ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2024

வாய்ச் சொல் வரும் விதம்

வாய்ச் சொல் வரும் விதம்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது...? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு - உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

April 15, 2024

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.

அருள் செல்வம் என்பது எதுவப்பா...? இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா...?

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்... என்றும் ஜோதி தரிசனம்... என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்...!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது...?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்... திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா... கொள்...! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்...!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்...
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை...!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்... இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்...!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்...” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா...?

போற்றி...போற்றி...! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்... பிறவிப்பயன் பெற்று விட்டேன்...!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா...? பெற்றதின் பயனை...!

ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா...?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா...?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்...! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே... உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்... சந்திரன்... ஜோதி விளக்கு... அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்...!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் - தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி... “அறிவின் ஒளியப்பா...!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

April 14, 2024

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் "கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்"

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் "கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்"

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்... நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்...!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்...!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா...! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்...?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்...? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்...” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது...?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நல்ல மனதையும் கெடுப்பதில்லை... நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே... எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்... நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்...
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்...
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது... நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்... எலெக்ட்ரானிக்...! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது... எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி... அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ...
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா...!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்...” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்... என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“சக்கர வியூகம்”

“சக்கர வியூகம்”

“இரத கஜ துரித பதாதி...” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ... அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்... அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்...”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்... மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்...! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி...!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே...!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்...” என்பதன் பொருள் என்ன...?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு...!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி... பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்... அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து... உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்... தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு... முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு... அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி...
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்...” என்றால் என்ன செய்ய வேண்டும்...?
உணர்தல்...
சுவைத்தல்...
நுகர்தல்...
செவிமடுத்துக் கேட்டல்...
விழியின் செயல் திறன்...
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை... எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்).

April 13, 2024

“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

 

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு மூலக்கூறைப் பிரிக்கப்பட்டு… அந்த மூலத்தின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று காணுகின்றார்கள்.

அதைக் கண்டுணர்ந்த பின் “இதனெதன் செயலாக்கங்கள் இப்படித்தான்…” என்று விஞ்ஞானத்தால் பாட நூல்களாகக் கொடுக்கப்பட்டு அதன் வழி தான் எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் இயக்குகின்றார்கள்.

1.அந்த இயந்திரத்திலே பல பல உறுப்புகளை (ACCESSORIES) இணைத்து உருவாக்கினாலும்
2.அந்த இயந்திரத்தின் இயக்க ஓட்டச் சக்திக்கொப்ப “தாங்கும் இயல்பு” அதிலே வர வேண்டும்
3.அப்படித் தாங்கக்கூடிய வலுவைக் கொண்டு வருவதற்காக
3.உலோகக் கலவையினை மாற்றித் தான் அந்த உறுப்புகளை உருவாக்குகின்றனர் (விஞ்ஞான அறிவுப்படி).

அதைப் போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மையிலும்… இந்த உடலின் தன்மை தாங்கும் நிலையாக… அதற்குள் இயக்க உணர்வின் வலு பெற வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன்…? (ஞானகுரு) என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம்
1.நமக்குள் பல கோடி எண்ணங்கள் இயக்குகின்றது
2.இது அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பக்குவம் நமக்குள் வருதல் வேண்டும்.

மகரிஷிகள் தனது வாழ்க்கையில் விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெற்றார்கள். அந்த உணர்வின் ஆற்றலை உயிரின் துணை கொண்டு நாம் நுகர்தல் வேண்டும்.

1.நமக்குள் இருக்கும் எந்தெந்த எண்ணங்களுக்கு எவ்வாறு வலுப்பெறச் செய்ய வேண்டுமோ
2.அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி…
4.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
5.அந்த உயிர் வழியாக உடலுக்குள் அந்த உணர்வுகளைச் செலுத்தினால்
6.நமக்குள் இருக்கும் குணங்களுக்கு இது நல்ல உரச்சதாக அமைகின்றது.

அப்படி உரமேற்றப்படும் போது தான் “தீமையிலிருந்து விடுபடும் நிலைகளே நமக்குள் உருவாக்குகின்றது” என்பதை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதுவாக இருப்பினும் மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலுக்குள்ளே அந்த தீமைகளை அகற்றிடும் உணர்வாகச் சேர்க்க வேண்டும்.

இராக்கெட்டை விஞ்ஞான அறிவுப்படி விண்ணிலே செலுத்திய பின்பு அவர்கள் ஏகும் உணர்வின் தன்மை கொண்டு
1.குறைகளை நீக்கும் உணர்வுகளைப் (TROUBLE SHOOTING) பாட நிலைகளில் கொடுத்து இங்கே எப்படித் தெளிவாக்குகின்றார்களோ அதைப் போன்று
2.மெய் ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையினை உணர்த்துவதற்காக
3.ஆலயங்களிலே அதை உருவங்களாக… சிலைகளாக வடிக்கப்பட்டுக் காவியப் படைப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ஆலயத்தில் காட்டியுள்ள அந்தத் தெய்வ குணத்தை எண்ணி… அந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளை எண்ணி…
1.அவர்கள் உணர்வினை நமக்குள் பதிவு செய்தால்… வரும் தீமைகளை அகற்றிடும் உணர்வாக
2.”நம் நல்ல குணங்களுக்கு மிகச் சக்தி வாய்ந்ததாக” அது ஆக்கம் கொடுக்கின்றது.

இது சாஸ்திர விதிகளின் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள். அதைப் புரிந்து நாம் நடக்க வேண்டும்.

வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும்

வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும் 

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில் யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்... சக்தியை அளித்துக் கொண்டும்...
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம் எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

1.எண்ணத்தின் வலு கொண்டு
2.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
3.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை... அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக... நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா - ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்...!”

April 12, 2024

உந்து விசை

உந்து விசை

 

பிறவா நிலை அடைந்து விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால் மனித வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் அடைய வேண்டிய எல்லையைச் சீராகச் சென்றடைய முடியும்.

அப்படிச் சீராகச் செல்ல வேண்டும் என்றால் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தல் வேண்டும்.
1.தவறு எங்கிருந்து வந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்படுத்தவும்
2.தவற்றற நிலையைத் தனக்குள் வளர்க்கவும் முடியும்.

அந்தத் தவறற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான் அது முடியும்.

விஞ்ஞானிகள் செலுத்தும் இராக்கெட் விண்ணை நோக்கி எப்படிச் செல்கின்றதோ அதைப் போன்று அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.இந்தப் புவி(யில்) வாழும் வாழ்க்கை நம்மை ஈர்க்காது
2.மெய்யான வாழ்க்கையாக வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மைச் செலுத்தும்… இந்த உயிர்…!

மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் சிக்கலைப் பிளந்து… விண் செல்லும் நிலையாக உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும்.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி அதனின் எல்லையை அடைந்த பின்… உந்தித் தள்ளிய உணர்வின் சத்தைப் பிரித்து (ROCKET STAGES) விடுகின்றது. அதன் பின் அதனுடைய சுழல் வட்டத்திலே செல்கிறது.

அதைப் போன்று இன்று புவியின் ஈர்ப்பிலே இருக்கும் நாம்
1.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்
2.அதனின் “உந்து விசைகள்” நமக்குள் அதிகமாகும் பொழுது அதனின் ஆற்றல் நமக்குள் அதிகமாகின்றது.
3.அந்த ஆற்றலின் துணை கொண்டு ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வைப் பிரித்து விடுகின்றது
4.உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் சுழல் வட்டத்திற்குள் சென்று உணர்வின் தன்மை ஒளியாகச் சுடர்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணுலக ஆற்றலை அறிய… ஆற்றல்மிக்க சாதனங்களை உருவாக்கி விண்ணிலிருந்து அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு… அதனின் சீர் பாதைகளை எந்திரத்தின் துணை கொண்டு காணுகின்றனர்.

இதைப் போன்று உடல் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
1.வரும் தீமைகளைப் பிளக்கும் உணர்வை நாம் உந்து விசையாக ஆக்கி
2.விண்ணுலகம் செல்ல முடியும்… அதற்குத் தான் ஆத்ம சுத்தி…!

ஒவ்வொரு நொடியிலும்… வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நமக்குள் இதை இணைத்திடல் வேண்டும் (ஆத்ம சுத்தி).

ஆகவே… எந்த ஒரு தடையும் இல்லாது அருள் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் சேரச் சேர… அங்கே சென்றடைந்த பின்
1.இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை… அதாவது உடல் பெறும் உணர்வுகளைக் கழற்றி எறிந்துவிடும்.
2.அந்த நிலையைப் பெறுவதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்...” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்...! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்... ஒலி நாதத்தின் அமில குணமும்... ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா...” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு...!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று... “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை...!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் - உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு - சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்...?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது... திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி... விபூதி...! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்...!)

April 11, 2024

விஷ்ணு பிரம்மா சிவன் - முத்தொழில்

விஷ்ணு பிரம்மா சிவன் - முத்தொழில்

 

ஒரு மிளகாய் வித்தை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து… காற்றில் இருக்கும் தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது மிளகாய்ச் செடியாக வளர்ந்து… அதனின் பருவ நிலை வரும் பொழுது “மிளகாய்களாகக் காய்க்கின்றது…”

இதைப் போன்று தான் ஒரு மனிதன் உணர்ச்சிகளைத் தூண்டும்படியாகக் “கோபமாகப் பேசுகிறான்” என்றால் அவனின்று வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய… நம் உடலாக அமைந்து விடுகின்றது…”

அதாவது… உட.லான சிவத்திற்குள் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக விளைகின்றது.

முதலில் மிளகாய்ச் செடியாக இருக்கும் பொழுது காரமில்லாததாக இருக்கின்றது. மிளகாய்ச் செடி வளர்ந்து அந்தக் கார உணர்ச்சிகளைக் குவித்து மிளகாயாக்க் காய்க்கும் பொழுது தான் அதிலே காரங்கள் தெரிகின்றது

அது போல்
1.அந்தக் கோப உணர்வுகள் சிறுகச் சிறுக நமக்குள் பெருகும் பொழுது நமக்கே அது தெரிவதில்லை.
2.ஆனால் அது முதிர்ந்த பின் தான் நமக்குத் தெரிய வருகிறது

எப்படி…?

கோபித்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அந்த மனிதனின் உடலில்
1.அவனுக்கு எந்த வயதில் அந்தக் கார உணர்ச்சிகள் விளைந்ததோ
2.அதே வயதின் தரம் நமக்குள் வரும்பொழுது நமக்குள் மிளகாயாகக் கோபித்துப் பேசும் உணர்வின் தன்மை நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

காரணம்… உற்றுப் பார்த்த உணர்வு உடலில் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக நமது உயிர் உருவாக்கி விடுகின்றது உடலோ அதை ஏற்று அதனை வளர்க்கத் தொடங்கி விடுகிறது.

இதை நமது ஞானிகள் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாக
1.விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான்.
3.சிவனோ சிருஷ்டித்த உணர்வின் அணுக்களைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான் என்று பொருள்படும்படியாக
4.நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றும்… இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும்… காந்தத்தால் கோபமாகப் பேசுவோமனின் கார உணர்வை நுகரப்படும் பொழுது
1.அதனின் உணர்வுகள் இந்த விஷ்ணுவின் பிள்ளையாக… காரமான சக்தியை வளர்க்கும் அணுவின் சக்தியாக உருப்பெற்று விடுகின்றது.
2.ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான் என்ற நிலையில் கார குணத்தின் வளர்ச்சியை அது உருப் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

அவ்வாறு உருவான அந்த அணுவின் சத்து உடலுடன் ஒன்றி அதே கார உணர்ச்சிகளைத் தனக்குள் கவர்ந்து அது வளரத் தொடங்கி விடுகின்றது அதைத்தான் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாம் எண்ணியது “சூட்சம நிலைகள்” கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அந்தக் கார உணர்வுகள் உயிரிலே பட்ட பின் உயிர் நமக்குள் உணர்த்துகின்றது.

கண்கள் அந்த மனிதனைப் படம் எடுக்கிறது அவனுடைய செயலாக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது. அவன் செய்யும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அவன் பேசும் உணர்வினை நமக்குள் அறிவிக்கின்றது.

அறிந்து கொண்டாலும் விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான். விஷ்ணுவின் மனைவி இலட்சுமி என்றும் கவர்ந்திடும் சக்தி என்றும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… காட்டியுள்ளார்கள்.

கோபமான குணத்தை நாம் சுவாசித்து விட்டால் அந்த உணர்வின் சத்து சிருஷ்டிக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இணைந்து செயல்படுவதை சரஸ்வதி ஞானம் என்று உணர்த்துகிறார்கள்.

அந்த அணுவின் தன்மை நம் உடலுடன் இணைந்து சிவமாக ஆனாலும் அந்தச் சக்தியின் தொடராக அந்த ஞானத்தின் வழியாக அது விளையும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

ஆனால்
1.எந்த உயிரிலே பட்டு இது உருவானதோ
2.அது தன் இனத்தை உருவாக்கும் சக்தியாக விஷ்ணுவின் பிள்ளையாக பிரம்மமாக
3.அந்தக் கார உணர்வுகளைத் தன் இனத்தை வளர்க்கும் சக்தியாக உருப் பெறுகின்றது.

சாஸ்திரங்கள் இப்படித்தான் நமக்குத் தெளிவாக கூறுகின்றது.

நீர் சக்தியின் முக்கியத்துவம்

நீர் சக்தியின் முக்கியத்துவம்

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி...!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி... இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்... பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது...!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ... நீர் மேல் அமரும் செயலில்... ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை... அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு... அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்...
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்...
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி... அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து...”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

April 10, 2024

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் - விளக்கம்

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் - விளக்கம்

 

நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது.
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஓ… என்று ஜீவனாக்கி…
2.அந்த உணர்வின் சத்தை உடலாக்கி…
3.உடலுக்குள் அந்த எண்ணத்தை மீண்டும் இயக்கச் செய்து
4.இந்த உணர்வினை விளையச் செய்து
5.விளைந்த உணர்வின் சத்தைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

மனிதனான பின் நல்லவைகளை எண்ணினால் நல்லதே நமக்குள் சேர்ப்பிக்கப்படுகின்றது. ஆனால் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் விஷத் தன்மைகளைச் சேர்க்கப்படும் பொழுது அந்த நல்லவைகளும் கெட்டுவிடுகிறது.

ஆனால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றும் திறன் பெற்றது தான் மனித உடலில் உள்ள உணர்வுகள்.

அத்தகைய உணர்வினைப் பெற்றிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளோ மற்றதோ இருப்பினும் அந்த நஞ்சினை நீக்கும் உபாயத்தைச் செயல்படுத்தவில்லை என்றால்… முழு நிலவாக (பௌர்ணமி) இருக்கும் சந்திரன் அதற்குப்பின் சிறுக சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போன்று மனித உடலில் இருக்கும் உணர்வின் அறிவுகள் அனைத்தும் மறைந்து… வேதனை என்ற நஞ்சுக்குள் சிக்கி விடுகிறது.

நாம் எவ்வளவு தெளிந்த மனிதனாக இருப்பினும் ஒரு துளி நஞ்சினை உணவுடன் கலந்து உட்கொண்டால் நினைவனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் சிறுகச் சிறுக நஞ்சு (தீமை செய்யும் குணங்கள்) கலந்துவிட்டால் அடுத்து மனித நினைவில்லாது போய்விடும். மற்ற உயிரின்ங்களின் ஈர்ப்புக்குள் தான் புக நேரும்

எத்தனையோ கோடிச் சரீரங்களை நாம் எடுத்துத் தெளிந்திடும் தெரிந்திடும் தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து விளைந்து விளைந்து…
1.மனிதனாக உருவாக்கிய உயிரைத்தான் “ரிஷி” என்று ஞானிகள் காட்டினார்கள்.
2.காவியங்களில் பார்த்தோம் என்றால் “அந்த ரிஷிக்கு ஒருவன் தீங்கு செய்தான்…” என்று ஒரு நிலையைக் காட்டுவார்கள்.
3.அப்போது அவனை ரிஷி சாபமிட்டார் என்றும்… பின் சாப விமோசனத்தைக் காட்டினார் என்றும் சொல்லியிருப்பார்கள்.

அதனின் உட்பொருள் என்ன…?

மனித உடலுக்குள் இருக்கும் நமக்குக் கெட்டவைகளை நீக்கும் சக்தி இருந்தும்… அதைச் சீராகப் பயன்படுத்தாது விட்டுவிட்டால்… கெட்டதை நீக்கிடும் ஆற்றலைப் பெருகச் செய்த உயிருக்கு நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?

அதாவது… இந்த உடலின் இச்சை கொண்டு
1.நாம் எடுத்துக் கொண்ட பாசத்தால் வேதனை என்ற நஞ்சினைக் கலந்து
2.ஈசனாக இருந்து ரிஷியாக இருந்து மனித உடலைச் சிருஷ்டித்த உயிருக்கு
3.நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?
4.அதைத் தான் “ரிஷிக்குத் தீங்கு செய்தான்” என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை எடுத்து உயிருக்குள் செலுத்தப்படும் பொழுது உயிர் அதையே ஜீவனாக்கி நல்ல உணர்வுடன் கலந்து விடுகிறது. அப்போது நஞ்சினை நீக்கிடும் இந்த உடலை… நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு அதை நீக்கவில்லை என்றால்
1.அதையே உணவாக உட்கொண்டால் அதுவாக நீ ஆகிவிடு… நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும்
2.ரிஷி (நம் உயிர்) சாபம் விடுவதாகக் காட்டுகின்றார்கள்… காவியங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

சாபத்திலிருந்து மீட்டுவதற்கு வழியும் காட்டுகின்றார்கள். எப்படி…?

ஐயனே… அறியாமல் நான் செய்த தவறுக்கு எனக்கு விமோசனம் இல்லையா…! சாபத்திலிருந்து மீண்டிடும் நாள் எது…? எனக்கு அருள் கூர்ந்து நல்ல வாக்கினைக் கொடுங்கள்…! என்று வேண்டிக் கொள்வதாகவும் காட்டியிருப்பார்கள் காவியப் படைப்பிலே…!

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இதையெல்லாம் உணர்த்தினார்கள் ஆனால் காலத்தால் இது எல்லாம் அறிந்து கொள்ள முடியாதபடி ஆகிவிட்டது ஏதோ கதைகள் அக்காலத்தில் நடந்தது… யாரோ செய்தார்கள்… என்றோ நடந்தது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றோம்.

நமக்குள் நடக்கும் இந்த உணர்வின் தன்மையை நம் உயிரின் இயக்கங்கள் அது எவ்வாறு…? என்பதை நாம் உணர்தல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தன உயிர் சிருஷ்டித்து விடுகிறது.

1.நல்லதை எண்ணினால் மகிழ்ச்சியின் தன்மை அடைகின்றது
2.அருள் ஞானிகள் உணர்வப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

“பிரம்ம சூத்திரம்...”

“பிரம்ம சூத்திரம்...”

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி...” தன்னுள் கிளைத்து... எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்... அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்... காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது... சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் - சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று... வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி...
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது… வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்...!” என எண்ணித் தெளிந்து... பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்...!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்...” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது...
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்...! என்று பொருள் கண்டு தெளிந்து...
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே... அன்பு நிலைக் குணமாக “அருளல்...” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்...!

April 9, 2024

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

 

மனித வாழ்க்கையில் ஒருவருக்குக் கடுமையான வேதனை என்று வந்து விட்டாலே “வேதனை… வேதனை… வேதனை…” என்று சொன்னால் தான் அடுத்து அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னை இப்படிச் செய்கின்றார்கள்… அடிக்கடி எனக்குத் தொல்லை செய்கின்றார்கள்… என் உடல் எல்லாம் வலிக்கின்றது… எரிச்சல் ஆகின்றது… வேதனையாக இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு (அதைச் சொல்லச் சொல்ல) மகிழ்ச்சியாகும்.

உதாரணமாக உடலிலே வலி ஏற்பட்டால்
1.அம்மம்மம்மா…! என்று வேதனையை இணைத்துக் கொடுத்தால் அந்த வலி கொஞ்சம் குறையும்…
2.ஆனால் மகிழ்ச்சியாகப் பேசினால் அதே ஏற்காது மீண்டும் வலி அதிகமாகும்.
3.வேதனைக்குத் தகுந்த உணர்வைக் கூட்டும் பொழுது தான் இந்த உணர்வின் சத்து அதற்குள் ஒடுங்கும்

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒரு தரம் பட்ட வேதனையை அடிக்கடி அந்த வேதனையை ரசித்து “அம்மம்மா… ஐய்யய்யோ…” என்று இதையே சொல்லி வரும் பொழுது… நல்லதை யாராவது சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் அதில் நஞ்சு கலந்து விட்டால் அந்தப் பால் முழுவதுமே நஞ்சாகத்தான் மாறும்.

இதைப் போன்று தான் எம்மிடம் (ஞானகுரு) வருபவர்களுக்கு அருள் வாக்குகளைக் கொடுத்து
1.தீமையிலிருந்து விடுபடுவீர்கள் நல்ல நிலை அடைவீர்கள் என்று நான் சொன்னாலும்
2.எங்கெங்கே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது
2.என் உடல் வலி குறையவே மாட்டேன் என்கிறது… பத்து வருடமாக இருக்கின்றது
3.குடும்பத்தில் தொல்லைகள் போக மாட்டேன் என்கிறது…. விவசாயமே ஒன்றுமில்லை…! என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாலில் நஞ்சு பட்ட பின் அதற்குள் பாதாமைப் போட்டாலும் அதையும் நஞ்சாக மாற்றுவது போன்று இந்த உணர்வின் தன்மை நஞ்சாக மாற்றி
1.யாம் சொல்வதை எது என்று கூர்ந்து கவனிக்க முடியாது
2.நல்ல உணர்வுகளை தனக்குள் பதிவு செய்ய முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

அது போன்ற நிலைகளை மீட்டுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களாக உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அதிலே அனைவருடைய ஒத்துழைப்பு கொண்டு அனைவருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்து அதைப் பெருக்கச் செய்து
2.எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது கூடி இருக்கும் அனைவருக்கும்
1.அந்த (மகரிஷிகளின்) உணர்வின் சத்து செவிப் புலன்களில் தாக்கப்பட்டு
2.அந்த உணர்வின் உந்து விசையால் அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிக் கொண்டால் அடுத்து நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

இதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிவமயம்

சிவமயம்

 

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி... ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி...!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை - “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.

April 8, 2024

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

 

நாம் இந்த வாழ்க்கையில் நன்மைகள் எவ்வளவு செய்தாலும் வேதனையைத்தான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் மற்றவருக்கு நன்மை செய்கின்றோம்.

காரணம்…
1.நாம் நன்மை செய்த உணர்வுக்குள் வேதனை என்ற நஞ்சு பட்டு விடுகின்றது
2.அதை நாம் யாராவது துடைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சுத்தமான கைகளைக் கொண்டு தான் ஒரு பொருளை உருவாக்குகின்றோம் மண்ணைப் பிசைகின்றோம்… சிமென்ட்டைக் கலக்கின்றோம்… அழகான வீட்டைக் கட்டுகின்றோம்.

அழகாக வீட்டைக் கட்டி விட்டோம் என்று அடுத்து கையைக் கழுவாது விட்டு விட்டால்… சாப்பிடும் போது சிமெண்டில் உள்ள கார உணர்வுகள் உடலுக்குள் சென்று விட்டால் அது கொதிகலனாகி குடலுக்குள் புண்ணாக உருவாகிவிடும்.

கையைக் கழுவாது அடுத்த வேலையை இப்படிச் செய்தால் முடியுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று தான் ரோட்டிலே நாம் நடந்து செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே எத்தனையோ தூசிகளும் தீமைகளும் கலந்து பரவி வருகின்றது. சில நச்சுத்தன்மை கொண்ட செடிகளில் விளைந்த “நச்சின் செல்கள்…” அதுவும் தூசுகளாகப் படர்கின்றது.

சூரியனின் காந்த சக்தி அதைக் கவரவில்லை என்றாலும் காற்று மண்டலத்தில் சிக்கப்பட்டு… அது தூசுகளாகப் பரவி வருகின்றது. அதை நுகர்ந்தால் நம் உடலுக்குள் சென்று தீமைகளைத் தான் உருவாக்கும்.

சாதாரணமாக… செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் மணமாக வைத்துக் கொள்கின்றது.
1.அதே செடியில் விளைந்த வித்திற்கு… நிலத்தில் எங்கே அதை ஊன்றினாலும்
2.சூரியனின் காந்த சக்தி… தான் கவர்ந்து வைத்த மணத்தை அதற்கு உணவாகக் கொடுத்து
3.விஷச் செடியாக இருப்பினும் சரி… நல்ல செடியாக இருப்பினும் சரி அவைகளை வளரச் செய்கின்றது…

இதைப் போன்று ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது வேதனை உணர்வுகள் இங்கே வித்தாக மாறுகின்றது.

மீண்டும் அந்த மனிதனின் சிந்தனை வருகிறது. அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. ஆனாலும் அவன் உடலில் விளைந்த வேதனை உணர்வு வித்தாக இங்கே விளைந்து விடுகிறது.

சூரியன் எவ்வாறு காந்த சக்தியால் கவர்ந்து அது மற்ற வித்துக்களுக்கு சத்தைக் கொடுத்து உபகாரம் செய்கின்றதோ இதைப் போன்று பிறிதொரு மனிதன் வேதனைப்பட்டதையும் கவர்ந்து வைத்து… நாம் எண்ணும் போதெல்லாம் அதை எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒரு மனிதன் அவன் வேதனைப்பட்டாலும் அவனுக்கு உதவிகளைச் செய்கிறோம். இருந்தாலும் அந்த வேதனையைச் சொல்லக் கேட்டு… உணர்வின் தன்மை பதிவான பின்… மீண்டும் நினைவாகும் பொழுது உடலுக்குள் வித்தாகி விடுகிறது.
1.அந்த உணர்வின் சத்து விளைந்தது மீண்டும் நினைவு வரப்படும் பொழுதெல்லாம்
2.அவன் உடலில் தீமை செய்த விளைவுகளும்… வினைகளும்… நமக்குள்ளே உருவாகி விடுகின்றது.

இப்படித்தான் நமக்குள் சூரியனின் வேலைகள் இருக்கின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனாலும் நாம் வயலிலே விவாசயம் செய்யப்படும் போது விளையப்படும் பொழுது அவ்வப்போது உருவாகும் “களைகளை அகற்றுகின்றோம்….” நல்ல செடிகளுக்கு நீர் ஊற்றி அதனைப் பக்குவமாக வளர்க்கின்றோம்.

அதைப்போல நமது வாழ்க்கையில் தீமையான உணர்வைக் கேட்டறிந்த பின் வயலில் களைகளை அகற்றுவது போன்று தீமைகள் வளராது உடனே அதைத் தடுத்தல் வேண்டும்.
1.அதைத் தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் உணர்வுகளை
2.உங்களுக்குள் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

மகரிஷிகள் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தனக்குள் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ… உணர்வுகளை எல்லாம் தூய்மைப்படுத்தி ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்களோ… அவர்கள் வெளியிட்ட உணர்வின் தத்துவப்படி அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வினைப் பெரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்… அதை நாம் எண்ணும் பொழுது பெற்று… அதனின் துணை கொண்டு தீமைகளை நீக்க முடியும்.

தீமை கொண்டவரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின்
1.நாம் எண்ணாமலே அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு
2.நாம் எண்ணாமலே அந்தந்த எண்ணங்கள் உருவாக்கப்பட்டு
3.நமக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து நோயின் தன்மை எப்படி அடைகின்றதோ அதைப் போல்
4.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்ப்பித்துக் கொண்டே வந்தால்
5.”நாம் எண்ணாமலேயே” அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து… தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வரும்.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி உருவாக்குதல் வேண்டும்… உங்களால் முடியும் அதற்குத் தான் அருள் வாக்குகளாகக் கொடுத்து ஆழமாகப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).

ஆகவே மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்… வரும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபவீர்கள்.

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்… என்று அறிந்து கொள்ளுதலும்…!
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் குரு என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு ஜெபத்தின் வேகம் என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

April 7, 2024

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

 

நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.

அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.

உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.

அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..

1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.

ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.

அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.

அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே...!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்...!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே...! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்...! என்பதன் கருத்தை ஊன்றி... உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்...!” என்பதெல்லாம்... - சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்... சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ... அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு... சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து...” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து... “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது...”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின...! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி...
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன...?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

April 6, 2024

உயிரான்மாவின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்...”

உயிரான்மாவின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்...”

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது...? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்...” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்...” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படா விட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

ஞானத்தின் வளர்ச்சியில்…
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி... களைகளைக் களைந்து...
2.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு...
3.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி...
4.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்...
5.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு… ஞான வித்தை ஈர்த்திடும் செயலே...
6.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் “தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு…” நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்...!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற... கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கள் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்...!”
4.ஒவ்வொருவரும் “விவசாயி போல்” ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கி விட்டால்... பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்...?

விவசாயினால் காக்க முடியாமல் போன பலனை... பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை... ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்...?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்...?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்... உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்... எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை...!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு... சக்தியின் முயற்சிக்கு... “என்றும் எனது ஆசிகள்...!”