அதனால் இயங்கும் சாதனங்கள் செயலிழந்து அனைத்தும் திசை திருப்பப்பட்டு
4.“அடுத்து விஞ்ஞான அறிவால் எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”.

ஆனால் மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் கவர்ந்து கொண்டால் இந்த உலகைக் காக்கலாம்… உங்களையும் காக்கலாம்… பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

இதைப் பெறுவதற்கும் செயப்படுத்துவதற்கும் உங்களுக்கு “மன உறுதி தேவை…!”

ஆகவே… ஏதோ என்று இல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்யுங்கள்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
2.இன்று அவனுடைய அருளைப் பெற்று பல ஆயிரம் அகஸ்தியர்களை உருவாக்குங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் உலகைக் காக்கும் சக்திகளாக இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

“ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்...” எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை...!

1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.

ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும் தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும் ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…? அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

முதல் எது…? கடைசி எது….? உலகச் சக்தியில் முதலும் கடைசியும் உண்டா…?

முடிவில்லா மூலவனே மும்மூர்த்தியானவனே…! என்ற பொருளின் தத்துவம் இப்பொழுது புரிந்ததா…?

January 20, 2023

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

உதாரணமாக…
1.சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிர்மறையான உணர்வாக (சண்டையோ அல்லது எதிர்பாராத நிகழ்வோ) இருந்தால்
2.நம் இரத்தங்களிலே அது கலக்கக் கலக்க ஒன்றுக்கொன்று போர்முறையாகி
3.உறுப்புகள் முழுவதற்கும் இந்த இரத்தங்கள் செல்லும் பொழுது
4.ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் எதிர்நிலையாகிறது.

அதனால் மனக்கலக்கங்களும் நாளடைவில் உடல் வலியும் நோயும் வரக் காரணம் ஆகிவிடுன்றது. அதைப் போன்று ஆகாதபடி தடுக்க ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி என்று யாம் கொடுக்கும் ஆயுதத்தை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்...!

தீமைகள் உங்களை இயக்காதபடி மனம் தெளிவாகும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதிக்கே இதை உபதேசிக்கின்றேன்... பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

“ஆத்ம சுத்தி” செய்யும் ஆற்றலைப் பெறுவதற்கு நீங்கள் வருடக் கணக்கில் தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

“ஒருவன் திட்டுகிறான்…” என்று வைத்துக் கொள்வோம். திட்டியவுடனே நம் எண்ணங்கள் அனைத்தும் அவன் மீது எப்படி வருகிறதோ அதே போன்றுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை மீண்டும் எண்ணுவது போல்
1.யாம் சொன்னதைத் திரும்ப எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்
2.இருளை நீக்கலாம்… அமைதி பெறலாம்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தலாம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிகளை நீங்கள் பெற வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி… என்றும் பிறவியில்லா நிலை என்று அடைந்ததுதான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அடிக்கடி நாம் நுகர்ந்து அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டால் இருளை நீக்கி… சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… இந்த வாழ்க்கையை நமக்கு நாமே ஒழுங்குபடுத்தும் அந்த சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

அவ்வப்பொழுது வாழ்க்கையில் வரும் தீமைகளைச் சுத்தப்படுத்தி அருள் உணர்வைச் சேர்த்துக் கொள்ள முடியும்.
1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு நல்லது
2.இந்த உடலில் வரும் நோய்களைத் தடுக்கலாம்... மன அமைதியும் கிடைக்கும்
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்

சாமி செய்வார் சாமியார் செய்வார்... ஜோதிடம் செய்யும்... ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... எந்திரம் செய்யும்...! என்று காலங்களை நீங்கள் விரயம் செய்ய வேண்டியதில்லை.

இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணிய உடனே அது உங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கின்றோம்.

1.திட்டியவனை எண்ணியதும் நம்மை அந்தக் கோபம் எப்படி இயக்குகிறதோ…?
2.இது போன்று திட்டியவனை எண்ணப்படும் போது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அது நமக்குள் இயக்காதபடி தடுக்கவும்
3.ஒரு வேதனைப்படுவோரை எண்ணியபின் அந்த வேதனை உடனடியாக நம்மை எப்படி இயக்குகின்றதோ
4.இதைப் போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள் செலுத்தி
5.அது போன்ற எத்தகைய தீமைகள் வந்தாலும் அவைகளைத் தணித்துக் கொள்ள முடியும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும்… மகிழ்ச்சி வரும்... அருள் சக்திகளும் கிடைக்கும்.

மின் காந்த அலையை எடுத்தால் தான் சக்தி

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளைப் படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

January 19, 2023

"தன்னை மறக்கும் தியானத்தால்" பிறப்பின் பலனை அடைய முடியாது

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்... பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்... இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்... இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு... இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்... காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக... இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு... இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட... தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன...?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை...!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ... பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற... ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை...
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்...!

புரிந்ததா...!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு

போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்... போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்... வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே...
பலவாகக் கலந்து பெறுவேனே...!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே...
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே...

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி... பணிவேனே...!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே... ...
ஏறும் படியில்... ஏறுவேனே...!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை... வளர்ப்பேனே...!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த... “தெய்வ நிலை பெறுவேனே...!”

என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

தீமைகளை நீக்க வேண்டும் என்றாலும் அதைப் “பகையாகக் கருதக் கூடாது…”

துருவ தியானத்தில் எடுக்கும் சக்தியின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எங்கினால் அதை நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

கையில் அழுக்குப்பட்டால் நந்நீரை விட்டுக் கையைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்
1.பல தீமைகளைக் காணும் பொழுதும் கேட்கும் பொழுதும் இது நமக்குள் ஊடுருவி நம்மை அறியச் செய்தாலும்
2.அந்த உணர்வின் வளர்ச்சிகளை அதை நமக்குள் வளராது தடைப்படுத்தி
3.“நம்முடன் அடங்கி இயக்கச் செய்ய வேண்டும்”.

அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். கடுமையான தீமைகளைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இணைத்து இந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் குழம்பு வைக்கும் பொழுது காரம் புளி உப்பு என்று கலந்து தான் வைக்கின்றோம்.

காரம் புளி உப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டு அதனுடைய வீரியச் சத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் “பக்குவப்படுத்திச் சம அளவு கொண்டு வரும் பொழுது” சுவையாக வருகின்றது.

இதைப் போலத்தான் உலகில் இன்று கடுமையான நிலைகளும் வேதனைப்படும் நிலைகளும்… துயரப்படுத்தும் செய்திகளும்… நம்மை அறியாமலே பல நிலைகளில் வந்து கொண்டேயுள்ளது.

நாம் வாழும் காலங்களில் இத்தகைய “எதிர்மறையான உணர்வுகள்” வரும் பொழுது வெறுப்பின் தன்மை அடைந்து பிரித்திடும் தன்மையும் அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
1.அப்பொழுது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும்
2.நாம் நுகர்ந்த இந்த வெறுப்பின் உணர்வுகளுக்கும் இரண்டும் போராகி
3.தீமையை விளைவிக்கும் அணுக்களாக உருப்பெற்று நம் நல்ல உணர்வுகளை அழித்து விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலில்லாது அவைகளை நம்முடன் இணங்கி இயக்கிடும் நிலையைச் செயல்படுத்திட வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வருகின்றதோ உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த எண்ணம் தான் “கல்யாணராமன்” என்பது.

1.வாழ்க்கையில் சந்திக்கும் “எத்தகைய தீமைகளையும் பகைமையாகக் கருதாது”
2.அது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இருக்கும்படியாக
3.குழம்புக்குள் புளிப்பும் காரமும் எப்படி இணைந்து சுவையாக உள்ளதோ
4.இதைப் போல மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் வாழ்க்கையில் காணும் தீமைகள் யாவையாகினும் கடும் நோயாக இருந்தாலும் நாம் பார்த்துணர்ந்து அதிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். இருந்தாலும்…
1.நுகர்ந்த அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்திடாது
2.அது வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து… இணைத்து…
3.ஒவ்வொரு நொடிகளிலேயும் நாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்(ந்)தே வாழ வேண்டும்.

இது தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.

January 18, 2023

“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

ஒரு ரைஸ் மில்லில் நெல்லைப் போடும் பொழுது
1.அளவுக்கு மீறிப் போட்டால் அது நெல்லின் தோலைப் பிரிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
2.அல்லது அந்த இயந்திரத்தை இயக்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் சுவாசத்திலும் தீமைகளை எதிர்க்கும் சக்தி இருந்தும் அதைக் காக்க முடியாத நிலை ஆகப்படும் பொழுது…
1.தீமையின் உணர்வுகளை நாம் அடிக்கடி கேட்டுணர்ந்து இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அதே உணர்வுகள் நம் உடலில் தீமைகளைக் கவரும் சக்தியாக மாறிவிடுகிறது.

காரணம் இந்தத் தீமை என்ற உணர்வுகளைக் கண்ணிலே பார்த்தபின் கருவிழி நம் உடலில் முன் பாகத்தில் (நெஞ்சில்) எலும்புக்குள் ஊன் உண்டு. அதிலே பதிவாக்கி விடுகின்றது.

ஆக நாம் எதைக் கலந்தாலும் கவர்ந்தாலும் முன்னாடி குவித்து இதனின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கவாறு இருக்கின்றது. இதில் எது அதிகமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் அந்த வாழ்க்கையின் அமைப்பாக நாம் மாறி விடுகின்றோம்.
1.அதற்குத் தக்க உணர்வின் தன்மை நம் இரத்தங்களிலே மாறுகிறது
2.அது மாற்றப்படும் போது நம் உறுப்புகளும் மாற்றப்படுகின்றது.
3.தீமைகள் அதிகமான பின் கடுமையான நோய்களைச் சந்திக்கும் நிலை வருகின்றது.
4.உடலுக்குப் பின் வேதனை கொண்ட உணர்வுடனே உயிரான்மா பிரிகின்றது.
5.பின் நாம் எங்கே செல்கின்றோம்...? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். இதற்குப் பின் மீண்டும் கீழான நிலைகளுக்குச் செல்லலாமா...!

ஒரு நாயை அடிக்கிறோம்... துன்புறுத்துகிறோம்... இம்சிக்கிறோம்… என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த உயிர் வெளி வரப்படும் பொழுது மனிதன் அடித்தால் மனித உடலுக்குள்ளே தான் வருகின்றது.

ஆனால் வலு கொண்ட வேறு ஒரு மிருகம் உதாரணமாக ஒரு புலி அடித்தால் நாயின் உயிரான்மா புலிக்குள் செல்கிறது.

மனிதனால் தாக்கப்பட்ட நாயின் உயிர் மனித உடலில் ஈர்க்கப்பட்டு மனித உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கும் சந்தர்ப்பம் வந்துவிடுகிறது.
1.ஆகவே இந்த உயிரை நாம் மதித்தல் வேண்டும்
2.காரணம் “எல்லாமே சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான்…!”

அன்றாட வாழ்க்கையில் நமக்குக் கோபம் வரலாம்... வெறுப்பு வரலாம்… வேதனை வரலாம்... சலிப்பு வரலாம்... சங்கடம் வரலாம்...! இது எல்லாம் நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் வரக்கூடியது தான். இதையெல்லாம் நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அப்படித் தடுத்துப் பழகுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஆத்ம சுத்தி செய்யுங்கள்…” என்று சொல்கிறோம்.

அந்தச் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… உங்களுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதபடி நான் (ஞானகுரு) தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

அவ்வாறு உங்களுக்கு அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்திக் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்களும்…
1.எப்போது… எத்தகைய குறைகள் வந்தாலும் அதை மறந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எல்லா உறுப்புகளுக்குள்ளும் செலுத்துங்கள்.

எங்கள் உடலில் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் இதனுடன் அது அருகில் வரப்படும் பொழுது இது வலுவாகிறது. துருவ நட்சத்திரத்தின் வலு கூடுகிறது.

இதை எல்லாம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால் இன்று எல்லாமே நச்சுத்தன்மையாக இருக்கும்… கடினமாக இருக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும். அதற்குத் தான் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்…
1.சந்தர்ப்பத்தால் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “வேதனை…”
2.இல்லையென்றால் “கோபம்…” இதைப் போன்ற உணர்வு வந்தே விடுகின்றது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது அல்லவா…!

காரணம்… ஏற்கனவே பதிவான நிலைகள்… அது வலிமை பெற்றது. அதனின் இயக்கங்களை இயக்கத் தான் செய்யும். அதை தடைப்படுத்த உங்களுக்குச் சக்தி தேவை.

இப்போது கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
1.நான் சொல்லும் நிலைகள் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொள்ளுங்கள்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்…
3.உங்கள் பேச்சால் மூச்சால் மற்றவரையும் காக்கும் சக்தியாக வலுப் பெறுங்கள்.

இயற்கையைப் பயன்படுத்துகின்றான் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துகின்றான் ஞானி…!

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை...” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ...ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்...!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்... உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்... குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்... இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்குச் சேமிக்கும் சொத்து எது...? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்... பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்...?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன...? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்...! இவையும் ஞானம் தான்...!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்... கவி ஞானமும்...! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது...?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட...” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்...!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா...?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா...?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்... சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்...!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்...!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்...!”

January 17, 2023

இருளை அகற்றி ஒளியாக மாற்றி… பேரருள் பேரொளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷிகள்

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா

சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் என்றால் யார்…?

இருளை அகற்றி ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.

ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று தியானிக்கச் சொல்கிறோம்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.

சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.

அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.

அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்...
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்... பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.

நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ...ம் நமச்சிவாய... என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே...! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.

அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்... இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.

சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த ஏக்கம்... நாம் அதுவாக மாறுகின்றோம்.

உண்மைச் சக்தியை… “காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல ஆத்மா…” நிச்சயம் ஒளி நிலை பெறுவான்

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து...!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே... எண்ணத்தை விழிப்படையச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்...?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்...!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே...
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து...
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்...” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கித் தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

January 16, 2023

கெட்டுப் போவதற்காக அடுத்தவரைத் திட்டுகிறோமா…! அல்லது அவருக்குள் இருக்கும் கெட்டது போக வேண்டும் என்று திட்டுகிறோமா…?

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது அவன் வேண்டுமென்றே செய்கிறான் அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன்,
1.“அவன் பகைவன்…” என்ற உணர்வை எடுக்கிறோம்.
2.அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக
3.அவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

இப்படி அவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்து விட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம்.

அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம். “என்னை இப்படிச் சொன்னார்கள்… எப்படிச் சொல்லலாம்…? அவர்களை விடலாமா..?” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது.

நான் (ஞானகுரு) திட்டினேன் என்றால்
1.அவர்களிடம் உள்ள “கெட்டது போவதற்காகத்தான்..” திட்டுவேன்.
2.அவர்கள் “கெட்டுப் போக…” நான் திட்ட மாட்டேன்.

ஏனென்றால் நான் திட்டுவது உடலில் இன்னொரு ஆவி இருந்தது என்றால் “அதைத்தான் சாடுவனே தவிர…” அவரைத் திட்டுவதில்லை. அதனால் அந்த உணர்வின் தன்மை ஆவி ஒடுங்கும். அந்த மனிதனை நல்லதைப் பேசவிடும்… நல்லதைச் செய்யவிடும்.

நீங்கள் திட்டினீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்…?
1.நேரடியாகத் திட்டுவீர்கள்…
2.அந்த ஆள் தான் செய்கிறார்… என்று நினைத்து அந்த ஆளைத் தான் திட்டுவீர்கள்.

“உள் நின்று இயக்கும் உணர்வை அறிந்ததனால்..” நான் அதைச் செய்கின்றேன்.

ஆகவே ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிட வேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு சரி...
1.அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால்
2.இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால் நம் உயிர்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்கும்.

தன் உடலில் எழும் உணர்வை மாற்றியமைக்கும் “எண்ண வலிமை” பெற வேண்டும்

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று... வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது... வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்... உடல் என்ற வண்டி ஓடவும்... அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது...” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது...? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்...” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது...? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து... அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்... உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்... சேமித்த இந்த உணர்விலிருந்து தான்... “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்...”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு...
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா...?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்...?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்... இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை... அழகுடனும்... அமைதியுடனும்... மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

செல்ஃபோன்களில் பதிவு செய்வது போல் அகஸ்தியர் உணர்வுகளை நம் ஊன்களுக்குள் பதிவாக்க வேண்டும்

பரிணாம வளர்ச்சியில் நாம் தீமைகளை நீக்கி வளர்ந்தோம். அகஸ்தியன் தீமைகளை நீக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

1.அதை நாம் எடுக்க வேண்டும்
2.அதை எடுத்து நம் உடலில் பதிவு செய்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் பரவச் செய்ய வேண்டும்.
3.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவுப்படி செல்ஃபோன்களை (AIRCELL) வைத்திருக்கின்றார்கள் அதிலே எங்கிருந்து எல்லாம் பேசுகின்றார்களோ அந்த நம்பர் தெரிந்தால் பேசுகிறோம்.

வருகிறது… ரெக்கார்ட் செய்கிறோம்… மீண்டும் தொடர்பு கொள்கிறோம். திரும்பப் பேசும் போது யார்… யார்…? என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

செல்ஃபோன்களில் யாரிடம் எல்லாம் நாம் பேசுகின்றோமோ பதிவாக்குகின்றோமோ தெரிந்து கொள்கின்றோமோ இது அனைத்துமே பதிவாகி ஒரு ரெக்கார்டு போன்று ஆகிவிடுகின்றது. திரும்பி அவர்களுக்கு ஃபோன் செய்தோம் என்றால் அங்கே போகிறது.

இதே மாதிரித் தான் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் (ஊனுக்குள்) அதைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றது - எலும்புக்குள்.

அதையெல்லாம் நாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் (செல்கள்) அங்கே செல்போன்களில் பதிவாக்குவது போன்று இப்பொழுது பதிவாக்கி
3.அதை கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதைப் பெருக்கிக் கொண்டு வந்தால் நமது வாழ்க்கையில் முந்தி இதற்கு முன்னாடி எத்தனை வகையான அறியாத நிலைகள் குறைகளை செய்தோமோ அதை எல்லாம் குறைக்க முடியும்.

இப்படிக் குறைத்துப் பழகுவதற்குத் தான் நாம் இருக்கக்கூடிய தியானம். சுவாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் கண்களில் பார்க்கின்றோம்… கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் மற்றவரிடமிருந்து வெளி வருவதைக் கவர்ந்து இந்த நோய்… இந்த குறைபாடு… இந்தத் தவறு என்று அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தெரிந்து கொள்கின்றோம்… கெட்டவன் என்றால் விலகிக் கொள்கிறோம். விலகினாலும் அந்தக் கெட்ட உணர்வுகள் கொண்டு “மோசமானவன்… மோசமானவன்” என்று பேசுகிறோம்.

1.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே நம் எலும்புகளுக்குள் பதிவாகி
2.நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்தில் கலந்து அப்படிப் பேசக்கூடிய அளவிற்கு நம் உணர்வுகளைத் தூண்டி
3.அந்த அணுக்கள் விளைய ஆரம்பிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் அவன் தான் தவறு செய்தான் என்று. ஆனால் உடனடியாக அதைத் துடைத்துப் பழகவில்லை என்றால் அவன் உடலில் விளைந்த தீமை நமக்குள் விளைந்த பின்… அவனைப் போன்று நாம் பல மடங்கு தவறு செய்யக்கூடியவர்களாகவே வந்து விடுகின்றது.

இதை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ உடலில் அழுக்குப்பட்டால் எப்படிக் குளிக்கின்றோமோ துணியில் அழுக்குப்பட்டால் எப்படித் துவைக்கின்றோமோ இது போன்று தான் ஆன்மாவில் படக்கூடிய அழுக்குகளை நாம் துடைத்து பழக வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் ஜீவ அணுக்களாக அது இருக்கும் பொழுது அதற்கு அந்தத் தீய உணர்வு ஆன்மாவாக இருக்கும். நாம் எடுக்கக்கூடிய இந்த தியானத்தின் மூலம் அந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தியானம் எடுத்துப் பழகியிருக்கின்றோம். அதன் துணை கொண்டு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்
1.நம் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கும்
2.சிந்தித்துச் செயல்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும்
3.அருள் ஞான வாழ்க்கை வாழ்வதற்கும் இது பயன்படும்.

இல்லையென்றால்…
1.நம் உடலில் உருவான அணுக்கள் அது சாப்பாடுக்கு ஏங்கத்தான் செய்யும்
2.உணர்ச்சியை உயிரிலே ஊட்டத்தான் செய்யும்
3.கண் வழி கவரத் தான் செய்யும்
4.உயிரிலே மோதத் தான் செய்யும்
5.அதே வேதனை உணர்வு நமக்குள் வரத்தான் செய்யும்.
6.அப்படியே விட்டு விட்டால் அதை மாற்றவும் முடியாது அந்த உணர்வு தான் வேலை செய்யும்

ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்குமே வாழ்க்கையை தியானம் என்று நாம் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

சிறிது காலம் தான் வாழுகின்றோம் நூறு வருடம் வாழ்ந்தாலே அதிகம் தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள் நாம் எதையெல்லாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ நம் உயிர் அதை எல்லாம் உருவாக்கிவிடும்… அந்தக் கணக்குகள் கூடிவிடும்

அதிலே எந்தக் குணத்தை இந்த வாழ்க்கையில் நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வேதனை என்றால் அடுத்துப் பாம்பு… கோபம் என்றால் புலி… வெறி என்றால் நாய் நரி போன்ற நிலைகளுக்கு நமது உயிர் இந்த உடலை மாற்றிவிடும்.

நம் உடலில் எத்தனை குணங்கள் இருக்கின்றதோ அதைப் போல பரிணாம வளர்ச்சியில் குணங்கள் கொண்ட உயிரினங்கள் எத்தனையோ உண்டு.

எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த விஷம் இயக்குகின்றதோ அதனதன் வழி இயக்குகின்றது. இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ இன்று மனிதன் என்றாலும்… “இன்றைய செயல் நாளைய உடலாக மாறும்...!”

உயிர் மாறுவதில்லை.. உயிர் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும்… உடலை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உயிரோடு ஒன்றி “ஒரே நிலையாக நிலை கொண்டு இருப்பது…” துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடலில் பெருக்கி
2.நாமும் இனி பிறவியில்லை என்ற நிலையை அடைந்து… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
3.எந்த வேதனையும் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.

January 15, 2023

ஆண்டவனின் ஆண்டவனாகும் மகத்துவம்…” மனிதனுக்கு உண்டு

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்... நீரும் தான்...” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்... நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்... ஒளியையும்... நீரையும் வளர்த்து... தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து... மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது...?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்...!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு...
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது...!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்... அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்...
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே... உருவை மாற்றி... “உருச்சிதைந்து வாழ்கின்றான்....!”

ஒரு நிலை கொண்ட எண்ண சக்தி

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்...! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது...?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்... ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ணச் செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை...” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்... அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாகக் கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து... பல அமிலங்களின் செயல் தொடர்பில்...” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்... மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்... நம் பூமிக்கும்... மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது... தன் தேவை அறியும் உணர்வும்... உறங்கும் நிலையும் இல்லை...? ஏன்...?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்...?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு... கழித்து... உறங்கி... மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை...!

January 14, 2023

இந்த யுக்தியைக் கையாண்டால் எந்தத் தீமையையும்… வேதனையையும்… அகற்றிடும் வல்லமை நிச்சயம் பெற முடியும்

பல காலம் எண்ணிப் பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால்… நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுது தான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது. வலித்தவுடன்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.
4.இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் தியானத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் என்ன சொல்வார்கள்…?

இப்படித்தான் நான் எண்ணினேன்… இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே…! என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது
1.ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்…”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி
2.“வலி நிற்கவில்லையே… வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகிச் சுழன்று வரப்படும் பொழுது… தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது. அப்பொழுது
1.நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது
2.அதனால் அது சோர்வடைகின்றது
3.அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே… இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்ய வேண்டும்…? என்பதைச் சற்று சிந்தியுங்கள்
2.“எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்…?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

January 13, 2023

“உயிராத்மாவுக்கு உணவு கொடுத்து வளர்த்தவர்கள்…” துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்கிறார்கள்

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை... ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது...?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்... நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன...?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்... இயற்கையும்... ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது...? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது...?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லாவிட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி... நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது...?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது...?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்...”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்... நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ... அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது...!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்...!

பூமியின் நிலைக்கும்... பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை...!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி...
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி...
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனிதன் உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை... ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு... தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக... எவ்வமில குணம் உள்ளதுவோ... அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை… தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்... துருவ நட்சத்திரமும்...!

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

கைகளில் அழுக்குப் பட்டால் எப்படித் துடைக்கின்றோமோ இதைப் போல் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும் கோபங்களையும் குரோதங்களையும் பார்க்க நேர்ந்தால் நம் ஆன்மாவில் படும் அந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன்... சிவனுக்குக் கணக்குப்பிள்ளை...” என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் சுவாசிக்கும் குணங்கள் எவை அதிகமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்தால் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.
3.இது மனிதனின் கடைசி நிலை.

ஆகவே அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் அருள் சக்தி பெற்றது தான்... “நாம் இன்று இருக்கும் இந்த மனித உடல்...” என்பதை மறந்திடலாகாது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த நிலையில் கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவைப் பெற்றிருக்கின்றோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி ஒளிச் சுடராக ஆக்குகின்றதோ இதைப் போல் நாமும்
1.இந்த உடலான பிரபஞ்சத்திலிருந்து நன்மை தீமைகளை அறிந்து
3.தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதி பெற்றவர்கள்.

நம் உடலுக்குள்ளே... இது ஒரு உலகம் தான். நமக்குள் சேரும் வெறுப்பு விருப்பு இத்தகைய உணர்வுகளை இந்த உடலான உலகில் இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வை நாம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உறுப்புகளில் படரச் செய்து அதிலுள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும் தான் ஆத்ம சுத்தி என்பது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் பட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கண்ணில் கருமணிகளில் உள்ள விஷத்தன்மைகளைத் துடைக்க வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நாம் பார்த்ததை உடலுக்கெல்லாம் எடுத்துப் பாய்ச்சும் கண்ணின் நரம்பு மண்டலங்களிலும் அதை உருவாக்கிய அணுக்களிலும் பாய்ச்சி அதிலே தோய்ந்த விஷத் தன்மைகளைத் துடைக்க வேண்டும்.
3.அதைப் போன்றே நரம்பு மண்டலம் எலும்பு மண்டலம் தசை மண்டலம் தோல் மண்டலம் எலும்புக்குள் இருக்கும் ஊன்... அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து எடுத்து உள்ளே செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

இவ்வாறு நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டே வந்தால் இந்த உடலுக்குப் பின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த மனித வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ பிறவி இல்லாத நிலையை நாம் அடைகின்றோம்.

இப்பொழுது உள்ள நிலைகளில் சிறிது நேரம் நன்மை செய்தாலும்... சிறிது நேரம் நாம் தியானம் செய்தாலும்... அதற்கடுத்து வரும் கவலைகள் சங்கடங்கள் வெறுப்புகள் சஞ்சலங்கள் கோபங்கள் இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது “தியானத்தின் பலனைக் கூட அது மாற்றிவிடும்...”
1.காரணம் அது அதிகரித்து விட்டால் விஷத்தின் இயக்கமே அதிகரித்து விடுகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட “வாழ்க்கையே தியானம்...” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் தீமையைப் பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தத் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்து நம் ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

மனிதனான நிலையில்
1.உயிரை ஈசனாக மதித்து எவர் எவர் அந்த உணர்வுகளை வளர்க்கின்றனரோ
2.அவர்களுக்கெல்லாம் பிறவி இல்லை என்பதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

January 12, 2023

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து… அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை எல்லாம் முறித்தது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ளது சப்தரிஷி மண்டலம்... ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷிகள்.

அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்றால்
1.மீண்டும் இன்னொரு உடல் பெறும் விஷத்தின் தன்மைகளைப் பிரித்து விடுகின்றது
2.உயிர் அதனுடைய காந்த அலைகளுடன் இயக்கப்படுகின்றது
3.அதிலே விளையும் உணர்வுகளை எடுத்து ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…!

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… கோடிச் செல்வங்களை இன்று தேடி வைத்திருப்பினும் இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. செல்வமும் நமக்குச் சொந்தமல்ல. “நமது உயிரே அழியாத செல்வம் ஆகின்றது…”

மனிதன் தீயிலே குதித்தால் இந்த உயிர் வேகுவது இல்லை. உணர்வுகள் மாறுகின்றது உணர்வுக்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது... இது சாகக்கலை.

ஆனால் இந்த உயிர் எப்பொழுதுமே எதிலுமே வேகுவதில்லை. வேகா நிலையை நாம் பெற வேண்டும்.

பிரபஞ்சம் ஒரு காலம் அழியும்... நம்முடைய பிரபஞ்சம் அழியும் தருணமே வந்துவிட்டது. கதிரியக்கப் பொறிகள் எல்லாக் கோள்களிலும் பரவி விட்டது.

பூமியில் நிலநடுக்கங்கள் எப்படி வருகின்றதோ பாறைகள் உருகி எப்படிப் பிளக்கின்றதோ அதைப் போல் மற்ற கோள்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் கோளின் நடு மையத்தில் அடைந்து கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் கோள் எப்பொழுது சிதையும்…! என்று சொல்ல முடியாது.
1.இரண்டு கோள்கள் சிதைந்தாலே போதும்… நம் பிரபஞ்சத்தின் இயக்கமே மாறிவிடும்.
2.நம் பூமி சிதைய வேண்டியதே இல்லை. ஆனால் அதற்குத் தக்க இயக்கங்கள் மாறிவிடும்.
3.இதைப் போன்ற காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும் அகஸ்தியன் நீள வடிவமாகச் சென்ற பூமியை அது சாயாதபடி சமப்படுத்தித் திருப்பினான்… அதைச் சீராக்கினான்.

இன்றோ மனிதனுடைய விஞ்ஞான அறிவால் பூமி உருகும் தன்மை வந்துவிட்டது… பிரபஞ்சமும் உருகும் தன்மை வந்துவிட்டது… கோள்களும் உருகும் தன்மை வந்து விட்டது.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும். பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தப் பத்து மாதத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் தியானிக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் விஷத் தன்மைகளையும் அகஸ்தியன் ஒளியாக மாற்றியது போன்று
1.கருவில் வளரும் இந்தக் குழந்தை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும்
2.உலக இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ளோர் இதைச் செயல்படுத்துங்கள்.

அதிகாலை ஒரு பத்து நிமிடமாவது இதை எடுத்துச் செயல்படுத்துங்கள். அகஸ்தியனின் உணர்வுகள் அங்கே விளையும். குடும்பத்தில் உள்ள சாப அலைகள் தீய அலைகள் பாவ அலைகள் அனைத்தும் நீங்கும் ஒரு தெளிவான நிலையை உருவாக்க முடியும்.
1.ஆயிரக்கணக்கான அகஸ்தியர்களை நாம் உருவாக்குதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் தான் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீள முடியும்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து செயற்கையில் கதிரியக்கப் போறிகளை உண்டாக்கி இந்த பூமியில் அதிகமாகப் பரவச் செய்துவிட்டனர்.

இயற்கையாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் பூமிக்குள் பரவிக் காற்று மண்டலத்தில் மோதிய பின் தூசிகளாக மாறும்போது… விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளில் அது மோதிய பின் எதிர்நிலையாக மாறிக் கடும் சூறாவளியாக உருவாகி… எல்லாவற்றையும் நாசம் அடையச் செய்து கொண்டிருக்கின்றது.

1.விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சியாகி இருந்தாலும் இதை தவிர்க்க முடியாத… தடுக்க முடியாத நிலைகள் ஆகிக் கொண்டு இருக்கின்றது.
2.அமெரிக்காவில் இத்தகைய நிலைகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இதெல்லாம் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்ட நிலை. இருந்தாலும் நடந்த பின் என்ன… ஏது…? என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் மெய்ஞானிகள் இதையெல்லாம் அன்றே சொல்லி உள்ளார்கள்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில் நாம் குறுகிய காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை உணர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.அதனின் வலு கூடினால் நாம் மேலே சொன்ன தீமையிலிருந்து விடுபட முடியும்.

எல்லோரும் அந்த அருள் பெற வேண்டும் என்ற உணர்வைக் கூட்டுங்கள். உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். எதைச் சொன்னாலும் செய்தாலும் இந்த உடலுக்குள் ஒற்றுமை வேண்டும். ஏனென்றால் மகாபாரதப் போர் எல்லா உடல்களிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையில் அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருளைக் காணுங்கள்.

காற்றிலே இருக்கிறது... எந்த அளவுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பெருக்குகின்றீர்களோ அதன் வலிமை கூடும்.

“பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி...!

மனிதப் பிறவியில் நாம் செய்ய வேண்டிய சாதனை

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்... அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு...! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ... அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்... அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக... உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு...
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே...!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்...!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு... பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த...
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.